இது ஆக்டோபஸ்-னு சொன்னா நீங்க நம்பிதான் ஆகணும். வழக்கம்போல அவுட்லைன் வரைஞ்சது நாந்தான். கட் பண்ணது, ஒட்டினது எல்லாம் பப்பு. கடந்த Letter of the week இடுகையிலே ஆக்டோபஸ் பற்றின விவரங்களைச் கொடுத்ததுக்கு நன்றி.
இது, ஆனியன் பிரிண்ட்ஸ். சிவப்பு, மஞ்சள், வெள்ளை எல்லாவற்றையும் கலந்து இந்த நிறத்தை கொண்டு வந்தாள். வெங்காய பிரிண்ட் தவிர தெரியும் திட்டுகள் பப்புவின் தம்(thump) பிரிண்ட்ஸ்.
இதுவும் 'O'- க்காக செய்ததுதான். காகித தம்ளர்களின் அடிப்பாகத்தை வண்ணத்தில் தோய்த்து செய்தது. வண்ணங்கள் காயுமுன்னரே பின் செய்ததால் 'ஓ' கொஞ்சம் நீண்டுவிட்டது.
லாஜிக்
பப்பு, வரைந்ததை என்னிடம் காண்பிக்க வந்தபோது பெரிம்மா,
”அம்மாவை டிஸ்டர்ப் பண்ணாதே பப்பு, தூங்கட்டும், நீ ஆயாக்கிட்டே காட்டு.”
”நான் உங்கம்மாகிட்டே காட்ட மாட்டேன். எங்கம்மாக்கிட்டேதான் காட்டுவேன்!”
!!!
(இப்படி உங்கம்மா,எங்கம்மா என்று வீட்டில் யாரும் பேசிக்கொண்டதில்லை.)
16 comments:
// 'ஓ' கொஞ்சம் நீண்டுவிட்டது.//
நீண்டு போகலை
"O" எல்லாம் “Q” ஆகிடுச்சு
கடைசி பன்ச்....ஸ்ஸ்ஸ்ஸ்சூப்பர்
:) ஓஓஓ
ஒரு ஓ நீண்டது எனக்கு அழகான ஒரு பூதக்கண்ணாடி வரைஞ்ச மாதிரி தெரியுது.. .
ஓ! போட்டாச்சி
ஆஹா! லாஜிக் ...
:-))
பப்பு வரைந்தது ஓ...பேசுவது ஓஹோ!
ஓஹோ!
ஓ(ட்டு) போட்டாச்சு:)
ஆஹாஹா!
ஓஹோஹோ!
ஓஓஓஓ
பப்புவை ஆண்பாவம் பாக்க விட்டீங்களா. உங்கம்மா எங்கம்மான்னு லாஜிக் எல்லாம் பேசறாங்க :)
ஆஹாஹா
ஓஹோஹோ
ஏஹேஹே
//நீங்க நம்பிதான் ஆகணும். //
நம்பிட்டோம் நம்பிட்டோம்...வேற வழி :))
பன்ஞ் - கலக்கல் :))
புது ஒலிம்பிக் சின்னம் ரெடி :)
உங்களுக்கும் பப்புவுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! புது வருடப் பிறப்பு அன்று உங்கள் ப்ளாக்கிற்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன். அதில் உள்ள இடுகையைப் படித்ததும் மனம் கனமாகி சென்றுவிட்டேன்.
முல்லை,
உனக்கும், கணவருக்கும், பப்புவுக்கும் குடும்பத்தாருக்கும்
புத்தாண்டு வாழ்த்துச்சொன்னேனா என்பது கூட நினைவில்லை.
ஆனால் இந்த நாட்களை இழந்துவிட்டேன் என்பது
தெளிவாக நினைவிருக்கிறது.
better late than never.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
"ஆக்டோபஸ்" கண்கவர் வர்ணங்களுடன்.
பப்புவின் கைவண்ணத்தில் எதுகீறினாலும் அழகுதான்.
/*நான் உங்கம்மாகிட்டே காட்ட மாட்டேன். எங்கம்மாக்கிட்டேதான் காட்டுவேன்!*/
:-)
//இப்படி உங்கம்மா,எங்கம்மா என்று வீட்டில் யாரும் பேசிக்கொண்டதில்லை//
அதனாலே தான் பப்புவுக்கு தெரியுது
Post a Comment