அவந்திகா ஆரம்பிச்சு, முத்துலெட்சுமி தொடர்ந்து, என்னை வந்து சேர்ந்திருக்கிறது இந்த டேக்!
தாக்குதல் செய்யப் போகிறார்கள் என்று செய்தி கிடைத்தும் தடுக்க இயலவில்லை என்றால், என்ன மாதிரி நாட்டில் வாழ்கிறோம் என்றுத் தெரியவில்லை. அரசியல்வாதிகள் கடமையை உணர்ந்துதான் செயல்படுகிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. நம் நாட்டின் மிகப் பெரும் சக்தியே மனித வளம்தான்! அதிலும் இளைஞர்கள் சதவீதம் நமது நாட்டில் அதிகம் என்று எங்கோ படித்திருக்கிறேன். அந்த சக்தி நமது அரசியலுக்குள் வந்தால் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்!
ஆனால், முத்துலெட்சுமி சொன்னதுபோல், யாராவது நமது பிள்ளைகள் அரசியலுக்குப் போகிறேன் என்றால், நாம் முதலில் செய்வது அட்வைஸ். படிச்சு, நல்ல வேலைக்கு போகிற வழியைப் பாரு! இதற்கு காரணம், இன்றைய அரசியல் சூழலில் நிலவும் போக்குதான். யாரு யாரை எப்போ போட்டுத் தள்ளுவாங்களோ என்ற அடிப்படை பயம்!! முதலில், அரசியலில் வர சில அடிப்படை தகுதிகளை வைக்கவேண்டும். படிப்பு மட்டுமே என்று சொல்லவில்லை, ஒரு basic morale..மனிதம் உணர்ந்து மனிதர்களை மதித்து வழிநடத்தும் தலைவர்கள் இருந்தால்..ஹ்ம்ம்!
ஆனால், தீவிரவாதம்..அப்பாவி மக்களை கொல்லும் இந்தத் தீவிரவாதத்தால் சாதிக்கப் போவதுதான் என்ன? புரியவில்லை!
நான் டேக் செய்ய விரும்புவது,
அமித்து அம்மா,
ஆகாயநதி,
ஜமால்
வித்யா!
வெயிலான்
22 comments:
வந்துட்டோம்ல
tag வேறயா.
முயற்சிப்போம்.
/*மனிதம் உணர்ந்து மனிதர்களை மதித்து வழிநடத்தும் தலைவர்கள் இருந்தால்..ஹ்ம்ம்!*/
உண்மை... ஏக்கப் பெருமூச்சு விடும் நிலையில் தான் இருக்கிறோம்.
me the first santhanamullai
//யாராவது நமது பிள்ளைகள் அரசியலுக்குப் போகிறேன் என்றால், நாம் முதலில் செய்வது அட்வைஸ். படிச்சு, நல்ல வேலைக்கு போகிற வழியைப் பாரு!//
நான் இந்த கோஸ்டில சேர்ந்துக்கறேன்பா...!!!
\\அரசியலில் வர சில அடிப்படை தகுதிகளை வைக்கவேண்டும். படிப்பு மட்டுமே என்று சொல்லவில்லை, ஒரு basic morale..மனிதம் உணர்ந்து மனிதர்களை மதித்து வழிநடத்தும் தலைவர்கள் இருந்தால்..ஹ்ம்ம்!\\
ம்ம்ம்.. அழகு.
a wednesday - மாதிரி ஏதாவது செய்யணும் !
ada...me the FIRST
//மனிதம் உணர்ந்து மனிதர்களை மதித்து வழிநடத்தும் தலைவர்கள் இருந்தால்..ஹ்ம்ம்!//
எல்லோர் மனதிலும் ஓடுவது இதுதான்.
அரசியலில் வர சில அடிப்படை தகுதிகளை வைக்கவேண்டும். படிப்பு மட்டுமே என்று சொல்லவில்லை, ஒரு basic morale..மனிதம் உணர்ந்து மனிதர்களை மதித்து வழிநடத்தும் தலைவர்கள் இருந்தால்..ஹ்ம்ம்!\\
iruntha nalla irukum. nadakuma?
//முதலில், அரசியலில் வர சில அடிப்படை தகுதிகளை வைக்கவேண்டும். படிப்பு மட்டுமே என்று சொல்லவில்லை, ஒரு basic morale..மனிதம் உணர்ந்து மனிதர்களை மதித்து வழிநடத்தும் தலைவர்கள் இருந்தால்//
இதை நாம கரீக்டா
வழிமுறைப்படுத்தினாலே போதும்
//தீவிரவாதம்//
இதையெல்லாம் சும்மா தட்டிடலாம் அப்படின்னு meக்கு தோணுது!
\\அரசியல்வாதிகள் கடமையை உணர்ந்துதான் செயல்படுகிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது\\
சந்தேகமே வேண்டாம்.
அவர்கள் கடமை உணர்ந்தே செயல்படுகிறார்கள்
என்னா பாவம்ன்னா எது கடமைன்னு தான் தெரியாது.
தீவிர வாதிகள் தங்கள் கடமையில் காட்டுகிற
அந்த தன்மையை,
நம் அரசியல் வாதிகள் தங்கள் கடமையில்
கொஞ்சம் காட்டினால் போதும்,
தீவிர வாதிகளையும் அவர்களை ஏவிவிட்டு
மறைந்திருப்பவர்களையும்
நசுக்கி விடலாம் நசுக்கி!
