Showing posts with label 90s இசை. Show all posts
Showing posts with label 90s இசை. Show all posts

Thursday, May 06, 2010

JoJo - Hello, How are you?



ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரே JoJo ஞாபகம். ஜோஜோ இந்த பாடல் மூலம்தான் எனக்கு அறிமுகம். இந்த வெர்ஷன் கொஞ்சம் ரீ-மிக்ஸ் மாதிரி இருக்கு..உண்மையான வெர்ஷன் வேற மாதிரி இருக்கும். ரொம்ப நாளா தேடறேன், கிடைக்கலை. (JoJo fans/Indy Pop fans ...இருந்தா எனக்கு அனுப்புங்க! )




இதுவும் ஜோஜோ-வின் பிரபலமான பாடல். ஏனோ, இவர் இந்தி பாப்-இன் பொற்காலத்துக்கு முன்னாடியே ஜொலிச்சுட்டு காணாம போய்ட்டார். இந்த ஆல்பத்திற்கு பிறகு, இவரைப் பற்றி அதிகமாக கேள்விப்படவில்லை. JoJo..Where are you? We want you on stage!

Monday, March 16, 2009

Euphoria - Dhoom pichak தூம்

euphoria. எனக்கு மிகவும் பிடித்த பத்துப் இந்தி பாப் பாடல்களை தெரிந்தெடுக்கச் சொன்னால், அதில் euphoria band-ன் பாடல்களுக்கு முக்கிய இடம் உண்டு. ராக்-கை இந்தி பாப் உலகிற்கு அறிமுகப் படுத்தியது இவர்கள் என்றேக் கூறலாம், அதுவும் எல்லோரும் விரும்பும் வகையில். எலக்ட்ரிக் கிட்டார், மற்றும் இந்திய இசை வாத்தியங்களான டோலக், தபலா வை சரியான பதத்தில் கலந்து மனம் மயக்கும் இசை ஆல்பங்கள்! ஐந்து ஆல்பங்களில் மூன்று என்னை கவர்ந்தவை. சில ஆல்பங்களில் ஒரு பாடலோ அல்லது இரண்டோதான் தேறும்..ஆனால், euphoria-வின் ஆல்பங்களில் ஒரு பாட்டுக் கூட சோடை போகாது!

Palash Sen. ரசிக பெருமக்களால் Polly என்று செல்லமாக அழைக்கப் படுபவர். இவர்தான் லீட் பாடகர். மருத்துவம் இவரது தொழில். இப்போதும் ப்ராக்டீஸ் செய்கிறாரா தெரியவில்லை. எனக்குப் பிடித்த பாடல்கள் Dhoom Pichak Dhoom,Maeri,Mehfuz, Phir Dhoom, Mantra மற்றும் Aana Tu Meri Gully in that order! இந்த எல்லாப் பாடல்களுமே ஏதோவொரு விதத்தில் எனக்குள் மாறாத இடத்தை பெற்றவை! பல்வேறு நினைவுகள்...சில பாடல்கள் இடங்களோடு தொடர்புடைய நினைவுகள்..பல மனிதர்களோடு தொடர்புள்ள நினைவுகள்..அல்லது நிகழ்வுகளோடு தொடர்புடைய நினைவுகள்..ஓ..பதின்ம கால நினைவுகள்!!


Dhoom Pichak Dhoom

இந்தப் பாடலை எப்போதும் கேட்பதைவிட என்றாவதுக் கேட்டால் கூட போதும், புத்துணர்ச்சி பெறுவதற்கு! இதில் இருக்கும் ஒருவித வாண்டர்னெஸ்...எனது விட்டேற்றியான கல்லூரிப் பயணங்கள் முடிவில்லாமல் தொடர்ந்தால் என்ன என்று பலமுறை நான் கற்பனை செய்திருக்கிறேன்...This song has a special place in my heart! வீடியோவும் பார்க்க நன்றாயிருக்கும்!



