Wednesday, December 17, 2008

கனாக் கண்ட காலங்கள்!!!

கனவுகள் பற்றி ஒரு பதிவு படித்தேன், தேவன்மயத்தின் வலைப்பூவில்! எனக்கும் கனவுகளைப் பற்றி சொல்ல ஆசை வந்துவிட்டது! கனவுகள் வருவது சாதாரணம்தான்..ஆனால் அதன்கூட நாம் செய்யும் காமெடிதான் மேட்டரே!!

நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பேன்..(ஆமா, தூங்கினாதானே கனவு வரும்!!). ஏதோ ஒரு கனவு. கனவிலேயே எனக்கு கால் வலி. வலியென்றால் நிஜமான வலி! உடனே விழிப்பு வந்து, பார்த்தால் நானே காலை சுவரில் மோதிக் விட்டிருக்கிறேன்! இன்னொரு கனவும் மறக்கமுடியாதது, என்னவென்றால் கீழே விழுவது போல. பார்த்தால் படுக்கையிலிருந்து தரையில் இருக்கிறேன்! நல்லவேளை, பொண்ணு படிக்குது என்று தனி ரூம் கொடுத்திருந்ததால் பிழைத்தேன் தம்பி என்றொரு சதிகாரனிடமிருந்து!!

ரெகுலராக சில் கனவுகளும் வரும், அதுவும் பரீட்சை சமயத்திலும், பரீட்சைக்கு பின்பும்! அதாவது, நான் செல்வதற்குள் பரீட்சை ஆரம்பாகியிருக்கும், அல்லது முதல் பாதி முடிந்திருக்கும் அல்லது ஹால் டிக்கட் கொண்டுபோகாமல் சென்றிருப்பேன்.. அந்தக் கனவு அவ்வளவு நிஜமாயிருக்கும்..இதயம் படபடக்க வேர்த்துக் கொட்டி எழுந்துப் பார்த்தால் மணி இரண்டு அல்லது மூன்று இருக்கும். அப்போது ஒரு நிம்மதி வருமே..அதற்கு ஈடு எதுவுமேயில்லை!

இன்னொரு விஷயம், ஏதாவது விரும்பத்தகாதது நடந்திருந்தால் இது கனவாக இருக்கக் கூடாதா என்று நினைத்துக்கொள்வேன்! உச்சபட்ச காமெடி, கனவிலும், இது கனவாக இருக்கக் கூடாதாவென்று நினைத்துக் கொள்வது போல் வரும்!! :-))

சின்னவயதில் பகலில் மதியம் தூங்கி அந்திசமயம் எழுந்ததும் அடுத்தநாள் காலை போலிருக்கும். அப்போது பல்விளக்கியெல்லாம் காமெடி செய்திருக்கிறேன்! சமீபத்தில் பப்புவும் அப்படி செய்ய முற்பட்டாள்.

நினைவு தெரிந்து வந்த முதல் கனவு இன்றும் மனதிலிருக்கிறது. நிறைய கதைகள் கேட்ட பாதிப்பு என்று நினைக்கிறேன். ராட்சசன் வந்து எங்கள் வீட்டு கொல்லையிலுள்ள பனை மரத்தை பிடுங்கி பல் விளக்குகிறான். அன்று பகல் முழுவது பயந்த பயமும் இன்றும் நினைவிருக்கிறது! :-)))


கனவில் உளறுவது இன்னொரு காமெடி. மாமா பையன் புகழேந்தி கனவில் உளருவான். நாம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுவான்! கனவில் சொல்லாததையெல்லாம் உளறியதாகச் சொல்லி கலாட்டா செய்து காலி செய்யும் கூட்டமும் எங்கள் வீட்டில் பஞ்சமில்லாமலிருந்தது!

