ஹாஸ்டல் அனுபவங்கள் ரொம்ப வித்தியாசமானவை. அதுவும் காலேஜ் லைஃப் ஹாஸ்டலில்
அமைந்தால், அதுமாதிரி ஜாலி எதுவும் கிடையாது. லேடிஸ் ஹாஸ்டல்-னா, கேலிக்கும் கூத்துக்கும் கேக்கவே வேணாம்!! நான் UG, PG ரெண்டுமே ஹாஸ்டல்தான்!!
எவ்வளவு வித்தியாசமான் கேரக்டர்கள்...அதுவும், பல்வேறு பின்னணியில்..பல்வேறு மொழிகள்..கலாச்சாரங்கள்!!காலை எழுந்தவுடன் காபி மாதிரி, காலை எழுந்தவுடன் ...”எனக்கொரு சிநேகிதி, சிநேகிதி, சிலிண்டர் மாதிரி” என்று ஆரம்பிக்கும் கலாட்டா இரவு தூங்கப்போகும் வரை தொடரும். அப்போ சிரிச்ச மாதிரி
வாழ்க்கையில் அதன்பின் மனம் விட்டு, விட்டேற்றியாக கவலை மறந்து சிரித்திருக்கிறோமா என்பது சந்தேகமே..ஏன்னா, எல்ல்லாத்துக்கும், சிரிப்பு, கும்மாளம், கலாட்டா, நக்கல்,கிண்டல்...எதுலயுமே சீரியஸ்னெஸ் கிடையாது, அதற்காக யாராவது திட்டினாலும் அதுக்கும் கிண்டல்தான்!!
காலேஜ்-னா படிக்கவே வேணாம்..னு நினைச்சு போய் பார்த்தா, அங்கதான் ஸ்கூலைவிட
அதிகமா டெஸ்ட் எழுதியிருப்பேன்., அதுவும், சர்ப்ரைஸ் டெஸ்ட்-ல்லாம் வேற. திடீர்னு பேப்பரை எடுங்க-ன்னு, லிங்க்ட் லிஸ்ட் எழுது,ஷார்ட்ஸ்ட் பாத் எழுது, புபுள் சார்ட்-ன்னா என்ன..னு முதல் வருஷம ஃபுல்லா, டெஸ்ட் மயம் தான். (இந்த ரேஞ்ச்-ல +2 படிச்சிருந்தா ஸ்கூல் ஃப்ர்ஸ்ட் என்ன.. ஸ்டேட் ஃப்ர்ஸ்ட்டே நாந்தான்!! ) இந்த கொடுமைல கொஞ்சம் ஆறுதலா இருந்தது, ஹாஸ்டல் லைஃப்தான்.
ஹாஸ்டல்ல, ஒரு கேங் பார்ம் ஆகிடுச்சின்னா, கலாட்டாதான்.
ஒரு வருஷத்தில ரெண்டு செமஸ்டர். அது எல்லாருக்கும்தான் தெரியுமே. ஆனா, தெரியாத விஷயம் என்னன்னா,எங்களுக்கு ஒவ்வொரு செம்ஸ்டர் முடிஞ்சது ஒரு மாசம் லீவு விடுவாங்க. ஜூலைலேர்ந்து நவம்பர் வரைக்கும் ஒரு செம்ஸ்டர். டிசம்பர் முழுதும் லீவு. ஏன்னா, அந்த குளிர்ல மனுஷன் இருப்பானா? அப்புறம், பொங்கலுக்கு
அப்புறம் ஆரம்பிக்கற இரண்டாவது செமஸ்டரில், மே கடைசில முடியும். ஜூன் மாசம் ஃபுல்லா லீவு. இது மலைமேல இருக்கறதுன்னால இந்த ஏற்பாடு.மத்த காலேஜூல்லலாம், 15 நாள்தான் செமஸ்டர் லீவு!அந்த வருஷம், செமஸ்டர் லேட்டா ஆரம்பிச்சதால, டிசம்பர்ல நடக்க வேண்டிய தேர்வு, லீவு முடிஞ்சு ஜனவரில நடக்கலாம்னு ஒரு வத்ந்தி! ஒழுங்கா படிச்சாலே எழுதறது கஷ்டம். இதுல லீவு முடிஞ்சுன்னா, எல்லாம் பயந்துட்டாங்க! ஒரு ட்வின்ஸ். எங்க ஜூனியர்ங்கதான்!! வெள்ளிக்கிழமை ராத்திரின்னாலே ஜாலிதான்! நாங்கள்ளாம், சரி இந்த ஜூனியர்ஸ்ல்லாம் என்னதான் செய்துங்கன்னு பார்க்கலாம்னு, அவங்க ரூம்கிட்ட போனா, ஒரு பொண்ணு, ட்வின்ஸூல ஒருத்தி, நான் ஆவிங்ககிட்ட பேசுவேன்னு! ம்ம்..பார்த்தா ஒரு பேப்பர்ல ஏதோ ஆங்கில எழுத்துகள், எண்கள்னு எழுதி இருந்தது! அதுல ஒரு காயின் வச்சு, அது மேல ஒரு விரல் வச்சுருந்தா!
