ஆயா, நீங்க.... பாவக்காஆஆ!
ஆச்சர்யத்துடன், எது அவளை இவ்வாறு சொல்ல வைத்திருக்கக் கூடுமென்ற யோசனையில்,
பப்பு, நீ என்னடா அப்போ?
நான்..நான் ஸ்ட்ரோபெர்ரி!

பப்புவின் ஆயா ஊரிலிருந்து வந்திருந்தபோது இரவு அவர்களுடன் தூங்க விரும்பி "நான் ஆயா கூட தூங்கறேன் " என்றாள், அவர்களுடன் அடுத்த அறையில் படுத்துக் கொண்டு. இரண்டு முறை கூப்பிட்டுவிட்டு, நானும் தூங்கச் சென்றேன். அவர்களிருவரும் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.
சிறிது நேரம் கழித்து, ஆச்சி கூப்பிடுது, போய் பார்த்துட்டு வரேன் என்ற குரலும், அதையடுத்து கதவைத் திறந்து, கூப்பிட்ட இல்ல, ஆச்சி என்று சொல்லிவிட்டு என்னருகில் படுத்துக் கொண்டாள்!
நான் கூப்பிட்டதுபோல நினைத்துக் கொண்டாளோ அல்லது, ஆயாவை காயப்படுத்தக் கூடாதென்று நினைத்தாளோ, ஆனால் அவள் செய்கை என்னை புன்னகைக்க வைத்தது!!


இது என்னவென்று ஊகிக்க முடிகிறதா?
பழசா இல்ல நியூஸ்பேப்பரா என்று கேட்டுவிட்டு வெட்டத் துவங்கியபோது மற்றுமொரு குப்பை என்றுதான் தோன்றியது. "இந்தா ஆச்சி, காசு, வச்சிக்கோ" என்ற போது சிரித்துக் கொண்டே வாங்கி மேஜை மேலே வைத்தேன். என் அசிரத்தை பிடிக்காமல், "எடுத்து உள்ள வை, ஆச்சி" என்று சொல்லிவிட்டு, இன்னும் அதிகமாக காசு தயாரிக்கும் வேலையில் மூழ்கிப் போனாள், பப்பு!
If only money can be made like this....;-)
26 comments:
வந்துட்டேன் ...
பப்பு நலமா ...
பப்பு கொடுத்த காச வாங்கி பத்திரமா
வைக்காம என்ன எப்படி போட்டுடீங்க?
''பாவக்கா ஆச்சி''
\\If only money can be made like this....;-)\\
இதைவிட,
\\"எடுத்து உள்ள வை, ஆச்சி"\\
குழந்தைக்கும் பணம் என்பதின் முக்கியத்துவம் விளங்கிவிட்டது அல்லது அதனை பத்திரப்படுத்த வேண்டும் என்றாவது விளங்கியிருக்க வேண்டும்.
கேட்டுக்கிட்டேத்தானே இருக்கோம்.. :)
ஒரு பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க முல்லை..
ஆயா பாவக்காஆ, பப்பு ஸ்ட்ராபெர்ரி
அப்ப நீங்க,
என்னன்னு பப்புகிட்ட கேட்டுட்டு வந்து சொல்லிடுங்க
நான் கூப்பிட்டதுபோல நினைத்துக் கொண்டாளோ அல்லது, ஆயாவை காயப்படுத்தக் கூடாதென்று நினைத்தாளோ, ஆனால் அவள் செய்கை என்னை புன்னகைக்க வைத்தது!!
பப்பு ஆல்வேஸ் சமத்து, அப்படியே அவங்க ஆச்சி மாதிரியே
என் அசிரத்தை பிடிக்காமல், "எடுத்து உள்ள வை, ஆச்சி" என்று சொல்லிவிட்டு, இன்னும் அதிகமாக காசு தயாரிக்கும் வேலையில் மூழ்கிப் போனாள், பப்பு!
பண விஷயத்துல இப்படி அசிரத்தையா இருக்குக்கூடாதுன்னு உங்களுக்கு பப்பு கத்துக்கொடுக்குறா,
NOT ONLY U
If only money can be made like this....;-)
நோ கமெண்ட்ஸ்
பப்பு ஆல்வேஸ் சமத்து, அப்படியே அவங்க ஆச்சி மாதிரியே//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!
:)
பப்பு ரொம்ப சமத்து .
//ஆயா, நீங்க.... பாவக்காஆஆ!
