கடையிலிருந்து வெளியில்
வந்தோம். வழியில், ஆங்காங்கே சிலர் கும்பலாக நின்றுக்கொண்டிருந்தார்கள்.
சில இளைஞர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். வழி,
குறுகலாக இருந்ததால், நாங்கள் கடக்கும்போது அவர்கள் சிரித்தது மிக சத்தமாக
கேட்டது.
"ப்பா....ஏன் இவங்க இப்படி சிரிக்கிறாங்க!காதே வலிக்குது" என்றேன்.
"ஏன்னா, கேர்லும் கேர்லும் நடந்துபோனா அப்படிதான்" - பப்பு
என்ன்னாது?? இதெல்லாம், அதுக்குள்ளே உனக்கு தெரியுதா என்று மனதுள் நினைத்தபடி....ஆர்வக்குட்டியாகிவிட்டேன்.
"ஓ! அப்படி சிரிப்பாங்களா என்ன?" என்றேன்.
"இல்லல்ல...சும்மா சொன்னேன்." - பப்பு
"அப்போ பாயும் பாயும் போனா நீங்கள்ளாம் சிரிப்பீங்களா" - நாந்தான்.
"இல்ல...பாயும் கேர்லும் போனாதான் நாங்க சிரிப்போம்! தே போத் ஆர் இன் லவ்னு" - பப்பு
அவ்வ்வ்வ்! அராஜகமா இல்ல இருக்கு இது!
"அப்போ கேர்லும் கேர்லும் போனா?" - மீ தி அப்பாவி
"அவங்க ஃப்ரெண்னட்ஸ்" - பப்பு
"பாயும் பாயும் போனா?" - நாந்தான்.
"அவங்க எனிமீஸ்" - பப்பு
"அப்புறம்,
பாயும் கேர்லும் இப்படி பார்த்துகிட்டா சிரிப்போம் ஆச்சி... க்ளாஸ்லே,
இங்கே பாரு, ஒரு பையன் மற்றும் இன்னொரு பெண்ணின் பேரை சொல்லி, அவங்க
அப்படி பார்த்துக்கிட்டாங்க. அப்போ, நாங்க சிரிப்போம். அப்புறம், வெட்னஸ்டே
வெட்டிங்டேன்னு சொல்லுவோம்" - பப்பு
அவ்வ்வ்வ்வ்வ்!எகொச!!
" வேற யார் யாரை அப்படி சொல்லி சிரிப்பீங்க?" - நேரடியா கேக்கமுடியாத சோகம் எனக்கு!
இன்னொரு பையன் மற்றும் பெண் பெயரை சொல்லி, எப்படி பார்த்துக்கொள்வது என்றும் டெமோ.
"அப்புறம், உனக்கு? நீ யாரை அப்படி பார்த்து சிரிப்பே?" - மீ
"நான்
(இன்னொரு பையன் பெயரை சொல்லி) அவனும் அப்படி பார்த்துக்கிட்டோம். அவன்
இல்ல ஆச்சி, இப்படி பார்த்தான் (கொஞ்சம் ஸ்டைலாக கழுத்தை எல்லாம் திருப்பி
காட்டி) அப்போ, எல்லாம் சிரிச்சாங்க. வெட்ன்ஸ் டே வெட்டிங் டே!" - பப்பு
எனக்கு எப்படி இருந்திருக்கும்!! :-)))
ஆச்சரியமாகவும், ரொம்ப சிரிப்பாக இருந்தது. நான் சிரிப்பதை பார்த்து, அவளே தொடர்ந்தாள்.
"
இங்க பாரு ஆச்சி, ஸ்னாக்ஸ் ஷேர் பண்ணுவோம் இல்ல..அப்புறம், ஏதாவது
திங்க்ஸ் தொலைச்சுட்டா குடுக்கும்போது பார்த்து சிரிப்பாங்க இல்ல...அப்போ,
எல்லாரும் சிரிப்போம்!"
டெரரா இல்ல இருக்கு!!
Showing posts with label ஒளிமயமான.... Show all posts

Saturday, March 29, 2014
புரந்தர் கோட்டை முகவரி தெரியுமா உங்களுக்கு?
காலையில தட்டுல இட்லியை வைச்சுட்டு, 'நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள சாப்பிட்டுட்டு ரெடியா இருக்கணும்"னு சொல்லிட்டு போறேன்.
