Showing posts with label pappu's art. Show all posts
Showing posts with label pappu's art. Show all posts

Sunday, July 22, 2012

முகங்கள்...முகங்கள்...சுவர் முழுக்க முகங்கள்!!

 திடீரென்று வீட்டில் எங்கு திரும்பினாலும் முகங்கள். சுவரில்,பேப்பர்களில் என்று எங்கு பார்த்தாலும் முகங்கள்..முகங்கள்!! 

பப்புவுக்கு ஒன்று சரியாக வரும்வரை திரும்ப திரும்ப செய்துக்கொண்டிருப்பாள்.  புதிதாக வாங்கிய பொம்மையிலிருக்கும் ஸ்க்ருக்களை கழற்ற வேண்டுமோ, பேட்டரியிலிருக்கும் ஒயர்களை பார்க்க வேண்டுமோ அல்லது புக் மார்க்குகள் செய்ய வேண்டுமோ எதுவாயினும், அதில் வெற்றியடையும் வரை/அவளுக்கு திருப்தி ஏற்படும் வரை  திரும்ப திரும்பச் செய்துக்கொண்டிருப்பாள். 
பொதுவாக, வரையச் சொல்லித்தரும் புத்தகங்களை வாங்கியதில்லை. புத்தகத்தினால், அவளது, க்ரியேட்டிவிட்டி பாதிக்கக்கூடாது என்று.


இந்த நேரத்தில், Ed Emberley-யின்  புத்தகங்களைக் காண நேர்ந்தது.  அதில் ஒரு டைட்டில், முகங்கள் - ’Ed Emberley's Drawing Book of Faces’!  வித்தியாசமாக இருக்கவே, வாங்கினேன். 



அந்த நேரம் பப்புவுக்கு டெர்ம் விடுமுறை.    விடுமுறைக்கு ஆம்பூருக்குச் சென்றிருந்தோம். டீவி பார்க்க பழகி விடுவாளோ என்று பயமாயிருந்தது. (2.5  வருடங்களாக வீட்டில் டீவி இல்லை!)  நல்லவேளை, ed emberley-யின் புண்ணியத்தில், முகங்களை வரைந்து தள்ளிவிட்டாள்!! 




கடந்த டிசம்பரிலிருந்து இந்த போஸ்ட் டிராஃப்டிலிருக்கிறது. இன்று கொஞ்சம் வெட்டியாக இருந்ததால், தூசு தட்டி போஸ்ட் செய்திருக்கிறேன். :-)

Thursday, January 05, 2012

ஷூமேக்கர்

பனிச்சறுக்கு/ஐஸ் ஸ்கேட்டிங் ஷூக்களாம். சார்ட் பேப்பரில் செய்தது. அவளது கால் அளவுகளுக்கேற்ப வெட்டி, பின் அடித்து கொஞ்ச நேரம் அணிந்துக்கொண்டு திரிந்தாள்....






ஐடியா மற்றும் செய்முறை முழுவதுவும் பப்புவையே சாரும்!

Wednesday, July 06, 2011

mspaint saga - II

புள்ளி வைத்த கோலம்




கடல்,அலை, சூரியன் மேலே நட்சத்திரங்கள்


Thursday, September 16, 2010

சைபர் ஆர்ட்டும் ஒரு சில ஞானங்களும்

பப்புவிடம் கம்ப்யூட்டரை கொடுத்து நேரத்தைப் பெற்றுக்கொள்வேன். அப்படியே, பப்பு டீவி பார்ப்பதை தவிர்ப்பதற்காகவும். "நியூ போறதுக்கு முன்னாடி என்னை கூப்பிடு,சேவ் பண்றேன் பப்பு" என்று சொல்லியிருந்தாலும், ஆர்வத்தில் அவள் பெரும்பாலும் சொன்னதேயில்லை. அப்படியே சொன்னாலும் காண்பித்துவிட்டு புதிய ஃபைலை எடுத்துக்கொள்வாள். எப்போதாவது, நானாக பார்த்து சேமித்தவை இங்கே. பப்பு உதிர்த்த முத்துகள் சில‌

g3 ஆன்ட்டி இப்போ வைஃப் ஆயிடுவாங்களாப்பா? (g3 கல்யாணத்திற்குச் சென்று திரும்பும் வழியில்)


லவ் பண்றதுன்னா என்னா தெரியுமா ...ம்ம்ம்..கட்டி புடிச்சுக்கறது, கிஸ் பண்றது! (தேங்க்ஸ் டூ மூவி ட்ரெய்லர்ஸ், you ppl make my job easier.)

