வெளியில் கிளம்ப வேண்டும்.
நேரமாகியும், அதைப்பற்றிய அக்கறை கொஞ்சமும் இன்றி விளையாடிக்கொண்டும்,
பேசிக்கொண்டும் இருந்தாள். "முகம் கை கால் கழுவு" "பையை எடுத்து வை"
"பாட்டில்லே தண்ணி எடுத்து வை" ம்ஹூம்! காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.
அட்வைஸ் கலந்த திட்டுகளோடு சில பல மிரட்டல் கலந்த அடிகளோடு ஒருவழியாக
கிளம்பியாயிற்று.
எவ்வளவு நேரம்தான் உர்ரென்று இருப்பது. அவளுக்கு
பேச வேண்டும். ஏதோ சொன்னாள். எனக்கு சரியாக கேட்கவில்லை. "என்ன சொன்னே"
என்று திரும்ப கேட்டேன். "நீயே யோசிச்சு பாரு. நீ செஞ்சதுலே என்ன தப்பு
இருக்குன்னு" என்றாள். அவ்வ்வ்வ்...'எங்கேயோ கேட்ட குரல் மாதிரி என் டயலாக்
எனக்கேவான்னு' நினைத்தபடி "என்ன" என்றேன். அப்புறம்தான் புரிந்தது, அவள்
முதலில் முணுமுணுத்தது, "சாரி கேக்கணும்னு தெரியாதா" என்பது. 'சாரி' என்றேன்.
நொடிகளில் சகஜமாகி கதையளக்க ஆரம்பித்துவிட்டாள்.
வீட்டுக்கு
திரும்பி வரும்வழியில்தான் எனக்கு இந்த சந்தேகம் தலைதூக்கியது. பப்பு
என்னைப் பற்றி நினைக்கும்போது அவளது மனதில் உடனடியாக நினைவுக்கு வரும்
என்னைப்பற்றிய பிம்பது எது?கோபமான ஆச்சியா அல்லது ஃப்ரெண்ட்லியான ஆச்சியா?
அவளிடமே அதை கேட்க முடிவு செய்தேன்.
"என்னை பத்தி நினைச்சா உனக்கு என்ன தோணும்?"
...... பதிலில்லை.
"நீ என்னை பத்தி திங்க் பண்ணுவே இல்ல...அப்ப உனக்கு எப்படி ஞாபகத்துக்கு வருவேன்?"
"நீ கோவ
மூட்ல இருந்தா இது என்ன லூசு அம்மா? நினைச்சுப்பேன்.நீ ஜாலியா எனக்கு ஏதாவது இன்ட்ரஸ்டிங்கா
சொல்லிக்கொடுக்கும்போது, "நல்லவேளை.... இது எனக்கு அம்மாவா
வந்துச்சு...ப்பா..நான் இதுகூட வாழ்ந்துக்கறேன்ன்னு நினைப்பேன்."
:-)
No comments:
Post a Comment