Monday, March 16, 2009

Euphoria - Dhoom pichak தூம்

euphoria. எனக்கு மிகவும் பிடித்த பத்துப் இந்தி பாப் பாடல்களை தெரிந்தெடுக்கச் சொன்னால், அதில் euphoria band-ன் பாடல்களுக்கு முக்கிய இடம் உண்டு. ராக்-கை இந்தி பாப் உலகிற்கு அறிமுகப் படுத்தியது இவர்கள் என்றேக் கூறலாம், அதுவும் எல்லோரும் விரும்பும் வகையில். எலக்ட்ரிக் கிட்டார், மற்றும் இந்திய இசை வாத்தியங்களான டோலக், தபலா வை சரியான பதத்தில் கலந்து மனம் மயக்கும் இசை ஆல்பங்கள்! ஐந்து ஆல்பங்களில் மூன்று என்னை கவர்ந்தவை. சில ஆல்பங்களில் ஒரு பாடலோ அல்லது இரண்டோதான் தேறும்..ஆனால், euphoria-வின் ஆல்பங்களில் ஒரு பாட்டுக் கூட சோடை போகாது!

Palash Sen. ரசிக பெருமக்களால் Polly என்று செல்லமாக அழைக்கப் படுபவர். இவர்தான் லீட் பாடகர். மருத்துவம் இவரது தொழில். இப்போதும் ப்ராக்டீஸ் செய்கிறாரா தெரியவில்லை. எனக்குப் பிடித்த பாடல்கள் Dhoom Pichak Dhoom,Maeri,Mehfuz, Phir Dhoom, Mantra மற்றும் Aana Tu Meri Gully in that order! இந்த எல்லாப் பாடல்களுமே ஏதோவொரு விதத்தில் எனக்குள் மாறாத இடத்தை பெற்றவை! பல்வேறு நினைவுகள்...சில பாடல்கள் இடங்களோடு தொடர்புடைய நினைவுகள்..பல மனிதர்களோடு தொடர்புள்ள நினைவுகள்..அல்லது நிகழ்வுகளோடு தொடர்புடைய நினைவுகள்..ஓ..பதின்ம கால நினைவுகள்!!


Dhoom Pichak Dhoom

இந்தப் பாடலை எப்போதும் கேட்பதைவிட என்றாவதுக் கேட்டால் கூட போதும், புத்துணர்ச்சி பெறுவதற்கு! இதில் இருக்கும் ஒருவித வாண்டர்னெஸ்...எனது விட்டேற்றியான கல்லூரிப் பயணங்கள் முடிவில்லாமல் தொடர்ந்தால் என்ன என்று பலமுறை நான் கற்பனை செய்திருக்கிறேன்...This song has a special place in my heart! வீடியோவும் பார்க்க நன்றாயிருக்கும்!Maaeri

பாடல் வரிகளுக்காகவே பிடித்தது, காதல் தோல்விகள் எதுவும் எனக்கு இல்லாவிட்டாலும்!!
Polly பாடும் விதத்துக்காகவும், ரயில் எனக்குப் பிடித்த நாஸ்டால்ஜிக் வாகனமாக இருந்ததாலும்,கடந்துப் போன காதலை நினைத்து பாடலில் உருகுவதாலும்...எல்லாவற்றுக்கு மேலாக அவரது காதலி திரும்பி வந்துவிட வேண்டுமென்று நினைப்பதாலும்...

Duniya Parayi chod ke aaja..
Jhoote saare riste tod ke aaja..
Sau rabdi tujhe ek baari aaja..
Ab ke mile toh honge na judaa......Na judaa

(பாடல்கள் : thanks to youtube!)
இவர்களுக்கு இணையத்தளம் http://www.dhoom.com .

26 comments:

நசரேயன் said...

ஒ.. இதுதான் "இந்தி"யா !!!!!!!

எம்.எம்.அப்துல்லா said...

மீ த ஃபர்ஷ்ட்டூ :)

குடுகுடுப்பை said...

ஹிந்தி மாலும் நஹி.

ஆயில்யன் said...

அன்னிய மொழியில் அனைத்துப்பாடல்களுமே இருப்பதால் இசையோடு இயைந்து போய், உள்ளேன் அய்யா என்று மட்டும் சொல்லி உக்காந்துக்கிறேன் :))

MayVee said...

hmmm
itha pada nalla irukkum pol irukke..
ketra veda vendiyathu than

நிலாவும் அம்மாவும் said...

I first.....appada.....nimmathiya poyi thungalam..paattu kettutu pinnottam poduren

நிலாவும் அம்மாவும் said...

Your comment has been saved and will be visible after blog owner approval.
------------------------

appo naan first illiya?

G3 said...

Haiya.. enakkum romba pudicha paatu indha rendum :D

மிஸஸ்.டவுட் said...

//குடுகுடுப்பை said...

ஹிந்தி மாலும் நஹி.//


ஹிந்தி தெரியாது...பாட்டும் கேட்க முடியலை என் கம்பியூட்டரில் .ஆனா நல்ல பதிவு .:)

கார்த்திகைப் பாண்டியன் said...