Aachi, I like youuuuuu...very bestly.

"நீ ஃபாஸ்ட்டா வொர்க் பண்ணனும்... "

"சரி, பப்பு."

"
உங்க ஆஃபிஸ்லே மத்தவங்கள்ளாம் எப்படி வொர்க் பண்றாங்க?"

" ....."

" ஃபாஸ்ட்டா வொர்க் பண்றாங்க இல்லே, நீயும் அதே மாதிரி ஃபாஸ்ட்டா வொர்க் பண்ணனும். ஓக்கே?"

என்னிக்காவதுதான்னாலும், இனிமே பப்புவை ஆஃபீஸ் கூப்பிட்டு போறதை தவிர்க்கணும்.... அப்ரைசல் டைம் வேற!அவ்வ்வ்வ்வ்வ!

Wednesday, September 08, 2010

மேஜிக் ஸ்டிக்

பப்புவுக்கு, அவளது வடலூர் ஆயா வாங்கி வந்த டிராயிங் நோட்டு புத்தகம் இது. மேஜிக் ஸ்டிக் என்று எழுதியிருந்தது. நோட்டு புத்தகத்தோடு வாட்டர் கலரும் இருந்தது. காகிதத்தில் கண்ணுக்குத் தெரியாத அவுட்லைன் வரையப்பட்டிருக்கும். தீட்டும்போது வண்ணங்கள் விரவி வடிவம் புலப்படும். இதுதான் மேஜிக் போல!

பப்புவும், வடலூர் ஆயாவோடு வரைந்தது கீழே.



ஆமை

ஸ்கெட்ச் கொண்டு வரைந்திருக்கிறாள்.

என்னன்னு தெரியலை.....பப்புவுக்கும்!

இதுவும் தான்..ஆனால் அந்த வண்ணத்தேர்வுகள் பிடித்திருந்தது. கலைக்கண் கொண்டு என்னதுன்னு சொல்லுங்க பார்ப்போம்!


Hungry caterpillar

யானைக்குட்டி.....இப்போ எல்லாமே குட்டிதான்..ஆச்சிக்குட்டி...ஆயாக்குட்டி..ன்னு கொஞ்சல்ஸ்...இதுவும் ஒரு phase போல! எங்கே போய் முடியுமோ!!

Thursday, September 02, 2010

அரைவட்டங்களை கண்டுபிடி - II

"அரைவட்டங்களை கண்டுபிடி" ஆக்டிவிட்டிக்காக வெட்டிய அரைவட்டங்களை ஏன் வீணாக்கணும்....ஹிஹி..வெட்டிய அரைவட்டங்களை ஒட்டி இன்னும் பல படங்களை வரைஞ்சதுதான் இந்த ஆக்டிவிட்டி. புத்தகத்திலே இருந்த படங்களை பார்த்து பப்பு வரைஞ்சதுதான்.


அரைவட்ட கூடையில் பழங்கள் - பக்கத்துலே பழம் விக்கிறவர்.



இது அண்ணா - தொப்பிதான் அரைவட்டம்.



கண்டுபிடிக்க முடியுதா? பாலத்துக்கு கீழே ஓடற தண்ணி. பல்சக்கர டிசைனிலே இருக்கே...அதுதான் அரைவட்டம்.


ம்ம்..யெஸ்..மூன்-தான்! பக்கத்துலே நட்சத்திரங்கள், மேகம்..




மலைகள் சூழ நடுவுலே வர்ற சூரியன். சிவப்பு வந்து சூரியனோட ஜொலிஜொலிப்பு!






சொல்லாமயே புரிஞ்சிருக்குமே...:-)) மழையும் பெய்யுது, வெயிலும் அடிக்குது.

இதுக்கப்புறம், சென்னையிலே மழை பெய்யறது நின்னுடுச்சு. சோ, நாங்க பார்க், ப்ரெண்ட் வீட்லே போய் விளையாடறதுன்னு அவுட் டோர் ஆக்டிவிட்டிலே பிசியாகிட்டோம்.