Maaeri

பாடல் வரிகளுக்காகவே பிடித்தது, காதல் தோல்விகள் எதுவும் எனக்கு இல்லாவிட்டாலும்!!
Polly பாடும் விதத்துக்காகவும், ரயில் எனக்குப் பிடித்த நாஸ்டால்ஜிக் வாகனமாக இருந்ததாலும்,கடந்துப் போன காதலை நினைத்து பாடலில் உருகுவதாலும்...எல்லாவற்றுக்கு மேலாக அவரது காதலி திரும்பி வந்துவிட வேண்டுமென்று நினைப்பதாலும்...

Duniya Parayi chod ke aaja..
Jhoote saare riste tod ke aaja..
Sau rabdi tujhe ek baari aaja..
Ab ke mile toh honge na judaa......Na judaa





(பாடல்கள் : thanks to youtube!)
இவர்களுக்கு இணையத்தளம் http://www.dhoom.com .

Wednesday, November 05, 2008

அனைடா(Anaida)- Nazuk Nazuk லட்கி


அனைடா (Anaida) - இன்னொரு பாப் இளவரசி!
இவரும் 90-சில் அறிமுகமாகி ஒரு ரவுண்ட் வந்தவர். ஐந்து அல்லது ஆறு ஆல்பங்களும், படங்களில் பின்னணியும் பாடியவர். என்ன சிறப்பென்றால், தனியாக ஆல்பங்கள் செய்தார். அலிஷாவுக்கு ஒரு பித்து(Biddu) கிடைத்தது போல!! அவ்வளவாக அவரது இசை என்னை இம்பெரஸ் செய்யா விட்டாலும், ஒரு சில பாட்டுகளை விட்டுவிட முடியாது! ஷூக்ரி (Shukri) எனும் அரேபிய பாடகருடன் ஒரு அராபிக் ஆல்பத்தை வெளியிட்டார்.(didi பாடிய காலித்-ஐ மறக்க முடியுமா!)




பாபா சேகலுடன், லயன் கிங் படத்துக்கு ஒரு பாடலை பாடினார். அந்த இரண்டை தவிர ஒவ்வொரு ஆல்பத்திலும் ஒரு பாடல் மட்டுமே என்னை ஈர்த்தது. மிகவும் மைல்டான லுக்..gentle and innocent பார்ப்பதற்கு! Love Today Hai Nahi Aasaa - முதல் பாடல்.
அடுத்த ஆல்பத்தில், Nazuk Nazuk main ladki.





oova oova பாடலும் நன்றாக இருக்கும்.




ஷூக்ரியுடன் o malu malu,



அரபியின் அர்த்தம் புரியாவிட்டாலும், பாடுவது மிகவும் இனிமையாக இருக்கிறது! How sweet the language is!!

Funky பாபாவுடன் Hakuna Matata,

Hakuna Matata.mp3

Saturday, August 16, 2008

SRK

முன்பதின்மங்களில் எனை மிகவும் ஈர்த்த பாடல்!!
what a die-hard fan of SRK I was!!






நானும் என் தம்பியும் உபயோகித்த பிரம்பு நாற்காலியை பப்புவிற்காக கொண்டு வந்திருக்கிறார்கள் என் பெரிம்மா, அதோடு நினைவுகளையும்!!
அதான், கொஞ்சம் நாஸ்டால்ஜிக்!!

Tuesday, August 12, 2008

ராகேஷ்வரி aka ராக்ஸ்

என் பதின்மங்களில் கோலோச்சிக் கொண்டிருந்த இந்தி பாப் உலகில்,
தடாலடியாக வந்து கலக்கியவர், ராகேஷ்வரி, இசையும் இளமையுமாக!!
எனர்ஜ்ட்டிக்கான இசை, இளமை துள்ளும் குரல், மாலத்தீவுகளில் எடுக்கப்பட்ட
வீடியோ என எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தது துனியா!!
அதுவும், "மேனே தேக்கா ஹா சபி ரங்க் துனியா கே ", என் ஆல் டைம் ஃபேவரிட்!!



