Tuesday, March 31, 2009

மாட்டு ஜூஸ்..

பொறுமைக்கு சோதனை + மூளைக்கு வேலை = பப்புவை பால் குடிக்க வைக்கறது! ஆனால், அவள் என்னதான் பிரச்சினை செய்தாலும், அழுதாலும், இப்போது அவளுக்குத் தெரியும் கண்டிப்பா குடிச்சுதான் ஆகணும், தப்பிக்க முடியாதுன்னு!! ஆனா ஒன்னு, அதுக்கு நான் புதுசு புதுசா கண்டுபிடிக்கணும் அவளை amuse செய்ய! ஒருதடவை வொர்க் அவுட் ஆனது அடுத்த முறை சுத்தமாக வேலைக்காகாது!

1. சிடி-கள் - பல சமயங்களில் உதவும், ஆனா “பப்பு குடி, பப்பு குடி” ன்னு ரீப்பிட்டிக்கிட்டே இருக்கணும்! (எங்க ஆயாவை எப்படில்லாம் லொள்ளு கொட்டியிருக்கேன், அதுக்கெல்லாம் சேர்த்துதான் இப்படின்னு நினைக்கிறேன்!)


2. காலை நேரமாயிருந்தால், வேன் கிட்டே போய் குடிக்கலாம் என்றால், வீட்டிலேயே குடிக்கறேன் என்று குடிப்பாள், ஆனால் நான் அதே ரிப்பீட்டு போட்டுக்கிட்டு இருக்கணும்!


3. ஸ்ட்ரா - கொஞ்ச நாள் பலன் தந்தது.

4. ஏதாவது ஆக்டிவிட்டீஸ்-ற்கு பொருட்களை எடுத்து வைத்துவிட்டு, பாலைக் குடிச்சு முடிச்சப்பிறகுதான் என்று ஒரு செக்!

5. பல சமயங்களில் "கதை சொல்வது" உதவியிருக்கிறது. ஆனா ரொம்ப பொறுமை தேவை!

6. ரிவர்ஸ் டெக்னிக் - பப்புவுக்கு அம்மா ரோல் கொடுத்தால், நான் அவள் மடியில் தலை வைத்துக் கொள்ள வேண்டும்! அதனால், பால் தம்ளரை அவளது கையில் கொடுத்து விட்டு, அவள் மடியில் தலை வைத்து திரும்ப அதே ரிப்பீட்டு.."அம்மா, குடிங்க அம்மா"!!


7. எண்கள் - 1 - 10 சொல்வதற்குள் (முன்னாடி இந்த டெக்னிக் வேலை செய்தது..இப்போது எப்போவாவது!!)

8. பேப்பர் கப்ஸ்

9. சாஸர் அல்லது குட்டிக் கிண்ணத்தில்...

...இன்னும் பல!! இப்படியெல்லாம் செய்து தம்ளரை காலி செய்ய வைத்ததும் நமக்கு வருமே ஒரு ஆயாசம்+சோர்வு..கூடவே கொஞ்சம் ஜாலி...இன்னும் கொஞ்ச நேரத்துக்கு ஃப்ரீ-யா இருக்கலாம்-னு! huh! :-)..ஆனால், இவை எதையுமே செய்யாமல் அவளாகவே எடுத்துக் குடிக்கும் ஓர் நாளை கனவு கண்டுக் கொண்டிருக்கிறேன், ஆனால், உள்மனசுக்குத்த் தெரியும்..அந்த நாள் வர இரு பத்தாண்டுகள் வேண்டுமென..ஏனெனில் DNA அப்படி!! DNA-வை மீறி அற்புதங்கள் நடக்குமா??

*மாட்டு ஜூஸ் : எஸ்விசேகர், ஒரு டிராமாவில், முதியோர் கல்வி மாதிரி சொல்லிக்கொடுப்பார். ஆரஞ்ச் ஜூசைக்காட்டி இது என்ன, "ஆரஞ்ச் ஜூஸ்", ஆப்பிள் ஜூசைக்காட்டி, இது என்ன, "ஆப்பிள் ஜூஸ்", பாலைக் காட்டியதும் மக்கள்ஸ் சொல்வாங்க, "இது மாட்டு ஜூஸ்" !!

44 comments:

♥ தூயா ♥ Thooya ♥ said...

தன் வினை தன்னை சுடும் :P

கிகிகிகி

வித்யா said...

same blood:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்க பப்புவுக்கு பால் கொடுப்பதற்கு எப்படி சோதனை + வேலை எல்லாம் செய்யறீங்களோ அதே போல சேம் ப்ளட் எனக்கும் அமித்துவிடவும் உண்டு.