“யாரோட ஆவி உனக்கு வரணும்”-ன்னு சுத்தியிருந்தவங்ககிட்ட கேட்டா!!
சரி, நமக்கில்லாம் இட்லிலேர்ந்து வர்ற ஆவிதானே தெரியும்ன்னு பார்த்துகிட்டேயிருந்தோம்.
”ராஜீவ் காந்தி” ன்னு ஒரு குரல் கேட்டுது! ஓ, இது யாருக்கும் தெரியாம போச்சே..அவரையே கூப்பிட்டு, கொலை பண்ணது யாருன்னு கேட்க போறாங்க போலருக்கே! அந்த காயின் கொஞ்சமா நகருகிற மாதிரி ஒரு எஃபக்ட் வேற!!
”என்ன கேட்கணும்,கேளு”ன்னு சொன்னதும், ராஜீவ் காந்தின்னு சொன்ன பொண்ணு சொல்றா “செமஸ்டர் எக்ஸாம் எப்போ வரும்னு”!!அட,பாவிங்களா...உங்க ரவுசுக்கு ஒரு எல்லையே இல்லாம போச்சே!! நமக்கு எப்போ பரீட்சை வரும்னு ராஜீவ் காந்திக்கு தெரிஞ்சிருந்தா, யாரு கொலை பண்ணதுன்னு அவரே வந்து சொல்லியிருக்க மாட்டாரா...!!
ஸ்போர்ட்ஸ் டே..நாலு ஹவுஸ் பிரிச்சு விட்டிருப்பாங்க. அந்த குரூப்-க்குள்ள
எல்லா போட்டியும் நடக்கும். அதுல ஜூனியர்,சீனியர் எல்லாருமே.
ரிலே-ல நாலு தடவை அந்த ஸ்டிக் கைமாறும். எங்களுக்கு ஒரு ஜூனியர்..பியூலான்னு!!
அவ இரண்டாவதா ஓடி வர்ற இடத்தில நின்னுகிட்டிருந்தா! முதல் கோடியிலிருந்து ஓடி வந்த பொண்ணு ப்யூலாகிட்ட ஸ்டிக்கை கொடுத்தா. நாங்க, எங்க டீமை உற்சாகப்படுத்த ஒரமா நின்னுக்கிட்டிருந்தோம், ப்யூலாவுக்கு அருகில்.ஸ்டிக்கை வாங்கின ப்யூலா ஓட ஆரம்பிச்சா. நல்லாதான் ஓடினா, திடீர்னு, எங்களை நோக்கி ஓடி வர ஆரம்பித்தாள். நாங்கள்ளாம் ஒரே குழப்பத்தோட பார்க்கிறோம். ப்யுலாகிட்டயிருந்து வாங்கி ஓட வேண்டியவளுக்கு
என்ன செய்றதுன்னே தெரியல! கிட்ட வந்த ப்யூலாகிட்ட, ஏன்யா இங்க வந்தேன்னு கேட்டதுக்கு, அவ சொல்றா. "நீங்கதானே ப்யூலா.. வந்துடு..வந்துடுன்னு கத்தினீங்கன்னு!!"
ஒரே கலாட்டாவா இருந்தாலும், எல்லாரும் ரொம்ப பாசமா இருப்பாங்க!!
இருப்பதை பகிர்ந்துக்கறது, அனுசரித்து நடந்துக்கிறது, குரூப் ஸ்டடி,
ஒண்ணா படிக்காம வந்து இண்டர்னல்-ஐ தள்ளி வைக்கிறது, எல்லாத்துக்கும் மேல,
இண்டர்னல்-ஐ இன்னைக்கு எழுதமாட்டோம்கிறதை மேம்கிட்ட
negotiate-பண்றதுக்கு ஒரு நாலு நாட்டாமைகளோட போறது,
என்ன திட்டினாலும் அந்த நாலு பேரு மட்டும் திட்டு வாங்கிட்டு, மொத்த க்ளாசும்
சேர்ந்து லூட்டி அடிக்கறது....
வீக் என்ட்ல நம்மை பார்க்க வர்ற சொந்த்க்காரர்கள்/குடும்பத்தினர்
வாங்கி வர்ற நொறுக்ஸை ரூம்ல வந்ததும், நம்ம ரூமிஸ்லேர்ந்து பக்கத்து ரூமிஸ்ல்லாம் சேர்ந்து ஒரே நேரத்துல கை விட்டு எடுக்கனும்..யாருக்கு என்ன வருதோ அது அவங்க லக்-குன்னும், யாருக்காவது பேப்பரு/நூலு இதெல்லாம் வந்தா அவங்களோட நம்ம
கையில் இருக்கறதை பகிர்ந்துக்கறதுல் காக்காவை மிஞ்சிடுவோம் நாங்க!!
ஹாஸ்டல்ல காண கிடைக்கிற கேரக்டர்ஸ் மதிரி வேற எங்கேயும் நாம் பார்க்க முடியாது!
