Wednesday, March 11, 2009

Introspection

mine first

"உங்க பொண்ணு, இன்னைக்கு, பிஸ்கட் கொண்டு வந்த பசங்ககிட்டே போய் பிஸ்கெட் கேக்கறாங்க” என்று உங்களிடம் சொல்லப்பட்டால் எப்படி உணர்வீர்கள்? உங்கள் மனதிற்குள் என்ன எண்ணங்கள் ஓடும்?

தொண்டைக்குள் ஒரு உருண்டை அடைத்திருப்பது போல..வயிற்றுக்குள் ஏதோ நெகிழ்வது போல!!

எல்லாவற்றுக்குமேல் you are helpless and its beyond your control!

அதற்காக, அவளுக்கு நாங்கள் பிஸ்கெட்டுகள் கொடுப்பதில்லை என்பது கிடையாது. அவளுக்காக அவளது விருப்பமான பிஸ்கெட்டுகள், எல்லா சுவைகளிலும் ஃப்ரிட்ஜ்-ல் இருக்கின்றன. மாலை தூங்கி எழுந்ததும் சாப்பிடுவது அவைகளைதான். ஆனால், ஒரு நொறுக்குத்தீனிப் போலத்தான் இதுவரை பழக்கியிருக்கிறோம்..ஒரு நேரத்து உணவைபோல அல்ல!

ஆனால், காலையில் உணவாக அதை எப்படிக் கொடுத்து விடுவது என்று, குட்டி குட்டி பூரிகள், சேமியா உப்புமா, பழங்கள், மற்றும் சப்பாத்தி.

அவளது சில பள்ளி நண்பர்கள் காலை உணவாக உலர் பழங்களையும், க்ரீம் பிஸ்கெட்டுகளையும் கொண்டு வருகிறார்கள். பப்பு மூலமாகவும், அந்த நண்பர்களின் தாய் மூலமாகவும் நான் அதை அறிவேன். ஏற்கெனவே நான் ஆண்ட்டியிடம் பேசியுள்ளதால், பப்பு கொண்டு செல்லும் உணவை உண்டு முடிக்கிறாளாவென கவனித்துக் கொள்வார். ஆனால், இதைப் போன்றதொரு சூழ்நிலையில், அவரும்தான் என்ன செய்வார்?!

க்ரீம் பிஸ்கெட்டுகள் பப்புவுக்கு பிடிக்காது, சிறிது நாட்கள் முன்பு வரை! உப்பு பிஸ்கெட்டுகளும், மாரி வகை பிஸ்கெட்டுகளும் விருப்பம். ஆனால், இப்போது க்ரீம் பிஸ்கெட்டுகள் மேல் விருப்பம்..இல்லை..அதிலிருக்கும் க்ரீம் மீது மட்டுமே! அதன்பின் அந்த பிஸ்கெட்டுகள் காகத்துக்கு! இவையெல்லாம் நொறுக்கு தீனியாக ஓக்கே..ஆனால் இதை ஒரு உணவாக கொடுத்து விட விருப்பம் இல்லை..


ஆனால் ஆயா சொன்னது,”குழந்தைங்க அப்படிதான், ஒன்னைப் பார்த்து இன்னொன்னு ஆசைப்படும்..”. yes, I know it is instantaneous! இப்போது உணவு டப்பாவில், காலை உணவோடு தினமும் இரண்டு பிஸ்கெட்டுகளும்.

(இதை எழுதி வைத்திருக்கும்போதுதான், லஞ்ச் க்ரூப்பில் இதைப் பற்றிப் பேச்சு வந்தது. பலருக்கும், பப்புவை விட பெரிய குட்டீஸ் இருக்கும் வீடுகளிலும் இதே போன்ற பிரச்சினைகள் இருப்பதை அறிந்தேன்! So, I am not alone ;-). )

Now Pappu's

எனக்கு முடி எவ்ளோ நீட்டா ஆகிடுச்சு, பாருங்க அம்மா!

(யெஸ், ஆச்சி என்றுக் கூப்பிடுவது மெதுவாக ஃபேடிங் அவே..”அம்மா” என்றழைக்கும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது, நாங்கள் எதுவும் சொல்லாமலேயே!)

ம்ம்..நாளைக்குப் போய் வெட்டலாம் !