கனவென்றால் மறக்கமுடியாமல் நினைவுக்கு வருவது காலேஜில் நடந்த சம்பவங்கள் சில.
தினமும் கலாட்டா, ஜாலி, கிண்டல் தானே வாழ்க்கை அப்போது. ராகிங் செய்தவங்கதான் பிற்காலத்தில் நமக்கு எல்லாம் உற்ற தோழிகள்/அக்காக்களாகி விட்டிருப்பார்கள். அவர்கள் செய்த ராகிங்களுக்கெல்லாம் நம்மிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள் அப்புறமாக! அப்படி என்னை கலாட்டா செய்தவர்களிடம் சொன்னது இது!


"அக்கா, நேத்து நைட் எனக்கு ஒரு கனவு வந்துச்சுக்கா, என்ன தெரியுமா, அதுல நீங்க வர்றீங்க. அப்புறம் ஜெய்ஸ்ரீ, கலா, தேவி எல்லாரும் வர்றாங்க. நாம எல்லாம் ஹெவன் - ல இருக்கோம் அக்கா, அங்கே உள்ளே போனது சொல்றாங்க, நீங்க இந்த ஹால்ல நடந்து போகணும். அங்அக் ஒரு தட்டு வரும்,. அதை மட்டும் மிதிக்கவேக் கூடாது! நானும் பயந்து பயந்து நடந்து வர்றேன், பார்த்தா ஜெய்ஸ்ரீ அக்கா வர்றாங்க, அவங்ககூட யாரோ ஒரு ஆள். அசிங்கமா பார்க்கவே
சகிக்கல! என்னான்னு கேட்டா, அவங்க சொல்றாங்க, நான் அந்தத் தட்டை மெதிச்சுட்டேன், இந்த ஆளை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க, பார்த்து போ அப்படின்னு! அப்புறம் பார்த்தா தேவிக்காவும்! அவங்களும் அதே சொல்றாங்க! நானும் பயந்துகிட்டே வர்றேன்..பார்த்தா நீங்க வர்றீங்கக்கா! ஆனா உங்களுக்கு மட்டும் நல்ல அழகான் ஹஸ்பண்ட்! அப்போ நான் உங்களைக் கேக்கறேன், அக்கா நீங்க்தான் தட்டை மெதிக்கலையான்னு. அப்போ உங்க கூட இருந்தவர் சொல்றார், "இல்ல, நாந்தான் தட்டை மெதிச்சுட்டேன்"ன்னு!"

-அப்படின்னு சொல்லிட்டு ஓடியே வந்துட்டேன்!!

உஷாக்கா, ஐ மிஸ் யூ சோ மச் உஷாக்கா! அந்த முல்லையும் இப்போ இல்லை, அந்த உஷாக்காவும் இருக்க மாட்டாங்கன்னும் தெரியும்.வாழ்வின் உளிகளில் வெவ்வேறு பரிணாமங்களில் நாமிப்போது! ஆனா, நம்ம காலேஜ் காம்பஸ்-ல கண்டிப்பா ஏதாவதொரு முல்லையும், உஷாக்காவும் கண்டிப்பா இருப்பாங்க..எத்தனை பேட்ச் வந்தாலும்!

39 comments:

ஆயில்யன் said...

//நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பேன்..(ஆமா, தூங்கினாதானே கனவு வரும்!!). //

ச்சே!

சான்ஸே இல்ல தங்கச்சி....!

எப்பிடி தங்கச்சி ?

எப்பிடி....!

:)

ஆயில்யன் said...

//அப்போது ஒரு நிம்மதி வருமே..அதற்கு ஈடு எதுவுமேயில்லை!
//

அனுபவித்திருக்கிறேன்!

அதுவும் அசாதரண சம்பவங்கள் கனவாக வரும்போது....!

ராம்சுரேஷ் said...

இந்த பதிவு எழுத வேண்டும் உங்களுக்கு கனவு எதுவும் வரவில்லையே!
ரசித்து படித்தேன்!

ஆயில்யன் said...

//எங்கள் வீட்டு கொல்லையிலுள்ள பனை மரத்தை பிடுங்கி பல் விளக்குகிறான். அன்று பகல் முழுவது பயந்த பயமும் இன்றும் நினைவிருக்கிறது! :-)))
//

அடேங்கப்பா!

