ஒரு பயிற்சி வகுப்பில் உங்கள் மகளை கொண்டு போய் விடுகிறீர்கள். ஆசிரியர்
வந்து ஏதோ சொல்கிறார். உடனே எல்லா குழந்தைகளும் எழுந்து ஓடி வந்து
வரிசையில் நிற்கிறார்கள். மற்றவர்களை முந்திக்கொண்டு வரிசையில் நிற்க
முண்டியடிக்கின்றன, குழந்தைகள். ஆனால், உங்கள் குழந்தை மட்டும், 'எல்லாம்
அடங்கி முடியட்டும்' என்பது போல இறுதியில் நின்று கொள்கிறாள். 'ஏன் இவள்
எல்லாரோடும் போட்டி போட்டு நிற்கவில்லை' என்று கவலை கொள்கிறீர்கள்.
உங்களுக்கு
ஒன்றை கவனத்தில் கொண்டு வருகிறேன், குழந்தைகள் போட்டி மனப்பான்மையோடு
அல்ல, குழு மனப்பான்மையோடு வளர வேண்டும் என்று நீங்கள்தான்
விரும்பினீர்கள்.
ஒரு கதை படிக்கும் (ஸ்டோரி ரீடிங்) நிகழ்ச்சியில்
வாசிப்பாளர் புத்தகத்தில் ஒரு படத்தை காட்டி அது என்ன என்று கேட்கிறார்.
யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும், உங்கள் குழந்தைக்கு அது
தெரியும் என்று. ஏனெனில், அந்த பறவையை பார்க்க வட கர்நாடகம் வரை
சென்றிருக்கிறீர்கள். அந்த பறவையை மிக நெருக்கத்தில் அவள்
பார்த்திருக்கிறாள்.
விடை தெரிந்து,அவள் கையை உயர்த்துகிறாள்.
அதற்குள், பெற்றோர் பக்கத்திலிருந்து விடை வந்துவிடுகிறது. ஆனாலும், அவள்
ஏன் டக்கென்று சொல்லவில்லை என்று மறுகுகிறீர்கள். வெளியில் வந்து
'கேட்டவுடனே ஏன் சொல்லல' என்று உங்கள் குழந்தையை விசாரிக்கிறீர்கள்.
'நம்ம
டர்ன் வந்தாதான் சொல்லணும். பார்த்தவுடனே கத்தக்கூடாது.' என்கிறாள் மகள்.
எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் அடிக்கடி
வலியுறுத்தும் 'குட் மேனர்சின்' கீழ் அல்லவா அது வருகிறது!
ஆட்டோவில்
பையை தொலைத்துவிடுகிறாள், உங்கள் மகள். அப்படி என்ன கவனமின்மை என்று
கடிந்துக்கொள்கிறீர்கள். உங்கள் முகம் கடுமையாக மாறுகிறது. அவளோ, அதைப்
பற்றி கிஞ்சித்தும் பாதிப்படையவில்லை. 'பையைத் தொலைத்த குற்றவுணர்ச்சி
கூட இல்லையே, இது எப்படி எதிர்காலத்தில்...' என்று அதற்கும் சேர்த்து கவலை
கொள்கிறீர்கள். எந்த பாதிப்பும் இல்லாமல், "ஆச்சி, கோவமா
இருக்காதே,சிரி...சிரி" என்று உங்கள் தாடையை பிடித்து கன்னங்களை இழுத்து
சிரிப்பது போல வைக்கிறாள், அவள்.
இந்த நேரத்தில்
நினைவுப்படுத்துகிறேன், 'எந்த சூழலாக இருந்தாலும், அவள் செய்த தவறைக்
குறித்து பதற்றமடையாமல் தன்னியல்பு மாறாமல் கூலாக/நிதானமாக இருக்க
வேண்டும்' என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.
வேறு ஊரில்
இருக்கிறீர்கள். இரவுணவுக்காக, வெளியில் சாப்பிட செல்கிறீர்கள். உணவு
விடுதியின் முன்னால், வண்டிகள் செல்வதற்காக கூம்பு வடிவ தடுப்புகள்
வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், ஒன்றை காற்று சாய்த்து விட்டிருக்கிறது.
அங்கேயேதான் விடுதி காவலரும் இருக்கிறார். ஆனாலும், உங்கள் மகளால்
விழுந்துவிட்ட தடுப்பை பார்த்துவிட்டு சும்மா இருக்கமுடியவில்லை. உங்கள்
கையை உதறிவிட்டு ஓடுகிறாள். அந்த தடுப்பை நிமிர்த்து அதன் இடத்தில்
வரிசையில் வைக்கிறாள். பின்னர், வரிசையை பார்த்து புன்னகையொன்று
புரிந்துக்கொள்கிறாள், அதில்பாதியை உங்களை நோக்கி வீசுகிறாள். வேறு
வழியின்றி, நீங்களும் புன்னகைக்கிறீர்கள்.
கார் ஒன்று வேகமாக அந்த
பக்கம் செல்கிறது. 'கார்ல்லாம் வேகமா போகுது, அது கீழேயே இருந்தாதான்
என்ன? எத்தனை பேரு போறாங்க வர்றாங்க...செக்யூரிட்டி வேற இருக்காருல்ல. இது
ஏன் இப்படி இருக்கு' என்று, அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதுள்
குமைகிறீர்கள். உடனே, இதுபோன்ற கடந்தகால சம்பவங்கள் குழந்தைகள்
மருத்துவமனையில் நடந்தது, புத்தக சந்தையில் நடந்தது எல்லாம் உங்கள்
நினைவுக்கு வருகின்றன. அவளது எதிர்காலம் குறித்து கவலையில் ஆழ்ந்து
போகிறீர்கள்.
புத்தக சந்தையில், ஸ்டால் நுழைவாயில் நெரிசலாக
இருக்கிறது என்று எக்சிட்டில் நுழைகிறீர்கள். 'அது எக்சிட், இதான் ஆச்சி,
என்ட்ரி.எக்சிட்லே போகக் கூடாது' என்று உங்களை திருத்தி, செல்லவிடாமல்
தடுக்கிறாள். இறுதியில், உங்கள் கையைப் வலுக்கட்டாயமாக
பிடித்துக்கொள்கிறாள், அப்படி செல்லக்கூடாது என்பதுபோல.பிறகென்ன,
'என்ட்ரி'யிலேயே நெரிசலாக இருந்தாலும் செல்ல நேர்கிறது.
'என்ன
இது, இதெல்லாம் எப்படி பொழைக்க போகுது? எல்லா இடத்திலெயும் ரூல் ஃபாலோ பண்ண
முடியுமா?' என்று எண்ணிக்கொள்கிறீர்கள். ஆனால், இதை சொல்லி அவளை
கெடுத்துவிட வேண்டாம் என்று அவள் சொல்படியே நடக்கிறீர்கள்.
உங்கள்
கவனத்துக்கு கொண்டு வருகிறேன்,'பயம் காரணமாக பள்ளியில் மட்டும்
ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கூடாது, பள்ளிக்கு வெளியிலும் ஒழுக்கத்தை
தன்னுள் பேண வேண்டும். குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி யோடாவது அவள் வளர
வேண்டும்.', என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.
வெளியிலாவது
இப்படி இருக்கிறாளே என்று சந்தோசப்படும் அதே நேரம், வீட்டில் அவள் செய்யும்
அட்டகாசங்களை எண்ணி 'வளர்ந்து விட்டாளே, இன்னுமா இப்படி இருப்பது' என்று
புலம்புகிறீர்கள். பென்சீலை சீவித்தள்ளி, அதன் வண்ண வண்ண சீவல்களை,
அலமாரி முழுதும் நிரப்பி வைத்திருப்பது, விளையாட்டு சாமான்களை கலைத்து
போட்டு ஹாலை குப்பையாக்கி வைப்பது எல்லாம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.
:-)
Showing posts with label வளர்ச்சிப்படிகள். Show all posts

Saturday, February 15, 2014
Sunday, June 16, 2013
கூல்..கூல்..ஸ்கூல்!
நேற்று பப்புவின் பள்ளியில், நோட்டு புத்தகங்கள்,யூனிஃபார்ம் மற்றும் இதர பொருட்கள் வாங்கும் டே!
வரிசையில் அமர்ந்ததும் திரும்பிப் பார்த்தால் இரண்டு சீட்கள் தள்ளி மாலா.
மாலா!
பப்புவுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கம். நாங்கள் பழக்கியதுதான். அவளாக குளியறைக்குச் சென்றால், கதவை உள்பக்கத்து நாதாங்கியை தனியாக இழுத்துவிட வேண்டும். சாத்தினாலும் உட்பக்கமாக பூட்ட முடியாது. மேலும், கதவு சாத்திக்கொண்டால், குழந்தை உள்ளே வைத்து தானாக பூட்டிக் கொள்வதை தவிர்க்கலாம். யாருமில்லாத நேரங்களில் என்றில்லை, குழந்தைகள் அறைக்குள் சென்று பூட்டிக்கொள்வதை தடுக்க பொதுவாக ஆயா இப்படி செய்தும், பப்புவுக்கு சொல்லியும் தந்திருந்தார். (பப்புவை பார்த்துக்கொள்பவர் வராத வேளைகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதே என்று, பப்புவுக்கு விபரம் புரியும்வரை, அறைக்கதவுகளையும் அவ்வாறே உள்பக்கமாக இழுத்து விட்டிருப்போம்.)
பள்ளியில் என்றில்லை, நண்பர்கள் வீட்டுக்கோ, சினிமா தியேட்டருக்கோ செல்லும்போதும், பப்புவுக்கு இந்த சொல்லியே அழைத்துச் செல்வது வழக்கம். சீனியருக்கு வந்ததிலிருந்து, பாத்ரூம் போக, உடன் பெரியவர்கள் யாரும் வருவதை, பாத்ரூமுக்கு வெளியில் நிற்பதை பப்பு விரும்புவதேயில்லை. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'உள்ளே லாக் பண்ணிக்கக் கூடாது, தாப்பா போட்டுட்டு கதவை சாத்திக்கோ' என்று சொல்லிவிடுவது.
மாலாவும், பப்புவும் ஒருநாள் ஒன்றாக பாத்ரூமுக்குச் சென்றிருக்கிறார்கள். பப்பு சென்றதும், அவள் சாத்துவதற்கு முன்பாக மாலா வெளியிலிருந்து கதவை பூட்டிவிட்டிருக்கிறாள். வராந்தாவிலேயே ஒரு ஆயாம்மா எப்போதும் இருப்பார். அப்போது பார்த்து அவர் இல்லை. திகைத்துப் போய், கதவை தட்டி கத்திய பப்புவை சில நிமிடங்களிலேயே ஆயாம்மா வந்து கதவை திறந்துவிட்டிருக்கிறார்.
அதிலிருந்து மாலா என்றாலே பப்புவுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்! 'மாலா, பாதியிலதான் சீனியருக்கு வந்தா....யாரும் அவளுக்கு ஃப்ரெண்ட் இருக்கலன்னு நான் ஃப்ரெண்டா இருந்தா, அவ என்ன பண்ணா? பாத்ரூமில வைச்சு லாக் பண்ணலாமா?" என்று ஒரே பொருமல்.
மாலாவும் பப்புவின் பள்ளிதான். ஸ்பெஷல் சைல்ட். பப்புவின் பள்ளியில், ஸ்பெஷல் சில்ரனை சேர்த்துக்கொள்வார்கள். அவளது வகுப்பிலேயே ஏற்கெனவே இரு குழந்தைகளை பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில், அவர்களுக்கு தனியாக ஒரு அறையிலும், குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் அவர்களிடம் மாற்றம் தெரிந்ததும் ஏற்ற வகுப்புகளில் சேர்த்துக் கொள்வார்கள். அதன்படி, மாலா, இடையில் சீனியருக்கு மாற்றப்பட்டிருந்த குழந்தை. பப்புவுக்கு என்றில்லை, அந்த வகுப்பில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்கள் இடையில் வந்து சேர்ந்தவர்கள்.
ஆனால், பாத்ரூமில் லாக் செய்வதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அது எந்த குழந்தையாகவும் இருக்கலாம். ஆனால், பப்புவுக்கு இதெல்லாம் புரிந்திருக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை, 'எல்லாரும் மாலாவை லஞ்சுக்கு சேர்த்துக்கல, நானும் விலாசினியும், புவனும் எங்க பக்கத்துல அவளுக்கு மேட் குடுத்தோம். என்னை ஏன் லாக் பண்ணனும்?" என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். 'தெரியாம பண்ணியிருப்பா, அதுக்காக அதையே நினைச்சுட்டிருப்பாங்களா, அதெல்லாம் உடனே மறந்துடணும்.' என்றாலும் ம்ஹூம்.
நல்லவேளையாக, பள்ளியில் இதனை நன்றாக ஹேண்டில் செய்திருந்தார்கள். இப்படி நடந்ததை எனக்கு அன்று மதியம் போன் செய்து சொன்னார்கள். அவளை அழைத்துப் போக வந்திருந்த மாலா அம்மாவிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவர், அங்கேயே அழுதுவிட்டதாக அடுத்த நாள் ஆயாம்மா சொன்னதைக்கேட்டு கஷ்டமாக இருந்தது. மாலாவின் அம்மாவை சந்திக்க நினைத்தேன். ஆனால், காலையில் நான் செல்லும் நேரமும், அவர் வரும் நேரமும் சந்திக்க ஒத்துவரவில்லை. மாலையிலோ, அவரும் அதே பள்ளியில் மான்டிசோரி பயிற்சிக்காக சேர்ந்திருந்தார்.
அதற்குப்பிறகு, மாலாவும் பப்புவும் சகஜமாகவே இருந்திருக்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் ஆபீசில் இருக்கும்போது பப்புவின் பள்ளியிலிருந்து போன்.
அவளது பள்ளியிலிருந்து போன் என்று பார்த்தாலே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். 'என்ன ஆச்சோ' என்றுதான். மாலா சௌக்கியை எடுத்துகொண்டு வந்து நேராக பப்புவை தலையில் இடித்திருக்கிறாள். 'ரத்தம் எதுவும் வரவில்லை. நெற்றியில்தான் வீக்கம். ஐஸ் வைத்தபிறகு ஒன்றுமில்லை. கவலைப்படவேண்டாம்' என்றார்கள். எப்படி கவலைப்படாமலிருப்பது?!! சௌக்கி என்பது டெஸ்க் போல இருக்கும். அன்று சீக்கிரம் கிளம்பி வீட்டுக்குச் சென்றுவிட்டேன். நல்லவேளையாக பயப்படும்படி ஒன்றுமில்லை. அதிலிருந்து பப்புவையும் மாலாவையும் வகுப்பில் தூர தூரமாக உட்கார வைப்பதாகவும் சொன்னார்கள். அதன்பிறகு, லஞ்சில் மட்டும் மாலாவோடு சேர்ந்துக்கொள்வதாகவும், சாரி சொல்லி ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டதாகவும் பப்பு சொல்லியிருந்தாள்.
ஆனால், மனதில், பாத்ரூமில் லாக் செய்த தாக்கம் மட்டும் பதிந்துவிட்டிருக்கிறது. அந்த மாலாதான், நோட்டுப்புத்தகங்களை கைகளில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
'ஹாய் மாலா' என்றதும், அவளும் 'ஹாய்' என்றாள்.
லீவுக்குப் ஊருக்குப் போனது பற்றி எல்லாம் பேசி முடித்தோம். அதற்குள், அவரது அம்மா யூனிஃபார்ம் வாங்கிகொண்டு வந்திருந்தார். எனது முறையும் வந்திருக்கவில்லை.
'அம்மா, அவதான் குறிஞ்சி, பாத்ரூம்ல லாக் ' என்று அம்மாவிடம் சொன்னதும், அவர், "சாரி சொன்னியா? சாரி சொல்லு" என்று என்றார்.
"இட்ஸ் ஓகே, மாலா, அதெல்லாம் போன வருசம்தானே....குறிஞ்சி வீட்டுக்கு வரியா ஒருநாள்?" என்றேன்.
மாலாவின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எனது முறை வந்தது. விடைப்பெற்றுகொள்ளும்போது, மாலாவும், 'நீங்க எங்க வீட்டுக்கு வாங்க' என்று அழைத்தாள்.
அவளிடம் 'பை' சொல்லிவிட்டு யூனிஃபார்ம் வாங்கினோம். நோட்புக்குகள் வாங்க காத்திருக்கும்போது, பிரம்மி ,தந்தையுடன் கடந்து சென்றாள். சென்ற வருடம், அவளது டான்ஸ் ஸ்கூலிலிருந்து ஒரு ஃப்ளையரை கொண்டு வந்து கொடுத்து 'குறிஞ்சியை சேர்த்துவிடுங்க ஆன்ட்டி' என்று சொல்லியிருந்தாள்.
திரும்பி வரும்போது, பப்புவிடம்,
"ஹேய், பிரம்மி என்னப்பா, நல்லா ஒயரமாயிட்டா!!" என்றேன்.
"இல்ல ஆச்சி, அவ என்னோட குள்ளம்" பப்பு
" அப்படியா? ஆனா, லீவ்ல ரொம்ப ஒல்லியாகிட்டா, குண்டா இருப்பாளே!"
"ஆச்சி, இப்ப நீ சப்பாத்தி மாவு உருட்டறேன்னு வச்சிக்கோ, ஃபர்ஸ்ட் உருண்டையா குண்டா இருக்கும்.... அப்புறமா, உருட்டனா நீட்டா ஒல்லியாதானே ஆகும்...அதுமாதிரிதான், குட்டி வயசுல, குண்டா, குள்ளமா இருந்தா. இப்ப, ஒல்லியா நீட்டா ஆகிட்டா."
அவ்வ்வ்வ்வ்வ்!! என்னவொரு interpretation!!