இப்பல்லாம் அமித்து ந்நானா என்று வேகமாக தலையை ஆட்டி மறுத்துவிட ஆரம்பிக்கிறாள்.

நானும் இனிமே யோசிக்கிறேன் அவளை எப்படி amuse செய்வது என,
ஏற்கனவே இருக்கும் காக்கா, பூனை, நாய், என எதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை இப்போ.

எனக்கு அந்த உங்களோட ரிவர்ஸ் டெக்னிக் ரொம்ப பிடிச்சிருக்குது.

மாட்சூஸ் -- ஆஹாஹா

ராமலக்ஷ்மி said...

//ஏனெனில் DNA அப்படி!!//

:))!

எஸ்வி சேகர் ட்ராமா பார்த்து இல்ல, நம்புங்க. நாங்களும் சொல்லியிருக்கிறோம், க்ளாஸ்ல பாலை எடுத்துக் கொண்டு ‘ஸ்ஸ்ஸ் நைஸ்’னு குடிக்க ‘என்னாது’ன்னு உடன் பிறப்புகள் கேட்க ’ஜூஜூஸ்ஸ்’ங்க ‘உனக்கு மட்டுமா, அம்மா’ என அலற அப்புறமா ‘கெள ஜூஸ்’னு முடிச்சிருக்கோம்:)!

கவிதா | Kavitha said...

மாட்டு ஜீஸ் ன்னு பார்த்தவுடன் கொஞ்சம் பயந்து போய் வந்தேன்..

ஆனா பப்புக்கு பாலை குடுக்க வைக்க..முல்ஸ் க்கு ஜூஸ் தேவைப்படும் போல :) அதுக்குதான் நாம சின்ன புள்ளையில நல்ல புள்ளையா இருந்து இருக்கனும் :)

நட்புடன் ஜமால் said...

\\ரிவர்ஸ் டெக்னிக் - பப்புவுக்கு அம்மா ரோல் கொடுத்தால், நான் அவள் மடியில் தலை வைத்துக் கொள்ள வேண்டும்! அதனால், பால் தம்ளரை அவளது கையில் கொடுத்து விட்டு, அவள் மடியில் தலை வைத்து திரும்ப அதே ரிப்பீட்டு.."அம்மா, குடிங்க அம்மா"!!\\

ரொம்ப அழகா இருக்கு

நெகிழ்வாவும்

உவ்வொரு தாயும் சற்றே சாய்வதற்கு மடி தேடுவார்கள் பிள்ளையாய் மாறி அதுவும் பிள்ளையிடமே ...

எம்.எம்.அப்துல்லா said...

//உவ்வொரு தாயும் சற்றே சாய்வதற்கு மடி தேடுவார்கள் பிள்ளையாய் மாறி அதுவும் பிள்ளையிடமே ...

//

கன்னாபின்னான்னு வழிமொழியுறேன்

:)

ஆகாய நதி said...

:) தாய் என்றாலே இந்த பொறுமைதாங்க வேணும்...

அதுங்க வயிறு நிரம்பியதும் நம் மனசு நிரம்புது பாருங்க.... ஆஹா... அதுல சந்தோஷம்.... நீங்களாவது பரவால.... என் பாட்ட கேட்டீங்கனா நல்லா சிரிப்பீங்க பொழிலன நினைச்சு... ஏகப்பட்ட டெக்னீஸ்... ஸ்ஸ்ஸ் அப்பா...

ஆகாய நதி said...

ஆனா அந்த மாட்டு ஜூஸ் செம காமெடி... நல்ல வேளை என் தங்கைக்கு இது தெரியாது... இல்லனா திருநெல்வேலி அல்வாவ மாட்டுசாணினு சொன்னவ பாலையும் மாட்டு ஜூஸ்னு ஒதுக்கிடுவா... :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அம்மா குடிங்கம்மா அம்மா குடிங்கம்மா .. கேக்கவே இன்பமா இருக்கே...

இங்க சபரிக்கு அவனுக்கான பூஸ்ட் ல ஒருஸ்பூன் காப்பி இல்லாட்டி டீ டிக்காசனை அவன் கண் முன் கலக்கி தரனும் பூஸ்டை குடிச்சிடுவான்.

நையாண்டி நைனா said...

என் அக்கா பெண்ணிற்கு நான் இப்படிதான் கொடுப்பேன்... ஆனா இப்ப நல்லா வளர்ந்து விட்டாள்

அபி அப்பா said...