வாவ்.. நம்பவே முடியவில்லை.. நீங்களும் என்னைப்போல் euphoria ரசிகர் என்பதை.. எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் ஹிந்தி பாப் பாடல்கள் கேட்பவர் எண்ணிக்கை ரொம்ப கம்மி.. ரொம்ப சந்தோஷம்.. குறிப்பிட... தூம் பாட்டின் வீடியோ.. சான்சே இல்லை.. அவர்களை ஒரு முறை VIT கல்லூரியின் ரிவேரா நிகழ்ச்சியில் நேராக பார்த்தேன்.. பலாஷ் கலக்கி எடுத்தார்.. பகிர்வுக்கு நன்றி..

கைப்புள்ள said...

நல்ல தேர்வு. தூம் பிசக் தூமை விட மாயேரி எனக்கு ரொம்ப பிடிக்கும். பலாஷ் சென் ஒரு க்வாலிஃபைட் டாக்டர் என்பது உபரி தகவல். ரொம்ப நாள் கழித்து இப்பாடல்களை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்ஸ் கமெண்ட்டை வழி மொழிகிறேன்

வித்யா said...

எனக்கு மாயரி தான் பிடிக்கும். அப்புறம் தான் தூம் பிசக்:)

சந்தனமுல்லை said...

நன்றி நசரேயன்..இதுதான் முன்னவீனத்துவ கமெண்டா?! :-)

நன்றி அப்துல்லா..ம்ம்..நீங்க ஒரு செகண்ட்ல செகண்டாகிட்டீங்க!

அச்சா ஹே குடுகுடுப்பை ஜி!

நன்றி ஆயில்ஸ்..:-)

நன்றி MayVee..கேட்டுட்டீங்களா..கண்டிப்பா பிடிச்சிருக்குமே!

சந்தனமுல்லை said...

:-) நன்றி நிலாவும் அம்மாவும் !!

நன்றி G3!! மிக்க சந்தோஷம்!

நன்றி மிஸஸ்.டவுட்.. //
ஹிந்தி தெரியாது.// அதெல்லாம் அவசியமேயில்ல..இசைக்கு அதுவும் பாப்-க்கும் ராக்-க்கும்!

சந்தனமுல்லை said...

நன்றி கார்த்திகைப் பாண்டியன்..நீங்களும் euphoria fan-ஆ! மிக்க சந்தோஷம்!
//எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் ஹிந்தி பாப் பாடல்கள் கேட்பவர் எண்ணிக்கை ரொம்ப கம்மி.. //
அபப்டியா..ஆனா, என்னோட பள்ளியிலும், கல்லூரியிலும் பாப் பாடல்கள் தான் ஹிட்! அதோட mid 90s Indy பாப் உலகின் பொற்காலம் ஆச்சே! யாரும் தப்ப முடியாது..:-)

//அவர்களை ஒரு முறை VIT கல்லூரியின் ரிவேரா நிகழ்ச்சியில் நேராக பார்த்தேன்.. //

ஆகா...கலக்கல்தான்! பகிர்ந்தமைக்கு நன்றி! 90s இசை, பாப் -அப்ப்டின்னு லேபிள்-களில் நான் எழுதியிருப்பது பெரும்பாலும் இந்தி பாப் பாடல்கள் பற்றிதான்! இயலும்போது வாசிக்கவும்!

சந்தனமுல்லை said...

நன்றி கைப்ஸ் அண்ணா, நீங்களும் euphoria fan என்பதை அறிந்தது சந்தோஷம்! அர்ச்சனா பத்தி அடுத்த போஸ்ட் போடுங்க...:-)

நன்றி வித்யா...அதான் ரெண்டு பாடலும் கொடுத்திருக்கேனே..கேட்டு என்சாய்!! :-)

நட்புடன் ஜமால் said...

\\எல்லாவற்றுக்கு மேலாக அவரது காதலி திரும்பி வந்துவிட வேண்டுமென்று நினைப்பதாலும்... \\

இதுதாங்க காதல் மேல் வரும் காதல்

அழகா சொல்லியிருக்கீங்க ...

கவிதா | Kavitha said...

Mulz :) Mujea Hindhi Accha Malum Hey!!

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்!

நன்றி கவிதா..//Hindhi Accha Malum// ஒக்கே! ye song maalum ??

Poornima Saravana kumar said...

முதல் பாடல் அருமை:)

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

வீட்ல போய் கேட்டுகிடுதேன்.. ஆப்பிஸ்ல இது போன்ற இணைப்புகள் ஒண்ணும் தெரியாது.. அவ்வ்வ்வ்..

Divyapriya said...

This second song is my all time fav...i just love this song...thx for this :))

Thooya said...

nice collection :)

மகா said...

i also like this 2 songs

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல பாட்டும் நல்ல காட்சிகளுமா இருக்கும்.. நினைவுபடுத்தி இருக்கீங்க திரும்ப... :)