Saturday, March 16, 2013
பப்பு டைம்ஸ்

பப்புவோட நாட்டுப்பற்று ;)
சோபாவில் இதைப்பார்த்ததும், எது அவளை தூண்டியிருக்கும் என்று அறிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தது. மூன்று கலர்களை பார்த்ததுமா அல்லது வெள்ளையின் நடுவில் இருக்கும் அந்த முத்திரையா என்று! ஆனால், கேட்கவில்லை. அவளுக்குத் தெரியாமல் போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முன்பெல்லாம், பள்ளியில் என்ன நடந்தது என்று வாயே திறப்பதில்லையே என்று கவலைப்படுவேன். இப்பொழுதெல்லாம், திறந்த வாய் மூடுவதில்லை. வகுப்பறையில் நடந்தது, சாப்பிடும் போது நடந்தது, க்ரௌண்டில் நடந்தது, ஃப்ரெண்ட்ஸ்கிடையிலான சண்டைகள் (ஸ்ஸ்ஸ்....என்னா பாலிடிக்ஸ்!!), யார் யாருக்கு ஃப்ரெண்ட் என்பதெல்லாம் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறாள். ஏதோ ஒரு தருணத்தில், விலாசினி குட்டி பொண்ணுதானே, இப்போதானே சீனியருக்கு வந்தா என்று சொல்லிவிட்டேன். 'பச்சமொளகா'வுக்கு சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!
"விலாசினியை சின்னப்பொண்ணுன்னு நினைக்காதே ஆச்சி, அவளுக்கு "பார்ட்ஸ் ஆஃப் எலபண்ட்'ஏ தெரியும்!! "
அவ்வ்வ்வ்வ்!! :-))) 'பெரியவர்கள் என்பதற்கு என்னவெல்லாம் தெரியவேண்டியிருக்கு' என்றெண்ணி எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அவளது எதிரில் சிரித்தால் இன்னும் சுர்ர்ர்ர்ர்ர் ஆகி விடுவாள் என்பதால் சிரிக்கவில்லை!!
குறிப்பு: பப்பு இப்பொழுது வளர்ந்துவிட்டாள். என்றாலும் அவள் இன்னும் சிறுமிதான். ஆனால், குட்டிப்பெண்ணாக இருக்கும்போது 'பெரியமனுசத்தனமாக' பேசினால் புன்னகைப்பேன். ஆச்சரியப்படுவேன். இப்பொழுது, வளர்ந்தபின்னால், குட்டிப்பெண்ணின் அறியாமையோடு பேசினால் சிரிப்பு வருகிறது!! என்னே, காலம் செய்த கோலம்!! (ஹிஹி...எல்லாம் ஒரு ஃபீலிங்ஸ்தான்!!)
Saturday, January 28, 2012
’கொசக்சி பசப்புகழ்’
ஸ்ட்ராவினால் செய்த கிரவுன், ஸ்ட்ராவினால் செய்த மோதிரம், கழுத்து மணிகளைக் கொண்டு கைகளுக்கு ஆபரணம் என்று பப்பு ஒரு மாதிரி கோலத்தில் இருந்தாள். (ஹிஹி...அந்த கம்மல் என்னோடது!)அது, அவளாகவே விளையாடும் கற்பனை ராணி விளையாட்டு. படுக்கும் நேரமாகிவிட்டது என்றதும் பப்புவுக்கு இந்த நகைகளை குறித்து பயம் வந்துவிட்டது. அதைத்தொடர்ந்து.....

”ஆச்சி, திருடங்க எப்படி வர்றாங்க?” - பப்பு
”நைட்ல எல்லாரும் தூங்கினப்புறம். யாருக்கும் தெரியாம, கதவு தெறந்து வருவாங்க....” - மீதான், அசிங்கப்படப்போவது தெரியாமல்!
”அது இல்ல ஆச்சி, திருடங்களாவறதுக்கு யாரு டீச் பண்ணுவாங்க? திருடங்க எப்படி உருவாகறாங்க? சொல்லு....” - பப்பு (ஆகா...அந்த கொசக்சி பசப்புகழ் நீதானா?!பவ்வ்வ்வ்வ்வ்!!)
”ம்ம்..பப்பு, யாரும் திருடங்களாகணும்னு யோசிச்செல்லாம் திருடனாக மாட்டாங்க. திருடங்களாகணும்னு அப்படின்னு யாருக்காவது ஆசையிருக்குமா? சொல்லு..திருடறது சரியா தப்பா?” - நானேதான்.
”தப்பு....” - பப்பு
”ம்ம்...கரெக்ட். இப்போ நீ நம்ம வீட்டுக்கிட்டேயே பாரேன். சிலருக்கு வீடு இருக்கு. சிலருக்கு வீடே இல்ல. வழியிலதான் படுத்திருக்காங்க. சிலருக்கு கார் இருக்கு. சிலருக்கு சாப்பாடு வாங்கக்கூட காசு இல்ல. சிலபேரு ஸ்கூலுக்கு போய் படிக்கிறாங்க. சிலபேரு ஸ்கூல் போக முடியல.சிலபேருக்கிட்ட
நெறைய நகை இருக்கு...”
”ஓ.... அவங்களுக்கு நெகை இல்லன்னா நாமளும் நெகை போட்டுக்காம இருக்கணும். சரியா, ஆச்சி?” - பப்பு
”ம்ம்...இப்போ அவங்களுக்கு எதுவும் கிடைக்காததாலதான் திருடறாங்க. அதுக்கு நாம என்ன பண்ணனும்?” - நான்.
”அவங்களுக்கு சாப்பாடு குடுக்கணும். வீடு குடுக்கணும்.அவங்க நெகை வைச்சிருக்க அளவுக்குத்தான் நாமளும் வைச்சிருக்கணும்...கரெக்டா? சொல்லு ஆச்சி” - பப்பு (இதெயெல்லாம் நான் சொல்லித்தரலையே பப்பு!!)
”அவங்ககிட்டே நகை இல்லன்னா?” - நான்
”அவங்ககிட்டே நகை இல்லன்னா நாம நகை போட்டுக்ககூடாது.” - பப்பு
”ம்ம்..எல்லாருக்கும் ஒரே மாதிரி ஸ்கூல், ஒரே மாதிரி வீடுல்லாம் இருந்தா.....” - நான்
”நாம நெகை போட்டுக்கலாம்...” - பப்பு (அவ்வ்வ்வ்!!)
”ம்ம்..அப்போ திருடங்க உருவாக மாட்டாங்க!! எல்லாருக்கும் வேலை கிடைச்சா எல்லாரும் சம்பாரிப்பாங்க இல்ல. அது மாதிரி புது சொசைட்டியை நாம உருவாக்கணும்...” - நான்.
அமைதியாக இருந்தாள். யோசனை என்று நினைக்கிறேன். அப்புறம், ஆயாவிடம் சென்று இதே கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தாள்.
இதில் ஹைலைட் - கடைசிவரைக்கும், அவள் அணிந்திருப்பது ”நகைகள் ” கேட்டகரியை சேர்ந்ததுதான் என்ற அபார நம்பிக்கை!! அதுவும், அந்த விலைமதிக்க முடியாத”நகைகளைத்” திருடுவதற்கு, திருடன் வருவானோ எனும் கவலையில் அவற்றை கழற்றி, ஒளித்து வைத்துவிட்டுதான் படுத்தாள்.