அவருடைய ஆல்பங்கள் கொஞ்சம் சமூக அக்கறை, குழந்தைகள் நலன், தேசப்பற்று
என எல்லா மசாலாக்களுடனும் இருக்கும். அதில் ஒருவர் வயதான தாத்தா (த்ரிலோக்?)
வருவார்..அப்பா என நினைக்கிறேன்!!

தொடர்ந்து இரு ஆல்பங்கள் கொடுத்த ராகேஷ்வரி, 2000-க்குப்பின்
உடல்நலக் குறைவு காரணமாக இசையை தொடரவில்லை.




இப்போது எப்படி இருக்கிறார், என்ன ஆல்பம் என ராக்ஸின் விசிறிகள் யாராவது
சொன்னால் மகிழ்ச்சியடைவேன்!!

RagZ..come back ..We all want you on the stage!! Come back Ragz!!

Wednesday, August 06, 2008

எனக்குப் பிடித்தமான பாடல்களில்....

இதுவும் ஒன்று!!

Words - Bee Gees

Words - Bee Gees

Smile an everlasting smile
A smile could bring you near to me
Don't ever let me find you gone
'Cause that would bring a tear to me
This world has lost it's glory
Let's start a brand new story
Now my love right now there'll be
No other time and I can show you
How my love
Talk in everlasting words
And dedicate them all to me
And I will give you all my life
I'm here if you should call to me
You think that I don't even mean
A single word I say
It's only words, and words are all
I have to take your heart away
You think that I don't even mean
A single word I say
It's only words, and words are all
I have to take your heart away
It's only words, and words are all
I have to take your heart away

Thursday, October 18, 2007

இந்தி பாப் ஆல்பங்கள் - Bally Sagoo - III

பாலி சாகு...இவருக்கு அறிமுகம் தேவையில்லை! நாம் எல்லோரும் இவரது இசையை கண்டிப்பாக கேட்டிருக்கிரோம் ..நேரடியாக இல்லாவிடினும்,இவரது இசையால் கவரப்பட்டவர்கள் அதை நமக்கு வேறு வடிவமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்..!! இவரது ஒரிஜினல் பாடல்களை கேட்டால் உங்களுக்கே புரியும்..(காப்பி அடித்துதான்..)!
இவர் பாடகர் அல்ல..DJ..ரிமிக்ஸ் என்ற கான்செப்டை இந்தி இசையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்..இந்தி பாப் உலகை உயர்த்தியவர்..பாப் உலகின் முன்னோடி!

லூதியானாவில் பிறந்திருந்தாலும், இங்கிலாந்து வாழ் இந்தியர். ஆனாலும், அவரது வேர்களை தேடி இந்தியா வந்தவர். இந்திய பாரம்பரிய பஞ்சாப் பாங்ரா மீது இயல்பிலேயே நாட்டம்..ஒரிஜினல் பாங்ரா பாடல்கள் மட்டும் அல்லாது, இவரே பல ஆல்பங்களில் இசை கம்போஸ் செய்துள்ளார்.. இவரது ரீமிக்ஸ் பற்றி தனியாக பதிவு எழுத வேண்டும்..ஒரே பதிவில் இவரை பற்றி சொல்லிவிட முடியாது கண்டிப்பாக....சினிமாவில் அதிகபட்சமாக காதல், சந்தோஷம், துக்கம், இல்லையென்றால் ஏதாவது விழா/விசேஷங்களை வைத்து பாடல் காட்சிகள் அமையும்.ஆனால் வாழ்க்கை, இளம்பிராயத்து பிரச்சைனைகள்,
கனவுகள்..தத்துவம், மக்கள்,கலாச்சாரம், கவிதை..அரசியல்..இவை எல்லாவற்றையும்..இன்னும் பட்டியலிடாதவையும் கூட..பாப் ஆல்பங்களில் தொட்டிட முடியும்..வசீகரிக்கும் இசையின் துணையோடு!!


