பெரிய கட்டிடங்களும், அசெம்ப்ளி ஹாலும், மிகப் பெரிய விளையாட்டு மைதானம் கொண்டதுமாயிருந்தது இந்த மேனிலைப் பள்ளி. குறைந்தது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொண்டிருப்பது போலத் தோன்றியது. இனியாவின் வகுப்பில் மட்டும் நாற்பத்தைந்து பேர் இருந்தனர். ஆனால், அவளுக்கு தன் வரிசையில், முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களின் பெயர்கள் மட்டுமே தெரிந்திருந்தது! இனியா, நித்யா, வாணி மூவரும்
நண்பர்கள். மூவரும் படித்த கதைப்புத்தகங்களைப் பற்றியும், சுட்டியின் கார்ட்டூன்களைப் பற்றியும் பேசி சிலாகித்துக் கொண்டிருப்பர்.
அவளது வகுப்பாசிரியை சுதா. அவர்தான் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களை எடுக்கிறார். அந்த வருடத்திற்கான புத்தகங்கள் அவர்களதுப் பள்ளியில் கொடுப்பார்கள்,
ஆனால் முதல் டெர்ம் முடியும்போதுதான் கிடைக்கும். அதனால், எல்லோருமே கடையிலே வாங்கிவிட்டிருந்தனர். மேலும், அவர்களது ஊரிலே இருந்த புத்தகக் கடைகளில் தமிழ் பாடத்திற்கான புத்தகம் தீர்ந்துவிட்டிருந்தது. பலருக்கு அப்புத்தகம் கிடைக்கவில்லை. வகுப்பிலே ஒரு சிலர் வைத்திருந்த புத்தகத்தை அருகிலிருப்பவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுமாறு சுதா மிஸ் சொல்லியிருந்தார்கள். ஒரு சிலர் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டிருந்தார்கள். ராதா இனியாவின் வரிசையிலே அமர்ந்திருந்தாள். இனியாவும் நித்யாவும் அவளுடன் இணைந்துக் கொண்டனர். வாணி கலைமாமணியுடன் சேர்ந்துக் கொண்டாள்.

முதல் வரிசையிலிருந்த சௌந்தரி நன்றாக படிக்கும் பெண் போல காட்டிக் கொண்டாள். அவள்தான் வகுப்பில் முதலாவதாக வருவாள் என்று அவளுடன் பழைய பள்ளியில் படித்த சிலர் சாட்சி வேறு கூறினர். இனியாவும் வாணியும் ஒரே பள்ளியிலிருந்து வந்திருந்தனர். அந்தப் பள்ளியில் இனியாதான் நன்றாக படிக்கும் பெண் என்று பெயர் வாங்கியிருந்தாள். மாத பரிட்சைக்கான அட்டவணையும் வந்துவிட்டது. அட்டவணையை சுதா மிஸ் போர்ட்டில் எழுதும் போதுதான் தமிழ்புத்தகங்களை கொண்டு வந்திருப்பதாக பள்ளியின் உதவியாளர் கணேஷ், சுதா மிஸ்ஸிடம் கூறினார். சுதா மிஸ் புத்தகங்கள் இல்லாதவர்களை எழுந்து நிற்கும் படிக் கூறி ஒவ்வொன்றாக வினியோகிக்கத் தொடங்கினார்.கலைமாமணியும் எழுந்து நின்றாள்.
“மிஸ், கலைமாமணிகிட்டே புக் இருக்கு மிஸ்” என்ற யாருடைய குரலோ சுதாமிஸ்-ற்கு கேட்டுவிட்டது!
“கலைமாமணி, உன்கிட்டே புக் இருக்கா?” என்றதற்கு, ”ஆமா மிஸ்” என்றாள் மெல்லிய குரலில்!
“அப்போ ஏன் நின்னுக்கிட்டிருக்கே, உட்கார்” என்று மிஸ் சொன்னதற்கு,
“இந்தப் புத்த்கத்தை அடுத்த வருஷத்திற்கு வச்சிப்பேன் மிஸ்” என்றாள் கலைமாமணி. வகுப்பறையே சிரித்து ஓய்ந்தது!!
“நீ பாஸாகி அடுத்த வகுப்பிற்கு போய்டுவே இல்லையா, அப்போ வேற புத்தகம்தான் படிக்கணும், சரியா” என்றபடியே சுதா மிஸ்-உம் சிரித்தார்கள்!!
