Monday, March 02, 2009

டீச்சர் பசங்களாகிப் போனதன் சோகங்கள்!!

டீச்சர் பசங்களா இருக்கறது கஷ்டம்..ஆனா அதைவிட கஷ்டம் அந்த டீச்சர் வேலை செய்ற பள்ளிக்கூடத்தில் படிக்கறதுதான்! மேலோட்டமா பார்த்தா நிறைய அட்வாண்ட்டேஜஸ் இருக்கற மாதிரி தெரியும்..ஆனா நல்லா கவனிச்சா,எவ்வளவு சோகம் இருக்குன்னு டீச்சர் பசங்களுக்குத்தான் தெரியும்......சிங்கை நாதனும், கேவிஆர்-க்கும் இதேதானான்னு சொல்லனும்!! :-))

1. நாம பள்ளிக்கூடத்திலே சேர்ந்து வகுப்புக்குப் போனதும், நமக்கேத் தெரியாம ரெண்டு குரூப் உருவாகிடும்.ஒன்னு டீச்சர் பசங்கன்னு நம்மகிட்டே பேசமாட்டாங்க, இன்னொரு க்ரூப், டீச்சர் ப்சங்கன்னு நம்மகிட்டே பேசுவாங்க! ஆனா இப்படிரெண்டு க்ருப்-கள் இருக்கறது நமக்கே தெரிஞ்சிருக்காது..நாம அதுக்கு எந்த விதத்திலேயும் காரணமில்லேன்னாலும்! ஆனா,காலப்போக்கில், ரெண்டு க்ரூப்-ல் இருக்கறவங்களும் இடமாறலாம், ஆனா அந்த க்ரூப்-கள் இருந்துக்கிட்டேதானிருக்கும்! நாம அந்த க்ரூப்-க்கு லீடரா மாறுவது அவரவர் திறமை/ஆர்வத்தைப் பொறுத்தது!

2. நம் செல்லப் பெயர்கள் almost எல்லா டீச்சர்களுக்கும் தெரிஞ்சிருக்கும்....அதுவும் சிலசமயம் நாm செய்த குறும்புத்தனங்கள், அசட்டுதனங்கள்-னுஎல்லா வரலாறும் பலருக்கு தெரிஞ்சிருக்க நிறைய வாய்ப்பு இருக்கு! சில டீச்சர்களால், நம்மைச் செல்லப் பெயரால கூப்பிடறதை மாத்திக்கமுடியாது..ஆனா இந்தப் பிரச்சினை மேல் வகுப்புகளுக்குச் செல்லச் செல்ல குறையலாம்!

3. நமக்கேத் தெரியாம நாம கவனிக்கப்பட்டுக்கொண்டேயிருப்போம்! (Ouch! How I hated that!!) கொஞ்ச நேரந்தானே..நிர்மலா கூப்பிட்டாளே, அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வரலாமேன்னு நினைச்சுடக் கூடாது....நாம திரும்ப கிளாஸுக்கு போறதுக்குள்ள,செய்தி பள்ளிக்குப் போய்டும்..அதேமாதிரி, நாம விடைத்தாள் வாங்கிட்டு வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி நம்ம மார்க் விஷயங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கும்!!

4. நமக்கு நிறைய பேரைத் தெரியலேன்னாலும் நிறையப் பேருக்கு நம்மைத் தெரிஞ்சிருக்கும்! அதுதான் டேஞ்சரான மேட்டர்..அதே சமயம் ஜாலியாவும் இருக்கும்..நான் ராத்திரி ட்ரெயின்லே வந்தாலும் ஆட்டோ அண்ணாக்கள் நம்மைப் பார்த்ததும், பையை வாங்கிக்கிட்டு"டீச்சர் வீடுதானேம்மா"-ன்னு சொல்லிக்கிட்டே ஆட்டோவை ஸ்டார்ட் செய்வாங்க!

5. போட்டிகளிலே கலந்துக்கிட்டு பரிசு வாங்கிட்டோம்-னா டீச்சர் பசங்கன்னு கொடுத்துட்டாங்கன்னு சிலபேர் கிண்டல் செய்வாங்க....வேறயாரு..நம்ம கூட இருக்கறவங்க..இல்லன்னா போட்டியிலே கலந்துக்கிட்டவங்க! ஆனா அதையெல்லாம் தாண்டி நம் பெர்பாமன்ஸ் இருக்கணும்! அது ஒரு டென்ஷன்!! அதே சமயம், பப்ளிக் எக்சாம்-ன்னா எல்லாருக்கும் நம்ம மேல ஒரு எதிர்பார்ப்பு இருக்கு..அதுவும் ஒரு டென்ஷன்....

சமயத்துல காமெடியாவும் இருக்கும்..ஒன்பதாவது படிச்சுக்கிட்டிருக்கும்போது, வீட்டுக்கு வர்றவங்க, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கேள்வி கேட்பாங்க...

"என்னம்மா, எந்தக் கிளாஸ் படிக்கிறே?!"

நைன்த் அங்கிள்!

ஓ..நைன்த்தா..அடுத்த வருஷம் டென்த்தா?!

ஹிஹி..ஆமா அங்கிள்! (மனசுக்குள் பின்ன திரும்ப எய்த்தா படிப்பாங்க...grrrrrrr!!)