இந்த பாடலை கேட்டு பாருங்களேன்..இது கண்டிப்பாக தமிழுக்கு புதிதல்ல..ஆனால், உள்ளத்தை அள்ளித் தா வருவதற்க்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பே வந்து விட்டது..இவரது இந்த பாடல், எப்போது கேட்டாலும் உள்ளத்தை அள்ளும்.


Piche piche aaunda meri chal be na aaye

Mera Laung Gawacha - Bally Sagoo





Dil de pariyan aankh maar maar jande ve
milan main aayi tenu roti de khavane ve
roti de khavane ve



இந்த பாடலும் நமக்கு புதிதல்ல என நினைக்கிறேன். விறுவிறுப்பான டான்ஸ்க்கு உத்திரவாதம்..




சில தாபாக்களில் கேட்கலாம். நம்ம ரேடியோகளில் பாப் இசையை ஊக்குவித்தால், அனைவரும் கேட்டு மகிழலாம்.இப்போழுது பாப் இசையே மங்கிக் கொண்டு வருகிறது.. இப்போவோ அப்போவோ என உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கும் பாப் உலகின் நிலை மாறலாம்.

Bally Sagoo - Aaja Nachle

Monday, October 15, 2007

என் பதின்ம வயது பாப் பாடல்கள் - II

90 களில் டீனேஜை கடந்தவரா நீங்கள்?
அம்மா ப்ளீஸ்..இனிமே நான் ஒழுங்கா படிக்கறேன்...நாமளும் கேபிள் கனெக்ன் வாங்கலாம்..அம்மா..ப்ளீஸ் - என்று ஸ்டார் டீ.வீ, எம் டீ.வீ பார்க்க (1992/1993களில்) உங்கள் அம்மா/அப்பாவை நச்சரித்தவரா நீங்கள்?

ம்ம்...Me wan gal from jullunder city என்று ஒலிக்கும் குரலை கேட்டிருப்பீர்கள்தானே?

1993 களில், தனது முதல் ஆல்பமான No Reservations மூலம் பாப் உலகை ஆக்கிரமித்தாரே ஒருவர்..Steven Kapoor aka. Apache Indian. அவரது இந்த பாடல் நினைவிருக்கிறதா...

Get this widget | Track details | eSnips Social DNA


அவரது அடுத்த ரிலீஸ் "Choke there"!! அதன் அர்த்தம்
புரியாவிட்டாலும், chorus மட்டும் கூட பாடி, மனதைத் தேற்றிக் கொண்டிருந்தேன்.இந்த பாடலை பாட ஆசைதான் என் வயதொத்த அனைவருக்கும் அப்போது!! ஆனால் பாடல் வரிகள்...?? அதனால் chorus மட்டும் பாடி ஆசையை தீர்த்துக்கொள்வோம்.... Here it is..Choke there!!

Chok there - them a ball when they see the Indian
Chok there - raggamuffin under style and pattern
Chok there - when me come that a different fashion


Get this widget | Track details | eSnips Social DNA


பாப் பாடல்கள் என் பாட்டிக்கு பிடிக்கவே பிடிக்காது..திட்டுதான் விழும்!!அது ஏனோ...வயதானவர்களுக்கு இந்த பாப் பாடல்கள் பிடிப்பதில்லை(Generation gap)...ம்ம்..பாவம்..Hi-Fi வாழ்த்துப் போல choke there/Boom Shaka laka என்று பாடல் வரிகளை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு apache indian எங்களை ஆக்ரமித்திருந்தார்!