மாதப் பரிட்சையும் முடிந்து விட்டது. எளிதாக இருந்ததாகத் தான் இனியா நினைத்துக் கொண்டிருந்தாள். தான் நன்றாக எழுதியிருப்பதாக இனியா நம்பிக்கைக் கொண்டிருந்தாள்.அந்த வாரயிறுதி முடிந்து, திங்கள் காலை வகுப்புத் தொடங்கியது. சுதா மிஸ் வந்தார்கள்..ஹூம்...ஆனால் விடைத்தாள்களை கொண்டுவரவில்லை. சௌந்தரி ஒருவித படபடப்போடு இருந்தாள்....யாருடனும் பேசாமல்! எப்போதும் நமது மூவர் குழு வாரயிறுதியில் விளையாடியதைப் பற்றியும், கிரிக்கெட் மேட்ச் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்! மீண்டும் சுதா மிஸ் வகுப்பு மாலை மூன்று மணிக்கு! கையில் விடைத்தாள் கட்டு! அனைவரது விடைத்தாட்கள் அவரவர் கைக்கு வந்துச் சேர்ந்தது.
சௌந்தரி விசும்பத் தொடங்கினாள். வகுப்பறை முழுக்க அவளையே திரும்பிப் பார்த்தது! இனியாவிற்கு சௌந்தரி ஏன் அழுகிறாள் என்று புரியவேயில்லை. சௌந்தரிதானே முதல் மதிப்பெண். எதற்கு அழ வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். மணியடித்தது. சுதாமிஸ் வகுப்பறையை விட்டகன்றார்கள், அடுத்த பரிட்சையில் எல்லோரும் இதைவிட அதிகமாக எடுக்க வேண்டுமென்று வாழ்த்தியபடி!
சௌந்தரி இப்போது தேம்பியழத் தொடங்கியிருந்தாள். இனியாவிற்கு புதிதாக இருந்தது, ” நீதானே தொண்ணூறியொன்று எடுத்திருக்கே, அப்புறம் ஏன் அழறே?”, என்றாள் சௌந்தரியிடம்.
சௌந்தரி சொன்னாள், “ நான் எப்போவுமே நூற்றுக்கு நூறுதான் எடுப்பேன், இப்போ குறைஞ்சுப்போச்சே!” !!
“அடுத்தப் பரிட்சையிலே பார்த்துக்கலாம், அழாதே, இப்போ அழுதா ஒன்னும் யூஸ் இல்ல” என்றாள் எண்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்த இனியா!
மதிப்பெண்கள் மட்டுமே நம்மை நிரூபிப்பதில்லை. ஒவ்வொரு முறையும், நாம் முன்பு செய்ததைவிட சிறப்பாக அடுத்தமுறைச் செய்வதே வெற்றி என்பது இனியாவிற்கு நன்றாகவே புரிந்திருந்தது! அந்தத் தன்னம்பிக்கையும் மனப்பாங்குமே எண்பதைந்து மார்க்குகள் எடுத்த இனியாவை கொண்டு முதல் மதிப்பெண் எடுத்த சௌந்தரியைத் தேற்றச் செய்தது!!

பி.கு 3 : குழந்தைகளுக்கான எனது முதல் கதையை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்! அதுதான் கடைசி என்று நினைத்து ஒரு சிலர் மகிழ்ந்துக் கொண்டிருப்பதாகத் தெரியவந்தது...அதான்!
பி.கு 2 : கதை எனதுக் கற்பனையே. அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரலாமென்று விரும்புவோர் தயைச் செய்து சுட்டிக் காட்டவும்.
பி.கு 1 : கலைமாமணி கேரக்டர் ஆயில்ஸை மனதில் கொண்டு எழுதப்படவில்லை.
34 comments:
கற்பனையா
அருமை.
\\கலைமாமணி கேரக்டர் ஆயில்ஸை மனதில் கொண்டு எழுதப்படவில்லை.\\
ஹா ஹா ஹா
நல்லா இருக்கு முல்லை
நல்லா இருக்கு முல்லை
முல்லை இது ஒரு கற்பனை கதை போலவே இல்லை.
நிஜமான பள்ளியில் நடந்த ஒரு காட்சியை விரிவாகப் பார்த்து ரசித்த உணர்வு என் மனதிற்கு கிடைத்தது.
அருமையான எழுத்து நடை அப்படியே கட்டி போட்டுடுச்ச்சு
சுதா கற்பனை பெண் அருமை.
//
“கலைமாமணி, உன்கிட்டே புக் இருக்கா?” என்றதற்கு, ”ஆமா மிஸ்” என்றாள் மெல்லிய குரலில்!
