நேற்று இரவு, படுக்கையில் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டிருந்தாள், பப்பு. அவளது
பள்ளியில் பழங்கள் தினம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை பழங்கள் கொண்டு வந்து
அவர்களே தோல்நீக்கி, வெட்டி, விதைகள் நீக்கி கலவை செய்யவேண்டும். நடந்த
கலாட்டாக்களை சொல்லிக்கொண்டிருந்தவள், அவளது வகுப்பு தோழர்களுக்கிடையிலான
பாலிடிக்சையும் சொல்ல ஆரம்பித்தாள். அது வழக்கமான ஒன்றுதான். கேட்டு கேட்டு
எனக்கே அத்துபடி. ஆனால்,யார் எப்போது கட்சி மாறுவார்கள் என்று அவர்களுக்கே
தெரியாததுதான் அதன் சுவாரசியம்.அப்படி, எல்லோரும் ஒரு குழுவாகி ஒரே பையனை
மட்டும் டார்கெட்டாக்கியதை சொல்லிக்கொண்டிருந்தாள். இதற்கெல்லாம்,
பப்புவும் விதிவிலக்கல்ல என்றாலும் மற்றவர்கள் தவறு செய்யும் போது நாம்
புனிதர்கள் ஆகி தத்துவங்கள் உதிர்ப்பதில் குறைந்தவர்களல்லவே! ;-) அப்படி,
பப்பு உதிர்த்த தத்துவம்
"we can even live without brother or sister. But, can we live without friends?""
:-)
என் கால்களை பிடித்து ஆடிக்கொண்டிருந்தபோது, பப்பு சிந்தித்தது
"ஆச்சி, நம்ம காலை முன்னாடி மடக்க முடியாது, கையை பின்னாடி மடக்கமுடியாது....இல்ல ஆச்சி? "
#வில்லேஜ்_விஞ்ஞானி ;-)
"ஆச்சி......நான் முஸ்லீம்ப்பா!"


3 comments:
வில்லேஜ்_விஞ்ஞானிக்கு வாழ்த்துகள் :-)
Hi Mullai,
Series of posts after lonnnggg time.. Keep the spirit up!
Cheers,
Kalaivani.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்
வலைச்சர தள இணைப்பு : அனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)
Post a Comment