பயபுள்ளைக்கு பல்லு விளக்குறதுக்கு பிரஷ் உங்க வீட்டு கொல்லையில்லயா வளர்த்து வைச்சிருக்கீங்க!

ஆயில்யன் said...

// நீங்க வர்றீங்கக்கா! ஆனா உங்களுக்கு மட்டும் நல்ல அழகான் ஹஸ்பண்ட்! அப்போ நான் உங்களைக் கேக்கறேன், அக்கா நீங்க்தான் தட்டை மெதிக்கலையான்னு. அப்போ உங்க கூட இருந்தவர் சொல்றார், "இல்ல, நாந்தான் தட்டை மெதிச்சுட்டேன்"ன்னு!"
-அப்படின்னு சொல்லிட்டு ஓடியே வந்துட்டேன்!! /

நல்லா இருக்கு !

கதை விவரித்த விதத்தை சொல்லி பார்க்கிறேன்

சூப்பரூ! :))))))

ஆயில்யன் said...

//வாழ்வின் உளிகளில் வெவ்வேறு பரிணாமங்களில் நாமிப்போது!///


அருமை !

மெல்போர்ன் கமல் said...

இன்னொரு விஷயம், ஏதாவது விரும்பத்தகாதது நடந்திருந்தால் இது கனவாக இருக்கக் கூடாதா என்று நினைத்துக்கொள்வேன்! உச்சபட்ச காமெடி, கனவிலும், இது கனவாக இருக்கக் கூடாதாவென்று நினைத்துக் கொள்வது போல் வரும்!! :-))//

ரொம்ப ஜாக்கிரதையா இருங்கோ?? வலைப்பதிவும் கனவில தான் எழுதுறீங்களா என்று ஒருக்கா check பண்ணுங்கோ.

வித்யா said...

நல்லா சிரிச்சேன் முல்லை. எனக்குக் கூட நிறைய கனவு வரும் இந்த மாதிரி. நான் படுத்தவாக்கில் அந்தரத்தில் பறப்பது போல். தீடிரென்று கீழே விழுவது போல். அப்போ எனக்கு முதுகு வலிக்கும். ஆனா எப்படின்னு தான் தெரியல:)

சுரேகா.. said...

நல்லா இருக்கு!
அதுவும், அந்த கடைசி வரிகள்!
சத்தியமானவை!


வாழ்த்துக்கள்!

குடுகுடுப்பை said...

தட்டு மிதிச்சு தடுமாறி போச்சு.

thevanmayam said...

முதல் முதலா முதல்ல வந்துட்டேன்!!

என்னைய ஃபாலோ பண்ணி என்னை ப்

பீட் பண்ணீட்டிங்க!!!

கனவுல நீங்க தட்ட மிதிச்சீங்களா

இல்ல உங்க கணவரா???

thevanmayam said...

முதல் முதலா முதல்ல வந்துட்டேன்!!

என்னைய ஃபாலோ பண்ணி என்னை ப்

பீட் பண்ணீட்டிங்க!!!

கனவுல நீங்க தட்ட மிதிச்சீங்களா

இல்ல உங்க கணவரா???

thevanmayam said...

முதல் முதலா முதல்ல வந்துட்டேன்!!

என்னைய ஃபாலோ பண்ணி என்னை ப்

பீட் பண்ணீட்டிங்க!!!

கனவுல நீங்க தட்ட மிதிச்சீங்களா

இல்ல உங்க கணவரா???

தமிழ் பிரியன் said...

எனக்கும் இப்படி நிறைய பயங்கர கனவுகள் வருவதுண்டு கல்யாணத்துக்கு முன்னாடி... :) இப்ப அதெல்லாம் நேரடியாவே நடக்குது.. ;)))

ஜீவன் said...

