Friday, October 28, 2011

5 to 6

"சீக்கிரம் சாப்பிடு, சீக்கிரம் சாப்பிடு எத்தனை வாட்டி சொல்றது? நீதாம்ப்பா எனக்கு கோவம் வர வைக்கிறே... நான் கோவப்படக்கூடாதுன்னுதான் நினைக்கிறேன், நீ பண்றதுதான் பப்பு, எனக்கு கோவம் வரவைக்குது.... "

"ஆச்சி, இங்க பாரு, நான் உன்னை இங்க வா,வான்னு எத்தனை தடவை கூப்பிடறேன், பாரு இப்ப...

ஆச்சி இங்க வா....
ஆச்சி இங்க வா...
ஆச்சி இங்க வா...

ஆச்சி இங்க வா...
நீ வரலைல்ல, ஆனா எனக்கு கோவம் வரமாட்டேங்குது...உனக்கும் எனக்கும் ஒரே டி என் ஏதானே, ஏன் உன் டிஎன்ஏ-ல கோவம் அதிகமா இருக்கு? "

?!!!!!!


***************************

பப்லூவை நம்பினோர் கை விடப்படார் என்று சொல்லுமளவிற்கு பப்லூதான் எங்கள் கை கொடுக்கும் கை. பப்லூ ஒரு இமாஜினரி கேரக்டர். பால் குடிக்க, சாப்பிட எல்லாம் பப்லூ எனும் பத்து வயது சிறுவனுக்குத் தெரியாது.. மேலே கீழே சிந்திக்கொள்வான். ஜட்டி போடமாட்டான். டூத் பிரஷை கையில் வைத்துக்கொண்டு எதையாவது யோசித்துக்கொண்டிருப்பான். சரியான வாலு.
அவனது ஆயாவை படாதபாடு படுத்துவான், எரிச்சலூட்டுவான். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. பப்லூவுக்கு பப்புவிடம் நேர்வினை இருந்தது.
ரகசியம் இதுதான் - பப்பு செய்வதை லேசாக பப்லூ செய்வதாக மாற்றி சொல்லிவிட்டால் வேலை கடகடவென்று நடந்துவிடும்.

காலைநேரம் - பரபரப்பு.

“சொல்ற பேச்சை கேட்டா என்ன பப்பு, சீக்கிரம் சாக்சை போடு, ஷீவை போடு, டைமாச்சு பாரு,இப்போ வந்தேன்னா அடி வாங்கப் போறே!”

"ஆச்சி. இங்க பாரேன், பப்லூ வந்து உன் வயித்துல பொறந்திருந்தான்னா உனக்கு ரொம்ம்ம்ம்ப கோவம் வந்திருக்கும் இல்ல....
"

?!!!!!


***************************

நாங்கள் சொன்ன பப்லூ கதை போய், பப்புவே பப்லூ கதைகளை விட ஆரம்பித்து விட்டாள். சாம்பிளுக்கு ஒன்று....

”பப்லூ வந்து என்னா பண்ணான்? மரத்துல ஒரு ரெக்கை செஞ்சான், எல்லாரையும் கூப்பிட்டு நான் பறக்கப் போறேன், பாருங்க, பாருங்கன்னு சொன்னான். எல்லாரும் வந்ததும் மாடி மேல நின்னுக்கிட்டு குதிச்சான் பாரு.....பறக்க முடியாம கீழே தொப்னு விழுந்துட்டான்!

’ஹவ் டு ட்ரெயின் யுவர் டிராகனை’ பார்த்துட்டு, பயபுள்ள இப்டி புருடா விடுதேன்னு நான் கண்டுபுடிச்சுட்டேன்...ஆயாஸ்தான் பாவம்..ஹிஹி!!
சூப்பர் மார்க்கெட்டில்:

"பப்பு, நீ என்ன எடுத்திருக்கேன்னு என்கிட்டே காட்டிட்டு பாஸ்கெட்ல போடு, சரியா? பப்பு, உன்கிட்டேதானே சொல்றேன், நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க?"


வாயில் விரலை வைத்து ”டோண்ட் கால் மீ பப்பு, கால் மீ குறிஞ்சி மலர்”

”ஓகே, குறிஞ்சி மலர். ”

.
.
.
.