சரி,இவங்க தொல்லைத் எனக்கு மட்டும்தான் இப்படின்னு பார்த்தா, என் ப்ரெண்ட்ஸ் நிறைய பேருக்கு இந்த அனுபவம்!!நைந்த்-க்கு அப்புறம் டெந்த்தானே படிப்பாங்க!! அவ்வ்வ்வ்வ்வ்வ்!அது வந்து, பப்ளிக் எக்ஸாமாம்..அதனால அவங்க அப்படி ஒரு விழிப்புணர்வைத் நமக்குத் தர்றாங்களாம்..:-)ஆனா, +1 படிக்கும்போது இந்தக் கேள்விக்கெல்லாம் அசரவேயில்லையே நாங்கள்!!

இன்னும் நிறைய இருக்கு..சோகங்கள்....வேறு ஒரு நாளில் தொடர்கிறேன்! :-)

69 comments:

குட்டிபிசாசு said...

அப்படியே என்னோட கருத்தையும் கூட்டிக்குங்க! டீச்சர் பிள்ளையா இருந்தா பிற டீச்சர்கள் அவ்வளவாக கண்டிப்புடன் இருக்க மாட்டாங்க! அதனால என்னைப் போல சுமாராக படிக்கிறவங்க நல்ல படிக்க முடியாம போக வாய்ப்பு இருக்கு.
- இப்படிக்கு
பாதிக்கப்பட்டவன்

Iyarkai said...

இதே சோக‌ங்க‌ள் என‌க்கும் உண்டு:-(

அன்புடன் அருணா said...

இப்போ என் பசங்களுக்கு ஸேம் ப்ளட்!!!!(Same blood)
நல்லா எழுதிருக்கீங்க..
அன்புடன் அருணா

Iyarkai said...

//மேலோட்டமா பார்த்தா நிறைய அட்வாண்ட்டேஜஸ் இருக்கற மாதிரி தெரியும்..//

அட்வான்டேஜ் எல்லாம் பேர‌ண்ட்ஸ்க்கு.. ந‌ம‌க்கில்லேங்க‌

Sathananthan said...

நானும் டீச்சர் மகள் தான். உண்மையிலேயே அது பெரிய தொல்லை என்பது அனுபவித்தால் தான் புரியும். கிளாசில் செய்யும் சேட்டைகளுக்கு கிளாசில் மட்டுமல்ல வீட்டிலும் வாங்கிக் கட்ட வேண்டி வரும். Public exam வரும் போது performance மிகவும் நன்றாகவே இருந்ததால் தப்பித்தேன். டீச்சர் பிள்ளை-சலுகை என்ற பேச்சு எந்தக் காலத்திலும் தவிர்க்க முடியாது. என்னைப் பொறுத்த வரை நன்மை என்றால் நாங்கள் கொஞ்சம் வளர்ந்த பிறகு அந்த டீச்சரின் பிள்ளை என்ற நெகிழ்வுடனான கவனிப்பும் மரியாதையும் தான்.

குடுகுடுப்பை said...

எங்கப்பாதான் எனக்கு பத்தாப்பு கிளாஸ் வாத்தியார். ஒன்னாபுலேந்து அவரு கூடதான் மிதிவண்டி,பின்னர் மொபட்டில் பள்ளிக்கு செல்வோம். ஒரு ஓணான் அடிக்கும் உரிமையக்கூட இழந்த குடுகுடுப்பை.

தனிப்பதிவாதான் போடனும்.

வித்யா said...

ரொம்ப கஷ்டம் தான். கடைசி கேள்வி என்னிடமும் கேட்கப்பட்டது.

தாரணி பிரியா said...

அட இப்படி எல்லாம் கூட இருக்கா. நாங்க எல்லாம் எங்க ஸ்கூல்ல படிச்ச டீச்சர் பசங்களை நீங்க சொன்ன மாதிரியே சொல்லி இருக்கோம் :(. இப்ப கஷ்டமா இருக்கே. இன்னொரு பக்கமும் இருக்குன்னு இப்பதானே புரியுது

முரளிகண்ணன் said...

நாங்கள்லாம் பள்ளி நாட்கள்ல டீச்சர் பசங்களப் பார்த்து பொறாமைப் படுவோம்.

எம்.எம்.அப்துல்லா said...

//போட்டிகளிலே கலந்துக்கிட்டு பரிசு வாங்கிட்டோம்-னா டீச்சர் பசங்கன்னு கொடுத்துட்டாங்கன்னு சிலபேர் கிண்டல் செய்வாங்க.//

என்னுடன் படித்த என் தோழி புவனா இதைச் சொல்லி என்னிடம் புலம்பிய பழைய நினைவைக் கிளறி விட்டது உங்கள் பதிவு.

நட்புடன் ஜமால் said...

ஓஹ்!

இவ்வளவு கஷ்டங்கள் இருக்கா இதுல

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:))

கோவி.கண்ணன் said...

டீச்சர் பசங்க 10 ஆம் வகுப்பு வரை தோல்வி அடையமாட்டாங்க. அதை சேர்கலையா ?

:)

கானா பிரபா said...