Saturday, December 31, 2011
பப்பு டைம்ஸ் - 7DB
* டீவி இல்லாமல் நாங்கள் கடந்து வந்த முழு வருடம் இது. டீவி இல்லாத குறையை தீர்க்க பப்பு லாப்டாப்பை எடுத்துக்கொள்வாள். (பெயிண்டில் வரைவது அல்லது அனிமேசன் படங்கள்) சொல்லப்போனால், டீவி இல்லை என்ற குறையே இல்லை. நாங்களும் அப்படி ஒரு வஸ்து உலகில் இல்லவே
இல்லை என்பது போல ஆகிவிட்டோம். (இதில், ஆயாதான் பாவம். பப்புவுக்காக டீவியை தியாகம் செய்த ஆயா என்று வரலாறு பேசுமல்லவா!) தற்போது, வெளியில் எங்காவது டீவி பார்க்க நேரிட்டாலும், முன்போல் ஆர்வம் காட்டுவதில்லை.
மற்றபடி, குழந்தைகள் படம் ஒன்று ஓடிவிடுகிறது. அதுவும், நான் கணினி உபயோகித்தால், அடுத்தது அவளுக்கும் கொடுத்தாக வேண்டும். (”இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”) Tangled, how to train your dragon, Kung fu panda,
avatar, horton hears a who - பப்புவின் மிக மிக மிக ஃபேவரைட் படங்கள்.
(”ஒரு கீரைக்கு ஒரு படம் பத்தும், இல்லப்பா”- பப்பு)
* ஸ்கூட்டியில் முன்னால் நின்று கொள்ள வெளியில் செல்வது பப்புவுக்கு (எனக்கும்) மிகவும் பிடித்தமானது. அதுவும், காற்று முகத்தில் மோதினால் போதும். உல்லாசமான மனநிலைக்குச் சென்றுவிடுவாள். பின்னர், ஒரே பாடல்கள்தான். அவளது பாடல் புத்தகத்திலிருந்து அத்தனை பாடல்களும் பாடியாகி விடும். பப்பு, பின்னால் உட்கார அமர ஆரம்பித்ததிலிருந்து பாடல்களை மிஸ் செய்கிறேன். ஆனாலும், சின்னஞ்சிறு கைகள் பின்னாலிருந்து
என்னை சுற்றிக்கொண்டு வருவதும் நன்றாகத்தான் இருக்கிறது.
* இந்த வருடத்தின் ஆரம்பத்தில் எழுத்து கூட்டி படிக்க ஆரம்பித்திருந்தாள். தமிழ் ஆரம்பத்தில் தடுமாற்றம். இடையில் சிறிது முன்னேற்றம். ’கோ’ மற்றும் ’கௌ’ வரிசைகள் சமயங்களில் அவள் கண்ணை ஏமாற்றும். தற்போது குறைந்திருக்கிறது. மேலும், சின்னதாக இருந்தால் மட்டுமே படிக்க ஆர்வம் காட்டுவாள். ஒரு வாக்கியம் அவள் படித்தால் அடுத்த வாக்கியம் நான் படிப்பேன். இப்படி ஆரம்பித்தது, ஒரு புத்தகம் அவள் படித்தால், அடுத்த புத்தகம் நான் என்ற அளவில் வந்திருக்கிறது. ஆனாலும், அதுவும் மூடை பொறுத்துதான். எப்போதும் ஒரே ஆட்டமும், பேச்சும். (கதை சொல்வதில் இருக்கும் ஆர்வம் படிப்பதில் இருந்தால் நன்றாக இருக்கும்!ஹ்ம்ம்....)
year 2011
* தமிழிலிருக்கும் தடுமாற்றம் ஆங்கிலத்தில் இல்லை. எவ்வளவு பெரிய வார்த்தையாக இருந்தாலும் படிக்க தயங்க மாட்டாள். ஒவ்வொரு
வார்த்தையாக சொல்லி சொல்லி படித்து விடுவாள். தற்போது, சரளமாக சிறார் கதைகளைப் படிக்கிறாள். இதற்கு மாண்டிசோரி முறைக்கும்,
ஆண்ட்டிகளுக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.
* ’நான் போலீசாக போறேன்’ என்பாள் திடீரென்று. போலீசாகி என்னை ஜெயிலில் வைத்துவிடுவாளாம். ஒருநாள், எல்லா புத்தகங்களையும் தலையில் வைத்து
தூக்கி வந்து தூக்கி வந்து படுக்கையில் போட்டுக்கொண்டிருந்தாள். கட்டிடத் தொழிலாளியாம். பிறகு, ஆண்ட்டியாக போறேன் என்பாள். ஒருநாள், ’சயிண்டிஸ்டாக போறேன்’ என்பாள். ’நான் தோழரா ஆயிடறேன்’ என்பாள். ’நான் ராக்கெட்ல போறேன்ப்பா’ என்பாள், ஒரு சமயம். ’ஒரே நேரத்தில எல்லாமா ஆயிட முடியாதாப்பா’ என்பது சமீபத்திய ஆதங்கம்
* ”பென் டென், ஸ்பைடர் மேன் எல்லாம் வேஸ்ட்.டோரா, பார்பிதான் சூப்பர்.” என்றாள் ஒரு நாள். பள்ளியில், ஆணா, பெண்ணா சண்டை வந்துவிட்டது போல!
’கேர்ல்ஸ் வயித்துலதான் பேபி வருது ’ என்றெல்லாம் ஆண்/பெண் சண்டை நடந்திருக்கிறது. (’பாய்ஸ் வயித்துல பேபி வளர்ற பேக் ஏன் இல்ல?’ என்பது அவளது நீண்ட நாள் சந்தேகம். அது போல, குழந்தை எப்படி அம்மா வயிற்றில் வருகிறது என்பதுவும். ’டாக்டர்கிட்டே போகும்போது நீயே கேளு. அப்போ மட்டும் அமைதியா இருக்க இல்லே!’ என்று தப்பித்துக்கொண்டேன்.)
“பெஸ்ட் ஃப்ரெண்டு” மற்றும் ” இனிமே என் ஃப்ரெண்டே இல்ல”என்பதெல்லாம் இந்த வருடத்தின் புது அனுபவங்கள். ஆனாலும், ரகசியம் சொல்ல மட்டும் பப்புவுக்கு தெரியவில்லை.
* பப்பு, முழுமையாக டாய்லெட் ட்ரெய்ண்ட்! இது தானாகவே எந்த பிரயத்தனங்களும் இல்லாமல் நடந்தது நிம்மதி.
* முன்பெல்லாம், அநியாயத்துக்கு வீட்டில் ஏக வசனமாக இருந்தது. ( வாடி, போடி, உனக்கு பைத்தியமா புடிச்சிருக்கு....etc..) அநேகமாக, இது சீசனல் என்று நினைக்கிறேன். ’கெட்டா வார்த்தை பேசினா ஹார்ட் ப்ளாக்காகிடும், நல்ல வார்த்தை பேசினாதான் ஹார்ட்ல நல்லா ப்ளட் போய் ரெட்டா இருக்கும்’ என்று சொல்லி வைத்திருந்தோம். தாயம் விளையாடும்போது நான் ஜெயிக்கிற மாதிரி
வந்துவிட்டால் எப்படியாவது தில்லாலங்கடி வேலை செய்து அவள் மேலே வந்துவிடுவாள். கண்டுபிடித்துவிட்டால் கோபம் வந்துவிடும்.
ஒருமுறை,
“போடி, நான் விளையாட்டுக்கு வரல” என்றாள்.
”ஹார்ட் ப்ளாக் ஆகப்போகுது...” என்றதும் லேசாக அதிர்ச்சியடைந்துவிட்டாள்.
பிறகு, ”நான் கெட்ட வார்த்தை சொல்லனும்னு நினைக்கல. அதுவாத்தான் என் வாயில வருது. நான் உன் வயித்துல இருந்தப்போ உன் ஹார்ட் அடிக்கடி ப்ளாக்கா மாறுச்சு. அதைப்பார்த்துதான் எனக்கும் அதுமாதிரி
வருது!!”
*பேச்சை மாற்றுவது, யோசிக்காமல் மாற்றி சொல்வது, கோள் சொல்வது எல்லாம் இந்த வருடத்தின் வளர்ச்சிகள்(?!). கலரிங் சாண்ட் செய்த மீதி இருந்திருக்கிறது. ஆயாவின் தலைமுடியை சீவுவதாக சொல்லி அதை எடுத்து அவரின் தலையில் போட்டிருக்கிறாள். கேட்டதற்கு, ஆயா என் தலையில் போட்டாங்க என்று சொன்னதோடு நிறுத்திருக்கலாம். (ஆயா பாவம்!!!)
அடுத்த நாள் பார்க்கும்போது அவள் தலையிலும் மணல். அவளாகவே எடுத்துப்போட்டுக்கொண்டிருக்கிறாள். ஸப்பா!!
”நாளைக்கு ஒரு ஸ்டிக்கரும், என்வெலப்பும் மறக்காம எடுத்துட்டு வர சொன்னாங்க, ஆண்ட்டி” என்றாள் இரவு தூங்கும்போது.
”என்ன ஸ்டிக்கர்? எதுக்கு கேட்டாங்க? டைரியில ஒன்னும் எழுதலையே ஆண்ட்டி”
“இல்லப்பா, எங்ககிட்டே சொன்னாங்க” என்றதும், ‘ அந்த ஸ்டிக்கர் புக்லே ஸ்டிக்கரை கட் பண்ணி எடுத்துக்கோ, என்வெலப் நாளைக்கு
ஸ்கூல் போகும்போது வாங்கிக்கலாம் என்றதோடு நானும் மறந்துவிட்டேன். பள்ளிக்கு சென்றதும்தான் நினைவுக்கு வந்தது. அவளது ஆண்ட்டியை பார்த்ததும் இது நினைவுக்கு வந்ததும் அவரிடம் எடுத்துவர மறந்துவிட்டதாக சொன்னேன்.
சரி, அவளை எதுவும் சொல்லக்கூடாதே என்பதற்காக. ஆண்ட்டிக்கு எதுவும் புரியவில்லை. அவரும் நான் கேட்ட அதே கேள்விகளை கேட்டார்.
பக்கத்திலிருந்த பப்பு, ’ஆண்ட்டி சொல்லல, நீ போ’ என்று ஓடிவிட்டாள்.
பின்னர்தான் தெரிந்தது, பிரக்னண்டாக இருக்கும் ஆண்ட்டிக்கு இந்த குட்டீஸ் எல்லாம் சேர்ந்து ஒரு க்ரீட்டீங்க்ஸ் கொடுக்கப்போகிறார்களாம். அதற்குதான் இந்த ஏற்பாடாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
* அலமாரிகளை ஒழுங்காக எப்போது பார்த்தோம் என்ற நினைவே இல்லை. சமநிலைக்கு சவால் விடுவதைப்போல்தான் இருக்கின்றன. எதையாவது எடுத்தால் மொத்தமும் கீழே கிடக்கும். அதனால்,அடுக்கி வைப்பது என்பதே இல்லை. எப்படி வைத்தாலும் அதன் வாழ்க்கை ஒரு சிலநாட்கள்வரைதான் என்பது தெரிந்துவிட்டது அதனால், யார் எடுக்கும்போது விழுந்தாலும் அவர்கள் அதனை எடுத்து வைத்துவிட வேண்டும் என்பது விதி. பெரும்பாலும், பாதி விளையாட்டு சாமான்கள் படுக்கையில் கிடக்கும். மீதி கீழே.
தற்போது மேடம் விதியை மாற்றி அறிவித்துவிட்டார்கள், “ இனிமே, யார் தள்றாங்களோ அவங்கதான் எடுத்து வைக்கணும்னு இல்ல, அவங்கவங்க திங்க்ஸ் கீழே விழுந்தா அவங்கதான் எடுத்து வைக்கணும்!”
* ஒருமுறை, பப்புவின் சாக்கோஸை எடுக்கும்போது தவறி கீழே கொட்டிவிட்டேன். அருகில் வந்த பப்பு, “பரவால்ல, பரவால்ல, விடு, எடுத்துடலாம். தெரியாம விழுந்துருக்கும் ” என்று என்னை தேற்றினாள். சின்ன வயதில், இப்படி எதையாவது சிந்திவிடுவேனோ என்று அதீத கவனத்துடன் இருப்பதாலேயே அப்படி நடந்துவிடும். ஆயாவின் டெரரிசம்தான் காரணம். இப்போதும், கண்ணாடி போன்ற பொருட்களை கையாளும்போது கீழே போட்டுவிடுவேனோ என்றேதான் தோன்றும். ஆனால், பப்புவிடம் அந்த பதற்றம் எதுவுமில்லை, தற்போதுவரை. :-)
நாற்காலி அடியில் அல்லது மேசைக்கடியில் அல்லது கேட்டின் மீதேறினால்
ஆயா,’ பார்த்து...பார்த்து, இடிச்சுக்கப்போறே’ என்று பதறுவார். அப்படி சொல்லும்போதுதான் பதற்றம் அதிகமாகி அவர் சொன்னதுபோல நடக்கும்.
இப்படி, பாதிக்கப்பட்டதால் ”கீழே குனிஞ்சு வா, மெதுவா புடிச்சுக்கிட்டு இறங்கு” என்றோ கீழோ கொட்டிவிட்டாலோ “பரவால்ல, அடுத்தவாட்டி கேர்ஃபுல்லா பண்ணனும்” என்று சொல்லிவிடுவேன். அந்த பாதிப்பு காரணமாக இருக்கலாம்.
* இந்த வருடம் முழுக்க, பப்புவுக்கு மிகுந்த என்டர்டெயினராக இருந்தது, “ஆச்சியோட குட்டி வயசுல” என்ன நடந்தது என்பதுதான். பால் குடிக்க, சாப்பிட என்று எல்லாவற்றுக்கும் என்னோட “குட்டி வயசு கதைகள்”தான். பப்லு போய் ஆச்சியோட குட்டி வயசு!! இப்படி ஆயாவும், பெரிம்மாவும் சொன்னதுபோக, பப்புவே என்னோட குட்டி வயசுக்கதைகளைச் சொல்கிறாள்...என்ன,
சில கதைகளெல்லாம் பப்பு சொல்லிதான் எனக்கே தெரிகிறது(மரத்தில் ஏறிக்கொண்டு இறங்கமுடியாமல் அழுதது etc)!!
எதேச்சையாக வாங்கிய 'tell me a story mama' புத்தகமும் கொஞ்சம் இது போல்தான் என்பதில் கொஞ்சம் ஆறுதல் - நான் மட்டும் தனியா இல்லையென்று.
* மழலையெல்லாம் எப்போதோ மறைந்துவிட்டாலும் ஒரு சில வார்த்தைகளை அவள் உச்சரிக்கும் விதம் சிரிப்பாக இருக்கும். ’நிம்மேதி’, ’அமேதி’, ’ஒளைச்சு வைச்சிருக்கேன்.’- சாம்பிளுக்கு சில. அதே போல, அவள் உபயோகிக்கும் சில தமிழ் வார்த்தைகளும் - ’நீங்க அதை பாக்கணும்னு விரும்புறீங்களா? ’...etc
* காலை நேர பரபரப்புகளில், அவ்வப்போது கைகலப்பு நிகழ்வதை தவிர்க்க முடியாமல் போய்விடும். ஆனாலும், பள்ளிக்கு செல்லும் சமயம், ‘சாரி பப்பு, நீ சொன்னதை செய்யாம இருந்ததாலதான் கோவம் வந்துடுச்சு, லேட்டாகுது இல்ல, அதான் அடிச்சுட்டேன், ,மன்னிச்சுடு, குட் டே’ என்று சொல்லி விடுவேன். ’பரவால்ல ஆச்சி, உனக்கு இன்னும் 99 சான்ஸ் இருக்கு” என்பாள் மிகுந்த பெருந்தன்மையுடன்.
* மேலும், தன்மானம் ஜாஸ்தி! தன்னாலே எல்லாம் செய்ய முடியும், முக்கியமாக வெளியில் அல்லது மற்றவர் முன்பு நாங்கள் உதவுவதை அவள் விரும்புவதேயில்லை. அவள் தட்டில் நான் கை வைப்பதையோ ஊட்டி விடுவதையோ சுத்தமாக விரும்புவதில்லை. ஆனாலும், நாந்தான் திருந்தவில்லை.
* டெங்கு ஜூரம் வந்து கொஞ்சம் டென்சன் கொடுத்தது.
மொத்தத்தில் புது அனுபவங்கள்+போராட்டங்கள்+ மகிழ்ச்சிகள்+ வலிகள் - பரபரப்பான 2011! தோழர்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எங்களின் நன்றிகள்!