ஆச்சர்யத்துடன், எது அவளை இவ்வாறு சொல்ல வைத்திருக்கக் கூடுமென்ற யோசனையில்,
பப்பு, நீ என்னடா அப்போ?
நான்..நான் ஸ்ட்ரோபெர்ரி! //
இதை நான் ரசித்தேன் .
அப்புறம் உங்களது இடுகைகளை வாசிக்கும் போதெல்லாம் ஒரு விஷயம் கேட்க வேண்டுமே என்று தோன்றும்...பப்பு ஏன் உங்களை ஆச்சி என்று அழைக்கிறாள் முல்லை?ஆச்சி என்றால் பாட்டி இல்லையா?நீங்கள் பப்புவின் அம்மா தானே!!!
/ அமிர்தவர்ஷினி அம்மா said...
ஆயா பாவக்காஆ, பப்பு ஸ்ட்ராபெர்ரி
அப்ப நீங்க,
என்னன்னு பப்புகிட்ட கேட்டுட்டு வந்து சொல்லிடுங்க/
ரிப்பீட்டேய்...!
/நான் கூப்பிட்டதுபோல நினைத்துக் கொண்டாளோ அல்லது, ஆயாவை காயப்படுத்தக் கூடாதென்று நினைத்தாளோ, ஆனால் அவள் செய்கை என்னை புன்னகைக்க வைத்தது!!
பப்பு ஆல்வேஸ் சமத்து, அப்படியே அவங்க ஆச்சி மாதிரியே/
இதுக்கு டபுள் ரிப்பீட்டேய்....:)
ஸ்ட்ராபெர்ரி பப்புக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல மடங்கு காசு தயாரிக்க..
//பப்பு, நீ என்னடா அப்போ?
நான்..நான் ஸ்ட்ரோபெர்ரி! //
அட்ரா அட்ரா :)
சமத்து பாப்பு என்ன மாதிரியே!!
//பப்பு கொடுத்த காச வாங்கி பத்திரமா
வைக்காம என்ன எப்படி போட்டுடீங்க?
''பாவக்கா ஆச்சி''
ரிப்பீட்டு....
ஆமா... அது என்ன தலைப்பு? எனக்கு புரியல..
நாசிக்ல அடிக்கிற நோட்ட பப்பு வீட்டுல செய்யறளா??
ஹாஹா
அப்பிடியே மாம்ஸ்க்கும் கொஞ்சம் அனுப்பிவிடும்மா பப்பு
:))))
இனிய பப்பு!
இவ்வளவு அன்பான
ஆச்சியும், ஆயாவும் கிடைத்திருக்கும்போது
நீயே செய்யும் சேட்டைகளும்
அழகோ அழகு!
வணக்கம் முல்லை,
முதன்முதலா வருகிறேன்.
அழகா இருக்(கு)கா (பகிர்வு ) பாப்பு.
குழந்தைகளின் உலகம் எவ்வளவு அழகானது, அவர்களை பார்க்கிறபோது தான் தெரிகிறது நாம் இந்த உலகில் இரசிக்கத்தவறுவது இன்னும் நிறையவே என்று.
நன்றி ஜமால்! பப்புவிற்கு ஜூரம் குறைந்துள்ளது, ஆனால் சளிதான்!!
//குழந்தைக்கும் பணம் என்பதின் முக்கியத்துவம் விளங்கிவிட்டது //
அது தெரிந்து ரொம்ப நாளாகிவிட்டது, ஜமால். ஆனால், அதன் மதிப்பு, ஐந்து ரூபாய்,பத்து ரூபாய் -யெல்லாம் இன்னும் தெரியவில்லை!
நன்றி ஜீவன்! அவ்வ்வ்வ்வ்வ்!
ஆமா, வழக்கம் போல , சரி இங்கதானே வைக்கப் போறேந்னு அலட்சியமா இருந்துட்டேன்!
நீங்க கேட்டுக்கிட்டிருப்பீங்கன்னு எனக்குத் தெரியும் முத்துலெட்சுமி..:-). ம்ம்..இதோ கூடிய சீக்கிரம் பண்ணிடறேன், ஆனா இதை வாங்கி பத்திரமா வச்சிருப்பாங்களா?!
நன்றி அமித்து அம்மா!
//என்னன்னு பப்புகிட்ட கேட்டுட்டு வந்து சொல்லிடுங்க//
அவ்வ்வ்வ்வ்! எதுக்கு வம்பு? ;-))
நன்றி ஆயில்ஸ்!