ஒரு குருப் எம் & பி-ன்னு அலைவாங்க..இன்னொரு க்ரூப் ரமணி சந்திரன்..
இதுல ஒரு கதையை படிச்சுட்டா அவங்களோட மத்த கதையெல்லாம் படிக்க வேணாம்..ஏன்னா ஃபார்மேட் ஒன்னுதானே,பேரு, இடம்தான் மாறுபடும்!! ஆனா, படிச்சதையே எத்தன தடவை வேணா படிப்பாங்க,அதுல டிஸ்கஸ் பண்ணுவாங்க..அதுதான் அங்கே காமெடியே!!
அப்புறம், முகத்துல எப்பப்பாரு எதையாவது பூசிக்கிடே அலையறது..முல்தானி மெட்டிலேர்ந்து மெஸ்-ல கிடைக்கிற கேரட்.தக்காளி வரைக்கும்!!இதுல ரெண்டு ரகம்..ஒன்னு வந்து எப்பவும் மத்தவங்களுக்கு செஞ்சு விடுவாஙக..புருவம் கரெக்ட் பண்ணரது, பேஷியல் செய்றதுன்னு! இன்னொரு க்ரூப் இதை செய், அதை செய்ன்னு அவங்ககிட்ட முகத்தைக் காட்டறது!! ஆனா பாதி பேரு கண்ண்டிப்பா கண்ணாடி முன்னாடி இருப்பாங்க மூனு வேளையும, சாப்பிடறாங்களோ இல்லையோ!!
இன்னும் கொஞ்சம் பேரு அராஜக பார்ட்டிஸா இருப்பாங்க...லீடர்ங்க மாதிரி ஆக்ட் பண்ணுவாங்க..!! செலபேரு ஒரே படிப்ஸா இருக்கும்..அவங்க்ளோட வேல பெரும்பாலும் நாங்க படிக்காம வச்சிருக்கற போர்ஷனை படிச்சு, எஙகளுக்கு விளக்கம் சொல்றது!! ரொம்ப கடமையா வேற செய்வாங்க!! அவங்க சொல்றத மட்டும் கேட்டுட்டு போய் செமஸ்டர் எழுதின ஆத்மாக்களும் இருப்பாங்க!!
மொத்ததுல லேடீஸ் ஹாஸ்டல், ரொம்ப கலர்ஃபுல்லான இடம்!!
நாங்க அடிக்க்கும் லூட்டிய பார்த்து, டே ஸ்காலர்ஸும், ஹாஸ்டல்ல சேர்ந்துடுவாங்க!!
அதுவும் காலேஜ் லைஃப ஹாஸ்டல்ல அமையலன்னா வாழ்க்கையில நீங்க ரொம்ப மிஸ் பண்ணிட்டீங்கன்னு அர்த்தம்!!கடைசியாக ஒன்று..
ரொம்ப காமெடில்லாம், பாத்ரூம்லதான் நடக்கும்! இதுவும் அதுமாதிரி ஒன்னுதான்.
ஏன்னா, பொதுவான பாத்ரூம்கள்தான் இருக்கும், ஒரு ஃபுளோருக்கு 10 பாத்ரூம் அப்படின்னு. அதுலயும், முதல் அஞ்சு சீனியர்களுக்கு, அதுவும் இந்த டமுக்கும் அப்புறம் நீஙகளும் உபயோகிக்கலாம்னு, பெரிய மனசு பண்ணி தனியா ரூல்ஸ்லாம் போடுவாங்க!! (இவ்வளவுக்கும், எங்க டேரக்ட் சீனியர்ஸ் கிடையாது!!). ஒருநாள் எங்க கிளாஸ்
ப்ரியா, "சனிகிழமைதானே, எல்லாம் லேட்டா எழுந்து, "சைட் ஸீயிங்" தானே போகுங்கன்னு" நினைச்சு, 6.30 மணிக்கு மூணாவது பாத்ரூமை போய் திறந்திருக்கா( அது கொஞ்சம் சரியா பூட்டாது.) உள்ளே பார்த்தா, ராணி அக்கா..உடனே கதவை மூடிட்டா...
ராணி அக்கா இருக்காங்களே..அவங்கன்னா வார்டனுக்கே செம டெரர். எல்லாருமே கொஞ்சம் பயந்துதான் பேசுவாங்க..ஏன்னா, அவ்ளோ அத்தாரிட்டேடிவ்..!!ம்ம்ம்..ப்ரியா பயந்து போய்ட்டா..அய்ய்யயோ...ராணி அக்காவாச்சே..என்ன பண்ணுவாங்களோன்னு! அப்புறம் அவ செஞ்சதுதான்தான் காமெடியே....திரும்ப கதவை திறந்து, "அக்கா, சாரிக்கா..." ன்னு சொல்லி முடிக்க்றதுக்குள்ள, அவங்க "ப்ப்ப்ரியா" ன்னு கத்தவும்தான் ....அவளுக்கு உறைச்சுருக்கு...என்ன செஞ்சிருக்கோம்னு!!!