Friday, October 28, 2011
5 to 6
"சீக்கிரம் சாப்பிடு, சீக்கிரம் சாப்பிடு எத்தனை வாட்டி சொல்றது? நீதாம்ப்பா எனக்கு கோவம் வர வைக்கிறே... நான் கோவப்படக்கூடாதுன்னுதான் நினைக்கிறேன், நீ பண்றதுதான் பப்பு, எனக்கு கோவம் வரவைக்குது.... "
"ஆச்சி, இங்க பாரு, நான் உன்னை இங்க வா,வான்னு எத்தனை தடவை கூப்பிடறேன், பாரு இப்ப...
ஆச்சி இங்க வா....
ஆச்சி இங்க வா...
ஆச்சி இங்க வா...
ஆச்சி இங்க வா...
நீ வரலைல்ல, ஆனா எனக்கு கோவம் வரமாட்டேங்குது...உனக்கும் எனக்கும் ஒரே டி என் ஏதானே, ஏன் உன் டிஎன்ஏ-ல கோவம் அதிகமா இருக்கு? "
?!!!!!!
***************************
பப்லூவை நம்பினோர் கை விடப்படார் என்று சொல்லுமளவிற்கு பப்லூதான் எங்கள் கை கொடுக்கும் கை. பப்லூ ஒரு இமாஜினரி கேரக்டர். பால் குடிக்க, சாப்பிட எல்லாம் பப்லூ எனும் பத்து வயது சிறுவனுக்குத் தெரியாது.. மேலே கீழே சிந்திக்கொள்வான். ஜட்டி போடமாட்டான். டூத் பிரஷை கையில் வைத்துக்கொண்டு எதையாவது யோசித்துக்கொண்டிருப்பான். சரியான வாலு.
அவனது ஆயாவை படாதபாடு படுத்துவான், எரிச்சலூட்டுவான். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. பப்லூவுக்கு பப்புவிடம் நேர்வினை இருந்தது.
ரகசியம் இதுதான் - பப்பு செய்வதை லேசாக பப்லூ செய்வதாக மாற்றி சொல்லிவிட்டால் வேலை கடகடவென்று நடந்துவிடும்.
காலைநேரம் - பரபரப்பு.
“சொல்ற பேச்சை கேட்டா என்ன பப்பு, சீக்கிரம் சாக்சை போடு, ஷீவை போடு, டைமாச்சு பாரு,இப்போ வந்தேன்னா அடி வாங்கப் போறே!”
"ஆச்சி. இங்க பாரேன், பப்லூ வந்து உன் வயித்துல பொறந்திருந்தான்னா உனக்கு ரொம்ம்ம்ம்ப கோவம் வந்திருக்கும் இல்ல.... "
?!!!!!
***************************
நாங்கள் சொன்ன பப்லூ கதை போய், பப்புவே பப்லூ கதைகளை விட ஆரம்பித்து விட்டாள். சாம்பிளுக்கு ஒன்று....
”பப்லூ வந்து என்னா பண்ணான்? மரத்துல ஒரு ரெக்கை செஞ்சான், எல்லாரையும் கூப்பிட்டு நான் பறக்கப் போறேன், பாருங்க, பாருங்கன்னு சொன்னான். எல்லாரும் வந்ததும் மாடி மேல நின்னுக்கிட்டு குதிச்சான் பாரு.....பறக்க முடியாம கீழே தொப்னு விழுந்துட்டான்!”
’ஹவ் டு ட்ரெயின் யுவர் டிராகனை’ பார்த்துட்டு, பயபுள்ள இப்டி புருடா விடுதேன்னு நான் கண்டுபுடிச்சுட்டேன்...ஆயாஸ்தான் பாவம்..ஹிஹி!!
சூப்பர் மார்க்கெட்டில்:
"பப்பு, நீ என்ன எடுத்திருக்கேன்னு என்கிட்டே காட்டிட்டு பாஸ்கெட்ல போடு, சரியா? பப்பு, உன்கிட்டேதானே சொல்றேன், நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க?"
வாயில் விரலை வைத்து ”டோண்ட் கால் மீ பப்பு, கால் மீ குறிஞ்சி மலர்”
”ஓகே, குறிஞ்சி மலர். ”
.
.
.
.
”ஏன் பப்புன்னு கூப்பிடவேணாம்? நல்லாதானே இருக்கு, பப்பு. அழகா இருக்கே!”
”உன்னை பப்புன்னு கூப்பிட்டா எப்டி இருக்கும்? "
............
நல்லாருக்கா? நீ எவ்ளோ பெரிய பொண்ணா இருக்கே? இனிமே, வெளிலேல்லாம் என்னை குறிஞ்சி மலர் கூப்பிடு. வீட்டுல மட்டும்தான் பப்பு. ஓகே?”
?!!!!!!
***************************
டிரெயிலர் போதும், மெயின் பிக்சருக்கு வரேன்.....
ஆறு வருடங்களுக்கு முன்பு, பப்பு எட்டரை மாதங்கள் உனக்காக காத்திருந்தேன் - ரொம்ப படபடப்புடனும், ஆசையுடனும், தவிப்புடனும்!! எப்படி வளர்ப்பது, என்ன செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமிடல்களும் இல்லாமல்....குழந்தை பிறந்தா அது பாட்டுக்கு தானா வளர்ந்து காலேஜூக்கு போயிடும் என்ற ரொம்ப அசால்ட்டாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், ஒன்றாவது வகுப்பில் செல்வதற்குள்ளாக, என்னை இப்படி (உன் வார்த்தைகளில் சொல்வதானால்) “க்ரேசி”யாக்கிவிடுவாய் என்று நினைக்கவில்லை. ஆயாவும் பெரிம்மாவும் சொன்ன அதே அலுப்பூட்டும் வார்த்தைகளை, அதே டோனில் சொல்ல வைப்பாய் என்று எதிர்பார்த்திருக்கவில்லை அதுவும், இவ்வளவு சீக்கிரமே, சொல்லவேண்டியிருக்கும் என்றும்! எப்படியிருந்தாலும் பப்பு அலுப்பான அலுவலக வேலையிலிருந்து, வீடு திரும்ப, ’நீ எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருப்ப’ என்ற நினைப்பே வாழ்வை சுவாரசியமாக்குகிறது, மலர்ச்சியைத் தருகிறது.
பப்புக்குட்டி....உனது சிரிப்புக்கும், ஓயாத பேச்சுக்கும், கோபத்துக்கும், குறும்புக்கும்,நை நைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி....
.....ஆலவ்யூ!!

Thursday, June 30, 2011
பல் பல் புதுப்பல்
பப்புவின் கீழ்வரிசை முன்பற்களிடையில் ஒரு பள்ளத்தாக்கு உருவாகியிருந்ததை இன்று காலையில்தான் கவனித்தேன். சந்தேகத்துடன் முன்பற்களை தொட்டபோது லேசாக ஆடியது.:-) யெஸ், பப்புவிற்கு கீழ்வரிசையின் முன்பல் இரண்டும் விழப்போகின்றன! அநேகமாக அவைதான் முதலில் முளைத்த பற்களாக இருக்க வேண்டும். பப்புவுக்கு, பற்கள் முளைத்தபோது அவற்றை தடவிப்பார்த்ததும், பற்கள் முளைக்கும் தறுவாயில் என் விரல்களை, முகத்தைக் கடிக்க முற்பட்டபோது தடுக்காமல் இருந்ததும் நினைவுக்கு வருகின்றன. இரண்டு பற்கள் ஒன்றாக ஆடியதும், எங்காவது இடித்துக்கொண்டாளோ அல்லது சர்க்கஸ் செய்கிறேன் என்று தலைகீழாக தொங்கும்போது கீழே விழுந்துவிட்டாளோ என்று துருவிதுருவி கேட்டேன். இல்லையென்றதும், ஆடுகின்ற பற்களுக்கு பின்னால் ஈறில் தொட்டுப் பார்த்தேன். புதுப்பற்கள் தென்பட்டன. பிறகே நிம்மதியாக இருந்தது.
ஏழு வயதில் இந்த பற்கள் விழுந்து புதுப்பல் முளைக்கும் என்று அவளுக்கு சொல்லியிருந்தோம். இப்போதே பல் ஆடுவதால், ஒருவேளை, தான் இரவில் பல் விளக்காமல் உறங்கியதால்தான் பாக்டீரியாக்கள் சென்று பற்களை கொட்ட வைக்கின்றனவோ என்று பப்பு எண்ணிக்கொண்டிருக்கிறாள். :-)

Thursday, January 13, 2011
ப... டி...படி
"ஏ"
"ழு"
"ம்ம்..சேர்த்து படி"
"ஏழு"
"ஏழு...அப்புறம்"
"வா"
"ல்"
"க"
"ளு"
"ட்?இல்ல..ட"
"ன்"
"வா லு/ளுடன்"
”அப்டியா எழுதியிருக்கு...சேர்த்துபடி”
”ஏ”
”ழு”
”..அதுதான் முன்னாடியே படிச்சுட்டே இல்ல, பப்பு, அடுத்த வார்த்தைய படி...”
”வா”
”ல்”
”க”
”ளு”
”ட”
”ன்”
”ம்ம்..என்னது...சொல்லு...சேர்த்து..”
”வா க....”
”ம்ஹூம்..சரி ஃப்ர்ஸ்ட்லேர்ந்து படி...”
”ஏ”
”ழு”
(அவ்வ்வ்வ்...மறுபடியும் முதல்லேர்ந்தாஆஆஆ?!!)
”ஏழு தான் அப்பவே படிச்சுட்டே இல்ல..ரெண்டுரெண்டு எழுத்தா சேர்த்து படி
இது என்ன?”
”வா”
”இது?”
”ல்”
”சேர்த்து சொல்லு”
”வால்”
”அப்புறம்..இது”
”க”
”அப்புறம்?”
”ளு”
”சேர்த்து சொல்லு...”
”களு”
(அவ்வ்வ்வ். அழுதுடுவேன்)
“முழுசா படி...வால்ல்ல்?”
”களு”
ஃப்ர்ஸ்ட்லேருந்து...
”வால்களு”
”யெஸ்...அப்புறம்...”
”ட”
”ன்”
”டன்”
”உனக்கே படிக்க தெரியுதே!இப்போ சேர்த்து சொல்லு....”
”ஏழு...”
”ம்ம் (மேலே!)..ஏழு வால்..”
”வால்களுடன்”
”சூப்பரா படிக்கற பப்பு.....முழுசா சொல்லு பாக்கலாம்...”
”ஏழு வால்களுடன்”
ஹப்பாடா!சக்ஸஸ்...
”ஒ”
”ரு”
”ஒரு ”
”முதல்லேருந்து சொல்லி சொல்லி படி”
”ஏழு வால்களுடன் ஒரு”
”எ”
”லி”
”எலி”
”ம்ம்..இப்போ ஃபுல்லா படி..”
”ஏழு வால்களுடன் ஒரு எலி”
கொஞ்ச நேரத்துக்கு ஒரே கைதட்டல்...ஹை-ஃபை...
”இப்போ, அடுத்த பக்கம்...”
”போ..அதெல்லாம் நீதான் சொல்லணும்...நீயே படிச்சு சொல்லு...”
(ஸ்ப்பா...ஒரு தலைப்பை படிக்க வைக்கறதுக்குள்ளேயே இங்க பிபி ஏறுது...பப்புவுக்கு உயிர்மெய் எழுத்துகளை கற்றுக்கொடுத்த ஆயாவுக்கு அன்பு முத்தங்கள். எப்படி அத்தனை வேரியேஷன்களை கற்றுக்கொள்வாள் என்று மலைப்பாக இருந்தது. ஆயா என் கவலையைப் போக்கினார்.)
உலகத்துலே இருக்கிற அனைத்து ஆசியர்களுக்கும்...முக்கியமா தொடக்கநிலை ஆசிரியர்களின் பொறுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!

