"ஆச்சி, நாம ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம். நாம ஃப்ரெண்ட்ஸ். எல்லா அம்மாவும், "அம்மா"னு கூப்பிடுன்னுதானே சொல்றாங்க....நீ? நீ என்னை ஃப்ரெண்ட் மாதிரிதானே வைச்சுக்கறே. you give me freedom right! "
அட! ஆமாம், அவளை ஒருநாளும் அம்மான்னு கூப்பிடுன்னு சொன்னதேயில்லை!! :-) :-)
அது இருக்கட்டும்! வாங்கியதும், "உனக்கு - எனக்கு" என்று அடித்து பிடித்து - எடுத்துக்கொள்வதுதானே நமது குடும்ப கலாச்சாரம்! அவளிடம், "நீயெல்லாம் ஒரு அம்மாவா?" என்று திட்டு வாங்கினால்தானே, எனக்கு நிம்மதியாக இருக்கும்! இன்னைக்கு என்ன ஒரே ஃபீலிங்ஸ்!! ;-)
அதைவிட, எல்லா பாக்கெட்டுகளையும் தீர்த்தபிறகு, சொன்னதுதான் ஹைலைட்!
"ஆச்சி, இனிமே இதெல்லாம் வாங்க வேண்டாம்ப்பா! வாங்கவே கூடாது!!புரிஞ்சுதா!"
நூற்றாண்டுகள் என்பது பற்றி
பேசிக்கொண்டிருந்தோம். இப்போதுவரை, முழு ஆண்டையும் 'ஒன் தவுசண்ட் அன்ட் ..'
அல்லது 'டூ தவுசண்ட் அன்ட் ...' என்று சொல்லிதான் பழக்கம். பல்லவர்களைப்
பற்றி வேறு சமீபத்தில் பேச்சு வந்திருந்தது. அவர்கள் 8ஆம் நூற்றாண்டு
என்றதும்,
"ஆச்சி, எனக்கு ரொம்ப புடிச்ச கிங்க்ஸ் அக்பரும், சிவாஜியும்தான். ஏன் ஆச்சி, நாம இயர்சை அக்பர் இயர்ஸ், ஜோதா இயர்ஸ், சிவாஜி இயர்ஸ், நர்சிம்ம பல்லவா இயர்ஸ்ன்னு வைச்சிக்கலாம் இல்ல. அப்போ 1350ன்னு சொல்றதை விட நல்லா இருக்கும் இல்ல. இதை, அப்படி வைச்சிக்கலாம்னு யாரும் யோசிக்கலையா?" - பப்பு
"சொல்லுவாங்களே, 'அக்பர் காலத்துலே' இல்லேன்னா 'பாண்டியர்கள் காலத்துலே'ன்னு சொல்லுவாங்களே...அப்பன்னா என்ன அர்த்தம்...அவங்க இருந்த இயர்ஸ்ன்னுதானே அர்த்தம்."
"அது இல்ல ஆச்சி...இயர்சே இல்லாம, அப்படியே மாத்திட்டா நல்லா இருக்கும் இல்ல...ஈசியா" - பப்பு
#நாட்டாம_தீர்ப்பை_மாத்து

வேளச்சேரி ரயில் நிலையம். ஓடிப்போய் வரிசையில் இடம் பிடித்தவளால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒரு ஆன்ட்டி "ம்ம்...ஸ்மார்ட்டா நடந்துக்கறே" என்று சிரித்து, அவளையே முன்னால் நிற்க சொன்னார்.
சிரித்தபடி, பப்புவை பின்னுக்கு இழுத்து, 'நீங்க வாங்கிக்கோங்க' என்று அவரிடமும், "அவங்கதானே முன்னாடி வந்தாங்க' என்று பப்புவிடமும் சொல்லிவிட்டு, டிக்கெட் எடுத்து பெட்டியில் அமர்ந்தோம்.
எப்பவும்,வேகமா போய் இடம் பிடிக்க சொல்லும் ஆச்சி ஏன் இன்னைக்கு ரொம்ம்ம்ப நல்லவளாட்டாம் ஆக்ட் பண்ணுது (?!)என்று குழம்பிய பப்பு கேட்டாள்,
"யூ குட் யூஸ் தட் ஆர்ப்பசுனிட்டி, ரைட்?"
;-)))

No comments:
Post a Comment