இல்ல, நான் காலையிலே கீரை சட்னி சாப்பிட்டேன் இல்ல, அதான் வளர்ந்துடுச்சு...

கீரை சட்னியா..ஓ..தொவையல், அது..(முடி வளரும் என்றுச் சொன்னப் பிறகுதான் சாப்பிட்டாள்)

ஆமா, நான் தொகையல் சாப்பிட்டேன். முடி நீளமா வளர்ந்துடுச்சு!

அட ஆமா!!!

29 comments:

நட்புடன் ஜமால் said...

தொண்டைக்குள் ஒரு உருண்டை அடைத்திருப்பது போல\\

சரியா சொன்னீங்க!

நட்புடன் ஜமால் said...

\\கீரை சட்னியா..ஓ..தொவையல், அது..(முடி வளரும் என்றுச் சொன்னப் பிறகுதான் சாப்பிட்டாள்)\\

பெண் குழந்தையின் உலகம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு முடி எவ்ளோ நீட்டா ஆகிடுச்சு, பாருங்க அம்மா!

hee, ச்சோ ச்வீட் வெல்லக்கட்டி.

ஆமா, நான் தொகையல் சாப்பிட்டேன். முடி நீளமா வளர்ந்துடுச்சு!//

நான் கூட நெனச்சேன், மோத்தி ஆண்ட்டி மாதிரி ஏதோ துப்பட்டா முடியோன்னு.

யெஸ், ஆச்சி என்றுக் கூப்பிடுவது மெதுவாக ஃபேடிங் அவே..”அம்மா” என்றழைக்கும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது, நாங்கள் எதுவும் சொல்லாமலேயே!)

அங்கதான் ஃபேட் ஆகும், இங்க ஆகவே ஆகாது, நீங்க எப்போதும் ஆச்சிதான் எங்களுக்கு....

அமிர்தவர்ஷினி அம்மா said...

mine first

என்ன ஆச்சீ, நீங்களே மீ த பர்ஸ்ட்டு சொல்லிக்கிறீங்க.

உங்களிடம் சொல்லப்பட்டால் எப்படி உணர்வீர்கள்? உங்கள் மனதிற்குள் என்ன எண்ணங்கள் ஓடும்?

தொண்டைக்குள் ஒரு உருண்டை அடைத்திருப்பது போல..வயிற்றுக்குள் ஏதோ நெகிழ்வது போல!!

இனிமேதான் வரும், எனக்கு இந்தக் காலகட்டம்,,

முன்னறிவித்தலுக்கு நன்றி.

So, I am not alone ;-).

அதெப்படி, நாங்களாம் இருக்கோம்ல, பின்னாடி நீங்க மட்டும் எப்படி தனியா.

ஆயில்யன் said...

//குழந்தைங்க அப்படிதான், ஒன்னைப் பார்த்து இன்னொன்னு ஆசைப்படும்..”///

ஆமாம் எனக்கும் இப்படித்தான் தோணும் நிறைய வாட்டி :))

ஆயில்யன் said...

//அவளது விருப்பமான பிஸ்கெட்டுகள், எல்லா சுவைகளிலும் ஃப்ரிட்ஜ்-ல் இருக்கின்றன. மாலை தூங்கி எழுந்ததும் சாப்பிடுவது அவைகளைதான். ///

ஒரு வரி விட்டுப்போச்சு பாஸ் :(

அவளது விருப்பமான பிஸ்கெட்டுகள், எல்லா சுவைகளிலும் ஃப்ரிட்ஜ்-ல் இருக்கின்றன. மாலை தூங்கி எழுந்ததும் ”ஆச்சி” சாப்பிடுவது அவைகளைதான்.

ஆயில்யன் said...

//அதிலிருக்கும் க்ரீம் மீது மட்டுமே! அதன்பின் அந்த பிஸ்கெட்டுகள் காகத்துக்கு! //

பாவம் காக்கா அதுங்க என்னிக்குத்தான் கீரிம் சாப்பிட போகுதுங்களோ :(((

ஆயில்யன் said...

//(யெஸ், ஆச்சி என்றுக் கூப்பிடுவது மெதுவாக ஃபேடிங் அவே..”அம்மா” என்றழைக்கும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது, நாங்கள் எதுவும் சொல்லாமலேயே!)//

அதெல்லாம் ஒத்துக்க முடியாது நாங்க சொல்லுவோம்ல ஆச்சின்னு அது எப்பவுமே ஃபேடிங் ஆகாது :))))

ஆயில்யன் said...

