1. சந்தனச்சாலையில்
சின்ன சீதாப் போனாளே - என்று புத்தகத்திலிருந்த் வாசித்துக் காட்டினேன். சிலதினங்கள் கழித்து
என்னிடம் வந்து அந்த ட்யூனிலேயே பாடுகிறாள்,
ஆச்சி போனாளே
சந்தனமுல்லை வந்தாளே2. நொண்டி அடிக்கிறாள். 2 அல்லது மூன்று ஸ்டெப்-கள் தான். ஆனால், பேலன்ஸ் செய்வதைப் பார்க்க அவ்வளவு கண்கொள்ளாக் காட்சியாயிருக்கிறது..
3. தான் கற்ற/கேட்ட கதைகளின் பாத்திரங்கள், நிகழ்வுகளை தன்னுடன் தொடர்பு படுத்திக் கொள்கிறாள். திராட்சை வாங்கி கழுவிக்கொண்டீருந்தேன். அது கொத்தாக இருந்ததை பிரித்துக் எடுக்கும்போது, ”நரி இப்டி இப்டி ஜம்ப பண்ணுச்சு, ஆச்சி”, என்று சொல்லி குதித்துக்காட்டினாள். பின், நரி நல்லாருக்காதுன்னு சொல்லிட்டு ஓடிடுச்சு” என்று சொல்லி வட்டமடித்து ஓடினாள். எப்போது திராட்சை வாங்கினாலும் இந்தக் கதையை நினவுகூர்கிறாள், அந்த திராட்சைதானா இதுவென்ற கேள்வியுடன்!
அம்மா, மைக்ரோவனி வைக்க பௌல்கள் வாங்கி வந்திருந்தார், ஒவ்வொரு அளவுகளிலும். “இது குட்டிக் கரடியோட பௌலா” என்று எடுத்துக் கொண்டாள், கோல்டிலாக்ஸ் கதையை நினைவுகூர்ந்தபடி!
அதே போல் வடை செய்திருந்தபோதும், வடையை வாயில் வைத்து கடித்துக் கொண்டு, நரி கேக்குது என்று கற்பனை நரியை காட்டுகிறாள்.
4. அவள் கண்ட கனவுகளைப் பற்றி எங்களிடம் கேட்கிறாள்/சொல்கிறாள். ஏன் சிங்கம் ஓடுச்சு என்றும் பூனை ஆயாவின் கைத்தடியை எடுத்துக்கொண்டு சமயலறைக்குள் ஓடியதாகவும், அவள் பூனையிடமிருந்து அதை பிடுங்கிக் கொண்டு அதை விரட்டியதாகவும் என்று பலப்பல கனவுகள். சிங்கம் வந்து என் முதுகில் கடித்ததாகக் கூறி என் முதுகில் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தாள் இரண்டு மூன்று நாட்கள் வரையில். (அதுதான் அவள் எனக்குக் கூறிய முதல் கனவு)
5.
அம்மான்னு கூப்பிடனுமா, மம்மியா?மழையின் நிமித்தம் வீட்டில் இருந்த பப்புவிடம் விடைபெற எண்ணி 'பை சொல்லு" என்று கிளம்பும்போது எதிர்கொண்ட கேள்வி இது.எனக்குள் சில எண்ணங்களைக் கிள்றி விட்டது. அம்மா என்பதும் மம்மி என்பதும் என்னைத்தான் குறிக்கிறது என்று அறிந்திருக்கிறாள். பக்கத்துவீட்டினரோ, தண்னிர் எடுக்கும் பையனோ எவரோ ஒருவர் "மம்மி" யைக் குறித்து கேட்டிருக்கவேண்டும். அந்த வார்த்தையைக் கேட்பதொன்றும் புதிதல்ல பப்புவுக்கு. (எனினும், சிலசமயம் நாங்கள் தெளிவாகச் சொல்லிவிடுவதுண்டு, "மம்மி,டாடின்னு இல்ல,
அம்மா,அப்பான்னுதான் பழக்கியிருக்கிறோமெ"ன்று.)சிலசமயம் மம்மி,மம்மியென்றும் விளித்திருக்கிறாள். ஆனால் இப்போது அவளுக்கு கேள்வி, அவள் எதைத் தொடரவேண்டுமென்று! உனக்கு எப்படி கூப்பிடபிடிக்குமென்றேன்.
"அம்மா"
சரி, அப்படியேக் கூப்பிடு!
பை,அம்மா!!6. முன்பு டீவியில் நாம் வைத்ததைப் பார்ப்பாள், அல்லது டோரா வேணுமென்றும் பும்பா வேண்டுமென்றும் கேட்பாள். இப்போதோ, ரிமோடில் சுட்டி டீவியை கண்டுபிடித்து வைக்கத் தெரிகிறது.முன்பு வால்யூம் கூட்டத் தெரியும். இப்போது சானலும்..மக்கள் வேணுமா, விஜய் வேணுமா..என்றும், எனக்கு சுட்டிதான் என்று எந்த வரிசையில் இருந்தாலும் வைக்கிறாள்!
(is this a milestone??lol)
7.