சத்தியமா இது போல எல்லாம் நான் என் அம்மாவிடம் அனுபவச்சதில்லை. குடிச்சா குடி இல்லாட்டி பசிக்கும் போது குடி அத்தனையே!ரொம்ப பிராக்டிகல் அம்மா என் அம்மா கிட்ட தட்ட கிருஷ்ணா மாதிரி, ஆனா நான் தான் கொஞ்சம் அப்நார்மல் குழந்தைகள் கிட்ட சொல்ல போனா உங்களை மாதிரி:-))))))

Deepa said...

மாட்டு ஜூஸ்! சூப்பர் பேரு.
நல்ல பதிவு.

//பல சமயங்களில் "கதை சொல்வது" உதவியிருக்கிறது. ஆனா ரொம்ப பொறுமை தேவை!//
இது தான் ரொம்பத் தேவையாக இருக்கிறது.
அப்புறம் சந்தனமுல்லை, என் தொடர் பதிவில் உங்களை அடுத்த் பதிவராக அழைத்திருக்கிறேன். உங்களுக்கு ஆர்குட்டில் ச்க்ராப்பும் அனுப்பியுள்ளேன். பாருங்கள்,

நிஜமா நல்லவன் said...

:)

தீஷு said...

மாட்டு ஜூஸ் பாத்தவுடன் என் நினைவுக்கு வருவது, தேங்காய் ஜூஸ். தீஷு இப்படி தான் தேங்காய் தண்ணீக்கு சொல்றா.

கானா பிரபா said...

பாஸ்

தலைப்பைப் பார்த்து பயந்துட்டேன்.

பப்பு உங்களை நல்லாத் தான் படிச்சு வச்சிருக்கு போல :)

ஆயில்யன் said...

//அதுக்கு நான் புதுசு புதுசா கண்டுபிடிக்கணும்//

அப்ப ஆச்சி மூளைக்கு நிறைய வேலை கொடுக்குறாங்கப்பா பாவம்...! :((

ஆயில்யன் said...

//சிடி-கள் - பல சமயங்களில் உதவும், ஆனா “பப்பு குடி, பப்பு குடி” ன்னு ரீப்பிட்டிக்கிட்டே இருக்கணும்! (எங்க ஆயாவை எப்படில்லாம் லொள்ளு கொட்டியிருக்கேன், அதுக்கெல்லாம் சேர்த்துதான் இப்படின்னு நினைக்கிறேன்!)/

பப்பு நீ அவ்ளோ டெரராவாம்மா நடந்துக்கிற, இல்ல... ஆச்சி சும்மாங்காட்டியும் பில்ட்-அப் கொடுக்குறாங்களா....?
கனிவுடன்...

பப்பு பேரவை
தோஹா-கத்தார்

ஆயில்யன் said...

//ஸ்ட்ரா - கொஞ்ச நாள் பலன் தந்தது.//

பப்பு நாம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்மளை உத்து பாக்கணும்!
கண்டினியூ!
கண்டினியூ!

ஆயில்யன் said...

//பல சமயங்களில் "கதை சொல்வது" உதவியிருக்கிறது. ஆனா ரொம்ப பொறுமை தேவை!
//

பப்பு:-

ஆச்சிக்கிட்ட கதை கேக்குறதுக்கு ஹிஹி...

ஆயில்யன் said...

//பப்புவுக்கு அம்மா ரோல் கொடுத்தால், நான் அவள் மடியில் தலை வைத்துக் கொள்ள வேண்டும்!//

சிறுவர் வதை தடுப்பு சட்டமெல்லாம் இங்க யூஸ் பண்ணினாத்தான் சரிப்பட்டு வரும்போல....???!!

ஆயில்யன் said...

//மாட்டு ஜூஸ் : எஸ்விசேகர், ஒரு டிராமாவில், முதியோர் கல்வி மாதிரி சொல்லிக்கொடுப்பார்//

அது பெரிய தம்பி நாடகம் :)))


திருகாணி:-
என்ன சொல்றீங்க மச்சான்?
இது மாமு மாமுன்னு சொன்ன வாய்


பெரியதம்பி:-
ஆமாம்!
மாமு மாமுன்னு சொல்லி உனக்கு வாயே குறுகிடுச்சு அண்ணான்னு சொல்லு அகலமாயிடும்!

கானா பிரபா said...

ஆயில்யன் said...

//அதுக்கு நான் புதுசு புதுசா கண்டுபிடிக்கணும்//

அப்ப ஆச்சி மூளைக்கு நிறைய வேலை கொடுக்குறாங்கப்பா பாவம்...! :((//

ரிப்பீட்டே

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
அம்மா குடிங்கம்மா அம்மா குடிங்கம்மா .. கேக்கவே இன்பமா இருக்கே...