///ராட்சசன் வந்து எங்கள் வீட்டு கொல்லையிலுள்ள பனை மரத்தை பிடுங்கி பல் விளக்குகிறான். அன்று பகல் முழுவது பயந்த பயமும் இன்றும் நினைவிருக்கிறது! :-)))///

ஐயோ பயந்துள்ள வருது!

அதிரை ஜமால் said...

வந்தேன்

அதிரை ஜமால் said...

\\
நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பேன்..(ஆமா, தூங்கினாதானே கனவு வரும்!!)\\

மிகப்பெரும் உண்மையை சொன்ன பப்புவின் அம்மாவிற்கு ...

அதிரை ஜமால் said...

\\உச்சபட்ச காமெடி, கனவிலும், இது கனவாக இருக்கக் கூடாதாவென்று நினைத்துக் கொள்வது போல் வரும்!! :-))\\

அட எனக்கும் வருங்க

அதிரை ஜமால் said...

\\உஷாக்கா, ஐ மிஸ் யூ சோ மச் உஷாக்கா! அந்த முல்லையும் இப்போ இல்லை, அந்த உஷாக்காவும் இருக்க மாட்டாங்கன்னும் தெரியும்.வாழ்வின் உளிகளில் வெவ்வேறு பரிணாமங்களில் நாமிப்போது! ஆனா, நம்ம காலேஜ் காம்பஸ்-ல கண்டிப்பா ஏதாவதொரு முல்லையும், உஷாக்காவும் கண்டிப்பா இருப்பாங்க..எத்தனை பேட்ச் வந்தாலும்!\\

ஆஹா ஆஹா அருமையான காலங்கள்.

எனக்கு +2 தான் ரொம்ப மறக்க முடியாதது ...

சரி சரி நாமும் கொஞ்சம் கொசு வத்தி சுத்துவோம்...

சின்ன அம்மிணி said...

கணக்கு பரிட்சைக்கு பதில் தெரியாம முழிக்கறது, உயரமான இடத்தில இருந்து கீழ விழறமாதிரி எல்லாம் அடிக்கடி எனக்கு கனவு வரும்.

அமுதா said...

//ஆமா, தூங்கினாதானே கனவு வரும்!!).

அப்படியா? நான் முழிச்சிட்டே கூட கனவு காணுவேன்பா. நல்லா இருந்தது உங்க கனாக் கண்ட காலங்கள்.

சின்ன அம்மிணி said...

விடிஞ்சதும் கூகுளாண்டவர் கிட்ட கேளுங்க கனாக்கு என்ன பலன்னு, நல்லாப்பொழுதும் போவும்.

கண்மணி said...

//சின்னவயதில் பகலில் மதியம் தூங்கி அந்திசமயம் எழுந்ததும் அடுத்தநாள் காலை போலிருக்கும். அப்போது பல்விளக்கியெல்லாம் காமெடி செய்திருக்கிறேன்!//

ஓ என்னை மாதிரி உலகத்துல நிறையப் பேர் இருக்காங்கப்பா;)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப நல்லாருந்துது கனாக்காணும் காலங்கள்

ஆமா, கடேசியில ஏன் யதார்த்த கத்தியால குத்திட்டீங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சின்னவயதில் பகலில் மதியம் தூங்கி அந்திசமயம் எழுந்ததும் அடுத்தநாள் காலை போலிருக்கும். அப்போது பல்விளக்கியெல்லாம் காமெடி செய்திருக்கிறேன்!

நான் கூட இந்த லிஸ்ட்ல இருக்கேன்ப்பா

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாட் எ கதை வாட் எ கதை
அப்போ உங்க கூட இருந்தவர் சொல்றார், "இல்ல, நாந்தான் தட்டை மெதிச்சுட்டேன்"ன்னு!"
-அப்படின்னு சொல்லிட்டு ஓடியே வந்துட்டேன்!! //
அதானே அங்கனேயே இருந்திருந்தா கும்மியிருப்பாங்கல்ல.

ராமலக்ஷ்மி said...

சீனியரை கனவுன்னு சொல்லி இப்படி கவுத்திட்டீங்களா:))?