Sunday, August 29, 2010

அரை வட்டங்களை கண்டுபிடி

இந்த இரண்டு வார மழையால எந்த அவுட் டோர் ஆக்டிவிட்டியும் பண்ண முடியலை. பப்புவுக்கு மகா போர். இன்ட்டோர் ஆக்டிவிட்டி எதுவும் பப்புவுக்கு இப்போ இஷ்டம் இல்லை. நானும் தொல்லை பண்ணலை. ஆனா, நிறைய கதை புத்தகங்கள் படிச்சோம். படிச்சதையே திரும்ப படிச்சோம். திரும்ப திரும்ப படிச்சோம். அப்புறம் படிச்சதை ரோல் ப்ளே பண்ணறது பப்புவுக்கு இஷ்டம். சோ அதுதான் நடக்குது இப்போ!

நடுவுலே ஒரு சின்ன ஆக்டிவிட்டி பண்ணோம் ‍- பப்புவுக்கு அந்த ஐடியா பிடிச்சிருந்ததாலே! பொதுவாவே பப்புவுக்கு 'ஐ ஸ்பை' (I Spy) புத்தகங்கள் பிடிக்கும். "அரை வட்டங்களை கண்டுபிடி" ‍ன்னு ஒரு புத்தகம். நாம தினந்தோறும் பார்க்கிற காட்சிகளில் தெரியும் அரை வட்ட உருவங்களை கண்டுபிடிக்கிறதுதான். ரொம்ப எளிமையான புத்தகம்.




புத்தகம் முழுக்க இது மாதிரி படங்கள்தான். பப்புவுக்கு வடிவங்களை பத்தி கத்துக்கிறப்போ ரொம்ப யூஸ் ஆச்சு.




வெள்ளைத் தாளில் அரைவட்டம் வரைஞ்சுட்டு அந்த வடிவத்தை மட்டும் வெட்டி எடுத்துட்டு ஹாலோ பேப்பரை தருவேன். பப்புவுக்கு அரைவட்ட வடிவிலே என்ன தோணுதோ அதை பப்பு வரையணும்.


எடுத்துக்காட்டுக்கு, அரைவட்ட வடிவத்துக்கு கீழே கோடுகள் வரைஞ்சு இழுத்து காட்டினதும் 'நான் பண்றேன், நான் பண்றேன்"ன்னு ஆர்வக்குட்டியாகிட்டா!


இது வந்து தொட்டிலில் பாப்பா தூங்குது. ஒரு தூண் மட்டும் கொஞ்சம் தள்ளி இருக்கு. இது புக்லேயே இருந்த படம்தான்.

இது ஆந்தை. பப்பு ஒரு தப்பு பண்ணியிருக்கா. :‍) கண்டுபிடிங்க பார்ப்போம்!

படங்களை வரைஞ்சதும் ஓட்டையிலே நூலைக் கோர்த்து முடிச்சு போட்டு புத்தகமாக்கிட்டாங்க, மேடம்.

தீபம் எரியுது.


சுபம்!


( பெயிண்ட் பிரஷ்‍லே சரியா இருக்கு, ஆனா அப்லோட் செஞ்சதும் படங்கள் ஏன் ரொடேட் ஆகி தெரியுதுன்னு தெரியலை. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, ப்லீஸ்)

Friday, July 30, 2010

Bubble Art

கண்ணாடி போன்ற சோப்புக் குமிழ்களை விடுத்து வண்ண வண்ண சோப்புக்குமிழ்கள் செய்ய முடிந்தால் - பபிள் ஆர்ட் (ஐடியா ஃப்ரம் இணையம்)! கடையிலிருந்து வாங்கிய பபிள் கரைசலோடு சிறிது வாட்டர் கலர்களை கரைத்துக் வெவ்வேறு கிண்ணங்களில் கொடுத்தேன்.



பப்பு, குமிழ்களை காற்றில் விட அதை பேப்பரில் சேமித்தேன். இது நல்ல விளையாட்டாக இருந்தது - பப்புவுக்கு! அவள் காற்றில் பறக்க விட்டதும் ஓடிப் போய் நாந்தானே பிடிக்க வேண்டும்.