அவரது அடுத்த ஆல்பமான Nuff Vibes-யின், Boom Shakalakka புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது!!Boom Shakalakka-வின் chorus வரிகளை,

Wine your body
Wriggle your belly
Dip and go down in a the new stylee
Wine and go up, wine and go down
Bubble and a rockca the new style around
You fe line it up, you fe wine it up
Do the boomshackalak till the dance hall full up - தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும்
சொல்லும் அளவுக்கு நான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை என் பாட்டியால் தடுக்க முடியவில்லை..ஹா..ஹா!!

இதோ அந்த பாடல்..

Get this widget | Track details | eSnips Social DNA


1995-இல் வெளியான Make Way For The Indian ஆல்பத்தின் Ragamuffin Girl எனக்கு பிடித்தமான பாடல்...ஹிட் பாடலுங்கூட!!
இந்த ஆல்பத்திற்குப் பின், I didn't hear much about Apache Indian the Don Rajah!!
உங்களில் யாரேனும்..Apache Indian-னின் ரசிகராக இருப்பீர்களாயானால், உங்களுக்காக...

Get this widget | Track details | eSnips Social DNA


Any of His fans around??

Friday, October 05, 2007

என் பதின்ம வயது பாப் பாடல்கள் - I

பாப் பாடல்கள் என்னை எப்போதுமே ஈர்ப்பவை. அதுவும் இந்தி பாப் மீது அளவிட முடியாத காதல் உண்டு!முன்பு தூர்தர்ஷன் காலத்தில் ஹாட் ஸ்பாட் என்று ஒரு நிகழ்ச்சி சனி இரவுகளில் ஒளிபரப்பப்படும்.கவிதா கிருஷ்ணமூர்த்தி, ரெமோ, உஷா உதூப் மற்றும் பல பாப் பாடகர்களின் பாடல்கள் இடம் பெறும். அப்போது பாப் பாடல்கள் அவ்வளவாக பிரபலமாகவில்லை. ஜீ தொலைக்காட்சி வந்தபின், ஓரளவு பாப்பாடல்கள் இடம் பெற துவங்கின. வழக்கமான சினிமாப் டூயட் பாடல் காட்சிகளை விட, வித்தியாசமான காட்சி அமைப்புகள், தாளம் போட வைக்கும் மெட்டுகள், இளம்வயதினரை வசீகரிக்கக்கூடிய டான்ஸ் ஸ்டைல்
எனப் பல காரணங்கள் கவர்வதற்கு இருந்தன இந்த பாப் ஆல்பங்களிடம்.

90களில் வந்த பாப் பாடல்கள்.. இவற்றைக் கேட்கும்போது, என்னை திரும்ப அந்த
பதின்ம வயதுக்கே கொண்டு செல்லும் சக்தி படைத்தவை.

நினைவுகளை அசை போடுவது சுகமானது!

பாப் பாடல்கள் என்றில்லை..பதின்ம வயதில் நாம் ரசிக்கும் ஒவ்வொரு பாடலும்/விஷயமும் மீண்டும் அவற்றை கடக்க நேரிடும்போது பழைய நினைவுகளுக்கு..அந்த கால்கட்டதிற்கு அழைத்துசெல்பவையாக இருக்கிறது!!

அந்த வயதில்தான் எத்தனையெத்தனை கனவுகள்..திட்டங்கள்..வருங்காலத்தை பற்றிய கனவுகள்..
எண்ணங்கள்..நட்புகள்..சந்தோஷங்கள்!!

Pari Hoon Main-Sunita Rao

எனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு -
இந்த பாடல்தான் சுனிதாவுக்கு அறிமுகத்தை தந்தது! அந்த இன்னொசன்ட் முகமும், பள்ளிச் சீருடையில்
வகுப்பறையில் அமர்ந்திருப்பதும் ..கறுப்பு வெள்ளையில் படக்காட்சிகளில் இந்த பாடலை கேட்பதும், பார்ப்பதுமே
சுகம்தான்.! சுனிதாவின் இன்னொரு ரசிக்கும்படியான பாடல் Kesaria!!
ஆனாலும்,சுனிதாவின் அசர வைக்கும் அழகும், கிறங்கடிக்கும் குரலுமாக....
pari-ஐ போல மற்றொரு பாடலை, ரசிகர்கள் விரும்பினாலும் சுனிதாவாலேயேகூட கொடுக்க முடியாது...
Pari என்றால் Fairy/ beautiful woman..உண்மைதான்!

