தொடர்ச்சியாக, arrow எப்படி இருக்குமென்று வரைந்தோம். டிராபிக் சிக்னலில் பார்த்தது மற்றும் சில புத்தகங்களில் பார்த்தது பப்புவிற்கு நினைவிருந்தது. அதேபோல வரையலாமென்று முயற்சி செய்தாள். ஒரு முறை வரைந்து காண்பித்ததை பார்த்து வரைந்தாள்.
முதல்முறை சரியாக வரவில்லை, அடுத்த முயற்சிகளில் பரவாயில்லையாக இருந்தது. ஒரு முக்கோண வடிவ பஸிலைக் கொண்டு மேல்வடிவத்தை டிரேஸ் செய்தாள்.(படம் கீழே)
அடுத்து வீடுகளுக்கு அட்ரஸ் எழுதும் படலம் ஆரம்பித்தது.
ஒரு நீண்ட பேப்பரை கட்டம் கட்டமாக மடித்துக்கொண்டு இரு ஓரங்களிலும் டையக்னலாக வெட்டிவிட வேண்டும். முதலில் இருக்கும் வீட்டிற்கு ஜன்னலும் கதவும் வரைந்தேன். பப்பு அதைப் பார்த்து தொடர்ந்து வரைந்தாள். நிறைய ஜன்னல்கள் வரைவது பிடித்து இருந்தது, பப்புவுக்கு. நிறைய ஜன்னல்கள் கொண்டு டிசைனர் வீடுகள் உருவாயின.
பின்னர், அதை ஜன்னல் எண்ணும் ஆக்டிவிட்டியாக மாறியது. அவள் எத்தனை என்று எண்ணி சொல்ல அதை கூரையில் மேல் எழுதினேன். வீட்டுக்கு பக்கத்தில் அட்ரசும் எழுதியிருக்கிறாள்.