மீதி பேப்பர்களை கீழே வைத்து குமிழ்களை மெதுவாக பேப்பரை நோக்கி செலுத்தி வெடிக்க விட்டாள். நீலம், பச்சை மற்றும் மஞ்சள். வழக்கம்போல எல்லா வண்ணங்களையும் ஒன்றாகக் கலந்து கருப்பு வண்ணம் கொண்டு வந்து கருப்புக் குமிழ்களையும் உருவாக்கினாள்.



சிறிது நாட்களுக்கு முன்பு உடையாத சோப்புக் குமிழைப் பற்றி, காடு மலைகளை சுற்றி செல்லும் ஒரு சோப்புக்குமிழைப் பற்றி படித்த கதையைப் நினைவு கூர்ந்தோம்.

தொடர்ந்து, பள்ளிகூடக் கதைகளைச் சொல்லத் தொடங்கினாள்.


“நவ்ஜோத் இல்லப்பா, அவனுக்கு வலிக்கவே வலிக்காது. கிள்ளினா கூட வலிக்காது. அடிச்சாக் கூட வலிக்காது. சண்டைப் போட்டாக் கூட வலிக்காது” - பப்பு

” ஓ, ஏன்?”

”செமையா கிள்ளினாக் கூட அவனுக்கு வலிக்காது. செமையா அடிச்சா..செமையா சண்டையா போட்டாக் கூட வலிக்கவே வலிக்காது” - பப்பு

“ஆ!! எப்படி பப்பு?” - நிஜமாகவே ஆர்வமாக இருந்தது எனக்கு.

ஒரு நொடி - என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

“அவங்கம்மா அவனை அப்ப்ப்ப்ப்டி வளக்கறாங்க!”

ஹலோ நவ்ஜோத் அம்மா, அடுத்த பேரண்ட்ஸ் மீட்டிங்கில் தங்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். :-)

Wednesday, July 07, 2010

நாங்களும் மீன்களும்!


கடந்தவாரத்தில் சில புதிய கதைப்புத்தகங்களை வாசித்தோம். இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு வாசித்து காட்டினால் எளிதாக இருக்கும் என்று நினைத்து எடுத்து வைத்திருந்தேன். என் பர்த்டே வர்றதுக்கு இன்னும் எவ்ளோ டேஸ்ப்பா இருக்கு என்று பப்பு கேட்டதும் தான் உறைத்தது இன்னும் ஒரு சில மாதங்களில் பப்பு ஐந்து வயது சிறுமி என!

தான் வளர்க்கும் தங்க மீன்களுடன் தானும் ஒரு மீனாக மாறி ஒரு நாளை செலவழிக்கும் சிறுவனின் கதை. எளிய கதைதான். உடனே பப்புவுக்கு மீன் ஆக்டிவிட்டி செய்யும் ஆசை வந்துவிட்டது.





மேலிருப்பது பப்பு வரைந்தது. நெளிகோடுகளும் அதனை பின்னர் பிரஷ் கொண்டு தீற்றினாள். கீழிருப்பது நான் வரைந்தது. இந்த மீனைக் கண்டதும் அவள் வரைந்ததன் மேல் திருப்தியில்லாமல் இதில் வரைய விருப்பப்பட்டாள். ஆனால் இதில் வரையும்படி எதுவுமில்லாததால் கடைசியில் விரல்களில் வண்ணத்தை (thump print) ஒட்டி செதிள்களை தீற்றினாள்.




இரண்டு மீன்கள் வரைந்ததில் சரியாக வரவில்லை என்று நினைத்து வண்ணக்காகிதங்களை வெட்டித்தரச் சொன்னாள். நான் நன்றாக வரைவதாக அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட பப்பு என்னையே மீன் வரையச் சொன்னாள்.

பேஸ்டிங் மட்டும் பப்பு!

மீன்குழம்பும் வறுவலும் சாப்பிட்ட ஒரு சனிக்கிழமை மதியம் இப்படியாக கழிந்தது.

Monday, June 28, 2010

பப்பு டைம்ஸ்



ரொம்ப நாளைக்கு அப்புறம் ஆர்ட் ஆக்டிவிட்டீஸ் செஞ்சோம்.

