Sunday, July 20, 2008

சென்னையில் குழந்தைகளின் விளையாட்டுலகம்

ஏழுவயதுகுட்பட்ட குழந்தை உங்களுக்கு இருக்கிறதா?
இல்லை, நீங்கள் ஒரு சித்தி-சித்தப்பா, அத்தை-மாமா என்று அழைக்கக் கூடிய
ஒரு சுட்டி உங்கள் வீட்டில் உண்டா? கிண்டி குழந்தைகள் பூங்கா, வண்டலூர் விலங்கியல் பூங்கா....பீச்.. இதை விட்டால் சென்னையில் குழந்தைகளுக்கு வேறு பொழுதுபோக்கே கிடையாதா என்று சலித்துக் கொளபவரா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்காக!!

ஒன்றரை வயது வரை வீட்டிலேயே குழந்தைகளை எண்டர்டெயின் செய்து விடலாம்.
ஆனால், அருகில பார்க் இருந்தால், மற்ற குழந்தைகளை பார்த்து, பழக ஏதுவாக இருக்கும்.
ஆனால், இரண்டு வயதுக்கு மேல், வீட்டில் மட்டுமே இருப்பது இருவருக்குமே தொல்லை!!
உறவினர்கள், மற்றும் அக்கம் பக்கத்தினரை மட்டுமே பார்த்து வளர்ந்த குழந்தை,
புதிதாக மற்றவர்களிடம் பழக தயக்கம் காட்டும்.பயப்படும்!
பார்க் அருகில் இருந்தால் மிக வசதி. ஆனால் கொஞ்ச நாட்களில் சலித்துவிடும் அல்லது,விடுமுறை நாட்களில் கூட்டம் மிகுதியாய் இருக்கும். எவ்வளவு விளையாட்டு சாமன்கள் வாங்குவது? எது வாங்கினாலும், ஒன்றிரண்டு நாட்களுக்குத்தான், பின், அது அக்குவேறாக, ஆணிவேறாக! ஒரு வாரம் கழித்து அது இருக்கும் இடம் தெரியாது!!

வெறுத்துப் போன நான், வேறு என்ன மாறுதல் என சென்னையை அலசியதில்,பப்புவிற்காக எனக்கு கிடைத்தவை இதோ உங்களுக்காகவும்!

வெனிலா சில்ட்ரன்ஸ் ப்ளேஸ்

இது மயிலாப்பூரில் லஸ் அவென்யூ வில் இருக்கிறது. முகவரியும் சுட்டியும் கீழே!!
இது ஒரு குழந்தைகள் விளயாட்டு மையம். குழந்தையோடு நீங்களும் அங்உ இருக்க வேண்டியது அவசியம். தரை முழுவதும், மென்மையான விழுந்தாலும் அடிபடாத ஸ்பாஞ்ச். குதிக்க், ஓட நல்ல இடம். விழுந்து அடிபடுமோவென அஞ்ச தேவையில்லை. இதை நடத்துவது இஸ்ரவேலிலிருந்து ஒருவர். அங்கிருக்கும் விளையாட்டு பொருட்களனைத்தும் அங்கிருந்து வந்தது. இது மட்டுமில்லாமல், பல்வேறு பயிற்சிகளும் உண்டு. பப்புவிற்கு இப்போது அந்த பயிற்சிகள் தேவையில்லை என நான் கருதியதாலும், சென்று வரும் தூரத்தினையும் கணக்கில்
கொள்ளவேண்டியிருப்பதினாலும் அவற்றில் ஆர்வம் காட்டவில்லை!


மொபைலிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்!


சிறார்களின் அறைக்குத் தேவையான கட்டில், அலமாரி, நாற்காலி, அலங்காரப் பொருட்கள் உண்டு.ஒரு Wi-Fi கனெகஷனுடன் கூடிய கஃபேயும் உண்டு. (juices/potata wedges are yummy!!)

நுழைவுக் கட்டனம் : ரூ 150
நேரம் : எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்.