Wednesday, November 24, 2010
ஆபரேஷன் ஓப்பன் டே
முன்பொரு காலத்தில் ஒரு அம்மா இருந்தாள். அவளது குழந்தையின் எல்லா 'முதல்'களை...ஒரு சின்ன விஷயத்தைக் கூட விடாமல் எழுதி வைத்துக் கொள்வாள் ரொம்பவும் சென்டிமென்டலாக. இப்போது அந்த அம்மாவின் முதல்கள் மாறிவிட்டனவா தெரியவில்லை..ஆனால், சென்டிமென்டல்கள் மட்டும் மாறவில்லை.....ஓக்கே..ஓக்கே...போதும்...விஷயத்துக்கு வரேன். :-)
தினமும் காலையிலே பப்புவை எழுப்புவது ஒரு கலை. இந்த 'டயமாச்சு', 'வேன் வந்துடும்', 'தண்ணி ஆறுது' இல்லேன்னா 'எவ்ளோ நேரம் சொல்லிக்கிட்டே இருக்கேன், சீக்கிரம் எழு' இதெல்லாம் வேலைக்கே ஆகாது.
என்னைப்போல, தூக்கத்திலிருந்து கண் விழித்ததும், அந்த பக்கம் திரும்பி கொஞ்ச நேரம், இந்த பக்கம் திரும்பி கொஞ்ச நேரம், ஜன்னலைப் பார்த்துகொண்டு கொஞ்ச நேரம்....லேசாக சாய்ந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம்...இந்த மாதிரி துயில் கலையும் விஷயமெல்லாம் பப்புவிடம் அறவே கிடையாது. லிரில் புத்துணர்ச்சிதான். பெரும்பாலும் லஷ்மி கார்த்திகா, ஸ்ருதி லயா, அத்தி ஆண்ட்டி நினைப்புதான். எனவே, எனக்கும் தினமும் ஏதாவது ஒன்று கிடைத்துவிடும்.
'இன்னைக்கு யோகாவா' என்ற மொக்கையான கேள்வியிலிருந்து 'ஆம்பூர்/ வடலூர் ஆயா வர்றாங்களா இன்னைக்கு' 'இன்னைக்கு என்ன சிடி பாக்கலாம்' ..இப்படி ஏதாவது கேள்வியில் தொக்கி நிற்க வேண்டும். வெள்ளிக் கிழமைகள் போனான்ஸா. அன்றைக்கு ஆம்பூர்/வடலூர் ஆயா விசிட் இருந்தால் டபுள் போனான்ஸா. திங்கள் காலையில் எழுப்புவது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு எளிது வெள்ளிகாலை எழுப்புவது.
மிக முக்கிய காரணம், வெள்ளிக்கிழமைகளில் யோகாவும் இல்லை. கராத்தேவும் இல்லை. ப்ளே க்ரவுண்ண்ண்ண்ண்ட்.
சிறிது நாட்களாக அதுவும் மழை ஆரம்பித்த நாளிலிருந்து பப்பு ப்ளே க்ரவுன்டில் வந்த விஷபாம்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாள்.'ப்ளே க்ரவுண்டுக்கு இப்பல்லாம் ஆன்ட்டி எங்களை அனப்ப மாட்றாங்க' என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். பள்ளியின் மைதானம் அவ்வளவு பெரிதெல்லாம் இல்லை. ஏதோ கொஞ்சம் விளையாட்டு சாதனங்கள் இருக்கும். ஆனால், காம்பவுண்டைச் சுற்றி இருக்கும் காலி இடம்...மரங்கள்... தேங்கியிருக்கும் தண்ணீர்...எல்லாம் சேர்ந்து 'க்ரவுண்டில் வந்த விஷப்பாம்பை' கொஞ்சம் படமெடுக்கத்தான் செய்தது.
ஓபன் டேவுக்குச் சென்றிருந்த போது, ஆன்ட்டி ட்ரைனாமியல், பைனாமியல், ஜ்யாமெட்ரிக் ட்ரே என்று பப்புவின் புலமையை பறைச்சாற்றிக்கொண்டிருக்க என் மனமோ விஷப்பாம்பையே சுற்றிக்கொண்டிருந்தது. எப்போடா முடிப்பாங்க என்று ஆண்ட்டி ரிப்போர்ட் கார்டை முடித்ததும் கையெழுத்திட்டுவிட்டு, 'ஆன்ட்டி (ஆமா, அங்கே பெரியவங்களை எல்லாம் பெரியவங்கஆன்ட்டின்னுதான் கூப்பிடுவாங்க..சில ஸ்கூல்லே சித்தின்னு கூப்பிடுவாங்களாம்..அதுக்கு இது எவ்வளவோ பெட்டர்தானே!) க்ரவுண்டில பாம்பு வந்துச்சு, ஓட்டையிலே கல்லு வைச்சு மூடி வைச்சிருக்காங்க ந்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. பாம்பு வந்துச்சா... க்ரவுண்டுக்கு அனுப்பினா கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க...' என்று ஆரம்பிக்க....
"மழை வந்ததுலேருந்து ப்ளே க்ரவுண்டுக்கு கொஞ்ச நாளா அனுப்புறதில்லை. பாம்பெல்லாம் வரலை. இங்கே வர்றதுக்கு சான்ஸே இல்லை. ஆனா, வெள்ளிக் கிழமையானா ப்ளே க்ரவுண்ட் ஆன்ட்டி எல்லாரும் கேப்பாங்க. நாங்கதான் நிறுத்தி வைச்சிருக்கோம். அந்த கோவத்துலே சொல்லியிருப்பாங்க, நீங்க பயப்படாதீங்க.." என்றார் சிரித்துக்கொண்டே.
பப்புவை நம்புவதா ஆன்ட்டியை நம்புவதா என்ற குழப்பத்தில் பதிலுக்கு சிரிக்க முடியவில்லை. ரொம்ப நீளமாக இருந்த அந்த விஷப்பாம்பு, பப்புவும் அவளது நண்பர்களும் கல்லெல்லாம் வைத்து சுவரின் ஓட்டையை அடைத்தாலும் தள்ளிவிட்டு வந்த அந்த பாம்பு மட்டும், வெள்ளிக்கிழமைகளில் மறக்காமல் நினைவுக்கு வந்துவிடுகிறது.
"ஆச்சி, நான் கீழே இருக்கிற வொர்க்கெல்லாம் கம்ப்ளீட் பண்ணிட்டேன்னு ஆன்ட்டி என்னை மாடிக்கு அனப்பிட்டாங்க, வர்ஷினி, பி.ஹர்ஷினி, தனுஷ், நானெல்லாம் மாடிக்குப் போயிட்டோம். மாடிக்கு அனுப்பிட்டா சீனியர் மான்ட்டிசோரி, நாங்க சீனியர் மான்ட்டிசோரிக்கு போயிட்டோம், ஆச்சி"
இது மூன்று வருட கோர்ஸ். பப்புவின் பள்ளியில் இந்த கோர்ஸின் பெயர் எம்1.இதை முடித்த பின்னர்தான் சீனியர் மான்ட்டிசோரி - ஒன்றாவது, இரண்டாவது எல்லாம்.... கீழே இருக்கும் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டார்களா, பப்புவும் கற்று முடித்துவிட்டாளா, மாடிக்கு அனுப்பிவிட்டார்களா டபுள் ப்ரமோஷனெல்லாம் ஆயா காலத்தோட சரியாச்சே...என்றெல்லாம் சந்தேகம்.ஏனெனில், மாதாந்திர சந்திப்பின்போது, 'குறிஞ்சியும் வர்ஷினியும் இங்கேயிருக்கும் மெட்டீரியல்ஸை எல்லாம் முடித்த பின்பே சாப்பிடக் கிளம்புவார்கள்' என்று சொல்லியிருந்தார். ஆன்ட்டியிடம் கேட்டபோது, ' டெய்லி எங்களை மாடிக்கு அனுப்புங்க ஆன்ட்டி, நாங்க இந்த வொர்க்கெல்லாம் முடிச்சுட்டோம்.' என்று நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அந்த பூமராங்தான் என்னிடமும் வந்திருக்கிறது.
அடுத்த வருடம்தான் மாடிக்காம். :-)
ஓபன் டேவுக்கு கொஞ்சம் சீக்கிரம் சென்றுவிட்டேன் போல. பிள்ளைகள் எல்லாரும் வேனுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நானும் வராண்டா விலிருந்து அவர்களது வகுப்பறையை எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். பப்புவையும் அவளது நண்பர்களையும் பார்க்க.
பப்புவைத் தவிர மற்ற குட்டீஸெல்லாம் எட்டி எட்டி என்னைப் பார்த்து 'குறிஞ்சீஸ் மதர்' என்றும் 'ஆன்ட்டி ஹாய்' என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எனக்கோ பயம். பப்பு இதை பார்த்தால் அவ்வளவுதான்...எவ்வளவு கிள்ளுகள அடிகள் எனக்கு இருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டேன். ஆயாவுக்கு ஊசி போடுவதற்காக நர்ஸ் வந்திருந்தார். அவரது குழந்தையையும் அழைத்து வந்திருந்தார். அந்தக் குழந்தையைக் கொஞ்சப் போக அந்த வினையே தீர்ந்த பாடில்லை. தூங்கப்போகும் சமயம், சரியாக இது அவளது நினைவுக்கு வந்து விடும். இப்போது இவர்களுக்கு ஹாய் சொல்லி பேசிக் கொண்டிருந்தால்.... அதை பப்பு பார்த்துவிட்டால்.....நினைக்கவே பயமாக இருந்தது.
கடைசியாக பப்புவும் வந்தாள். என்னைப் பார்த்து சிரித்துவிட்டு ஓடி விட்டாள்.
வீட்டிலும் கூட இதைப் பற்றி எதுவும் பேசவில்லை.
ஆன்ட்டியை பார்த்தது பற்றி நானாக ஆரம்பித்தபோது, "ஹேய், என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் பார்த்தியா, அவங்கதான் என் ஃப்ரெண்ட்ஸூங்க..." என்று யார் வேதஸ்மிருதி, அக்ஷயா, பி.ஹர்ஹினி, மெரில் என்றெல்லாம் பெருமையாக சொல்ல முற்பட்டாள். பொறாமையற்ற அந்த பப்புவை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
மற்ற ரிமார்க்ஸ் : சொற்களுக்குகிடையில் இடைவெளி விடுவதை அறிந்து எழுதுகிறாள். கதை சொல்வதில் ஆர்வம் இருக்கிறது.
ஆன்ட்டி சொல்லாமல் விட்டது : நான் கூட உட்கார்ந்து எழுத வைக்கும் நேரங்களை விட அவளாகவே ஹோம் ஒர்க் செய்தால் அழகாக எழுதுகிறாள்.

Saturday, October 16, 2010
பப்பு டைம்ஸ்
கடந்த ஆறுமாதங்களாக ஆங்கில எழுத்துகளை எழுத ஆரம்பித்திருப்பது தெரியும். பள்ளியில் தமிழ்/இந்தி என்றதில் தமிழை தேர்ந்தெடுத்தோடு சரி. ஆன்ட்டியை கடந்த டெர்மில் சந்தித்தபோது தமிழ் விரைவில் ஆரம்பித்து விடுவோம் என்று சொல்லியிருந்தார். பழைய டைரிகளின் புதிய ஓனர் பப்பு எழுதிக்கொண்டே, 'ஔ, ஔஔ' எப்படி எழுதணும் ஆயா என்றாள். எட்டிப் பார்த்தால், மேடத்தின் கைவண்ணம்! ஆங்கில எழுத்துகளை கற்றுக் கொள்வதை விட தமிழ் கற்றுக்கொள்வதைப் பற்றித்தான் மிகுந்த கவலையாக இருந்தது. உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள்....ஆனால், ஆங்கில எழுத்துகளை கற்றுக்கொண்டதைவிட வேகமாக அ,ஆ கற்றுக்கொண்டது போல தோன்றியது. க ங ச....எப்போது எனது அடுத்த கவலை ஆரம்பம்..;-)
தங்கேஸ்வரி ஆன்ட்டிக்கு நன்றிகள்!

மூன்றெழுத்து ஆங்கில் வார்த்தைகளை எழுதுகிறாள். ஒலிக்கும் சத்தங்களைக் கொண்டு வார்த்தைகளை காயின் செய்வதுதான் பெரும்பாலும். மேலும், எழுதி எழுதி cat,mat,rat etc - மனதில் பதிந்து போயிருக்கிறது போல. வழக்கமாக அதை எல்லாம் முதலில் எழுதியபின், புதிதாக எழுத வார்த்தைகளை யோசிப்பாள். அதில், புதிதாக கண்டுபிடித்த வார்த்தைகள் சில.
ziro - zero
cit - kite
jue - zoo
jac -?
ist - ? (east or something, I forgot)
boji -bujji

எழுதும்போது தவறு வந்துவிட்டால் அதை அழிக்கவேண்டாம், அடித்துவிட்டு சரியாக எழுத வேண்டும், வீட்டிலும் எழுதும்போது அதேபோல பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆன்ட்டி சொல்லியிருந்தார். தவறை திருத்திக்கொள்ள உதவுமாம். ஹோம் ஒர்க் நோட்டிலும் இதையே எழுதி அனுப்பியிருந்தார். பப்பு,எழுதியது அழகாக வரவில்லை அல்லது தவறான உச்சரிப்பு என்று எண்ணினால் அழிப்பாள்."அழிக்கவேணாம் பப்பு, அடிச்சுடு, பக்கத்துலே எழுது" என்றேன் அவள் அழிக்க முற்பட்டபோது?
அவள் செய்ததுதான் ஹைலைட்.
ரப்பரை கீழே வைத்துவிட்டு, தவறாக எழுதியிருந்ததின் மேல் கையால் ஒரு அடி!!! (மெகா வாட் பல்பு!)
ஸ்ட்ரைக் அவுட், பப்பு என்றதும், சமாதானமாகாமல், அதனை அடித்துவிட்டு பக்கத்தில் திருத்தி எழுதினாள். அடுத்தநாள், மறக்காமல் ஆன்ட்டியிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டுதான் ஓய்ந்தாள்.
இன்னும் என்னவெல்லாம் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் வருமோ?

கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது கர்சர் காணாமல் போய்விடும். கர்சரை திரும்பக் கொண்டு வர வைக்கும் கீ பெயர் "இஸ்க்".
Esc கீதான் அது!
Wednesday, September 08, 2010
v4.0- v4.10
எனதன்பு பப்பு,
இதை எழுதத் தொடங்குமுன்பு பலவித எண்ணவோட்டங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஆளாகியிருக்கிறேன். வெகுவிரைவில் நீ ஒரு ஐந்து வயது சிறுமி! ஒவ்வொரு வருடமும் சொல்வது போலத்தான் - இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டிருக்கப்