//அப்படியே என்னோட கருத்தையும் கூட்டிக்குங்க! டீச்சர் பிள்ளையா இருந்தா பிற டீச்சர்கள் அவ்வளவாக கண்டிப்புடன் இருக்க மாட்டாங்க! அதனால என்னைப் போல சுமாராக படிக்கிறவங்க நல்ல படிக்க முடியாம போக வாய்ப்பு இருக்கு.
- இப்படிக்கு
பாதிக்கப்பட்டவன்//


ரிப்பீட்டே

பாதிக்கப்பட்டோர் பேரவை
சிட்னி கிளை

புதுகைத் தென்றல் said...

:)))

கவிதா | Kavitha said...

//ஓ..நைன்த்தா..அடுத்த வருஷம் டென்த்தா?!

ஹிஹி..ஆமா அங்கிள்! (மனசுக்குள் பின்ன திரும்ப எய்த்தா படிப்பாங்க...grrrrrrr!!)//

டேய், ஃபெயில் ஆயிட்டா.. னு ஒரு ஆப்ஷன் இருக்கே..?!! அதை கவனிக்கலையா?
--------------------------------
//போட்டிகளிலே கலந்துக்கிட்டு பரிசு வாங்கிட்டோம்-னா டீச்சர் பசங்கன்னு கொடுத்துட்டாங்கன்னு சிலபேர் கிண்டல் செய்வாங்க.//

ஆமா ஆனா நானு கிண்டல் எல்லாம் செய்ய மாட்டேன் . .ட்ரேக்டா போய் டீச்சர் + அவங்க பொண்ணு இரண்டு பேர் கிட்டயும் கேட்டுடுவேன்.. சில சமயம் டீச்சர் கிட்ட திட்டு கிடைக்கும், சில சமயம் எப்படி பரிசு கிடைத்தது ன்னு விளக்கமா சொல்லுவாங்க.. :)

கவிதா | Kavitha said...

பட், பல தோழிகள் புலம்புவது, மற்றவர்களுக்கு கொடுக்கும் எந்த சலுகையும் டீச்சராக இருக்கும் அம்மாவோ, அப்பாவோ எங்களுக்கு கொடுப்பதில்லை.. ஏன் பாடம் கூட மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பது போன்று எங்களுக்கு சொல்லி தருவதுஇல்லை என்பார்கள். :)

சந்தனமுல்லை said...

நன்றி குட்டிபிசாசு...உண்மைதாங்க..:-)..ஆனா சில டீச்சர்கள் அநியாயத்துக்கு கண்டிப்பா இருப்பாங்க!!

நன்றி இயற்கை..//அட்வான்டேஜ் எல்லாம் பேர‌ண்ட்ஸ்க்கு.. ந‌ம‌க்கில்லேங்க‌// சரியா சொல்லியிருக்கீங்க!


நன்றி அன்புடன் அருணா..ஆகா..பசங்க மாட்டிட்டாங்களா..:(

சந்தனமுல்லை said...

நன்றி Sathananthan! உணர்ந்து சொல்லியிருக்கீங்க!

நன்றி குடுகுடுப்பை..ஆகா..நீங்களும் சேம் பிளட்!! இந்த மாதிரி நிறைய உரிமைகள் நம்மிடமிருந்து பறிக்கப் பட்டிருக்கின்றன..அவ்வ்வ்வ்! :-)

நன்றி வித்யா!

சந்தனமுல்லை said...

நன்றி தாரணி.சிலசமயங்களில் அது உண்மையாகவும் இருக்கலாம்...ஆனா அப்படி இல்லாதப்போ மிகவும் கஷ்டமா இருக்கும்..என்னடா..நாம செஞ்சதுக்கு க்ரெடிட் அவங்களுக்கு போகுதேன்னு..;-))

நன்றி முரளிக்கண்ணன்..ஆகா..ஏன்? இந்தக் கொடுமைய அனுபவிக்கவா?!:-))


நன்றி அப்துல்லா!

Poornima Saravana kumar said...

சிலர் டீச்சர் பசங்கண்ட்ர திமிருடன் அப்பாவிப் பசங்களை அடிப்பதும் உண்டு:(

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால், முத்துலெட்சுமி!

நன்றி கானாஸ்...ஆகா..கிளைகள் நிறைய இருக்கும் போல இருக்கே! ;-)

நன்றி கோவி.கண்ணன்...ஹ்ம்ம்..என்னங்க சொல்றது..பாஸாகலைன்னா, டீச்சர் பிள்ளை மக்குன்னு சொல்றாங்க..பாஸானா இந்த மாதிரி சொல்றாங்க..இதுதான் கலி"காலமோ"..:-))

சந்தனமுல்லை said...

நன்றி புதுகை..

நன்றி கவிதா..இப்படி கேட்டுட்டா பிரச்சனையே இல்லை..உங்க தோழிகள் புலம்புவதும் உண்மைதான்..:(

நன்றி புர்ணிமா!

KVR said...

//சிங்கை நாதனும், கேவிஆர்-க்கும் இதேதானான்னு சொல்லனும்!! :-))//

முல்லை, அதைப் பத்தி கேக்க ஆரம்பிச்சிங்கன்னா "என் சோகக்கதைய கேளு தாய்க்குலமே"ன்னு ஆரம்பிச்சிடுவேன்.