கச்சாமுச்சா என்ற வார்த்தை அவளுக்கு அவ்வளவு சிரிப்பாயிருக்கிறது. அந்த வார்த்தையை சொல்லி சொல்லி ஒரு ஜோக்-குக்கு சிரிப்பது போல் சிரிக்கிறாள். அவள் "தண்ணொளி" என்று கூப்பிடுவாளாம். ஆனால் சஞ்சய், "தண்ணு வளி" என்று கூப்பிடுகிறானாம். "தண்ணு வளி" என்று சொல்லிவிட்டு, laughing at her own joke.
8.
ஆச்சி, எனக்கு அப்பாதான் பிடிக்கும். உடனடியாக,
எனக்கு உன்னைப் பிடிக்காது!எனக்கு இதற்கு எப்படி ரியாக்ட் செய்யவதெனத் தெரியவில்லை.
அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து விட்டுவிடுவதா இல்லை குழந்தைகளுக்கேயுரிய அந்தந்த நேரத்து உணர்ச்சிகள் என்று விட்டு விடுவதா? கடமையிலிருந்து தவறிவிட்டேனென்று வருந்துவதா அல்லது முகிலைப் பார்த்து பொறாமைப் படுவதா?
அல்லது ஒரு காலத்தில் நானும் என் அம்மாவை ஒதுக்கினேனே என்று இயல்பாய் எடுத்துக் கொள்வதா?
9.சிலசமயங்களில் என்மீது படுத்துக்கொள்வாள் பப்பு...பாதுகாப்பு உணர்வுக்காகவோ அல்லது
தூக்ககலக்கதில் இதம் வேண்டியோ! அப்படியொரு பொழுதில் சொன்னாள், "உன் வாசனை வருது" என்றாள்.ஆச்சர்யத்துடன், எங்கேர்ந்து வருது என்றபோது, என் நெஞ்சைக் காட்டினாள். ஓ..அது என் வாசனையல்ல பப்பு, என் நெஞ்சில் நான் சேமித்து வைத்திருக்கும் உனக்கான அன்பின் வாசனை!!
10.
"எனக்கு ஒடம்பு சரியில்ல..பவுடர்பில் டாக்டரை வரச்சொல்லு" - டாக்டர் பவுடர்பில்-லை சந்திக்க அவ்வள்வு ஆசையாயிருக்கிறாள்..அதேபோல் பீட்டர் பான் - ஐயும்! அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை,நானும் அவரை சந்திக்க அந்தவயதில் அவ்வளவு ஆவலாயிருந்தேனென்று!கதையென்று நினைத்துச் சொல்வது அவளுக்கு எவ்வளவு நிஜமாயிருக்கிறது!! probably, one fine day she will know the reality!
11.பப்பு தனிமையை உணர்கிறாள். அவள் வயதையொத்த ஒரு நட்பு அவளுக்கு தேவையாயிருக்கிறது இப்போது. தானாக கற்பனை செய்துக் கொண்டு பேசுவதும், பொம்மைக்குச் சொல்லிக் கொடுப்பதும், அதன் கையை பிடித்து இழுப்பதுமாக செல்கிறது அவளின் விளையாட்டு நேரங்கள். யாராவது குழந்தைகள் வீட்டுக்கு வந்துவிட்டு சென்றபின் "ஏன் போய்ட்டாங்க" என்ற வளின் கேள்வி ஓயாததாய் இருக்கிறது. சிறிது சிறிதாக அவள் ஒரு புதிய கட்டத்திற்கு செல்வதை உணர முடிகிறது..அவளுக்கு விளையாட இப்போது பெரியவர்க்ள்
தேவையில்லை..அம்மா,அப்பா..ஆயா..தாத்தா..அவளுடன் பேசவும்,சேர்ந்து விளையாடவும் அவளுக்குத் தோதான,அவள் ஈடான ஒரு சிறுமியோ/சிறுவனோ தான்!
12.என்னைப் போல் துப்பட்டா போட்டுக்கொள்வதும், என்னைப் போல் கண்ணாடி முன்நின்று தலைவாரிக் கொள்வதும், பையை கையில் எடுத்துக் கொள்வதுமாக...பப்பு என்னை பின் தொடரும் காப்பி கேட்டாகத்தான் இருந்தாள் இதுவரை! என்னைப் போலவே யாரும் செய்தால் ஒதுக்கும் நான், அவளின் செய்கைகளை ரசிக்கத் தொடங்கினேன், அதிலும் ஒரு பெருமிதம் இருக்கத் தான் செய்தது! என்னை நகலெடுத்த பப்பு இப்போது அவளது ஆன்ட்டியின் மேனரிசங்களை...அவர்களைப் போல் சிரிப்பதும், பொம்மைகளிடம் அவர்களைப் போல் பேசுவதும், "#$%#$%#$% கோ" என்று..."#$@#$ ஸ்னாக்ஸ் டைம்..கோ" என்றும் ஆங்கிலத்திலுமாக மோதி ஆன்ட்டி புராணமாயிருக்கிறது. சிரிப்பாயிருக்கிறது, சிலசமயத்தில் பொறாமையாயும் ;-)!!