இங்க சபரிக்கு அவனுக்கான பூஸ்ட் ல ஒருஸ்பூன் காப்பி இல்லாட்டி டீ டிக்காசனை அவன் கண் முன் கலக்கி தரனும் பூஸ்டை குடிச்சிடுவான்.
//

ஆஹா சீரியஸ் அம்மாக்கள் பதிவுல கும்மியடிச்சுட்டேனோ

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்னிய மன்னிச்சுடுங்கோ

மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

தமிழ் பிரியன் said...

அப்ப ஃபீல் பண்ணுவீங்க... பப்பு ஏதும் சேட்டை செய்ய மாட்ரேளே என்று.. ;-))

கைப்புள்ள said...

//மாட்டு ஜூஸ் : எஸ்விசேகர், ஒரு டிராமாவில், முதியோர் கல்வி மாதிரி சொல்லிக்கொடுப்பார். ஆரஞ்ச் ஜூசைக்காட்டி இது என்ன, "ஆரஞ்ச் ஜூஸ்", ஆப்பிள் ஜூசைக்காட்டி, இது என்ன, "ஆப்பிள் ஜூஸ்", பாலைக் காட்டியதும் மக்கள்ஸ் சொல்வாங்க, "இது மாட்டு ஜூஸ்" !!

//

தலைப்பைப் படிச்சிட்டு பகீர்னு இருந்துச்சுன்னாலும் கடைசி சில வரிகளைப் படிச்சதும் குபீர் சிரிப்பு.

//அந்த நாள் வர இரு பத்தாண்டுகள் வேண்டுமென..ஏனெனில் DNA அப்படி!! DNA-வை மீறி அற்புதங்கள் நடக்குமா??
//

பப்புவுக்கு மனமிருந்தால் மார்க்கபந்து.
:)

ராஜா said...

என் பொண்ணு நேத்து உலக அதிசயமா என்னோட பாட்டுக் கேட்டுக் குடிச்சிட்டா. பாலைக் குடிக்கலைன்னா பாட்ட நிறுத்த மாட்டான், இவனோட பாட்டுக்கு இந்தப் பாலே பெட்டர்ன்னு நினைச்சுக் குடிச்சிருப்பான்னு நினைக்கிறேன்...

//இப்படியெல்லாம் செய்து தம்ளரை காலி செய்ய வைத்ததும் நமக்கு வருமே ஒரு ஆயாசம்+சோர்வு..கூடவே கொஞ்சம் ஜாலி...இன்னும் கொஞ்ச நேரத்துக்கு ஃப்ரீ-யா இருக்கலாம்-னு! huh!//

என் தங்கமணி இந்த வரியை படிச்சா "ஆமா ஆமா ஆமா"ன்னு 100 ஆமாம் போடுவா :-)

குடுகுடுப்பை said...

இதேதான் எங்க வீட்லேயும் நடக்குது, எனக்கு அவ பசிச்சா சாப்பிடுவான்னும் தோனும். சொல்வேன் திட்டு விழும் எனக்கு.

Sasirekha Ramachandran said...

ஆஹா....பப்புக்கு இன்னும் பத்து வருஷம்தானா??எங்கம்மா எனக்கு கல்யாணம் ஆகும் வரை என்னை நீங்க சொல்ற மாதிரிதான் சொல்லிட்டே இருப்பாங்க தெரியுமா?அதுலயும் எத்தனை தடவை தெரியாம தட்டி விட்டிருக்கேன் தெரியுமா?பாவம் அம்மா...

பத்மாக்கு இப்போ nesquik சாக்லேட் பவுடர் போடறதால நான் மறந்தாலும் அவளே இப்பல்லாம் கேட்டுக் குடிக்கிறா....
:-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

டிக்.. (மறந்துட்டீங்களா? அதாவது அற்புதம்)

நசரேயன் said...

//எண்கள் - 1 - 10 சொல்வதற்குள் (முன்னாடி இந்த டெக்னிக் வேலை செய்தது..இப்போது எப்போவாவது!!)//

ரெம்ப நல்லா இதுதான் நடக்குது என் வீட்டிலே

வால்பையன் said...

தாயைபோல பிள்ளை
நூலைப்போல சேலைன்னு

சும்மாவா சொல்லிருப்பாங்க!

பிரேம்குமார் said...

ஹாஹாஹா... ஒவ்வொரு முறை பப்பு குறும்பு செய்யும் போது உங்கள் பாட்டியையும் பெரியம்மாவையும் நினைத்து கொள்கிறீர்கள் போல :)

தாரணி பிரியா said...