1. என்னோட அப்பாவை நானே சார்ன்னு ஸ்கூல்ல கூப்பிடணும். எனக்கு அப்படி சுட்டுப் போட்டாலும் வராது. அதனால அப்பா கூட ஸ்கூல்ல பேசுறப்போ சார்ன்னும் சொல்லாம அப்பான்னும் கூப்பிடாம மொட்டையா பேசுவேன். ஆனா, என் தங்கச்சி சூப்பரா வாய்க்கு வாய் சார் சொல்லுமாம், எனக்கு தான் கடைசி வரை அப்படி கூப்பிட வரல.

2. எங்க அப்ஸ் ஸ்கூல்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட், அதுவும் தன் பையன்னா ரொம்பவே ஸ்ட்ரிக்ட். ஸ்கூலுக்குள்ளே போய்ட்டாலே எப்பவும் எதோ ஒரு கண் என்னை கண்காணிச்சிக்கிட்டே இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும். எதையுமே பயந்து பயந்து தான் செய்வேன். ஆனாலும் ஒரு முறை எனக்கே தெரியாம பாராட்டும் வாங்கிருக்கேன். ஸ்போர்ட்ஸ் பீரியட்ல பால்பாட்மிண்டன் ஆட போட்டி அதிகமா இருக்கும். இருக்கிற பேட்டையெல்லாம் போட்டிப் போட்டுப் பிடிங்கிப்பாங்க. நான் ஒரு முறை பிடி சார்கிட்டே பேட்ஸ் & பால் வாங்கிட்டு வர, பசங்க ரொம்ப வேகமா பேட்டையெல்லாம் பிடுங்கிட்டாங்க. நான் கைல பந்தை வெச்சிக்கிட்டு எனக்கு ஒரு பேட் கொடுக்கலைன்னா எவனும் விளையாட முடியாதுன்னு நின்னேன். எங்கிருந்தோ என் அப்பா இதைப் பார்த்துட்டு "என் புள்ள எவ்ளோ அறிவாளியா இருக்கு"ன்னு இன்னொரு ஆசிரியர் கிட்டே சொன்னதா கேள்விப்பட்டேன்.

3. ஸ்கூல்ல மாதப் பரிட்சை வைப்பாங்க. அப்போ ஒரு முறை வரலாறு புவியியல்ல (என் அப்பா எடுக்கும் பாடம்) என்ன கேள்வியெல்லாம் படிக்கலாம்ன்னு ஒரு பையன் கேக்க, நானும் சும்மா இல்லாம எனக்கு முக்கியமாப்பட்ட கேள்விகளச் சொல்ல, அது அப்படியே பரிட்சையிலே வர, வாத்தியார் பையனுக்கு மட்டும் கேள்விகள அவுட் பண்ணிட்டாருன்னு பேசிக்கிட்டானுங்க. இதுல என்ன பெரிய கொடுமன்னா எங்க அப்பா இப்படி முன்னாடியே கேள்விய எழுதி வச்சா பையன் பார்த்துடப் போறானோன்னு பரிட்சை ஆரம்பிக்க அரை மணி நேரம் முன்னாடி தான் எழுதுவாங்க.

4. இதெல்லாம் விட பெரிய கொடுமை நடந்ததுச்சு. என்னோட படிச்சப் பொண்ணு ஒண்ணு என்னைய நல்லவன்ன்ன்ன்ன்னு நம்பி எனக்கு காதல் கடுதாசி எழுதி இருக்கு. அதுவும் என் வீட்டு அட்ரஸ்க்கு. ஒண்ணு ரெண்டுன்னு இல்லாம தொடர்ந்து எழுதி இருக்கு. ஆனா ஒண்ணு கூட என் கைக்கு கிடைக்கவே இல்ல. தொடக்கத்திலே பேரெல்லாம் போடாம மொட்டையா எழுதிக்கிட்டு இருந்த பொண்ணு கடைசியிலே பேரையும் சொல்லி எழுதிருக்கு. டியூசன்லையும் ஸ்கூல்லையும் ஒண்ணா படிச்சும் அந்தப் பொண்ணோட காதல் மனசு என் குருட்டுக் கண்ணுக்கு கடைசி வரை தெரியவே இல்ல. வந்த கடுதாசியெல்லாம் வீட்டுல இருக்கிற மக்களே ஆட்டையப் போட்டுட்டாங்க, இதுக்கு என் அக்கா தங்கைகளும் உடந்தை. இந்தக் கொடும எனக்கு என் கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் தெரியும்.

சரி விடுங்க, இப்படி சொல்லணும்ன்னா சொல்லிக்கிட்டே போவேன். எனக்குத் தெரிஞ்சு பதிவுகள்ல நான் போட்ட பெரிய பின்னூட்டம் இதுவா தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு என் சோகத்த கிளறிவிட்டிங்க நீங்க.

KVR said...

இன்னொரு பெரிய கொடுமையும் இருக்கு. வாத்தியார் புள்ள மக்கா இருந்தா பிரச்சனை இல்ல, படிக்காத பாடத்துக்கு வாத்தியார்ங்க கிட்டே மட்டும் அடி வாங்கணும். படிக்கிற புள்ளையா இருந்துட்டா மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி கதை தான். அப்பாவை பிடிக்காத வாத்தியாருங்க எதாவது ஒரு காரணத்த வச்சி பின்னி எடுத்துடுவாங்க. நல்லா மார்க் வாங்கினாலும் கூட படிக்கிற பசங்க "வாத்தியார் பையன்னா மார்க் அள்ளிக் கொடுத்துட்டாங்க"ன்னு சொல்லுவாங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாவம்

ரொம்ப கஷ்டப்பட்டுறிக்கீங்க போல.