“அப்போ ஏன் நின்னுக்கிட்டிருக்கே, உட்கார்” என்று மிஸ் சொன்னதற்கு,
“இந்தப் புத்த்கத்தை அடுத்த வருஷத்திற்கு வச்சிப்பேன் மிஸ்” என்றாள் கலைமாமணி. வகுப்பறையே சிரித்து ஓய்ந்தது!!
“நீ பாஸாகி அடுத்த வகுப்பிற்கு போய்டுவே இல்லையா, அப்போ வேற புத்தகம்தான் படிக்கணும், சரியா” என்றபடியே சுதா மிஸ்-உம் சிரித்தார்கள்!!
//
ஆனாலும் நம்ம சுதாமிஸ்சுக்கு ரொம்ப பொறுமை தான் போங்க.
இதில் சிரிக்க மட்டும் இல்லை, சிந்திக்கவும் வைக்கிறார் முல்லை.
அதாவது குழந்தையின் தவறான பதிலை கேட்டு சக மாணவர்கள் சிரித்தாலும், சுதாமிஸ் அருமையா அந்த குழந்தையின் தவறை சுட்டிக் காட்டி வருத்தப் பட வைக்காமல் அந்த குழந்தைக்கு புரிய வைத்த விதம்,
சூப்பர்... சபாஷ் முல்லை!!
\\கலைமாமணி கேரக்டர் ஆயில்ஸை மனதில் கொண்டு எழுதப்படவில்லை.\\
ஓ நம்ப ஆயில்ல்ஸ் இல்லைன்னு சொல்லறீங்களா??
நான் படிக்கும்போது அவருதானோன்னு நினைச்சேன்:))
நல்லா சிரிப்பா இருந்திச்சு :))
ஆச்சி.......கதை நல்லா இருக்கு ஆனா ஆயில்ஸ் தான் பாவம்...:)
இனியா
பேரைப் போலவே கதையும் அழகா இருக்குப்பா.
ஆனா அடிக்கடி எழுதாதீங்க (கதைய சொன்னேன்) ப்ளீஸ்.
கதை சூப்பர் !!!
தலைப்பு ஆங்கிலத்தில் ட்ரெண்டியா இருக்கு .. இனியாவின் கதை இனியதமிழில்.. :)
நல்ல கதை ...
//சௌந்தரி சொன்னாள், “ நான் எப்போவுமே நூற்றுக்கு நூறுதான் எடுப்பேன், இப்போ குறைஞ்சுப்போச்சே!” !!//
இப்படித்தான் நாங்க படிக்கிறப்பவும் எங்க குரூப்ல ஒரு கேரக்டரூ ஃபீல் பண்ணும்!
பட் நாங்க மனசுல நினைச்சுப்போம் “டேய்.... இதெல்லாம் நொம்ப ஓவரூடான்னு!
:)))
//பி.கு 1 : கலைமாமணி கேரக்டர் ஆயில்ஸை மனதில் கொண்டு எழுதப்படவில்லை.//
இதெல்லாம் நொம்ப்ப ஓவரூ...!
//கதை எனதுக் கற்பனையே. அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரலாமென்று விரும்புவோர் தயைச் செய்து சுட்டிக் காட்டவும்/
ஒரு மூணு பாட்டு
ரெண்டு ஃபைட்டு
ஒரு கார் சேசிங்க் வையுங்க பாஸ் :))))
அருமையாய இருந்தது உங்க பதிவு, இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் வோட்டும் போட்டாச்சு :-) http://sureshstories.blogspot.com/ நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)
//பி.கு 1 : கலைமாமணி கேரக்டர் ஆயில்ஸை மனதில் கொண்டு எழுதப்படவில்லை.//
நம்புறோம் பாஸ் :)
//கதை எனதுக் கற்பனையே. அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரலாமென்று விரும்புவோர் தயைச் செய்து சுட்டிக் காட்டவும்/
வேணாம் பாஸ், இதையே கண்டினியூ பண்ணுங்க, அப்புறம் புஜ்ஜி, சொச்சி ஆராய்ச்சிக்குப் போயிடுவீங்க
கதையிலே வார இனியா, சௌந்தரி ரெண்டு பெரும் நீங்க இல்லைன்னு நல்ல தெரியுது
//“இந்தப் புத்த்கத்தை அடுத்த வருஷத்திற்கு வச்சிப்பேன் மிஸ்” என்றாள் கலைமாமணி. //
இது கண்டிப்பா நீங்களாத்தான் இருக்கும்
////கதை எனதுக் கற்பனையே. அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரலாமென்று விரும்புவோர் தயைச் செய்து சுட்டிக் காட்டவும்/
ஒரு மூணு பாட்டு
ரெண்டு ஃபைட்டு
ஒரு கார் சேசிங்க் வையுங்க பாஸ் :))))//
மறுபடி ௬விக்கிறேன்
Good one...
mullai, Nila's Blog URL has been changed..So the link on amma's valaippo will error out..can you please update it when you get a chance....