இந்த ஒரு வருடத்தில் உனக்குச் சொல்லத்தான் எவ்வளவு இருக்கிறது, பப்பு, உன்னைப் பற்றியும், என்னைப் பற்றியும், மேலாக நம்மைப் பற்றியும்! நீ கடந்து வந்த ஒவ்வொரு மாற்றங்களையும் உணர்ந்திருந்தாலும்-சென்ற நான்கு வருடங்களில் நிகழ்ந்த மாற்றங்களைவிட இந்த ஒரு வருடத்தில் நீ கடந்தவையும், அடைந்தவையும் அதிகம்! எத்தனை மாற்றங்கள்; எத்தனை வளர்ச்சிகள்! உனக்கேயுரிய தனித்துவமான பாதையில், தனித்துவமான ஸ்டைலில் அவற்றையெல்லாம் எவ்வளவு நேர்த்தியாக ஏற்றுக் கொண்டு வளர்ந்திருக்கிறாய் பப்பு!
போராட்டங்கள் உனக்கு புதிதல்லதான், சுவாசிப்பதற்கான போராட்டத்துடன்தானே பிறந்தாய்? உனது போராட்டத்தின் உறுதியை, உனது ஆளுமையின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் காண்கிறேன், பப்பு!ஆனால், நாங்கள்தான் சமயங்களில் குழம்பி போயிருக்கிறோம்.உன்னை குழப்பியும் இருக்கிறோம். எங்களது தேவைக்கேற்றபடி நீ சில விஷயங்களை சட்டென்று பெரிய பிள்ளையின் தோரணையுடன் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றும்; எங்களுக்கு வேண்டியபோது குழந்தையாகவே இருக்கவேண்டுமென்றும் படுத்தியிருக்கிறோம். எல்லாவிதத்தில் எங்களுக்கு வேண்டியபடி நீ நல்லவளாகவே இருக்க வேண்டுமென்று ; அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டுமென்றும், ஆனால், நீ உனக்கு வேண்டிய அளவில் உறுதியுடன்தான் இருக்கிறாய். தெளிவாகவும் இருக்கிறாய்.
நாங்கள் சொல்வதை எங்களுக்கே திருப்பிச் சொல்லி, நாங்கள் செய்வதையே திருப்பி செய்து, வடிவேலுவின் ஜோக்கை பார்க்காமலே எங்களை வெறுப்பேற்ற ஆரம்பித்தாய். நான்கு வயதுக்கான மைல்கல் போல என்றெண்ணிகொண்டேன். நேற்றிரவு, 'சாப்பிடு இல்லேன்னா தூங்கு' என்ற போது 'சாப்பிடு' ன்னு சொன்னா தூங்குவேன்; தூங்குன்னு சொன்ன சாப்பிடுவேன் என்று புது அர்த்தம் சொன்னாய். சாப்பிடுவாய் என்று நினைத்து 'தூங்கு' என்று சொன்னதும் 'நீ சொல்றதைதான் கேப்பேன், ஆச்சி' என்கிறாய். ஐந்து வயதுக்கான இப்படியொரு மைல்கல்லை நான் எதிர்பார்க்கவில்லை.
மாதத்தின் பெயர்களையும் நீ அறிந்தது இந்த வருடத்தில்தான். அதற்காக சந்தோஷப்பட்ட என்னை நானே நொந்துக் கொள்கிறேன். ' எப்போது பிறந்தநாள் வரும்' என்று கடந்த மூன்று மாதங்களாகவே-தினந்தோறும் வாரங்களை அல்லவா எண்ணிக் கொண்டிருக்கிறாய். "வாடா மாப்பிள்ளை", "புலி புலிக்குது" "டாடி மம்மி வீட்டில் இல்ல" என்றும் இன்னும் பல பாடல்களை நீ பாடும்போது பிறவிப்பயனை அடைகிறேன். "டாடி; மம்மி பேபியை தனியா வீட்டுலே விட்டுட்டு எங்கியாவது போவாங்களா" என்ற சந்தேகங்களையும் தீர்க்க வேண்டிய நிலைக்கும் ஆளாகிறேன்.
இந்த வருடத்தில் உனது சாகச குணமும் வளர்ந்திருக்கிறது, தயக்கங்களும், பயங்களும் நீங்கி இருக்கிறது. உட்கார்ந்து செய்யும் ஆக்டிவிட்டிகளைவிட ஸ்கூட்டியில் பறப்பதும், காலாற நடப்பதும், மேலிருந்து குதிப்பதும், ஓடுவதுமே உனது பிடித்தமாக இருக்கிறது. மாலை வேளைகளைவிட விட காலை நேர கடற்கரையே உனக்கு விருப்பம்.
பப்பு, நீ என்னைப்போல பத்துமடங்கு பொறாமைபிடித்தவளாக இருக்கிறாய். என்றோ ஒருநாள் ஆதியை நான் தூக்கியதற்காக இன்றும் கிள்ளுகளையும் அடிகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.
உன் முன் விவாதங்களை சண்டைகளை தவிர்த்து வந்திருக்கிறோம். என்றாலும் அம்மாவும்-அப்பாவும் ஃப்ரெண்ட்ஸாக இருக்கிறார்களா என்று முகங்களை நோக்கியே அறிந்துக் கொள்கிறாய். இப்போதெல்லாம் பாசாங்குகள் வேலைக்காவதில்லை. ஆனாலும், உனக்காக ஃப்ரெண்ட்ஸாக இருக்கிறோம்.
இதுவரை, நீ ஒவ்வொன்றை புதிதாகக் கற்றுக்கொண்டபோதெல்லாம், உன்னுடன் அந்த குதூகலத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். அந்த நொடியை நானும் அனுபவித்திருக்கிறேன், நீ புதிய மைல்கல்லை எட்டும் போதெல்லாம் உற்சாகமடைந்திருக்கிறேன். அந்த நொடியை நிறுத்தி வைத்துக்கொள்ள ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போதோ பப்பு, நீ வளர்ந்த குழந்தையாகிவிட்டாய். நீயே உனக்கு வேண்டியவற்றை செய்துக் கொள்கிறாய். பெரியவர்களை போல பேசுகிறாய், பெரிய விஷயங்களை பேசுகிறாய். நான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த குழந்தை அல்ல நீ இப்போது; கைப்பிடிக்காமல் கூடவே நடக்க அல்லது தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தால் போதுமென்கிற அடல்ட் !
You’re all grown up to me,now.
நான் செய்யாத ஒன்றுண்டென்றால், உன்னை தனியாக உறங்க வைக்க பழக்கப்படுத்தாதது. ஏனெனில், எனக்கே அதில் விருப்பமில்லை. I hug you tighter as you go to sleep each night. And, I know, to love is to let go. எல்லாவற்றையும் போல தனியாக உறங்கவும் நீயாகவே கற்றுக்கொள்வாய். அதுவரை.....
விரைவில் பப்பு, நாம் ஒரு சமநிலைக்கு வந்துவிடுவோம்; ஒருசில போர்க்களங்களுக்குப் பிறகோ அல்லது ஒருசில கண்ணீர்த்துளிகளுக்குப் பிறகோ!
0..1..2..முத்தான மூன்றை நெருங்குகையில்!!
v3.0 - 3.10
மாற்றங்களை கையாள்வதற்கும், உனது சின்னஞ்சிறு சிறகுகள் வளர்வதற்கும், விரித்து பறப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க உறுதி கொள்கிறேன், பப்பு....
உன்னோட
ஆச்சிக்குட்டிபாப்பா (இப்படித்தான் என்னை கொஞ்ச ஆரம்பித்திருக்கிறாய் நீ )
Friday, July 16, 2010
(ஃ)பன்னி மேனியா
பன்றியை ஒரு ஃபார்ம் அனிமலாக மட்டுமே இதுவரை அறிந்திருந்த பப்புவுக்கு மற்றவர்களை கிண்டல் செய்யவும் அப்படிச் சொல்லலாமென்று இப்போது தெரிந்துவிட்டது!
இந்த மைல்கல்லை கடக்க உதவிய பப்புவின் பள்ளி நண்பர்களான அர்ஷித்_வைஷ்ணவி_வ்யோம்_லைபோவுக்கு நன்றி! :-)

Sunday, June 13, 2010
Few of her favorite sites....
கடந்த கோடைவிடுமுறையில் பப்புவை புத்தகங்களை விட அதிகம் ஆக்கிரமித்திருந்தது கம்ப்யூட்டர்தான். பெரும்பாலும் பெயிண்ட் பிரஷை வைத்துதான் விளையாடுவாள். அதைவிட்டால் sesame street மிகவும் பிடித்தம்.
தற்போதைய லிஸ்டில் இருக்கும் ஒரு சில தளங்கள் :
http://www.starfall.com/ இதில் இரண்டாவது பிரிவும் மூன்றாவது பிரிவும் மிகுந்த உபயோக இருந்தது. இரண்டாவது பிரிவு, வார்த்தைகளை, ஒலிகளை பகுக்கவும், கதைகளை பப்புவே நேவிகேட் செய்வதற்கும் உதவியது. நமது உதவி இல்லாமல் அவர்களாகவே அடுத்த பக்கங்களுக்கு செல்வதற்கு ஏற்ற வகையில் இருப்பது மிகுந்த உதவி- நமக்கு! வார்த்தைகளை, எழுத்துகளை கற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கும் சிறார்களுக்கு இந்த தளம் ஏற்றது. இதிலே இருக்கும் books பிரிவையும் வார்த்தைகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தலாம். பப்புவிற்கு nouns,verbs பற்றியெல்லாம் புரியாததால் தொடர்ந்து மூன்றாவது பிரிவை பார்க்க இயலவில்லை.
http://www.abcya.com/ ஒரு இடுகையில் பின்னூட்டத்தில் சித்தார்த்தும், மடலில் வெயிலானும் பகிர்ந்துக் கொண்டது. இதில் கிரேடு வகையாக பிரித்திருந்தாலும் பொதுவாக 4 - 5 வயதினர் எல்லா கிரேடையும் பயன்படுத்துக்கொள்ளலாம். ஒரு சில மட்டும் புரிந்துக்கொள்ள கடினமாக இருக்கும். இதன் டாட் டு டாட் மற்றும் எண்கள் விளையாட்டுகள், பூசணிக்காய் க்ரேவிங் - சூப்பர் டூப்பர் ஹிட்! இந்த தளம் குட்டீசை முழுவதுமாக விழுங்கிவிடும். ஒவ்வொரு மூலையும் பப்புவுக்கு அத்துபடி. வண்ணமயமான அமைப்பும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது.
http://pbskids.org இவை முழுவதும் விளையாட்டுகள்தான். கொஞ்சம் சீசேம் ஸ்ட்ரீட் பாணியில் இருந்தாலும் செம ஹிட். 'லோட் ஆகுது' என்று பப்புவுக்கு தெரியவைத்தது இந்த தளம்தான். :-) கண்ட்ரோல்களை கையாள்வதற்கான , பின்னணி குரலை கேட்க வைத்ததும் சீசேம் ஸ்ட்ரீட் மற்றும் இந்த தளத்தின் வெற்றி.
http://ceebies.com/ - இதில் பப்பு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. வேறு குட்டீஸுக்கு பயன்படலாம்.
இது அல்லாமல், கணினியிலே இருக்கும் வேறு விளையாட்டுகளும் பப்புவின் ஃபேவரிட்.
உங்க வீட்டுலே எது ஹிட்டுங்க? பின்னூட்டத்தில் அறிமுகப்படுத்துங்க!

Wednesday, April 21, 2010
ஜூன் '09 - ஏப்ரல் '10
பள்ளிக்கூடத்தின் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை - முக்கியமான எல்லா தினங்கள்,நிகழ்ச்சிகள் - சாதனைகள் - இன்னபிற - என் நினைவிலிருந்து!
1. பள்ளியின் முதல் நாள் - ஜூன் 09
2. ரெட் டே - ஜூன் 09
3. ஃபேமிலி டே - ஜூலை 09
4. மாதாந்திர பிறந்தநாள் - ஜூலை 09
5. யெல்லோ டே - ஆகஸ்ட் 09
6. ஆஃப்டர் ஹேர் கட் & மாதாந்திர பிறந்தநாள் - செப்டம்பர் 09
7. பிரவுன் டே - செப்டம்பர் 09
8. நான்காம் பிறந்தநாள்- அக்டோபர் 09
9. குழந்தைகள் தின ஃபேன்சி ட்ரெஸ் பரேட் - நவம்பர் 09
10. பிங்க் டே - டிசம்பர் 09
11. பள்ளி ஆண்டு விழா - பிப்ரவரி 10
12. 'ஆங் சான் சூ கி மாதிரி இருக்கே'ன்னு ஆயா சொன்னதும் அதே ஆங்கிளில் எடுக்க முயன்றபோது - மார்ச் 10
13. ப்ளூ டே - ஜூலை 09
14. கராத்தே நிகழ்ச்சி - டிசம்பர் 09
15. இக்கல்வியாண்டின் இறுதிநாள் - ஏப்ரல் 10
பிலாக் & வொயிட் டே, கோல்ட் & சில்வர் டே போன்ற சிலவற்றை எடுக்காமல் விட்டுவிட்டேன்,பப்பு! ( நீ, கேமிராவை பார்த்தாலே தன்னிச்சையாக செயற்கையான புன்னகை செய்வதாக, நீண்ட நாள் புகாரொன்று என் மேல் உள்ளது! )
Monday, March 08, 2010
சுவிஸின் "ஆனந்தி" இதழில் .....

4 Tamil Media-வின் வெளியீடான சுவிஸ் தமிழ் மாத இதழ் "ஆனந்தி"-யில் வலைப்பூங்கா பகுதியில் வந்த சித்திரக்கூடம் பற்றிய அறிமுகம்! இது ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ் - ஆனந்திக்கும், 4தமிழ்மீடியாவுக்கும் நன்றிகள்!! சித்திரக்கூடத்தைத் தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!
சுவிசிலிருந்து இதனை எனக்கு அனுப்பித்தந்த "சாரல்" சயந்தனுக்கு நன்றிகள்!
பின்குறிப்பு: படித்துப் பார்க்காமல், வெறுமே 'வாழ்த்துகள்' என்று பின்னூட்டமிடுபவர்கள், "ஆனந்தி"யில் சித்திரக்கூடத்தைப் பற்றி எழுதியிருப்பதை 100 முறை வாசித்து, மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டிய தண்டனைக்கு ஆளாவீர்கள்!
'ஃபோட்டோ' காப்பியில் எழுதியிருப்பதை மேற்கோளிட்டு பின்னூட்டமிடுபவர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்! :-)
Wednesday, September 30, 2009
ரவுண்ட் அப்!