கவிதா | Kavitha said...

@கேவிஆர் - அந்த 4 ஆவது பாயிண்டுக்கும்.. அப்பா டீச்சரா இருக்கறதுக்கும் என்ன தொடர்பு.. அப்பா டீச்சரா இல்லைனாலும் லெட்டர் காணாம போக வாய்ப்பு இருக்கு இல்லையா..

கடைசியா உங்க பின்னூட்டத்தில் இருந்து நீங்க எங்களுக்கு தெரியப்படுத்தறது என்னன்ன்னா..?!!

1. நீங்க ரொம்ப நல்லவர்
2. படிப்பில் வல்லவர்
3. ஸ்போர்ட்ஸ் ல கில்லாடி
4. வாத்தியார் பிள்ளைனாலும் மக்கு இல்ல.. :(
5. பொண்ணுங்களை திரும்பி பார்க்காத நல்லவர்..
6. ஒன்னுமே தெரியாத அப்பாவி ஆறுமுகம்..

:)

நாமக்கல் சிபி said...

ஹிஹி நானும் டீச்சர் பையந்தேன்!

நாமக்கல் சிபி said...

5ம் பு வரை அனுபவித்தேன்!

நாமக்கல் சிபி said...

//இதெல்லாம் விட பெரிய கொடுமை நடந்ததுச்சு. என்னோட படிச்சப் பொண்ணு ஒண்ணு என்னைய நல்லவன்ன்ன்ன்ன்னு நம்பி எனக்கு காதல் கடுதாசி எழுதி இருக்கு. அதுவும் என் வீட்டு அட்ரஸ்க்கு. ஒண்ணு ரெண்டுன்னு இல்லாம தொடர்ந்து எழுதி இருக்கு. ஆனா ஒண்ணு கூட என் கைக்கு கிடைக்கவே இல்ல. தொடக்கத்திலே பேரெல்லாம் போடாம மொட்டையா எழுதிக்கிட்டு இருந்த பொண்ணு கடைசியிலே பேரையும் சொல்லி எழுதிருக்கு. டியூசன்லையும் ஸ்கூல்லையும் ஒண்ணா படிச்சும் அந்தப் பொண்ணோட காதல் மனசு என் குருட்டுக் கண்ணுக்கு கடைசி வரை தெரியவே இல்ல. வந்த கடுதாசியெல்லாம் வீட்டுல இருக்கிற மக்களே ஆட்டையப் போட்டுட்டாங்க, இதுக்கு என் அக்கா தங்கைகளும் உடந்தை. இந்தக் கொடும எனக்கு என் கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் தெரியும்.//

அடக் கொடுமையே!

:(

கவிதா | Kavitha said...

அடக் கொடுமையே!

:(//

இதுல என்ன கொடுமைய இப்ப நீங்க கண்டீங்க??? ஏதோ பொண்ணு கேவிஆர் கிட்ட இருந்து லைஃ லாங் தப்பிச்சிது ன்னு "அட சந்தோஷமா" இருக்குன்னு சொல்லாம..

கவிதா | Kavitha said...

//5ம் பு வரை அனுபவித்தேன்!//

ஏன் அதுக்கு அப்புறம் டீச்சர் ஸ்கூலை மாத்திட்டீங்களா?

KVR said...

@கவிதா, என் சோகம் உங்களுக்கு காமெடியா இருக்கு?

//1. நீங்க ரொம்ப நல்லவர்//

நல்லவனா நடிக்கத் தெரிஞ்சவன். அட் லீஸ்ட் அப்பாவுக்கு பயந்தாவது. வெளில எதாவது லோலாயி பண்ணாலும் வாத்தியார் புள்ளங்கறதால மேட்டர் வீட்டுக்கு வந்துடும். இன்னமும் எங்க கிராமத்திலே என்னை ரொம்ப நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்காங்க.

//2. படிப்பில் வல்லவர்//

ஸ்கூல்ல படிக்கிறப்போ ரெண்டு பேர் இப்படி கெளப்பிவிட, அத மெயிண்டெய்ன் பண்றதுக்காகவே படிக்க வேண்டியதா போய்டுச்சு.

//3. ஸ்போர்ட்ஸ் ல கில்லாடி//

பாலை தானே வெச்சிக்கிட்டேன்னு சொன்னேன், ஸ்போர்ட்ஸ்ல கில்லாடின்னு எங்கே சொன்னேன். எங்க அப்ஸ் என்னை பத்தாவது படிக்கிற வரைக்கு விளையாடக் கூட விட்டது இல்ல. பொறவு எங்கேர்ந்து கில்லாடி ஆகுறது.

//4. வாத்தியார் பிள்ளைனாலும் மக்கு இல்ல.. :(//

இதை நான் இந்தப் பின்னூட்டத்திலே சொல்லலைன்னாலும் வேற ஒரு பின்னூட்டத்திலே என்னோட வேதியியல் கேள்விகள வெச்சே முல்லைக்குத் தெரிஞ்சிருக்கும்.