//நம்ம காலேஜ் காம்பஸ்-ல கண்டிப்பா ஏதாவதொரு முல்லையும், உஷாக்காவும் கண்டிப்பா இருப்பாங்க..எத்தனை பேட்ச் வந்தாலும்!//

ஆமாங்க!


//கனவில் உளறுவது இன்னொரு காமெடி.//

ஹா ஹா! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா உளறியிருக்கோம் சின்னதிலே. இப்பவும் சொல்லிச் சிரிச்சுக்குவோம்.

நிஜமா நல்லவன் said...

/ஏதாவது விரும்பத்தகாதது நடந்திருந்தால் இது கனவாக இருக்கக் கூடாதா என்று நினைத்துக்கொள்வேன்! உச்சபட்ச காமெடி, கனவிலும், இது கனவாக இருக்கக் கூடாதாவென்று நினைத்துக் கொள்வது போல் வரும்!! :-))/

:)

rapp said...

ஹா ஹா ஹா சூப்பர்:):):) இன்னைக்குத்தான் இதையும் படிச்சேன். சூப்பர்:):):)
எனக்கு முக்காவாசிக் கனவுகள் ஞாபகம் இருக்கும்:):):) கனவுப் பலன்கள் படிக்க ஆசை, ஆனா எதுக்கு வம்புன்னு கம்னு இருந்திடுவேன்:):):) எங்க guddu தூங்குறப்போ சில சமயம் கெக்காபெக்கானு சிரிப்பான், அப்போ அவன் கனவு காண்ரான்னு நாங்க நெனச்சிப்போம்:):):)

rapp said...

//உயரமான இடத்தில இருந்து கீழ விழறமாதிரி எல்லாம் அடிக்கடி எனக்கு கனவு வரும்.//
இதேமாதிரி கட்டில்ல இருந்து விழறாப்போலவும் கனவு வரும். இதுக்கு சயிண்டிபிக்கா ஒரு காரணம் சொல்லி பல புத்தகங்களில் படிச்சிருக்கேன். (நம்ம மூதாதையர்கள் காடுகளில் சுத்தி திரிந்தவர்கள்தானே, அத வெச்சு போகும் )

புதுகை.அப்துல்லா said...

இப்ப என் கனவெல்லாம் எப்ப நம்ப நாடு வல்லரசாகும்ங்கிறதுல இருக்கு (ஆமா பெரிய அப்துல்கலாம் இவரு)

:))

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ்..எல்லாம் உங்க தங்கச்சி இல்லையா..அந்த எஃபெகட்தான்!

//அதுவும் அசாதரண சம்பவங்கள் கனவாக வரும்போது....!//

இதைப் பற்றி சொல்லுங்களேன்!!


//பயபுள்ளைக்கு பல்லு விளக்குறதுக்கு பிரஷ் உங்க வீட்டு கொல்லையில்லயா வளர்த்து வைச்சிருக்கீங்க!//

பின்ன அவ்ளோ பெரிய ப்ரஷ் எப்படி செய்றது?!!

நன்றி ராம்சுரேஷ்! கண்டிப்பா இல்லை..திடீர்னு தோணுச்சு! :-))

சந்தனமுல்லை said...

நன்றி கமல்..அதுக்கு அவசியமேயில்ல..அதான் பின்னுட்டமெல்லாம் நிஜமா இருக்கே!! :-)

நன்றி வித்யா! அய்யோ..வித்தியாசமா இருக்கே உங்க அனுபவம்..:-))

நன்றி சுரேகா..ஆமா..அந்த உடனடி கிண்டல்,கேலில்லாம் இப்போ கிடையாது..ஏன்னா, அப்ப்டை ஸ்போர்டிவ்வா காலேஜ்-ல மட்டும்தான் இருக்க முடியும்!! :-))

நன்றி குடுகுடுப்பையாரே! நல்ல வார்த்தை விளையாட்டு!

சந்தனமுல்லை said...