// மனிதம் உணர்ந்து மனிதர்களை மதித்து வழிநடத்தும் தலைவர்கள் இருந்தால்..ஹ்ம்ம்! //
இருக்கக்கூடாதென்றா நினைக்கிறோம்.
இருந்தால் நல்லா இருக்கும்.
மிக அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். மனிதம் என்று வெல்லுதோ அன்றுதான் நிஜமான வெற்றி.
வாழ்த்துக்கள்
அரசியலக்கு தகுதி வைத்து வந்த பிறகு,
தேவையான தகுதிகளை இழந்து விடுகிறார்களே.
அங்கு தான் மனிதம் மறைந்து போகிறது.
நன்றிப்பா..
மனிதம் உணர்ந்து மனிதர்களை மதித்து.. ம். நல்லாச்சொன்னீங்க..
அந்த எக்ஸைட்டட் முயல்குட்டி சூப்பருப்பா..
:(:(:(
//நம் நாட்டின் மிகப் பெரும் சக்தியே மனித வளம்தான்! அதிலும் இளைஞர்கள் சதவீதம் நமது நாட்டில் அதிகம் என்று எங்கோ படித்திருக்கிறேன். அந்த சக்தி நமது அரசியலுக்குள் வந்தால் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்! //
super:):):)
///ஆனால், முத்துலெட்சுமி சொன்னதுபோல், யாராவது நமது பிள்ளைகள் அரசியலுக்குப் போகிறேன் என்றால், நாம் முதலில் செய்வது அட்வைஸ். படிச்சு, நல்ல வேலைக்கு போகிற வழியைப் பாரு! இதற்கு காரணம், இன்றைய அரசியல் சூழலில் நிலவும் போக்குதான். யாரு யாரை எப்போ போட்டுத் தள்ளுவாங்களோ என்ற அடிப்படை பயம்!! //
உண்மை... உண்மை
//
முதலில், அரசியலில் வர சில அடிப்படை தகுதிகளை வைக்கவேண்டும். படிப்பு மட்டுமே என்று சொல்லவில்லை, ஒரு basic morale..மனிதம் உணர்ந்து மனிதர்களை மதித்து வழிநடத்தும் தலைவர்கள் இருந்தால்..ஹ்ம்ம்!
//
ஐ.ஐ.டி மாணவர்கள் ஆரம்பித்த அரசியல் பிரவேசம் கூட ஏனோ வெகுவாய் பேசப்படவில்லை. சீக்கிரமே மாறுதல் வரும் என எதிர்ப்பார்ப்போம்
முதலில், அரசியலில் வர சில அடிப்படை தகுதிகளை வைக்கவேண்டும். படிப்பு மட்டுமே என்று சொல்லவில்லை, ஒரு basic morale..மனிதம் உணர்ந்து மனிதர்களை மதித்து வழிநடத்தும் தலைவர்கள் இருந்தால்..ஹ்ம்ம்
நல்லாதான் சொல்லியிருக்கீங்க, ஆனா கேக்கறது யாரு.
இப்ப அரசியல் கவர்ன்மெண்ட் ஜாப் கணக்கா ஆகிடுச்சு, அதாவது அப்பா முதல்வர், அதுக்கடுத்து பையன், அப்புறம் பேரன் என.... இந்தியா முழுக்க இதே கூத்துதான், வழக்கம் போல பாதிக்கப்படுறது பொதுஜனமாகிய நாம்தான்.
ஒன்னும் சொல்றதுக்கில்லை.
ஆனா நீங்க சொன்னது யோசிக்கிறாமாதிரிதான் இருக்கு
TAG - விதி வலிய்யது
நன்றி ஜமால், அமுதா!
நன்றி மிஸஸ்.டவுட்! ம்ம்..அந்த கோஷ்டிதான் நானும்!!
நன்றி சுரேகா! சாரி, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
நன்றி ராமலஷ்மி!
நன்றி புதுகைதென்றல், நடக்கணும்!! அதுதான் எல்லார் ஆசையும்!!
நன்றி ஆயில்ஸ் அண்ண..நீங்க சொன்னா சரிதான்!
நன்றி ஜீவன். இனிவரும் காலங்களிலாவது இதை எதிர்பார்ப்போம். நம்பிக்கையில் தானெ பொழப்பு ஓடுகிறது!
நன்றி வெயிலான்!
நன்றி ரம்யா! //மனிதம் என்று வெல்லுதோ அன்றுதான் நிஜமான வெற்றி.//
அதேதாங்க!!
நன்றி முத்துலெட்சுமி! நீங்கதான் அந்த கார்னரை பாலோ பண்றீங்க..மகிழ்ச்சி!
நன்றி ராப்!
நன்றி பிரேம்! ஆமாம், அதுக்கு அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியலை..ஆனா முக்கால்வாசிப்பேர் இளைஞர்கள்தான் அதில!
நன்றி அமித்து அம்மா! :-)
//யாராவது நமது பிள்ளைகள் அரசியலுக்குப் போகிறேன் என்றால், நாம் முதலில் செய்வது அட்வைஸ். படிச்சு, நல்ல வேலைக்கு போகிற வழியைப் பாரு!//
இது பத்தி நான் ஒரு பதிவு போட்ருக்கேன்...வந்துட்டு போறீங்களா அந்த பக்கம்
Post a Comment