//5. பொண்ணுங்களை திரும்பி பார்க்காத நல்லவர்..//

அப்படி நான் எங்கே சொன்னேன். நான் வேற ஒரு பொண்ணு சைலண்ட்டா ரூட்டுப் போட்டுக்கிட்டு இருக்க, இந்தப் பொண்ணு நமக்கு ரூட் போட்டுருக்கு. அது ரூட் போட்டது தெரிஞ்சிருந்தா நம்ம ரூட்ட மாத்திருக்கலாம், தெரியாமப் போச்சேன்னு ஒரு ஃபீலிங்.

//6. ஒன்னுமே தெரியாத அப்பாவி ஆறுமுகம்..//

இப்படி நீங்களாவே எதாவது கெளப்பி விடுங்க.

//அப்பா டீச்சரா இல்லைனாலும் லெட்டர் காணாம போக வாய்ப்பு இருக்கு இல்லையா..//

ரொம்ப லாஜிக்கலா கேள்வி கேக்கறதா நெனைப்பா? அப்பா டீச்சரா இருந்ததால புள்ளைக்கு வந்த லெட்டர் கூட அப்பா கைக்குப் போயிருக்கு. இது டீச்சர்ன்னு இல்ல, கொஞ்சம் ஊர்ல பிரபலமா இருந்தாலும் நடக்கிறது தான்.

KVR said...

//இதுல என்ன கொடுமைய இப்ப நீங்க கண்டீங்க??? ஏதோ பொண்ணு கேவிஆர் கிட்ட இருந்து லைஃ லாங் தப்பிச்சிது ன்னு "அட சந்தோஷமா" இருக்குன்னு சொல்லாம..//

இப்போ சொன்னிங்களே, இது 100% உண்மை. என்னைய கட்டிக்கிட்டு கஷ்டப்படுற என் அம்மணிய கேட்டா "ஆமா ஆமா"ன்னு நூறு ஆமாம் போடுவா...

கவிதா | Kavitha said...

இப்போ சொன்னிங்களே, இது 100% உண்மை. என்னைய கட்டிக்கிட்டு கஷ்டப்படுற என் அம்மணிய கேட்டா "ஆமா ஆமா"ன்னு நூறு ஆமாம் போடுவா...//

அவங்க சொல்லல..அழுதாங்க..... :(

கவிதா | Kavitha said...

/6. ஒன்னுமே தெரியாத அப்பாவி ஆறுமுகம்..//

இப்படி நீங்களாவே எதாவது கெளப்பி விடுங்க.//

இல்லன்னா.. நீங்க இங்கவே உட்காந்து இன்னும் அளப்பீங்களே அதான்.. :)

கவிதா | Kavitha said...

இது டீச்சர்ன்னு இல்ல, கொஞ்சம் //ஊர்ல பிரபலமா இருந்தாலும் நடக்கிறது தான்.//


ஓ ..இப்ப நீங்கா..

7. ஊர்ல பெரிய பிரபலமான பார்ட்டி' ன்னு சொல்றீங்க.

சரீஈஈஈஈ.புரிஞ்சிக்கிட்டோம்..

:)

கவிதா | Kavitha said...

//ரொம்ப லாஜிக்கலா கேள்வி கேக்கறதா நெனைப்பா? //

சே சே.. உங்களை போயி நானு லாஜிக்கா எல்லாம் கேள்வி கேட்பேனா..?!! :)

கவிதா | Kavitha said...

//எங்க அப்ஸ் என்னை பத்தாவது படிக்கிற வரைக்கு விளையாடக் கூட விட்டது இல்ல. //

இதுக்கேவா? :)

சந்தனமுல்லை said...

கவிதா..அடங்க மாட்டீங்க போலிருக்கே..ஏதோ கேவிஆர் ஒரு ஃபீலிங்ஸ்லே ஆரம்பிச்சுட்டார்..பின்ன சாதாரண சோகமா..அதெல்லாம்! விடுங்க..விடுங்க...:-))

KVR said...

//இல்லன்னா.. நீங்க இங்கவே உட்காந்து இன்னும் அளப்பீங்களே அதான்.. :)//

ஹீஹீ, ரொம்ப ஃபீலிங்ஸ பிழிஞ்சிட்டேன் போல. சரி சரி இனிமே கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.

KVR said...

//7. ஊர்ல பெரிய பிரபலமான பார்ட்டி' ன்னு சொல்றீங்க. //

எங்க அப்பாவை தான் பிரபலம்ன்னு சொன்னேன். முடியல. reading between the lines இது தானோ. முல்லையே நம்ம தொல்லை தாங்காம விடச் சொல்லிட்டாங்க பாருங்க.

சந்தனமுல்லை said...

//முல்லையே நம்ம தொல்லை தாங்காம விடச் சொல்லிட்டாங்க பாருங்க.//

உங்க தொல்லையா..சரியா போச்சு!! ;-)) கவிதா வந்து ஒருத்தரை ஓட்டறாங்களேன்னு தான் காமெடி தாங்க முடியலை எனக்கு! அதான்..அதுவும் உங்களையா ஓட்டனும்..அதான்..! :-)))

கவிதா | Kavitha said...