"சிவாஜீஈஈஈ...வீ ஹாவ் கேப்சர்ட் யுவர் புரந்தர் ஃபோர்ட்"
"ஏய்...இப்ப நிறுத்த போறியா இல்லையா? என்ன சொன்னேன் உன்கிட்டே?"
"யெஸ், ஐ நோ! ஐ ஹாவ் டூ திங்க் அபவுட் இட்.சம்பாஜிஈஈஈ..."
"நிறுத்து...அஞ்சு நிமிசத்துல வருவேன்...தட்டு காலியா இருக்கணும்"
......
#ஸ்ப்ப்ப்பா
இது முடிஞ்சுதுன்னு ஸ்கூலுக்கு போய்க்கிட்டு இருக்கோம்.
"ஆச்சி, சிவாஜியும், அக்பரும் ஒரே காலத்துல இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?யாரு வின் பண்ணியிருப்பா?" - பப்பு
"...சிவாஜிதான்!"
"எப்படி சொல்றே?" - பப்பு
"சும்மாதான்...சிவாஜி clever இல்ல.அதான் அப்டி தோணுச்சு"
"ஹிஹிஹி...இல்ல,ஆச்சி..ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகியிருப்பாங்க." - பப்பு
'அட.... இது எனக்கு தெரியாம போச்சே லுக் '
"சிவாஜி மவுடெய்ன் ராட்- னாலும், அக்பர்தான் வின் பண்ணியிருப்பார். அக்பர், வெறும் கையாலயே வாளை எல்லாம் உடைச்சிடுவார். ஔரங்கசீப்பை புடிக்கவே புடிக்காது. உனக்கு?" - பப்பு
#இதுவேறையா...ஸ்ப்பாஆஆஆஆ
ஆமா, புரந்தர் ஃபோர்ட் எங்க இருக்கு?
போகணுமாம்!!

'சம்பவக்கதை'
'அதை செய்யாதே, இதை செய்யாதே. செய்யக்கூடாது" என்றெல்லாம் சொன்னால் நானே
கேட்டதில்லை. இதில், பப்பு மட்டும் எப்படி கேட்பாள். அப்படியே சொன்னாலும்,
பூமராங்காய் திரும்பி வரும் 1008 கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை
யார் சுமப்பது! அந்த மாதிரி சமயங்களில், அவளிடம் சிலபல "பகீர் கதைகளை"
எடுத்து விடுவதுண்டு.
பபுள்கம் சாப்பிட்டு, பெரிய முட்டை விட்டு, அது தொண்டையில் மாட்டிக்கொண்ட சிறுமியின் கதை, பெரியவங்க இல்லாதப்போ கிச்சனில் நுழைந்து குறும்பு செய்த சிறுவனை போலீஸ் பிடித்த கதை, ஊற வைத்த அரிசி சாப்பிடும் பழக்கம் கொண்ட ஒரு பெண்ணுக்கு வயிற்றில் ஆபரேஷன் செய்த கதை, சாப்பிடும்போது பேசிக்கொண்டே இருந்த சிறுமிக்கு காற்று போகும் பாதையில்உணவு மாட்டிக்கொண்ட கதை என்று திகில் கதைகள் பல ரூபத்தில் வரும். எனக்குத்தான் கதைகளே தவிர, பப்புவை பொறுத்த வரை, இவையெல்லாம் எப்போதோ யாருக்கோ நடந்த சம்பவங்கள்!!
இப்படி போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில், என்னையே திடுக்கிட வைத்தது ஒரு 'சம்பவக்கதை'.
வாஷ்பேசினில், முகம் கழுவிக்கொண்டிருந்த பப்புவிடம், 'வாஷ்பேசின் பக்கத்துலே, எப்பவுமே ஃபேஷ் வாஷ் இருக்கும்னு நினைச்சுக்க கூடாது பப்பு, அது ஹேண்ட் வாஷா கூட இருக்கும். நம்ம வீட்டுலன்னு இல்ல, எங்க போனாலும், நீ இத நோட் பண்ணனும்' என்று சொல்லி வைத்தேன். முகம் கழுவிக்கொண்டு, தலை பின்னிக்கொள்ள வந்த பப்பு லைட்டாக ஆரம்பித்தாள்.