எல்லாம் நம்ம 'ச்செம்மூ'வாலேதான் ('செம்மொழி'யைத்தான் சுருக்கிட்டேன்!). பப்புவுக்கு லீவ்...பெரிம்மாவுக்கு லீவ்...போன வாரம் எல்லாம் செம ஜாலி! சனிக்கிழமை பெரிம்மா கிளம்பிவிட பப்புவுக்கு போர்...திரும்ப என்கிட்டேதானே வரணும்! :-)





ஒரு Nature walk போனோம். இலைகளை,பூக்களை சேகரிச்சுக்கிட்டு வந்தோம். வழியிலே பார்த்த எறும்பு அரண்மனைகளுக்குள்ளே போகணும்னு பப்புவுக்கு ஒரே ஆசை. எறும்புகளுக்கு 'ராணி'தான் அம்மான்னு சொன்னதும், ‘அப்போ நீதான் நம்ம வீட்டுக்கு ராணி'ன்னு சொன்னா. அப்போவே எனக்கு தலையிலே கிரீடமும் கையிலே செங்கோலும் வந்துட்ட ஃப்லீங்.

'நீதான் இளவரசி'-ன்னு பதிலுக்கு சொன்னேன்..அவளுக்கு எந்த ஃப்லீங்கும் வந்த மாதிரி தெரியலை..பார்வையும் கவனமும் 'எங்கேடா அடுத்த அரண்மனை'ன்னே இருந்துச்சு.




வண்ணங்களை குழைத்தும், அவள் சொல்லும் இலைகளை எடுத்துக்கொடுத்தும், ஒட்டியபின் கொடுப்பவற்றை வாங்கிவைப்பதுமாக எடுபிடி வேலை ராணிக்கு. சேகரிச்சதை வண்ணத்தில் தோய்ச்சு பேப்பரில் பதிய வைத்தது இளவரசி!

பராக்..பராக்..பராக்!!

Friday, June 25, 2010

Return to innocence

ஸ்கூல் டைரியை பார்ப்பதற்கு பப்புவின் பையை திறந்தபோது ஒரு சில தாள்கள் மடித்து ஹேர்க்ளிப் போட்டு வைக்கப்பட்டிருந்தது. பப்பு தேஷ்னாவிற்கு வரைந்ததாம். அவளாகவே பிரித்துக் காட்டினாள்.



எறும்பு போய்க்கிட்டிருக்கு!

(சம்மர் ஹாலிடேஸ்லே பூதக்கண்ணாடி வைச்சு ஒண்ணு விடாம விடாம பார்த்த எஃபெக்ட்! இட்லியைக் கூட நாங்க பூதக்கண்ணாடிலே பார்த்துதான் சாப்பிட்டோம்னா பார்த்துக்கோங்களேன்.)





பூ இதெல்லாம். மேலே பட்டர்ஃபிளைஸ் பறக்குது! (இது பப்புவோட சின்னவயசு புத்தகத்தோட தாக்கம்னு நினைக்கறேன்!)



பபிள்ஸ்....



இது தேஷ்னாக்கு லெட்டர்.

(அடுத்தவங்க லெட்டர்லே என்ன எழுதியிருக்குன்னு பார்க்க கூடாதுல்லே..சோ என்னன்னு கேட்டுக்கலை!)




இது எனக்கும் பெரிம்மாவுக்குமாம். மேலே இருக்கிறது பெரிம்மாக்கு. வானத்திலிருந்து மழை பெய்யுது. பெரிய பெரிய ட்ராப்ஸ்.

கீழே இருக்கிறது - எனக்கு. ஆபிஸிலே கொண்டு போய் வைச்சிக்கணுமாம். யாராவது கேட்டா, நான் இல்லே பப்புதான் வரைஞ்சதுன்னு சொல்லணுமாம். ஆபிஸ்காரங்க வாவ்,சூப்பர்ன்னு சொல்லுவாங்களாம். ஏன்னா, சின்னபசங்க வரைஞ்சதுதான் சூப்பரா இருக்குமாம்! (ஆல் மை டைம்ஸ் யார்!)

அது என்னன்னு சொல்லலையே...அந்த கோல்டன் க்ளிட்டர் - வானம். அதுலேருந்து மான்களுக்கு ஃபுட் கொட்டுதாம்.

(இதை எழுதிக்கொண்டிருந்தபோது பின்னணியிலே
Enigma ஓடிக்கிட்டிருந்தது - டைட்டிலுக்குக் காரணம் ஓக்கேவா!)

நல்லாருக்கு இல்லே...raining food...யாரும் ஆஃபிஸுக்கு போகவே வேணாம்...;-)