Vanilla
No. 8/57, 1st Street Luz Avenue
Mylapore
Chennai 600 004
INDIA
Phone
91 44 4553 4146
http://www.vanillaplace.com/

பேபிஸ் டே அவுட்

இது ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது. இங்கு எக்கசக்க விளையாட்டுச் சாமான்கள்...இரண்டு தளங்களில் இயங்குகிறது!! ஒரு அறையில் சிறு ஊஞ்சல், சறுக்குமரம், மின்சாரத்தில் இயங்கும் சீ-சா, முன்னும் பின்னும் இயங்கக் கூடிய கார், ஜீப். மற்றொரு அறையில், ஒரு பெரிய சமையலறை செட், எலக்ட்ரானிக் பேசும் இயந்திரம், பின் சிறு சிறு blocks விளையாட்டுகள், ஜிக் சா புதிர்கள், புத்தகங்கள், சைக்கிள், கிரிக்கெட் விளையாட வலையிட்ட இடம் இன்ன பிற.
இங்கு நாமும் குழந்தையுடன் இருக்கலாம் அலல்து, அங்கு இருப்பவரிகளின் பொறுப்பில் விட்டும் செல்லலாம். நாமும் இருந்தால் பிள்ளையை எண்ட்ர்டெயின் செய்யலாம். மேலும், அவர்களை விளையாட விட்டுவிட்டு நாம் கண்காணித்துக் கொண்டு ஓய்வு எடுக்கலாம்!

பதிவுக் கட்டணம் : 200
நுழைவுக் கட்டணம் : ரூ 200 ஒன்றரை மணி நேரத்திற்கு (3 மணிநேரத்திற்கு ரூ 300 etc)

# 105,Chamiers Road, Chamiers Road,RA Puram, Chennai, Tamilnadu 600028, India
+91 44 64581234


ஹன்சல் & க்ரீட்டல்

இது தி நகரில் இருக்கிறது.
இங்கும் குழந்தைகள் விளையாட நிறைய விளையாட்டுச் சாமான்கள்.
புதிர்கள், வர்ணங்கள் தீட்டும் புத்தகங்கள், குழந்தைகளை கவரும் வண்ண வண்ண பந்துத் தொட்டி! மேலும், குழந்தைகள் படம் பார்கக் வச்தியான மினி தியேட்டரும் உண்டு!
என்னை அசத்தியது, அவர்களின் புத்தகக் கலெக்ஷன்!

பதிவுக் கட்டணம் : இல்லை
நுழைவுக் கட்டணம் : ரூ 75 ஒரு மணி நேரத்திற்கு

11 (Old No. 6), Jagadambal Street (First Floor)
T.Nagar
Chennai - 600017
Ph: 044 28152549
http://www.hanselandgretel.in


மால்களுக்கு கூட்டி செல்ல எனக்கு விருப்பமில்லை! மேலும் அவள் வயதையொத்த சிறார்களுடன் பழக நல்ல வாய்ப்பு! மேலும், அந்தப் பொருட்களை வாங்கும் சக்தி நமக்கு இல்லையெனினும், குறைந்த பட்சம் இவற்றை அவர்களுக்கு காண்பித்துக் கொடுத்த திருப்தி!! ஒவ்வொரு வாரமும் போக முடியாதெனினும், ஒரே மாதிரியான விளையாட்டிலிருந்து கொஞ்சம் மாறுதலாயிருக்கும்!!

பப்புவோடு சேர்ந்து நானும் என் குழந்தைப் பருவத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்கிறேன்!!
உங்களுக்கும் நல்ல அனுபவங்கள் இருந்தால், அல்லது இது போன்ற வேறு இடங்கள் இருந்தால்
பகிர்ந்துக் கொள்ளுங்கள்!!

19 comments:

pcsolotto said...

Probably I can say with this blog make, more some interesting topics.

philippine lotto result said...

I could give my own opinion with your topic that is not boring for me.

sudar mani said...

dear sister, not only chennai people, say some other ideas for all people. it useful for all.

rapp said...

அருமையான பதிவு

கையேடு said...

தாமதமான நட்சத்திர வாழ்த்துக்கள்,

இவ்விடுகை பற்றி:

சென்னையில் (தமிழகத்தின் சில பெருநகரங்களிலும்) குழந்தைகளின் விளையாட்டுலகம் இப்படி சில குறிப்பிட்ட முகவரிகளுக்குள் நுழைந்து கொண்டது வேதையான விசயம்தான்.

வெனிலா சில்ட்ரன்ஸ் ப்ளேஸ் said...

/
பப்புவோடு சேர்ந்து நானும் என் குழந்தைப் பருவத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்கிறேன்!!
/

பாத்து அதுக்காக குழந்தைங்க ஊஞ்சல்ல உக்காந்து ஆடறது எல்லாம் ரொம்பா ஓவரு!

:))))

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

வெனிலா சில்ட்ரன்ஸ் ப்ளேஸ்

இது மயிலாப்பூரில் லஸ் அவென்யூ வில் இருக்கிறது.//


அட‌டே! என் வீட்டுக்கு ப‌க்க‌த்திலேயே இப்ப‌டி ஒரு இட‌ம் இருக்க‌து என‌க்குத் தெரியாம‌ப் போச்சே!