Thanks for your help..
//ஒவ்வொரு முறையும், நாம் முன்பு செய்ததைவிட சிறப்பாக அடுத்தமுறைச் செய்வதே வெற்றி என்பது இனியாவிற்கு நன்றாகவே புரிந்திருந்தது! //
:)ம்ம் நல்ல புரிதல்..
கதை நல்லா இருக்கு ..தமிழ் சூப்பர்.. :)
Good one sissy :)
நன்றி ஜமால்,அமுதா!
நன்றி ரம்யா..உங்கள் நுட்பமான பாராட்டு ஊக்கமளிக்கிறது!
நன்றி நிஜம்ஸ் அண்ணா...:-)
ஆ..ஏன் அமித்து அம்மா..ஏன்?!!
நன்றி சசி, முத்து..ஆமா, என்ன தலைப்புன்னு ரொம்ப யோசிக்காம திடீர்ன்னு தோணினது! ;-)
நன்றி ஆயில்ஸ்..சரி வச்சுடறேன்..காமெடி மட்டும் எப்போவும் நீங்கதான்..ஓக்கேவா..அப்போப்பொ பெரிய பாண்டியும்!
நன்றி சுரேஷ்..கண்டிப்பா படிக்கறேன்!
நன்றி கானாஸ்...:-)
நன்றி நசரேயன்..எதுக்கு உங்களுக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்?!!
நன்றி நிலாவும் அம்மாவும்..கண்டிப்பா மாத்தறேன்!
நன்றி கவிதா & தூய்ஸ்!
நல்லா இருக்குங்க இனியா என்ற பெயர் உட்பட.
முல்லை, பள்ளி தொடக்க நாள்லேர்ந்து மாதப்பரிட்சை வரை கொண்டு செல்வது படிக்கும் குழந்தைகளுக்கு கொஞ்சம் அழற்சியைக் கொடுக்கும் வாய்ப்புண்டு. மாதப்பரிட்சைக்கு முன் நடக்கும் சம்பவங்கள் எதையாவது சேர்த்து பின்னர் பரிட்சை முடிவுகள் அதைத் தொடர்ந்த சம்பவங்களில் முடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இது பெரியவர்களாக சிறுவர் கதை மாதிரி இருக்கு. சிறுவர்களுக்காக முயற்சி செய்ங்க. வரும்காலத்தில் நல்ல குழந்தை எழுத்தாளராக வர வாழ்த்துகள்.
நன்றி குடுகுடுப்பை!
நன்றி ராஜா (கேவிஆர்-நல்லாதானே இருந்துச்சு...) இனி எழுத இருக்கும் கதைகளில் தங்கள் கருத்தை நடைமுறைப் படுத்த முயற்சி செய்கிறேன்!
ஹேய்! நீங்க குட்டீஸ்கு இப்படிக் கதை எல்லாம் எழுதுவீங்களா?
சூப்பர்!
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே! பேப்பர் கட்டோட மிஸ் வரும் போது பிள்ளைங்க மனசில தொணினதை எல்லாம் அழகா படம் பிடிச்சிருக்கீங்க.
அம்மாவின் வலைப்பூக்கள் ல் வந்த யானைக் குட்டிக் கதை நீங்க எழுதினது தானா?
கதை நல்லா இருக்கு!
எப்பவும் போல படிக்காம ஒரு பின்னூட்டம்:-)
இனியாவின் அனுகுமுறை அருமை.
இது அனைவருக்குமான கதையாக நான் பார்கிறேன். மதிப்பெண்கள் மட்டுமே கல்வி இல்லை என்று பெற்றோர்களும், மற்ற வயதில் முதியவர்களும் உணர்ந்துகொண்டால் குழந்தைகளின் வாழ்வு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
/
எனது முதல் கதையை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்! அதுதான் கடைசி என்று நினைத்து ஒரு சிலர் மகிழ்ந்துக் கொண்டிருப்பதாகத் தெரியவந்தது...அதான்!
/
:))))))))))))))
/
மதிப்பெண்கள் மட்டுமே நம்மை நிரூபிப்பதில்லை.
/
well said
Post a Comment