//முல்லையே நம்ம தொல்லை தாங்காம விடச் சொல்லிட்டாங்க பாருங்க.//

அவங்க சொல்லிட்டாஆஆ...?!! நாம விட்டுடறதா.... நீங்களே சொல்லுங்க.. :)

கவிதா | Kavitha said...

//கவிதா வந்து ஒருத்தரை ஓட்டறாங்களேன்னு தான் காமெடி தாங்க முடியலை எனக்கு! அதான்..அதுவும் உங்களையா ஓட்டனும்..அதான்..! :-)))//

நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு.... ஏன்ன்ன்ன்ன்... நடுவுல இப்படி வேல..?!! அவ்வ்வ்வ்வ்வ்வ் !!

கவிதா | Kavitha said...

//முடியல. reading between the lines இது தானோ. //

முடியலன்னா உடனே டாக்டர் கிட்ட போங்க... ! :)

சந்தனமுல்லை said...

//கவிதா | Kavitha said...

//முடியல. reading between the lines இது தானோ. //

முடியலன்னா உடனே டாக்டர் கிட்ட போங்க... ! :)//

அப்புறம் டாக்டருக்கு முடியாம போய்டும்! :-)

KVR said...

//கவிதா வந்து ஒருத்தரை ஓட்டறாங்களேன்னு தான் காமெடி தாங்க முடியலை எனக்கு!//

விடுங்க, அவங்க ஒரு நாள் மாட்டுவாங்கள்ல, அப்போ சேர்த்து வெச்சி கலாய்ச்சிடலாம்.

கவிதா | Kavitha said...

விடுங்க, அவங்க ஒரு நாள் மாட்டுவாங்கள்ல, அப்போ சேர்த்து வெச்சி கலாய்ச்சிடலாம்.//

இதுக்கு பேரு தான் சொந்த செலவுல சூனியமா.. முன்னமே 2, இப்ப ...3 பேரா.?!! அவ்வ்வ்வ்வ் !!:(

சந்தனமுல்லை said...

//அவங்க ஒரு நாள் மாட்டுவாங்கள்ல, //

ஒருநாள் இல்லே..இப்போக்கூட மாட்டுவாங்க...:-))) அவங்களுக்கு அதுதான் ஹாபி! :-)

KVR said...

//இதுக்கு பேரு தான் சொந்த செலவுல சூனியமா.. முன்னமே 2, இப்ப ...3 பேரா.?!! அவ்வ்வ்வ்வ் !!:(//

ரொம்ப கம்மியா இருக்குன்னு ஃபீல் பண்ணிங்கன்னா இன்னும் ரெண்டு பேர் ரெடியா இருக்காங்க, கூப்ட்டுக்கலாம். எப்படி வசதி?

கவிதா | Kavitha said...

ஒருநாள் இல்லே..இப்போக்கூட மாட்டுவாங்க...:-))) அவங்களுக்கு அதுதான் ஹாபி! :-)//

சரி டாடா... வேலை இருக்கு நான் அப்புறமா வரேன்..

முல்லை நீங்களும் நானும் பிரண்ட்ஸ் தானே... :) (ச்சும்மா ஞாபகபடுத்தினேன்.)

கவிதா | Kavitha said...

//ரொம்ப கம்மியா இருக்குன்னு ஃபீல் பண்ணிங்கன்னா இன்னும் ரெண்டு பேர் ரெடியா இருக்காங்க, கூப்ட்டுக்கலாம். எப்படி வசதி?//

எதிர்பார்க்காதது எல்லாம் நடக்குதே... கூட்டமா..கிளம்பிட்டாங்கய்யா...!! :(

KVR said...

//முல்லை நீங்களும் நானும் பிரண்ட்ஸ் தானே... :) (ச்சும்மா ஞாபகபடுத்தினேன்.)//

முல்லை ஃப்ரண்ட்ஸ தான் உரிமையோட கலாய்ப்பாங்களாம், நேத்து கூட BBCல சொன்னாங்க.

புதுகைத் தென்றல் said...

சுத்தினா கொசுவத்தி ரொம்ப பெரிசாகிடுமேன்னு காலேல சும்மா போயிட்டேன்.

டீச்சர் பசங்களாகிப்போனதற்கு சோகம் தான் இல்லைன்னு சொல்லலை. குடும்பத்துக்குச் சொந்தமான பள்ளிக்கூடத்துல படிச்சா மஹா கொடுமை, அதுவும் சின்ன தாத்தா ஹெட்மாஸ்டராவும், அவங்க பையன் என் வகுப்புலையும் இருக்கற கொடுமைகளை யாரும் அனுபவிச்சிருக்க மாட்டீங்க.

தாத்தா பெரிய ஸ்கூல்ல பெரிய பேரு எடுத்தவர். அம்மாவும் அங்கேயே வேலை. கொடுமைன்னா கொடுமை உங்க கொடுமை எங்க கொடுமை இல்லை.

நிறைய ப்ரச்சனை, சண்டைகள், பிள்ளைங்க எல்லாம் தள்ளிவெச்சுப் பழகுறதுன்னு அவஸ்தை.

அந்த ஸ்கூலைவிட்டு ராணிஸ்கூல் போனதுக்கப்புறம்தான் நிம்மதியா சுவாசமே வந்துச்சு. :((

தாமிரா said...

