பப்பு, எப்போது தத்துவங்களையும்,
பொன்மொழிகளையும் வீசுவாள் என்று கணிக்கவே முடியாது. 'கடையில பொருள்
வாங்கிவிட்டு எப்போவும் பில் வாங்கணும்' என்று சொல்லியிருப்பேன்.
என்றைக்காவது காசை கொடுத்துவிட்டு பேச்சு சுவாரசியத்தில் திரும்புகையில்
"இந்தாங்க பில்" என்பார் கடைக்காரர். அதை சுட்டி காண்பித்த, அடுத்த
நொடிகளில் ஒரு பொன்மொழி தயாராக இருக்கும். 'நாம செஞ்சுட்டுதான்
அடுத்தவவங்களுக்கு சொல்லணும்" என்பதாக!
"மேக் ஹே வென் த சன் ஷைன்ஸ் என்றால், நிறைய பேர், 'சன் வந்ததும் "ஹேய்"ன்னு கத்துறதுன்னு' நினைச்சுக்கிறாங்க. ஆனா அது இல்ல. சன் வரும்போது, நாம பயிரிட்டு ஹே செய்யணும்" என்றெல்லாம் பொன்மொழிகளும் விளக்கங்களும் வந்து விழுந்துக்கொண்டே இருக்கும்.
எனக்கோ, இந்த பொன்மொழிகள் எல்லாம் எதிர்பாராத நேரங்களில் வீசப்படும் பந்து போல...சிலது நேராக நம் கைக்கு வந்துவிடும். பலது, மூக்கை பதம் பார்த்துவிட்டு போகும். இன்று அப்படியான ஒரு நாள். ஒன்றை சரியாக கேட்ச் பிடித்தாலும், இன்னொன்றுக்கு எனது மூக்கை கொடுத்தேன்.
பள்ளிக்கூடத்துக்கு கிளம்பியாகிவிட்டது. ஆனாலும், ஊரிலிருந்து வந்திருந்த மாமாவுடன் ஒரே கதை. பப்புவின் பள்ளியில் டீச்சர்களை "ஆன்ட்டி" என்று அழைக்கும் முறை பற்றி மாமாவும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். கதவை திறந்து வெளியே வருவதும்ம, பின்னர் திரும்பி உள்ளே சென்று மாமாவை கிண்டல் செய்வதுமாக இரண்டுமூன்று முறை நடந்துவிட்டது. இந்தமுறை, வெளியே வந்தவள், என்னை நிமிர்ந்து பார்த்து, சொன்னாள்.
"Parents are the first teachers; teachers are the second parents."
"நீ வந்தா வா , இல்லேன்னா போ, நான் ஸ்கூலுக்கு போறேன்"(!) என்று வண்டியை துடைக்கலானேன். பேசி முடித்து, வண்டியில் வந்து ஏறிக்கொண்டவள், கேட்டாள்,
"ஆச்சி, படிப்பு முக்கியமா, உயிர் முக்கியமா?"
நேரமாகிவிட்ட அவசரத்தில், எதை தேர்ந்தெடுத்து சொல்வது என்று தெரியாமல், பொதுவாக "ரெண்டுமே தான்" என்று சொல்லிவிட்டு, "நம்ம கண்ணு மாதிரி" என்றேன். நல்லவேளையாக தப்பித்தேன் என்று என்னை நானே மனதுள் மெச்சிக்கொள்ளவும் செய்தேன். ஆனால், இதற்குமுன் இப்படி ஒரு பொன்மொழியை கேள்விபட்டதும் இல்லை!
"கரெக்ட்" என்று பாராட்டும் கிடைத்தது. அடுத்ததாக, "எப்படிப்பா உனக்கு தெரியும்?", என்று ஒரு கேள்வியை வீசினாள், ஏதோ பொன்மொழிகளுக்கெல்லாம் தானே காப்புரிமை வைத்திருப்பதுபோல்.
"அதுக்குதான் எதையும் சொல்றதுக்கு முன்னாடி யோசிக்கணும்", என்று நானும் எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். ;)
இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை...
"உயிர் இருந்தாதானே படிக்க முடியும்? இல்லேன்னா எப்படி படிக்க முடியும்? ஆனா, படிச்சாதானே வாழ முடியும்? இல்லேன்னா எப்படி வாழ முடியும்?" என்று விளக்கம் கொடுத்தவள், சற்று நேர அமைதிக்குப்பின்,
"நாலெட்ஜ் முக்கியமா? உயிர் முக்கியமா? என்று அடுத்த ஆயுதத்தை வீசினாள். திரும்பவுமா....இந்தமுறை நீயே ஜெயிச்சுக்கோ என்பது போல, "தெரியலையே" என்றேன்.
கையில் காசு;வாயில் தோசை என்பதுபோல், கை மேல் விளக்கம்.... 'தெரியாது' என்றதும் உற்சாகக்குரலில் விளக்கம், "போத் ஆர் லைக் டூ ஐஸ். உயிரோட இருந்தாதானே நாலெட்ஜை ப்ராக்டிஸ் பண்ண முடியும். நாலெட்ஜ் இருந்தாதானே உயிரோட வாழ முடியும்"
:)

No comments:
Post a Comment