நன்றி மிஸஸ்.டவுட். எங்க ஊரில், சிதம்பரம்/தென்னாற்காடு பகுதிகளில், வீட்டில் செல்லப் பெண்களை/குட்டீஸை அப்படி அழைப்பார்கள். இது என் அப்பா வழிப் பாட்டி எனனி அப்படி அழைத்து நிலைத்து விட்டது. நீங்கள் சொல்லும் "ஆச்சி என்று பாட்டி"யை அழைப்பது தென் மாவட்டங்களின் வழக்கு! விளக்கம் போதுமா?
நன்றி நிஜமா நல்லவன்!
நன்றி தீஷூ!
நன்றி பிரேம்!
நன்றி பூர்ணிமாசரண்! இப்படிதான் காசு தயாரிப்பீங்களா நீங்க..;-)
நன்றி அமுதா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ரொம்ப சந்தோஷம் போலயே!
//அது என்ன தலைப்பு? எனக்கு புரியல//
அது ஒரு இந்திப் பாட்டு, ரங்கீலா-வுல வருமே! கொஞ்சம் கேட்டுக்கோயேன்.அர்த்தத்தை சொன்னேன்பா :-)!
நன்றி சிவா, ஆமா, என்ன அதில கையெழுத்துதான் இருக்காது..lol
உங்களுக்குதானே, இதோ அனுப்பச் சொல்றேன்!
நன்றி சுரேகா! உங்கள் கவிதைகளை விடவா!
நன்றி சகாராவின் புன்னகை! தொடர்ந்து படியுங்கள்!
//பப்பு கொடுத்த காச வாங்கி பத்திரமா
வைக்காம என்ன எப்படி போட்டுடீங்க?
''பாவக்கா ஆச்சி''//
கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)
// ஸ்ட்ரோபெர்ரி!//
நான் உங்க பப்புக்கு வெச்சிருக்க பேர் என்னன்னா, அம்ச்சுகுட்:):):)நான் இப்டித்தான் எல்லா பாப்பாக்கும் பேர் வெப்பேன்:):):) எங்க guddu , எனக்கு பம்ச்சுகுட்:):):)
//நான் கூப்பிட்டதுபோல நினைத்துக் கொண்டாளோ அல்லது, ஆயாவை காயப்படுத்தக் கூடாதென்று நினைத்தாளோ, ஆனால் அவள் செய்கை என்னை புன்னகைக்க வைத்தது!!//
ஆயாவைக் காயப்படுத்தக் கூடாதுன்னு தான் கண்டிப்பா:):):) இதே தில்லாலங்கடி வேல எங்க வீட்லயும் நடக்கும்:):):)
நீங்க வேற...!
நான் எழுதறதெல்லாம் எழுத்துக்கவிதை!
பப்புதான் உயிர்க்கவிதை!
அதுவும் ஸ்ட்ராபெர்ரிக் கவிதை!
(சுத்திப்போடுங்கப்பு)
வழக்கம் போல ரசனையான பதிவு. (ரொம்ப நாளா கேக்குணும்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன். அம்மாவை ஆச்சி என்றழைப்பது இதுவரை நான் கேள்விப்படாததாக இருக்கிறது. என்ன விஷயம்? இது குறித்து முன்பே ஏதாவது பதிவு போட்டுள்ளீர்களா?)
பப்பு எனக்கு கொஞ்சம் காசு குடு செல்லம் :)
ரொம்ப நாளா கேக்குணும்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன். அம்மாவை ஆச்சி என்றழைப்பது இதுவரை நான் கேள்விப்படாததாக இருக்கிறது. என்ன விஷயம்?
எங்கள் ஊரில் பாட்டியைதான் ஆச்சி என்றழைப்போம்... அம்மாச்சி, அப்பாச்சி
//
ஆயா பாவக்காஆ, பப்பு ஸ்ட்ராபெர்ரி
அப்ப நீங்க,
என்னன்னு பப்புகிட்ட கேட்டுட்டு வந்து சொல்லிடுங்க
//
எனக்கும் சொல்லுங்க...
பப்புக்கு உடல் நிலை தேற இறைவனை வேண்டுகிறேன்....
//பப்புதான் உயிர்க்கவிதை!
அதுவும் ஸ்ட்ராபெர்ரிக் கவிதை!
(சுத்திப்போடுங்கப்பு)
//
ரிப்பீட்டேய்.... :)
Post a Comment