Sunday, March 15, 2009

ரோஜாக் கூட்டத்தோடு ஒரு மணிநேரம்!!

அலுவலகத்தில் அதுவும் கேபினுக்கு பக்கத்தில் அல்லது ஒரு ஜன்னல் வழியே நமது பெற்றோர் எட்டி நம்மை, நாம் வேலை செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? சிலர் விருப்பபடலாம், ஒரு சிலர் விருப்பபடாமலும் ஏன் அபப்டி ஒரு எண்ணத்தையே வெறுக்கலாம். அது நாம் எந்தப் பக்கத்திலிருக்கிறோமென்பதையும் பொறுத்திருக்கிறது...;-). By this time, you would have got the idea. ஆமாம், என்னை அப்படி என் பெற்றோர் பார்க்க(கண்காணிக்க!?!) விரும்பியிருந்தால் அவ்வளவுதான்..உண்டு இல்லையென்றுச் செய்திருப்பேன்.(அதுக்கெல்லாம் சேர்த்து வைச்சுதான் பழிவாங்கிட்டாங்களே..ஒரே ஸ்கூல்!!)ஆனால், பப்புவை,அவளது பள்ளி நேரத்தில் பார்க்க மிகுந்த ஆவலோடு கிளம்பினேன்!

அன்று பப்பு பள்ளியில் observation day. 9.30 AM to 10.30 AM. உள்ளே சென்றதும் என் கண்கள் பப்புவைத் தேடின. “குறிஞ்சி மலரோட மம்மி ” என்று ஒரு குட்டிப்பெண் பக்கத்து குட்டிப் பெண்ணிடம் சொன்னதைக் கேட்டேன்.huh..என்ன ஒரு அறிமுகம்!! ஆனால், அந்த சுட்டிகளை யாரென்று எனக்குத்தான் தெரியவில்லை. வாட் அ ஷேம்!! காலையின் வாகனத்தில் ஏற்றும் போது பார்த்திருப்பார்களாயிருக்கும். எனக்கும் பெயர் தெரிந்திருக்கலாம்!! but it was a good feeling, you know!

எல்லோரும் சீருடையில், அவரவர்களின் பாயில் அமர்ந்திருந்தார்கள். ஹா..இதோ பப்பு, என்னைப் பார்த்து ஒரு ஆச்சரியம், ஒரு வெட்கப் புன்னகை! அவளது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தில் நான். ஏதோ செய்துக் கொண்டிருந்தாள், கலர் பாக்ஸ் என்று நினைக்கிறேன். அதைச் செய்து முடித்துவிட்டு, பெட்டியில் போட்டு அதன் இடத்தில் வைக்கச் சென்றாள். என்னிடம் வந்து “நீ ஆபிஸ் போகல?” என்றாள். போகணூம் பப்பு, உன்னைப் பார்க்க வந்தேன்! என்றேன்.

வேறு ஏதோ எடுத்து வந்து செய்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரில் வெண்மதி. இரட்டைக் குடுமி போட்ட ஒரு குட்டிப் பெண். பப்பு வீட்டில் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது இவளைப் பற்றிதான். என்னால், அவளை மட்டுமே அடையாளம் காண முடிந்தது. பப்பு திரும்ப அடுத்தப் பொருளை எடுக்கச் சென்றபோது, “நீ ஆபிஸ் போ மாட்டே?' என்றாள்! அவ்வ்வ்வ்வ்! ”போவேன் பப்பு” என்றேன்!she has got my genes! (hostel-ல் என்னை யாரும் பார்க்க வந்தால் சுத்தமாக பிடிக்காது. நீங்க என்ன எடுத்துக்கிட்டு வரணும்னு நினைக்கறீங்களோ, அதை எனக்கு கூரியர் பண்ணிடுங்க, பார்க்கணும்னா நாந்தான் வருவேன். யாரும் என்னைப் பார்க்க வரக்கூடாது..அப்படின்னு கண்டிஷன்லாம் போட்டேன். என்ன சொல்லி என்ன, அதையெல்லாம் கேட்கல..ஆனா, வர்ற frequency மட்டும் குறைஞ்சது!)

எடுத்து வந்ததை செய்தபின் , பாயை சுருட்டி ஒரு டப்பாவில் வைக்கவேண்டும். அந்த டப்பா எனக்குப் பின்னால் இருந்தது. பாயை வைத்துவிட்டு, என்னருகில் வந்து, ”ஏன் என்னையே பார்த்துக்கிட்டு இருக்கே? என் ஃப்ரெண்ட்சை பாரு” என்றாள். (அடுத்த பல்ப்!) பிறகு அவர்களையும் பார்க்கத் தொடங்கினேன். மெதுவாக ஆயாம்மாவிடம் பேச்சுக் கொடுத்ததில் தண்ணொளியையும், தனுஷையும் அறிந்துக் கொண்டேன்.