”ஏன் பப்புன்னு கூப்பிடவேணாம்? நல்லாதானே இருக்கு, பப்பு. அழகா இருக்கே!”

”உன்னை பப்புன்னு கூப்பிட்டா எப்டி இருக்கும்? "

............

நல்லாருக்கா? நீ எவ்ளோ பெரிய பொண்ணா இருக்கே? இனிமே, வெளிலேல்லாம் என்னை குறிஞ்சி மலர் கூப்பிடு. வீட்டுல மட்டும்தான் பப்பு. ஓகே?”


?!!!!!!

***************************

டிரெயிலர் போதும், மெயின் பிக்சருக்கு வரேன்.....

ஆறு வருடங்களுக்கு முன்பு, பப்பு எட்டரை மாதங்கள் உனக்காக காத்திருந்தேன் - ரொம்ப படபடப்புடனும், ஆசையுடனும், தவிப்புடனும்!! எப்படி வளர்ப்பது, என்ன செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமிடல்களும் இல்லாமல்....குழந்தை பிறந்தா அது பாட்டுக்கு தானா வளர்ந்து காலேஜூக்கு போயிடும் என்ற ரொம்ப அசால்ட்டாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், ஒன்றாவது வகுப்பில் செல்வதற்குள்ளாக, என்னை இப்படி (உன் வார்த்தைகளில் சொல்வதானால்) “க்ரேசி”யாக்கிவிடுவாய் என்று நினைக்கவில்லை. ஆயாவும் பெரிம்மாவும் சொன்ன அதே அலுப்பூட்டும் வார்த்தைகளை, அதே டோனில் சொல்ல வைப்பாய் என்று எதிர்பார்த்திருக்கவில்லை ‍ அதுவும், இவ்வளவு சீக்கிரமே, சொல்லவேண்டியிருக்கும் என்றும்! எப்படியிருந்தாலும் பப்பு அலுப்பான அலுவலக வேலையிலிருந்து, வீடு திரும்ப, ’நீ எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருப்ப’ என்ற நினைப்பே வாழ்வை சுவாரசியமாக்குகிறது, மலர்ச்சியைத் தருகிறது.

பப்புக்குட்டி....உனது சிரிப்புக்கும், ஓயாத பேச்சுக்கும், கோபத்துக்கும், குறும்புக்கும்,நை நைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி....


.....ஆலவ்யூ!!

8 comments:

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குறிஞ்சி மலர்:)!

அமைதிச்சாரல் said...

//உனக்கும் எனக்கும் ஒரே டி என் ஏதானே, ஏன் உன் டிஎன்ஏ-ல கோவம் அதிகமா இருக்கு? "//

பப்பு அப்பா மாதிரி சாதுவோ ;-)

//இனிமே, வெளிலேல்லாம் என்னை குறிஞ்சி மலர் கூப்பிடு. வீட்டுல மட்டும்தான் பப்பு.//

எங்கூட்ல ஒருத்தர் இத்தனை வயசுக்கப்றம் 'பேரை மாத்திக்க என்ன ப்ரொசீஜர்'ன்னு கேட்டுக்கிட்டுருக்கார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

அமைதிச்சாரல் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் மலர் :-))

Agila said...

பிறந்த நாள் வாழ்த்துகள் குறிஞ்சி மலர்!!
//பப்பு அலுப்பான அலுவலக வேலையிலிருந்து, வீடு திரும்ப, ’நீ எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருப்ப’ என்ற நினைப்பே வாழ்வை சுவாரசியமாக்குகிறது, மலர்ச்சியைத் தருகிறது //

Exactly making the our days wonderful just being them

நட்புடன் ஜமால் said...

மீ தி க்ரோயிங் மம்மி

we too love you pappu ...

அன்புடன் அருணா said...

பப்பு கலக்குறாங்க!

கலாமகள் said...

happy birthday pappu

வல்லிசிம்ஹன் said...

எத்தனை அருமை இந்தப் பெண். முல்லை உங்களுக்குத் தான் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லணும்.
நீங்கள் மீண்டும் பிறந்தநாள் உங்கள் மலர் மலர்ந்த நாள். பப்பு செல்லம் நல்ல மலர்டா நீ.