மைசூர் சுற்றுலா முடிந்து வந்து, நான் உனக்கு பரிசளித்த
சந்தனவாசம் வீசும் சாவிக்கொத்து இருக்கிறதா உன்னிடம் இன்னும்!!

Get this widget | Track details | eSnips Social DNA


Johnny Joker - Shweta Shetty

மறக்க முடியுமா இவரை!! ஷ்வேதா..ஒரு bold voice அலட்சிய பார்வை மற்றும் அநாயசமான ஸ்டைல்! 93 இல் வெளி வந்த பாடல் இவருக்கு பல பாலிவுட் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. இந்த பாடல் யாரிடமாவது இருக்கிறதா?

இவரது மற்ற ஹிட் பாடல் Deewane To Deewane Hain..அதைதான் இணைத்திருக்கிறேன்.

Dil kisika kilona nahin!!

அப்போது ஸ்டார் டீவியின் நெடுந்தொடர் "The Bold and the Beautiful" ஒளிபரப்பாகுமே....அந்த தலைப்பில் நீ எழுதிய கடிதம் பிரிக்கப்படாமல் இருக்கிறது என் ரெக்கார்ட் நோட்டில்!

Get this widget | Track details | eSnips Social DNA


Dole Dole Dil Ye Dole - SUCHITRA

சன்ரைஸ் விளம்பரத்தில் வந்த பெண்..ஷாருக்குடன் ஒரு படதில் நடித்தார்.
இந்த பாடலும், Dum tara என்ற பாடலும் என்னுடைய விருப்ப பாடல்கள்!
இளமை துள்ளும் இந்த பாடலில் வண்ண வண்ண குடைகளுடன் கல்லூரி வராந்தாவில், குட்டை கவுனுடன்
துறு துறுவென்று இருந்த சுசித்ரா..
விரைவில் பாப் உலகில் இருந்து காணாமல் போனார்.

அப்போதெல்லம் அடிக்கடி நினைத்துக் கொள்வேன் எப்போது பெரியவர்களாவோமென்று! இப்போது உணர்கிறேன் சின்ன வயது சந்தனமுல்லையாகவே இருந்திருக்காலாமோவென்று!!

Nigodi kaisi jawani hai -Ila Arun

கிராமத்திய பாப் இசை ராணி...இவரது எல்லா பாடல்களுமே ஹிட்..!
கல்நாயக் பாடல்கள் போதும் இவர் பற்றி தெரிந்துக் கொள்ள!!
இவரது 'ஹஸ்கி வாய்சும்' இந்த ஆல்பம் படமாக்க பட்ட விதமும், இவரது நடிப்பும்...முறைப்பும்..ரொம்பவே அழகு!!

இந்த பாடலையும் தேடிக்கொண்டிருக்கிறேன் இணையத்தில்...உன்னையும் சேர்த்து...நெடுநாட்களாக!!


Baba Sehgal - Thanda Thanda Pani

இவர் இல்லாமல் இந்தி பாப்? இல்லை..இந்தி(ய) ராப் மற்றும் பாப் உலகின் முன்னோடி!
ஆனாலும் இது காப்பிதான்...indianised!!
உடை விஷயத்தில் ரொம்பவே தைரியசாலி..ராமராஜன்..கோவிந்தா போல்!!
பாடலில் ஒருவித நகைச்சுவையும் இருக்கும்! "Manjula" பாடல் ஒரு உதாரணம்!


Get this widget | Track details | eSnips Social DNA