(படம்: முதல் டெர்மின் இறுதிநாள்!)
பப்புவின் பள்ளியின் முதல் டெர்ம் கடந்த பதினொன்றாம் தேதி முடிவுற்றது. விஜயதசமி வரை விடுமுறை. பள்ளி முடிந்ததைக் கொண்டாட கடற்கரைக்குச் சென்று காற்றோடு சளி மற்றும் ஜூரத்தையும் வாங்கியாயிற்று. டாக்டர் விசிட்-மருந்துகள் - ஆம்பூர் பயணம் - மருந்துகள் - இப்போது பள்ளியும் தொடங்கிவிட்டது.
ஆரம்பத்தில், வீட்டிலிருந்து செல்லும்போது ஜாலியாக சென்றாலும் பள்ளியில் வர்ஷினி அழுவதைப்பார்த்து கம்பெனிக்காக பப்புவும் அழுதாலும் ஓரிரு வாரத்தில் சரியாகிவிட்டது! எதைச் செய்தாலும் வர்ஷினியோடுதான் செய்ய வேண்டியிருக்கிறதாம் பப்புவுக்கு. வர்ஷினி செய்யும் ஆக்டிவிட்டியைத்தான் செய்கிறாள். இருவரும் அருகருகில் அமர்ந்துக்கொள்ளத்தான் விருப்பப்படுகிறார்களாம். 'சிறுபிள்ளைகள் தானே, இருக்கட்டுமென்று' விட்டு விடுவதாகச் சொன்னார் பப்புவின் வகுப்பாசிரியர். மேலும் 'பிரிப்பது சரியல்ல, இருவருமே அப்படித்தான் இருக்கிறார்கள், அதனால் பரவாயில்லை' என்றும் கூறினார்.
சிலநாட்களில் யார் யார் எங்கே அமர வேண்டுமென்று பாயைப் போட்டு வைத்தாலும் கூட, ஆன்ட்டி, வேறு ஏதாவது வேலையாக இருந்தால் எப்படியாவது ஒன்றாகி விடுகிறார்களாம். மேலும் பேசிக்கொண்டோ அல்லது ஆக்ட்விட்டி செய்யாமலோ இருப்பதில்லை, அதனால் அப்படி, மாறி அமர்ந்தாலும் நாங்களும் ஒன்றும் சொல்வதில்லை என்றார். என் சுதா கான்வெண்ட் தோழி சுதாவின் நினைவுதான் வந்தது. சுதா, கிருபா மற்றும் நான் - முதல் வகுப்பில் நெருங்கிய நண்பர்கள். கிருபா சுதாவை, “ உன் பேரு சுதா, உன் வயித்திலேருந்து தான் நாங்கள்ளாம் வந்தோம், அதனாலேதான் நாங்க சுதா கான்வென்ட்லே படிக்கிறோம்” என்றுச் சொல்லி அவளை அழ வைத்துக்கொண்டிருப்பாள். என்னையும் சுதாவையும் ஒன்றாக புகைப்படம் எடுக்க வேண்டுமென்று ஆயா சொல்லிக்கொண்டிருப்பார். சுதா வேறு பள்ளியில் சேரும் வரை ஆயா சொல்லிக்கொண்டு மட்டுமே இருந்தார், அது வேறு விஷயம்!
கடந்த சில நாட்களாக ஆங்கிலத்திலேயேத்தான் வகுப்பறையில் உரையாடுகிறார்களாம். அதாவது ஆன்ட்டியிடம் கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் உரையாடியாக வேண்டிய கட்டாயமாம். இதுநாள் வரை குழந்தைகள் தமிழில் அல்லது இந்தியில் பதில் சொன்னாலும் புரிந்துக்கொண்டவர்கள், இப்போது, ஆங்கிலத்தில் உரையாடினால் மட்டுமே திரும்பப் பேசுகிறார்களாம். இதுதான் பப்புவின் ”close your வாய்”, ”no eating" , "this take" , "this my bottle" , " no close your eyes" etc விற்குக் காரணமா?!!
பப்புவிற்கு, அவளது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு ரைம்ஸ் பாடுவது அலாதி பிரியம். வாசிக்கத் தெரியாதென்றாலும் படத்தைப்பார்த்து என்ன ரைம்ஸ் என்று தெரிந்துக்கொண்டு ஆயாவிற்கும் எனக்கும் வகுப்பெடுப்பாள். இந்த டெர்மில் முதலில் கற்றுக்கொண்ட ரைம்ஸ், “காட்டுக்குள்ளே கச்சேரி”, ”thumpkin he can sing”. இந்த டெர்மில் பாதி நாட்கள் “ இன்னைக்கு அக்டோபர் 28th ஆ” என்ற கேட்டபடிதான் விடிந்தது. வாரத்தின் நாட்கள் தெரியுமெனினும், வருடத்தின் மாதங்களை விரைவில் அறிந்துக் கொண்டால் பரவாயில்லை!! :-)
இப்போதுதான் vowels சொல்லிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். i மற்றும் e போன்ற ஒரு எழுத்தை வரைந்து விட்டு அதை அளவெடுத்துக்கொண்டிருப்பதிலிருந்து அறிய முடிந்தது. பப்புவாகவே எப்போது கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பிப்பாளென்ற, எப்போதும் கேட்கின்ற அந்தக் கேள்வியை கேட்டு வைத்தேன். இப்போதைக்கு கதை சொல்வதிலிருந்து நான் தப்ப முடியாது போல!! (யாருப்பா அது, பப்பு பாவம்ன்னு சொல்றது?!!) மாலையில் பப்புவிடம், “இன்னைக்கு ஆன்ட்டி என்ன சொன்னாங்க” என்றோ, “ஸ்கூல்ல என்ன பண்ணீங்க” என்றோ கேட்பது வழக்கம். வரும் பதிலை வைத்து அன்று பள்ளியில் என்ன நடந்தது என்பதை அனுமானிக்கவே முடியாது. நானும் எப்படியெப்படியோ கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டுப்பார்த்தாலும் என்ன நடந்தது என்பதை ஒருநாளும் சொன்னதில்லை. “நாங்க வேன்லே போகும்போது புயல் மேகம் தொரத்திக்கிட்டே வந்துச்சி ஆச்சி” என்றோ அல்லது “புயல் மேகம் வேகமா வந்து எங்க மேலே மழை பெய்யலாம்னு பார்த்துச்சு ஆச்சி” என்றோ “அபிஷேக் ஜோஷ்வா வர்ஷினியை தூக்கிப் போட்டுட்டான்” என்றோதான் விடைகிடைக்கும்!! ”என் பொண்ணு ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அன்னைக்கு நடந்ததெல்லாம் அப்படியே ஒப்பிப்பா” என்று யாரேனும் சொல்லக் கேட்டால் என் கீழ்தாடை கீழே விழுவதில் ஆச்சர்யமென்ன?!!
Tuesday, September 01, 2009
v3.0 - 3.10
பப்பு,
ஞாபகமிருக்கிறதா, சென்ற வாரத்தில் ஓர் நாள்,
”என்னைத் திட்டுறீங்க இல்ல,உங்க அம்மாக்கிட்டே சொல்றேன்” - பப்பு
“நானும் உங்க அம்மாக்கிட்டே சொல்றேன்” - முகில்
“இது எங்க அம்மாவோட வீடு” - பப்பு
இந்த உரையாடல்(விவாதம்) இதோடு முற்றுப்பெறுகிறது.
'ஏன் வீட்டைக் குப்பையாக்குகிறாய்' என்று முகில் கேட்டதற்குதான் இத்தனையும்! இதுநாள் வரை, நாங்கள் இது உன்வீடு, என்வீடு என்று பேசியதில்லை. ஆம்பூர் வீடு, வடலூர் வீடு அல்லது விழுப்புரம் வீடு என்றுதான் பேசியிருக்கிறோம். அல்லது நம்ம வீடு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம்! With that,பப்பு, நீயாகவே உரையாடலை எங்கே முடிக்கவேண்டும்ன்று அறிந்திருக்கிறாய். ;-).
நிறைய பேசுகிறாய். தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுகிறாய், நீ சொல்வது எல்லாமே ஆச்சரியமாகவும் மகி்ழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது!
நீயாகவே வரிகளமைத்துப் ஏதாவதொரு மெட்டில் பாடுகிறாய்.
இட்லி
சூடான இட்லி
அட்லி
அட்லியே!!
அர்த்தம்தான் புரியவில்லை!
திரும்ப திரும்ப கடைக்கு
இல்லன்னா கடைக்கு
பத்து வாங்க போலாம்
இந்தச் செடி நல்லாருக்காது!!
நாங்கள் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டுமென்றுச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்! சில நேரங்களில், நீ தனியாக இருக்கவிரும்புகிறாய். யாராவது கூட இருந்தால், கண்காணிக்கத்தான் என்று எண்ணிக்கொள்கிறாய்!
இந்த காலகட்டத்தில்தான், நீ, மிக முக்கியமானதொரு மைல்கல்லை கற்றுக்கொண்டாய்...பழி (complaint)சொல்வதற்கும், 'நானில்லை, அதுவே உழுந்துடுச்சு, அதுவே கிழிஞ்சுக்கிச்சு' யென்று தப்பித்துக்கொள்வதற்கும்!
அலுவலகத்திலிருந்து நான் வந்ததும், ஆயாவை பற்றி கம்ப்ளெய்ன் செய்வது உனது வழக்கம். 'எனக்கு பேரிச்சம் பழம் கொடுக்கல' அல்லது 'வாழைப்பழம் கொடுக்கலை'யென்று. (இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டுவிட்டு, முடி வளர்ந்துவிட்டதாவென்று தலையை சாய்த்துப் பார்க்கிறாய்.) நான் கேட்கிறேனென்று சொன்னதும், “ஆயாவை அடி, அடி” என்றாய். ”பப்பு, யாரையும் அடிக்கக்கூடாது” என்றதற்கு, 'என்னை காலையிலே அடிச்சே, ஏன் என்னை மட்டும் அடிச்சே' என்றாய்! குற்றம் சாட்டும் நோக்கத்தை விட, ஏன் என்று மட்டும் அறிந்துக்கொள்ளும் ஆர்வமே உன் முகத்தில் இருந்தது! ஹ்ம்ம்..இப்படிதான் நாம் வாழ்கிறோம் பப்பு, செய்யக்கூடாது செய்யக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு, கடைசியில் அதைத்தான் செய்யும்படி நேர்ந்துவிடுகிறது!
உன் கேள்விகள் மகிழ்ச்சியைத்தான் தருகின்றன, 'மரம் ஏன் காத்துலே விழாம நிக்குது' என்றும், கம்மல் கழட்டிய நாளொன்றில் 'நீ boyயாயிட்டியா' என்றும் கேட்கிறாய். பால் குடித்தபின் உதட்டின்மேலிருந்த நுரையைக் காட்டி 'நான் boyயியிட்டேன்' என்கிறாய். Well, pappu, இன்னும் பல வித்தியாசங்களை வாழ்க்கை வைத்திருக்கிறது, இது மட்டுமில்லை என்பதை நீ உணரும் காலமும் வரும்!
நட்பை உலகமாகக் கொண்டிருக்கிறாய், நண்பர்களுக்காகத்தான் நீ பள்ளிக்கு போகிறாய். இப்பொதெல்லாம், குள்ளநரி தேவைப்படுவதில்லை உன்னை எழுப்ப, 'வர்ஷினி, வெண்மதி எல்லோரும் உனக்காக வேன்லே வந்துக்கிட்டுருக்காங்க' என்பதே போதுமானதாக இருக்கிறது உன்னைக் கிளப்ப! 'நான் வர்ஷினி ஃப்ரெண்ட், உன் ஃப்ரெண்ட் இல்ல' என்கிறாய்! யாருடனாவது ஃப்ரெண்டாக இருக்க வேண்டுமானால், கண்டிப்பாக யாருடனாவது கா விடத்தான் வேண்டுமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்!! ‘வர்ஷினி வீட்டுக்கு என்னை விடறியா' என்கிறாய். Don't you think its too early pappu?!!
'கா கா' என்று என்னிடம் கா விடுகிறாய். பதிலுக்கு நானும் 'கா' விட்டால் கவலை கொள்கிறாய். நான் 'கா' விடக் கூடாதென்று கத்துகிறாய். நீ கா விட்டாலும், நான் சேலஞ்ச்தான் விடனும் என்று சொல்கிறாய். Ah,பப்பு, இதுதான் முதல் படி, to take your mom for granted!! இது எங்கே முடியுமென்று நானறிந்திருக்கிறேன்...தெரிந்தும் நீ கா விடும்போதெல்லாம் உனக்கு சேலஞ்ச் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்!!
பப்பு, இரவு நேரங்களில் என்னைவிட்டு தனியே தூங்கி பழக்கமில்லை உனக்கு. ஆயா ஊரிலிருந்து வந்ததும், ஆயாவோடு படுத்துக்கொள்ளப்போவதாகச் சொன்னாய். வழக்கம்போல, சொல்லிவிட்டு தூங்கும் நேரத்தில் வந்துவிடுவாயென்றெண்ணிக் கொண்டிருந்தேன். நீ அருகிலில்லாததை தூக்கத்தில் உணர்ந்து, நடுஇரவினில் ஆயாவினருகில் உறங்கிக்கொண்டிருந்த உன்னைத் தூக்கிக் கொண்டு வந்தேன்!பப்பு, நீ வளர்ந்துவிட்டாய், தனியாக உறங்க...பார், நான் இன்னும் வளரவில்லை!! To let go - இன்னமும் கற்றுக்கொள்கிறேன்!
கோபத்தில் உன்னை அடிக்க முற்படும்போது, “நாந்தான் அம்மா” என்று சொல்லிக்கொண்டு திரும்பி அடிக்க்க வந்தாய். பப்பு, அம்மாவாக இருந்தால் மட்டுமே அடிக்க வேண்ண்டுமென்று நீ நினைப்பது எனக்கு பிடித்திருக்கிறது! :-) (இது நானும் பப்புவும் விளையாடும் விளையாட்டு, நான் பப்புவாகி விடுவேன். பப்பு அம்மாவாகி விடுவாள். ஆபீஸ் செல்வாள், நான் வீட்டிலிருப்பதற்கு அழ வேண்டும்..etc!!)
'சேம் சேம்' அல்லது 'சேம் கலர்' அல்லது 'சேம் ஸ்விட்' என்று சொல்லக் கற்றுக்கொண்டாய்! வெளியில் போனாலோ, வீட்டிலிருந்தாலோ நீயும் நானும் ஒரே வண்ணத்தில் உடுத்த விரும்புகிறாய்! அப்படி இல்லையென்றாலும், உனது உடையிலிருக்கும் வண்ணத்தை, எனது உடையில் ஏதோ ஒரு மூலையிலாவது கண்டு நீயாகவே சமாதானமாகிறாய்!
என்றேனும் நான் மாற்றும் கம்மல் உன் கண்களுக்கு மட்டுமே சட்டென தெரிகிறது. 'அழகா இருக்கே' என்றும் 'இந்த ட்ரெஸ் நல்லா இல்லே' என்றும் சொல்கிறாய், ‘குண்டுக் குட்டி' என்றுக் கொஞ்சுகிறாய்! Phase D ஐ அழகாக கடந்து வந்தோம்...ஆனாலும் நீ சமயங்களில் கோபமாகிவிட்டால் டி சொல்வதும் நீடிக்கிறது! இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்த டோரா க்ரேஸ் இப்போது இல்லை. அல்லது நான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேனோ!!
உனது, மூன்று வயது மூன்று மாதங்களில் ஜிக்சா புதிர்களை அடுக்கக் கற்றுக்கொண்டாய். ஏனோ உனக்கு மெழுகுவண்ணங்களை தீட்டுவதில் அவ்வளவு ஆர்வமில்லை அப்போது. சரியாக உனது மூன்று வயது ஆறு மாதங்களில் அதில் ஆர்வம் காட்டத்தொடங்கினாய். அதிலும் சிவப்பு மாடுகள், கறுப்பு மாம்பழம் என்று கற்பனை செய்துபார்க்க இயலாதவைகளை தீட்டியதை எப்படி நான் மறக்க முடியும்!! பல்டி அடிக்கக் கற்றுக்கொண்டாய். பதற்றமும், மகிழ்ச்சியும் சேர்ந்த நிலையை நான் அறிந்துக்கொண்டேன்!
சிறிது கணினியும் இயக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாய். கீபோர்டில் சில எழுத்துகள், வலது அம்பு சரியாக இயங்க மறுக்கின்றன!! 'சொன்னபேச்சை கேட்பது' என்பதை நீ என்றேனும் கற்றுக்கொள்வாயா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது! என் பெரிம்மாவுக்கும், ஆயாவுக்கும், ரத்த அழுத்தம் கூடியதன் காரணம் இப்போது புரிகிறதெனக்கு!
'அப்பாக்கு கா கா விட்டுடு...otherwise நோ சேலஞ்ச்'!- என்று பிலாக்மெயில் செய்கிறாய்! எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதமாகத் தான் செய்கிறாய். சரிதானென்று நாங்களும் எதிர்ப்பதமாகச் சொன்னால், அன்றுதான் கடமையாகச் சொல்பேச்சை உடனே கேட்கிறாய்!
சொல்வதற்கு இன்னும் நிறைய இருப்பதுபோல தோன்றுகிறது, பப்பு! ஃப்ரெண்ட்லியான, உற்சாகமான, பயமறியாத சின்னஞ்சிறுமியாக நீ வளர்வதைப் பார்க்க நிறைவாக இருக்கிறது!
உனது மூன்று வயதைத் தாண்டி பத்து மாதங்களைக் கடந்து வந்திருக்கிறோம் and We have grown together!
இருந்தாலும், காலத்தை இப்படியே உறையச் செய்துவிட விரும்புகிறேன்.அதே சமயம் நீ வளரவும் விரும்புகிறேனே!! oh my!
வாழ்த்துகளுடன்,
ஆச்சி!
Saturday, July 04, 2009
லேடி இன் ரெட்!!
பப்புவின் பள்ளியில் கடந்த 26ஆம் தேதி - ரெட் டே! எல்லோரும் ரெட் வண்ண் உடையில் வர வேண்டும். யதேச்சையாக வாங்கிய சிவப்பு-மஞ்சள் பாவாடை சட்டை இருந்தது! அதையே போட்டு அனுப்பலாம் என்று நினைத்திருந்தேன். என் அலுவலகத் தோழியிடம் சொன்னபோது, ”எவ்ளோ அழகழகா ட்ரெஸ் இருக்கு, ஆரெம்கேவிலே! வாங்கி போடேன்” என்றாள். நான் கொடுத்த லுக் பார்த்துவிட்டு, ”நீ கண்டிப்பா வாங்க போறதில்லே, எனக்கு நல்லாத் தெரியும்! சே, பையனை வச்சிக்கிட்டு எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா, பொண்ணை எவ்ளோ அழகா அனுப்பலாம். ரெட் கலர் வளையல், ஹேர்பின், மணியெல்லாம் போட்டு அனுப்பு, எங்க அக்கா ப்ரீத்தாக்கு அப்படிதான் பண்ணுவா” என்று சொல்ல, அவளது உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது. புதுஉடையெல்லாம் வாங்கவில்லை...ஆனால் ரெட் நெய்ல்பாலிஷ், நெத்திசுட்டி, ஹேர் க்ளிப்ஸ் வாங்கினோம். வளையலும் கழுத்தில் போட்டுக்கொள்ளும் மணி அம்மா வாங்கி வந்தது வீட்டிலேயே இருந்தது!
ரெட் டே அன்று இப்படித்தான் இருந்தாள் பப்பு. கைகளில் நகப்பூச்சு இருப்பதால் நீண்டநேரம் அப்படியே வைத்திருந்தாள். முந்தினநாளிரவே கைகளில் பூசியாயிற்று.நகப்பூச்சு போயவிடுமென்று காலையில் பல்துலக்க மறுத்துவிட்டாள். மறுபடியும் போட்டுக்கொள்ள அனுமதித்தபிறகே குளியலறைக்குள் நுழைந்தாள். தீம் டே அன்று பள்ளி நேரம் முடிந்ததும் நாமும் பள்ளிக்கு சென்று பார்க்கலாம், ஆன்ட்டியை சந்திக்கலாம். பள்ளியில் எல்லாமே ரெட் கலர்தான் - பூக்கள், காய்கறிகள், செய்த கலரிங் வேலை ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி வில்லை என்று!
ஆண்ட்டியிடம் பேசினேன். வகுப்பில் மற்றவருக்கு தொல்லை தருவதில்லை. மிகவும் நல்ல பெண் . வர்ஷினியோடு சேர்ந்துதான் எதையுமே செய்ய பிரியப்படுகிறாள். இப்போதும் அழுவது தொடர்கிறது, ஒருசில நாட்களில். செய்ய விருப்பமில்லாவிட்டால் சொல்லி விடுகிறாள் என்றார்கள். குறிப்பிட்ட ஒரு சில நண்பர்களுடன் மட்டுமே பழகுகிறாள்.அவள் இன்று மிக அழகாக வந்திருந்ததாக சொன்னார்! (என்னை உற்சாகபடுத்திய என் தோழி அபிக்கு நன்றிகள்!:-))
பப்புவைக் கேட்டபோதோ,'நான் அழவேயில்லே' என்றும் 'வர்ஷினிதான் அழுதுச்சு, பப்பு அம்மா வேணும்னு சொல்லுச்சு' என்றும் சொல்கிறாள்! ஆனால், காலையில் செல்லும் போது எந்த அறிகுறியும் இருப்பதில்லை. பள்ளியில் அழுதேனேன்றும் சொல்வதுமில்லை. :-(