Natty said...

நல்ல செய்திதான்... ஆனால் கொஞ்சம் விலை அதிகமாக உள்ளது.. இங்கு (அமெரிக்காவில்) உள்ள நூலகங்கள் அனைத்திலும் ஒவ்வொரு வாரமும் குழந்தைகளுக்கு (வயது வாரியாக) பல நிகழ்ச்சிகள் நடக்கிறது... நம்ம ஊரில் எல்லாமே வியாபார ரீதியாவது ஒரு விதத்தில் ரிஸ்க்... எல்லா குழந்தைகளுக்கும் இதை போன்ற வாய்ப்பு கிடைக்காதல்லவா....

cheena (சீனா) said...

சந்தன முல்லை

பல புதிய தகவல்கள்

காஸ்ட்லி அபேர்ஸ்

ம்ம்ம்ம்ம் - மழலைச் செல்வங்களுக்குத் தேவையான ஒன்று

பப்புவிற்கு கதை வேண்டாமா

பாருங்களேன்

http://naanpudhuvandu.blogspot.com/2008/07/blog-post.html

http://pattarivumpaadamum.blogspot.com/2008/07/blog-post_06.html

http://cheenakay.blogspot.com/2008/07/blog-post.html

பப்புவிற்கு அன்பு வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

sudar mani : will post if I across any!!

சந்தனமுல்லை said...

rapp : நன்றி!! :)

சந்தனமுல்லை said...

கையேடு : வாழ்த்துக்களுக்கு நன்றி!!

ஆமாம், என்ன செய்வது, எல்லாமே வணிகமாகத்தான் போயிருக்கிறது, குழந்தைகள் விளையாட்டு உட்பட!!

சந்தனமுல்லை said...

வெனிலா சில்ட்ரன்ஸ் ப்ளேஸ் : ஹாய் வெனிலா, முதல்ல ஊஞ்சலுக்கு ஏற்பாடு பண்ணுங்க..அது மட்டும்தான் அங்க மிஸ்ஸிங்!!

சந்தனமுல்லை said...

புதுகை.எம்.எம்.அப்துல்லா : ஒருமுறை குழந்தைகளோடு சென்று வாருங்கள்...very child friendly and good approach!!

சந்தனமுல்லை said...

Natty : ம்ம்..இங்க அதுமாதிரி "ஹிப்போகாம்பஸ்"ன்னு ஒரு லைப்ரரி இருக்கு, குழந்தைகளுக்கு! காஸ்ட்லிதான், என்ன பண்றது? சினிமாவுக்குப் போகறதுப் பதில் இதுமாதிரி ஒருதடவை மாதம் ஒரு முறை போக வேண்டியதுதான்.
அவங்களோட நேரம் செலவழிச்சமாதிரியும் இருக்கும், ஒரு சேஞ்சாவும் இருக்கும்!! என்ன சொல்றீங்க??

சந்தனமுல்லை said...

சீனா, வாழ்த்துக்களுக்கு நன்றி!
கண்டிப்பாக அந்த லிங்கை பார்க்கிறேன்!! பகிர்ந்தமைக்கு நன்றி!!

யாத்ரீகன் said...

How many children could afford this :-( , the state of parks and playgrounds not just metro cities like chennai but in many cities are really pathetic

அன்பு said...

வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்மணம் பக்கம் வருகிறேன். உஙகள் வாரத்துக்கு வாழ்த்துக்கள்!

"சென்னையில் குழந்தைகளின் விளையாட்டுலகம்", பற்றிய பதிவுக்கு நன்றி. சில தினங்களாகத்தான், இணையத்தில் சென்னையில் குழந்தைகளின் விளையாட்டுலகம் பற்றிய தகவல்கள் திரட்டிக்கொண்டிருந்தேன். விரைவில் இதுபோன்றதொரு விளையாட்டுலகம் (KidzKampong - ஓடி விளையாட... கூடி விளையாட...) கி.தாம்பரம்/மேடவாக்கம் பகுதியில் ஆரம்பிக்கும் ஆரம்பகட்ட முயற்சியில் இருக்கிறோம்.

பூங்கா, விளையாட்டுத்திடல் போன்ற ஒருமுறை முதலீடு என்றல்லாமல், தொடர்ந்து நடத்த, 'வர்த்தகரீதி' என்பதை தவிர்க்க இயலாதுதானே....!? கட்டுபடியாகும் விலையில் வேண்டுமானால் முயற்சிக்கலாம்.

தகவலுக்கு மீண்டும் நன்றி.

Deepa said...

Thanks Mullai! will visit one of these.