நன்றி தேவன்மயம்!! ஆகா...எனக்கேவா?!

நன்றி ஜீவன். உங்கள் சிறுவயது கனவுகளையும் சொல்லுங்களேன்!! நீங்க பயந்ததையும் நாங்க தெரிஞ்சுக்கறோம்!

நன்றி ஜமால்...எங்கே உங்க கொசுவத்தி!!

ஆகா சின்ன அம்மிணி..சேம் பிளட்!

நன்றி அமுதா..நீங்க மீட்டிங்-ல என்ன பண்றீங்கன்னும் சொல்றீங்க போல!!

நன்றி கண்மணி..நீங்களும் நம்ம கேசா!!

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா..ம்ம்..ஆமாப்பா ஒரே பீலீங்ஸ்!அப்போ உங்க வெர்ஷனையும் படிக்க ஆசையாயிருக்கேன்!

நன்றி ராமலஷ்மி!! ஆமா..ஜாலியா இருக்குமே!

நன்றி நிஜமா நல்லவன்!!

சந்தனமுல்லை said...

நன்றி ராப்! guddu-வுக்கு ஹாய்! ம்ம்..சிலசமயம் தொடர்கனவுகள் கூட வரும்..காலையில சாப்பிட்டு தூங்கினா ராத்திரி கனவோட தொடர்ச்சி! பலன்கள் பத்தி யோசிச்சதில்லை! :-))
//இதுக்கு சயிண்டிபிக்கா ஒரு காரணம் சொல்லி பல புத்தகங்களில் படிச்சிருக்கேன். //

ஹை..இதைப் பத்தி சொல்றீங்களா...மறைமுகமா குரங்குன்னு சொல்லாம இருந்தா சரி!! lol

நன்றி அப்துல்லா..கனவுகள் பலிக்கட்டும்!!

சின்ன அம்மிணி said...

ராப்பு , குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்ங்கற உண்மைய உணர்த்தினதுக்கு ஒரு ஓ... :)

ஆகாய நதி said...

கலக்கல் காமெடி(நக்கல்) கனவு :)

எனக்கு லூசுத்தனமான கனவுகள் தான் வரும் :)

Lakshmi Sundar said...

நான்கு நாட்கள் முன்னரே அனுப்ப நினைத்து இன்று தான் முடிந்தது...
உங்கள் கனா காணும் காலங்கள் தான் நான் முதலில் படித்தது... அதற்கு விமர்சனம் எழுத முற்பட்ட போது உங்களுடைய மற்ற வலைபூகளை பார்க்க நேரிட்டது.. பப்புவை பற்றிய வலைப்பூக்கள் முதலில் சந்தோசப்படுத்தி பின்னர் சலிப்பூட்டின.. காரணம் என் மனது இதை தொடர்ந்து படிக்கும் அளவிற்கு பக்குவப்படவில்லையா அல்லது என் குழந்தை பருவத்தில் என் அம்மாவால் நான் இப்படி எல்லாம் கொண்டடப்படவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடா என்று தெரியவில்லை.. பப்பு கொடுத்து வைத்தவள்..
உங்கள் "நீங்கள் மடிப்பாக்கம் வழிச் செல்பவராயின், ஒரு வேண்டுகோள்..." உங்கள் மீது இருந்த மதிப்பினை பன்மடங்கு உயர்த்தியது. நான் மடிப்பாக்கம் வழியாக செல்ல நேரிட்டால் கண்டிப்பாக உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவேன்...
இவை தவிர எனக்கு பிடித்தவை...
குட் டச்/பேட் டச் - கருத்துரையாடல்!
சுஜாதா
இன்னும் பல...

கால தாமதம் ஆனாலும் அடி மனதில் இருந்து வாழ்த்துகிறேன்...
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்

பி.கு : போன வருடம் நள்ளிரவு 12 மணிக்கு தொலைபேசியில் என் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள் கூறிய நான் இந்த முறை மறந்தது உங்களை மட்டும் வாழ்த்த தானோ..