கடையிலிருந்து வெளியில்
வந்தோம். வழியில், ஆங்காங்கே சிலர் கும்பலாக நின்றுக்கொண்டிருந்தார்கள்.
சில இளைஞர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். வழி,
குறுகலாக இருந்ததால், நாங்கள் கடக்கும்போது அவர்கள் சிரித்தது மிக சத்தமாக
கேட்டது.
"ப்பா....ஏன் இவங்க இப்படி சிரிக்கிறாங்க!காதே வலிக்குது" என்றேன்.
"ஏன்னா, கேர்லும் கேர்லும் நடந்துபோனா அப்படிதான்" - பப்பு
என்ன்னாது?? இதெல்லாம், அதுக்குள்ளே உனக்கு தெரியுதா என்று மனதுள் நினைத்தபடி....ஆர்வக்குட்டியாகிவிட்டேன்.
"ஓ! அப்படி சிரிப்பாங்களா என்ன?" என்றேன்.
"இல்லல்ல...சும்மா சொன்னேன்." - பப்பு
"அப்போ பாயும் பாயும் போனா நீங்கள்ளாம் சிரிப்பீங்களா" - நாந்தான்.
"இல்ல...பாயும் கேர்லும் போனாதான் நாங்க சிரிப்போம்! தே போத் ஆர் இன் லவ்னு" - பப்பு
அவ்வ்வ்வ்! அராஜகமா இல்ல இருக்கு இது!
"அப்போ கேர்லும் கேர்லும் போனா?" - மீ தி அப்பாவி
"அவங்க ஃப்ரெண்னட்ஸ்" - பப்பு
"பாயும் பாயும் போனா?" - நாந்தான்.
"அவங்க எனிமீஸ்" - பப்பு
"அப்புறம்,
பாயும் கேர்லும் இப்படி பார்த்துகிட்டா சிரிப்போம் ஆச்சி... க்ளாஸ்லே,
இங்கே பாரு, ஒரு பையன் மற்றும் இன்னொரு பெண்ணின் பேரை சொல்லி, அவங்க
அப்படி பார்த்துக்கிட்டாங்க. அப்போ, நாங்க சிரிப்போம். அப்புறம், வெட்னஸ்டே
வெட்டிங்டேன்னு சொல்லுவோம்" - பப்பு
அவ்வ்வ்வ்வ்வ்!எகொச!!
" வேற யார் யாரை அப்படி சொல்லி சிரிப்பீங்க?" - நேரடியா கேக்கமுடியாத சோகம் எனக்கு!
இன்னொரு பையன் மற்றும் பெண் பெயரை சொல்லி, எப்படி பார்த்துக்கொள்வது என்றும் டெமோ.
"அப்புறம், உனக்கு? நீ யாரை அப்படி பார்த்து சிரிப்பே?" - மீ
"நான்
(இன்னொரு பையன் பெயரை சொல்லி) அவனும் அப்படி பார்த்துக்கிட்டோம். அவன்
இல்ல ஆச்சி, இப்படி பார்த்தான் (கொஞ்சம் ஸ்டைலாக கழுத்தை எல்லாம் திருப்பி
காட்டி) அப்போ, எல்லாம் சிரிச்சாங்க. வெட்ன்ஸ் டே வெட்டிங் டே!" - பப்பு
எனக்கு எப்படி இருந்திருக்கும்!! :-)))
ஆச்சரியமாகவும், ரொம்ப சிரிப்பாக இருந்தது. நான் சிரிப்பதை பார்த்து, அவளே தொடர்ந்தாள்.
"
இங்க பாரு ஆச்சி, ஸ்னாக்ஸ் ஷேர் பண்ணுவோம் இல்ல..அப்புறம், ஏதாவது
திங்க்ஸ் தொலைச்சுட்டா குடுக்கும்போது பார்த்து சிரிப்பாங்க இல்ல...அப்போ,
எல்லாரும் சிரிப்போம்!"
டெரரா இல்ல இருக்கு!!
No comments:
Post a Comment