பப்பு பொருட்கள் எடுக்க/வைக்க செல்லும்போது குதித்துக் கொண்டும், பாடிக் கொண்டும் செல்வதைக் கவனித்தேன். (எப்போதும் அப்படியா, அல்லது நானிருப்பதாலாவென்றுத் தெரியவில்லை.) ஒன்று மட்டும் என்னை ஆறுதல் படுத்தியது, பப்பு அவளது இடத்தில்
தன்னை பொருத்திக் கொண்டிருக்கிறாள். எதைச் செய்யவும் பயப்படவோ கலங்கவோ இல்லை. மேலும் ஷீ இச் மெத்தாடிக்கல். ( இ-திருஷ்டி பொட்டு!)

பள்ளியிலேயே சொல்லிவிட்டாலும் பப்புவின் ஆண்ட்டிக்கும் மாண்ட்டிசோரி அம்மையாருக்கும் நன்றி!

14 comments:

வெயிலான் said...

ரோஜாக்கூட்டத்தோட ஒரு மணி நேரம் என்ன, நாளெல்லாம் இருக்கலாம். ஆனா நம்ம குறிஞ்சி மலர் விடாதே :)

வித்யா said...

பப்பு சுதந்திரமாய் செய்லபடுவது மகிழ்ச்சியை தருகிறது.

ராமலக்ஷ்மி said...

//பப்பு அவளது இடத்தில்
தன்னை பொருத்திக் கொண்டிருக்கிறாள். //

ஆமாம் ரோஜாக் கூட்டத்தின் நடுவில் அழகான குறிஞ்சி மலராய்..

[நான் நினைத்ததையே நீங்கள் எழுதிவிட்டதால் ‘ரிப்பீட்டேய்’ல்லாம் போட முடியாது, வெயிலான்:)!

ராமலக்ஷ்மி said...

//இரட்டைக் குடுமி போட்ட ஒரு குட்டிப் பெண்//

அப்படியா? இரட்டைக் குடுமி, சுருட்டை முடி, மொட்டைத் தலை பாப்பாக்கள் பார்க்கப் பிடிக்கும்தானே பப்புக்கு. இதைக் காட்டணும் அவளுக்கு கட்டாயம் நீங்க:).

நசரேயன் said...

நல்ல முன்னேற்றம் பப்பு. ரசித்தேன் ரோஜா ௬ட்டங்களை

Poornima Saravana kumar said...

குட்டிக் கவிதைகளோடு 1 மணி நேரம்.. ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதம்!!

அமுதா said...

/*பப்பு அவளது இடத்தில்
தன்னை பொருத்திக் கொண்டிருக்கிறாள். */
நன்று :-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆ .. உங்களுக்கு ஒரு நியாயம் பப்புவுக்கு ஒரு நியாயமா .. இருந்தாலும் புரட்சிப்பெண் பப்பு.. நல்லா கேட்டிருக்கா நறுக்குன்னு.. :)))

ஆயில்யன் said...

//hostel-ல் என்னை யாரும் பார்க்க வந்தால் சுத்தமாக பிடிக்காது. நீங்க என்ன எடுத்துக்கிட்டு வரணும்னு நினைக்கறீங்களோ, அதை எனக்கு கூரியர் பண்ணிடுங்க, பார்க்கணும்னா நாந்தான் வருவேன். யாரும் என்னைப் பார்க்க வரக்கூடாது..அப்படின்னு கண்டிஷன்லாம் போட்டேன்//

தெரியும் பாஸ் நீங்க பயங்கர டெரரான ஆளுன்னு :) ஆசையா புள்ளை என்னா படிக்கிதுன்னா பாக்க வரப்போறாங்க ஹாஸ்டல் சாப்பாடு பாவம் புள்ள மெலிஞ்சிருக்குமேன்னு நினைச்சு பார்சலோட வந்திருப்பாங்க! (பட் நீங்க ஹாஸ்டல டபுள் புல் மீல்ஸ் தின்னது அவுங்களுக்கு கடைசி வரைக்கும் தெரிஞ்சுருக்க சான்ஸே இல்ல)

ஆயில்யன் said...

//ஏன் என்னையே பார்த்துக்கிட்டு இருக்கே? என் ஃப்ரெண்ட்சை பாரு” என்றாள். (அடுத்த பல்ப்!)/

பின்னே எங்க பப்புவுக்கு ஒரே ஸேமா இருக்காதா அவங்களையே உத்து பார்த்துக்கிட்டிருந்தா...?

ஆயில்யன் said...

//ஆமாம் ரோஜாக் கூட்டத்தின் நடுவில் அழகான குறிஞ்சி மலராய்..//


சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

பப்பு பேரவை
தோஹா

பிரேம்குமார் said...

//என்னிடம் வந்து “நீ ஆபிஸ் போகல?” //
புள்ளைக்கு தான் எவ்வளவு பொறுப்பு...

//அடுத்த பல்ப்!)//
பல்ப் மேல பல்பா வாங்கினீங்க போல‌

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரோஜாவும் குறிஞ்சியும்...

நெறைய பல்பு போல இருக்கு ஆச்சி

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வாழ்த்துக்கள் பப்பு.

வண்ணத்துபூச்சியார் said...

மகிழ்ச்சியை தருகிறது.