அவ்.. எவ்ளோ பின்னூட்டங்கள்.. ஆமா.. அப்பிடி ஒண்ணும் பெர்ஸா கஸ்டப்பட்டமாதிரி தெர்லயே..

சுரேகா.. said...

என்னங்க...கலக்குறீங்க!

நீங்க லேசா சிந்திச்சு கொசுவத்தியை சுத்தி..
மத்த பதிவர்களை ஒரு பெரிய ரங்கராட்டினமே சுத்த வச்சுடுறீங்க!

பின்னூட்டம் கூட ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே!

வாழ்த்துக்கள்!

Divyapriya said...

இத படிக்கும் போது எங்க school அ இருக்கற Teacher பசங்கள பத்தி, நாங்க gossip பண்ணது தான் ஞாபகம் வருது :))

Thooya said...

:)

ராமலக்ஷ்மி said...

நல்லா எழுதியிருக்கீங்க முல்லை. கூடவே கேவிஆரின் சோகக் கதையும் கேட்கவே கஷ்டமாப் போச்சுது:)! தென்றலும் சேர்ந்துக்கிட்டாங்க.

ஆயில்யன் said...

//டீச்சர் பசங்களா இருக்கறது கஷ்டம்..ஆனா அதைவிட கஷ்டம் அந்த டீச்சர் வேலை செய்ற பள்ளிக்கூடத்தில் படிக்கறதுதான்! மேலோட்டமா பார்த்தா நிறைய அட்வாண்ட்டேஜஸ் இருக்கற மாதிரி தெரியும்..ஆனா நல்லா கவனிச்சா,எவ்வளவு சோகம் இருக்குன்னு டீச்சர் பசங்களுக்குத்தான் தெரியும்//


நான் நினைச்சேன்

நீங்க சொல்லிட்டீங்க பாஸ் :)))

singainathan said...

அட்டடடடா :)
ஹூம் ஒன்னும் சொல்லரதுக்கில்ல
சென்சுரி அடிக்க வாழ்த்துகள்

அன்புடன்
சிங்கை நாதன்

மங்களூர் சிவா said...

ஹி ஹி நாங்கல்லாம் மாப்பிள்ளை பென்ச் ஸ்டூடண்ட்ஸ் அதனால இந்த பாலிடிக்ஸ் எதும் தெரியாது!!

:))))

நசரேயன் said...

எனக்கு இந்த கஷ்டம் இல்லாம போச்சு, எங்க வீட்டுல யாருமே படிக்கலை.. என்னையும் சேத்துதான்

rapp said...

இதுல எல்லாத்தையும்விட கடுப்புன்னா, அவங்க மேல கடுப்புன்னா நம்ம மேல கொட்டித் தீர்ப்பாங்க. பிளஸ் ஒரு சின்ன தப்பை மத்தவங்க பண்ணா சிம்பிளா சொல்லி விட்டிருவாங்க. அதே டீச்சர் பசங்கன்னா அவ்ளோதான். அதுவும் எங்கம்மா எங்க ஸ்கூல் ஏ.ஹெச்.எம். யப்பா, இம்சைன்னா இம்சை. எனக்கு காலேஜ் போனப்போ என்னமோ எங்கிருந்தோ விடுபட்டாப்போல அவ்ளோ சந்தோஷம்:):):)

சந்தனமுல்லை said...

நன்றி புதுகை..நீங்களும் சேம் பிளட்?!!


நன்றி தாமிரா...இதைதாங்க நானும் சொன்னேன்..வெளிலேலேர்ந்து பார்த்தா அப்படிதான் தெரியும்..அந்த சோகம் டீச்சர் பசங்கள் வில் ஒன்லி நோ! :-)

நன்றி சுரேகா...:-)

யூ டூ திவ்யாப்ரியா..அவ்வ்வ்வ்! :-)

சந்தனமுல்லை said...

நன்றி தூயா, ராமல்ஷ்மி, ஆயில்ஸ்!

நன்றி சிங்கை நாதன், ஆகா..நைசா ஜூட் விடறீங்களே! :-)

நன்றி சிவா!

நன்றி நசரேயன்..ஓ..யாரும் டீச்சராகறதுக்குப் படிக்கலையா..கொடுத்து வைச்ச ஃபாமிலி!!

நன்றி ராப்..உங்களுக்குள்ளே இவ்ளோ பெரிய சோகம் இருக்கா..சே பிளட்! :-)

டவுட் தங்கராசு said...

வாத்தியார் பசங்க மக்குனு சொல்றாங்களே அத பத்தி என்ன ஃபீல் பன்றீங்க...

கைப்புள்ள said...

//ஓ..நைன்த்தா..அடுத்த வருஷம் டென்த்தா?!

ஹிஹி..ஆமா அங்கிள்! (மனசுக்குள் பின்ன திரும்ப எய்த்தா படிப்பாங்க...grrrrrrr!!)
//

இன்னொரு கேள்வி கேப்பாங்க பாருங்க...இதையெல்லாம் தூக்கி சாப்புட்டுடும் அது.

"நல்லா படிப்பியாப்பா நீ"

இதுக்கு யாரு "இல்லை அங்கிள்! நான் சரியா படிக்க மாட்டேன்...நான் மக்கு ப்ளாஸ்திரி"னு பதில் சொல்லுவாங்க?
:)