பப்பு பள்ளியில் பெற்றோர்கள் - ஆசிரியர்களின் முதல் சந்திப்பு இந்த வருடத்தில்! என்னைக் கவர்ந்த ஒரு சில விஷயங்கள்:
* ஆன்ட்டி சொன்னது, குழந்தைகளை அடிக்காதீர்கள், தயது செய்து அடிக்காதீர்கள். நாங்களும் அடிப்பதில்லை. எதுவானாலும் அவர்களுக்கு சொல்லுங்கள். விளக்குங்கள்.They are ready to accept. ஆனாl நாmதான் சொல்வது இல்லை. வெளியில் போனாலும், எங்கே போகிறீர்கள் என்று சொல்லுங்கள். “டாக்டர்கிட்டே போறேன், ஊசி போட்டுடுவார்னு பயமுறுத்தாதீங்க. நாளைக்கு நிஜமாவே, டாக்டர்கிட்டே போலாம்னு சொன்னா அந்த குழந்தை வரமாட்டேன்னு பயந்து அழும்”.
* இங்கே இருக்கும் உபகரணங்களை சில குழந்தைகள் தெரியாமல் எடுத்து பையிலே வைத்துக்கொள்ளலாம். அப்படி ஏதாவது உங்கள் குழந்தைகள் பையில் பார்த்தீர்களென்றால் எதுவுமே சொல்லாதீர்கள். கண்டிக்காதீர்கள். ‘ஆன்ட்டிக்கிட்டே கொடுத்துடு' என்று சொல்லி கொடுத்தனுப்பி விடுங்கள். குழந்தைகள் இதையெல்லாம் பார்த்து ஈர்க்கபபடுவது இயல்பு. அதுக்காக, 'திருடிட்டு வந்துட்டியா' என்றோ அல்லது 'இனிமே திருடக் கூடாது' என்றோ சொல்லாதீங்ர்கள். நாங்களும் அப்படி சொல்வது இல்லை. அந்த வார்த்தையை உங்கள் குழந்தை மேல் உபயோகிக்காதீர்கள்! உபகரணத்தின் நிறத்தையும் அந்த ஆக்டிவிட்டியைப் பார்த்து ஈர்க்கப்படுவது இயல்புதான்!
* கடந்தவாரத்தில் ஏதோ உபகரணத்தின் சிறியதுண்டு காணாமல் போய்விட்டது. கிளாஸ் முழுவதும் எல்லோரும் சேர்ந்து ஒரே தேடலாம். ஆன்ட்டியால் கட்டுப்படுத்த முடியவில்லையாம். எங்கிருந்தோ கண்டுபிடித்ததும் ஒரே குதூகலமாம். கிடைத்துவிட்டது ஆன்ட்டி என்று எல்லாரும் ஒருவரையொருவர் கட்டிபிடித்துக்கொள்கிறார்களாம். அதாவது அவர்கள் உபயோகப்படுத்தும் உபகரணத்தை எந்தளவு நேசிக்கிறார்கள் என்று சொல்லி முடித்தார் ஆண்ட்டி. காணாமல் போன ஷேப்பர்ஸூம், கரப்பான் பூச்சி வீடும் ஏனோ நினைவுக்கு வந்தது!! ;-)

சித்திரக்கூடத்திற்கு இன்றோடு மூன்று வயது! இன்று யதேச்சையாக கண்டுபிடித்தேன். உங்களனைவருக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்! சித்திரக்கூடத்திற்கும், தமிழ்மணத்திற்கும் எனது நன்றிகள்! :-)

Saturday, April 18, 2009
பப்பு - 360 டிகிரி!

(படம் : மூன்றாம் டெர்மின், கடைசி நாளன்று!)
முதல் டெர்ம்..., இரண்டாம் டெர்ம்... தற்போது பள்ளியின் மூன்றாம் டெர்ம் கடந்த ஒன்பதாம் தேதியோடு நிறைவுக்கு வந்தது!எவ்வளவு மாற்றங்கள், விரும்பத்தகுந்ததும், விரும்பத்தகாததுமாக!!
1. ”உன் பேச்சு க்கா” என்றும், “நீ என் ஃப்ரெண்ட் இல்ல” என்றும், ”சேலஞ்ச்' என்றும் சொல்கிறாள். “க்கா” சொல்லிவிட்டால், பேசக் கூடாது என்பது இப்போதெல்லாம் மாறிவிட்டது போல. பழம் விடுதலும், கட்டைவிரலை உயர்த்தி ”சேலஞ்ச்” செய்து அடுத்தவர் கட்டைவிரலை தொடுவதாக பரிணாமம் பெற்றுள்ளது.
2. நிறைய ஆங்கில வார்த்தைகள் புழக்கத்தில் வந்திருக்கிறது. தண்ணீர் பாட்டிலை பப்பு பையில் வைக்கும்போது, தெரியாமல் கொட்டி விட்டேன். ”ஆச்சி, வாட் இஸ் திஸ்?”!!
நோ டச்சிங், ஒன் பை ஒன்...etc!
3. இந்த டெர்மில் சில நாட்கள், “நான் ஸ்கூலுக்கு போகல” என்று விடிந்தது. அநேக நாட்கள், பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது, வேனிலிருந்து இறங்க மறுத்து, பள்ளிக்கே செல்லப் போவதாகவும் ஆயா சொல்லக் கேட்டேன்! :-)
4. “ஜனகன ” தாகம் போய் ”ரகுபதி ராகவ”தான் அவள் வாயில் இப்போது! இன்னும் ரெக்கார்ட் செய்யவில்லை! அவள் புதிதாக ஏதும் முணுமுணுக்கும் போது, ஓடிப்போய் அவளது பாடல் புத்தகத்தை திருப்பும் என் பழக்கமும் இன்னும் மாறவில்லை!
5.இந்த டெர்மில், சாப்பிட என்ன எடுத்துச் செல்வதென்று முடிவு செய்வது அவளது உரிமையாக உருவெடுத்திருக்கிறது. கத்திரிக்கோலைக் கையாள்வதுதான் மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. வளையல்கள், ரப்பர் பேண்டுகளை கைகளில் மாட்டிக் கொளவது, கழுத்தில் மணிகள் சில சமயங்களில் தொப்பியுடன் பள்ளிச் செல்ல விரும்புகிறாள்..:-) என் பள்ளி/கல்லூரி நண்பர்கள் இதைப் படித்தால் புரிந்துக் கொள்வார்கள், எங்கிருந்து இந்த பழக்கம் வந்திருக்குமென்று!
மொத்தமாக, 3 டெர்ம்கள். 360 மாற்றங்கள்.
வீட்டை விட்டு எங்கும் அதிகமாக சென்றறியாத ஒரு 2 1/2 வயதுச் சிறுமி தனக்கென்று பள்ளியில் ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொள்கிறாள். கடிகாரத்தை அறியாதவள், “இப்போ டைம் என்னா” என்றுக் கேட்கிறால், அதற்கு மேல் அதிகமாய் அறியாவிட்டாலும்! பெயர்கள் சொல்லி அட்டெண்டென்ஸ் எடுக்கிறாள்! பேசும் மொழியின் பெயர் தமிழென்றும் அறியாதவள், “இங்கிலீஷ்-ல என்ன” என்றுக் கேட்கிறாள். காலையில் பள்ளி வாகனத்தில் ஏறியதும், என்னைத் திரும்பிப் பார்ப்பவள், கடைசியாக என்னை அப்படித் திரும்பிப் பார்த்தது எப்போதென்று யோசிக்கிறேன்!!
பள்ளிச் செல்லத் துவங்கிய நாட்களை நினைத்துக் கொள்கிறேன்!
நன்றிகள் அவளது பள்ளிக்கும், மோத்தி ஆண்ட்டிக்கும், சித்ரபாலா ஆண்ட்டிக்கும்!
லஷ்மி ஆயாவிற்கும் அம்சா ஆயாவிற்கும் நன்றிகளும் வணக்கங்களும்!
Subscribe to:
Posts (Atom)