Showing posts with label o. Show all posts
Showing posts with label o. Show all posts

Saturday, January 09, 2010

ஓ போடு!




இது ஆக்டோபஸ்-னு சொன்னா நீங்க நம்பிதான் ஆகணும். வழக்கம்போல அவுட்லைன் வரைஞ்சது நாந்தான். கட் பண்ணது, ஒட்டினது எல்லாம் பப்பு. கடந்த Letter of the week இடுகையிலே ஆக்டோபஸ் பற்றின விவரங்களைச் கொடுத்ததுக்கு நன்றி.



இது, ஆனியன் பிரிண்ட்ஸ். சிவப்பு, மஞ்சள், வெள்ளை எல்லாவற்றையும் கலந்து இந்த நிறத்தை கொண்டு வந்தாள். வெங்காய பிரிண்ட் தவிர தெரியும் திட்டுகள் பப்புவின் தம்(thump) பிரிண்ட்ஸ்.



இதுவும் 'O'- க்காக செய்ததுதான். காகித தம்ளர்களின் அடிப்பாகத்தை வண்ணத்தில் தோய்த்து செய்தது. வண்ணங்கள் காயுமுன்னரே பின் செய்ததால் 'ஓ' கொஞ்சம் நீண்டுவிட்டது.


லாஜிக்

பப்பு, வரைந்ததை என்னிடம் காண்பிக்க வந்தபோது பெரிம்மா,

”அம்மாவை டிஸ்டர்ப் பண்ணாதே பப்பு, தூங்கட்டும், நீ ஆயாக்கிட்டே காட்டு.”

”நான் உங்கம்மாகிட்டே காட்ட மாட்டேன். எங்கம்மாக்கிட்டேதான் காட்டுவேன்!”

!!!

(இப்படி உங்கம்மா,எங்கம்மா என்று வீட்டில் யாரும் பேசிக்கொண்டதில்லை.)

Tuesday, January 05, 2010

Owl and Octopus


(thanks : google)
owl - எப்படி வரைய முடியுமென்று பப்புவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. கணினியில் சேமித்து வைத்திருந்த படத்தை காட்டியதும் அவளுக்கு ஐடியா கிடைத்தது. முக்கோணத்தையும், கண்களையும் அவளது ஷேப்ஸ் பஸிலால் ட்ரேஸ் செய்து வெட்டினாள். வட்டத்தை வெட்டும்போதுதான் ஒரு இடத்தில் பிசகி விட்டது. ஸ்கெட்சால் o-வை வரைந்தது அடியேன். முக்கோண முகத்தையும் கண்களையும் ஒட்டினாள். கால்கள் வரைந்து கொடுத்ததும் வெட்டி ஒட்டினாள். இன்னும் கொஞ்சம் தோசை மீதி இருந்தது. அது முடியும் வரை என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தபோது பப்புவே சிறிய/பெரிய வட்டங்களை வரைந்து வண்ணமடித்தாள்.

பின்னர், ஆக்டோபஸ் பற்றி படித்தோம். அதன் கால்களை எண்ணினாள். இப்போது நேரடியாக ஆக்டோபஸை பார்க்க வேண்டும், பப்புவிற்கு. சென்னையில் எங்கு பார்க்கலாம்? தெரிந்தால் சொல்லுங்களேன்!