:)

" உழவன் " " Uzhavan " said...

மாட்டு ஜூஸுக்கு பயந்து உங்க பொண்ணு, பக்கத்து வீட்டுலலாம் போயி ஒளிய மாட்டாளா? :-)

அமுதா said...

நந்தினி கொஞ்ச நாள் மாட்டு ஜூஸ் ஊத்தி எங்களுக்கு தெரியாமல் செடி வளர்த்தாள். பிள்ளை எவ்ளோ சீக்கிரம் தானா பாலைக் குடிக்குதுனு நினைச்சா ஒரு நாள் செடி வளர்க்கறது தெரிஞ்சுது :-))

Divyapriya said...

haa haa haa :D nalla comedy, naan kooda muzhichen, ennadaa maattu juice nu…super thathuvam thaan :)

சந்தனமுல்லை said...

நன்றி தூயா! ஓ உங்களுக்கு பழமொழியும் தெரியுமா! கலக்கறீங்க போங்க!

நன்றி வித்யா!

நன்றி அமித்து அம்மா! ஆகா, அமித்து படு உஷார் போல! :-)

நன்றி ராமலஷ்மி..அதானே..நீங்க யாரு..எஸ்விசேகருக்கே அக்காவா இருப்பீங்க போலிருக்கே!

நன்றி கவிதா..அதுக்காக நாம் நல்ல புள்ளையா இருக்கறதா சான்சே இல்லை! :-)) நீங்க மட்டும் என்னவாம்? அட்வைஸ் மட்டும் பண்ணுவீங்களே நல்லா!

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால், அப்துல்லா!

நன்றி ஆகாயநதி, பொழில் இப்போவே ஆரமிபிச்சுட்டரா சுட்டிதான்!

நன்றி முத்து..நீங்க இந்த டெக்னிக்கா! சூப்பர்!


நன்றி நையாண்டி நைனா..உங்கள் நினைவுகளை எங்க்ளோடு பகிர்ந்துக் கொண்டதுக்கு!

நன்றி அபிஅப்பா..அந்தக்காலத்து அம்மாங்க வேறே..இந்தக் காலத்து அம்மாங்க வேற! இது இன்ஃபொர்மேஷன் ஏஜ், அபி அப்பா!

சந்தனமுல்லை said...

நன்றி தீபா, நேஹா எப்படி?!

நன்றி நிஜமா நல்லவன் அண்ணா!

நன்றி தீஷு !சுட்டிதான்!

நன்றி கானாஸ்..ஆகா..ஆரம்பிச்சுட்டீங்களா..சின்ன பாண்டியும் பெரிய பாண்டியும்! அவ்வ்வ்!
டெரரா..மகா டெரர் ஆயில்ஸ்! நீங்களும் அந்த டிராமாவை பார்த்திருக்கீங்களா..நான் கேட்டது மட்டும்தான்!

சந்தனமுல்லை said...

ஆயில்ஸ்..எதுக்கு எஸ்கேப்..மன்னிப்பு! :-)) அவ்ளோ பயம் இருக்கட்டும்!!


நன்றி தமிழ்பிரியன்! :-)

நன்றி கைப்ஸ் அண்ணா..உங்க பதிவுக்கும் சரி கமெண்டுக்கும் சரி..நான் உங்க பேன்!

சந்தனமுல்லை said...

நன்றி ராஜா..எப்படியோ குடிச்சா சரி!

நன்றி சசி! நான் இரு பத்தாண்டுகள்ன்னு சொன்னேன் சசி! :-)சமத்து பத்மா!

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்...இந்த டிக் எல்லாம் எதுக்கு..படிச்சீங்கன்னா ஓக்கே! பின்னூட்டம் போடணும்னு கட்டாயப்படுத்திக்காதீங்க..:-)..ரிலாக்ஸ்!

நன்றி நசரேயன்..எபப்டியோ சாப்பிடறாங்களா..அதான் மேட்டர்!

சந்தனமுல்லை said...

நன்றி வால்பையன்..இதெல்லாம் கரெக்டா சொல்லுவீங்களே!

நன்றி பிரேம்..முற்பகல் செய்யின் தான்!

நன்றி தாரணி பிரியா!

நன்றி அமுதா..ஆகா செடி நல்லா வளர்ந்துக்குமே!

நன்றி திவ்யாபிரியா..:-))

சந்தனமுல்லை said...

நன்றி உழவன்..இப்பொவரை அப்படி இல்லை! :-)