"ஆமா, ஆச்சி, ஒரு பொண்ணு வாஷ்பேனில் முகம் கழுவ போச்சு. அங்க இருந்த பாட்டிலை, எடுத்து பார்க்காம, முகத்துல போட்டு முகம் கழுவுச்சு. தேச்சப்பறம்தான் அதுக்கு தெரியுது, அது சோப் இல்லன்னு...அது என்னது? அவங்க அம்மா சர்ஃப் எக்சலை வைச்சிருக்காங்க..அதை எடுத்து போட்டுக்கிச்சு. அதுக்கு எப்படி இருக்கும்? ஒரே அழுகை!வேணுமா? (தேவையா? என்பதன் பொருள்)"
அவ்வ்வ்வ்வ்!!
இந்த பொண்ணு நெஜமாத்தான் சொல்லுதா இல்ல என்னை கிண்டல் பண்ணுதா?
#இனிமே_ஏதாவது_சம்பவத்தை_சொல்லுவியா?_சொல்லுவியா? ;-)
காலையில் அரக்க பரக்க எழுப்பினாலும், ஆற அமர, ஏழு மணிக்கு குறைந்து எழவே மாட்டாள். அப்படியே எழுந்தாலும், அரைக்கண்ணை மட்டும் திறந்து, 'நைட்லாம் நான் தூங்கவே இல்லப்பா. இப்போதான் தூங்கவே ஆரமிச்சேன்' என்று யோசிக்காமல் சொல்லுவாள்.
பல் துலக்க நிற்கும்போதுதான், 'ஆச்சி எனக்கு ஒரு பயங்கரமான கனவு. என்னா தெரியுமா' என்று ஆரம்பிக்கும்போதே, எனக்கு பிபி ஏறும். ஈவு இரக்கம் பார்க்காமல், 'கட் கட்' சொன்னால்தான், நேரத்துக்கு கிளம்ப முடியும். ('இதெல்லாம் வழியில சொல்லு. இப்போ என்ன பண்ணனுமோ அதை பண்ணு')
இன்றும், அப்படியான ஒரு நாள்.
'ஒரு பயங்கரமான கனவுப்பா' என்று ஆரம்பித்தாள். நேற்று இரவு, நாய்கள் குரைத்த சத்தத்தில் நடு இரவில் விழித்துக்கொண்டவள் கொஞ்ச நேரம் தூங்கவில்லை. 'தட்டி குடு,ஆச்சி' என்று சொன்னபடி புரண்டு கொண்டிருந்தாள். (நாமே தட்டி கொடுத்தால், 'என்னை என்ன, பேபின்னு நினைச்சியா' என்று சண்டைக்கு வருவாள்!!ஸ்ப்ப்பா!)
தூக்க கலக்கத்தில், வழக்கம்போல, 'தவுஸன்ட் ஆடுங்க வேலியை தாண்டி குதிக்குமே, அந்த ஆடுங்களை ஒன்னொன்னா கவுண்ட் பண்ணு' என்று சொல்லிவிட்டு திரும்பி தூங்கிவிட்டேன்.
பேய் கனவைத்தான், அவ்வப்போது, பயங்கரமான கனவு என்பாள்.சரி, நாய்கள் குரைத்ததால் விழிக்கவில்லை போல, பேய் கனவால்தான் பயந்து விழித்திருக்கிறாள்... கேட்போம் என்று லேசாக அசந்துவிட்டேன்.
"கொடி ஏத்தணும். ஓகே! அது ரொம்ப ஹைட். அது வரைக்கும் ஏத்தணும். அதை நான் தான் ஏத்தணும்னு பிரபா ஆண்ட்டி சொல்லிட்டாங்க. மாஸ்டருக்கு கூட எப்படி ஏத்தணும்னு தெரியல. நாங்க ஏத்த ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும் போது ஒரு பேய் வந்துடுச்சு." - பப்பு
.....
(இப்படி கேப் விட்டிருக்கும்போதே சுதாரிச்சு இருக்கணும்!)
"ம்ம்ம்" - மீ
"வந்து, என்னை எழுப்பி விட்டுடுச்சு அந்த பேய்." - பப்பு
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
#நானாதான்_வாலண்டியரா_வந்து_ஏமாந்துட்டேனா?!

Subscribe to:
Posts (Atom)