//ஆமா, நான் தொகையல் சாப்பிட்டேன். முடி நீளமா வளர்ந்துடுச்சு!

அட ஆமா!!!//

எம்புட்டு பெரிய விசயம்....!
நாட்ல பல பேரு அலைஞ்சு திரிஞ்சு கண்டுபிடிக்க நினைக்கிற ரகசியம் கீரையிலதான இருக்கு அந்த கான்செப்ட்டு ரைட்டு :)

கவிதா | Kavitha said...

(இதை எழுதி வைத்திருக்கும்போதுதான், லஞ்ச் க்ரூப்பில் இதைப் பற்றிப் பேச்சு வந்தது. பலருக்கும், பப்புவை விட பெரிய குட்டீஸ் இருக்கும் வீடுகளிலும் இதே போன்ற பிரச்சினைகள் இருப்பதை அறிந்தேன்! So, I am not alone ;-). )//

முல்ஸ், நவீன்'ஓட 10 கேள்வியில் இருந்துது இல்ல..அது கூட ஸ்கூல் ல மற்ற பிள்ளைகள் எடுத்துவரும் சாப்பாட்டை பார்த்துத்தான்... என்னிடம் சொல்லியே கேட்பான்.. சிக்கன் ரோல், சிக்கன் பஃவ் ஏன் செய்யமாட்றன்னு.. வீட்டுல பஃவ் எல்லாம் செய்ய முடியாதுடான்னு சொன்னா.. அப்ப அவங்க அம்மா மட்டும் எப்படி செய்யறாங்கன்னு கேட்பான்..

நீங்க தனி ஆள் இல்ல.. !! :)

ஆயில்யன் said...

சித்திர கூடத்தில தமிழ்ல டைட்டில் வர்லைன்னா அப்புறம் போராட்டம் வெடிக்கும்

அன்பு said...

காலை உணவோடு தினமும் இரண்டு பிஸ்கெட்டுகளும்
உங்களுக்குத் தெரியாதா?
இன்னிக்கு கார்த்தி, ஆகாஷ் டப்பால்ல சிப்ஸ் & சாக்லேட்ஸ்:(

So, I am not alone ;-). )

Yes you are not alone...
U just joined us:)

மிஸஸ்.டவுட் said...

சில நேரம் வெறும் பிஸ்கட் மட்டுமே டின்னராவோ ...பிரேக்பாஸ்டாவோ சாப்பிடற குழந்தைகளும் இருக்காங்கப்பா.

என்னத்தை சொல்ல?!

பாப்புவுக்கும் கீரைனா ரொம்ப இஷ்டம்.எனக்கு கீரை பிடிக்காது. அவளுக்காக செய்யறேன். டெய்லி தலை முடி நீளமா ஆயிருச்சுல்ல மம்மி நு கேட்பா. இப்போலாம் "அம்மா ரெட்டை pony tail போட்டுட்டு வர என் பிரண்ட்ஸ் பார்த்தா எனக்கு பொறாமையா (!!!) அவளுக்கு அர்த்தம் தெரியுமா இந்த வார்த்தைக்குனு தெரியல இன்னும் ஆனாலும் use பண்ற பேச்சு நடுவுல(சுட்டி...டி.வி..உபயமா இருக்கலாம்?!) இருக்கு நு சொல்லிட்டு ஹேர் கட் பண்ண பார்லர் கூப்டா வர மாட்டேன்கறா.

அவ சொல்றதும்...செய்றதும் கேட்க சந்தோஷமாவும் ...சுவாரஷ்யமாவும் இருக்கு. ரசிக்கறேன் அவ சொல்ற புதுபுது விசயங்களை ...அவளது ஆர்வங்களை...அவளோட விருப்பத்துக்கே முதலிடம் தர தோன்றியதால் இப்போ பாப்பு குட்டி...குட்டியா ரெட்டை pony tail போட்டுட்டுப் போறா ஸ்கூல்கு .

அமுதா said...

/*எனக்கு முடி எவ்ளோ நீட்டா ஆகிடுச்சு, பாருங்க அம்மா!*/
அழகு

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆமாமா நீங்க தனியாவே இல்ல.. :)
கிஸ்மிஸும் முந்திரியும் எக்கசக்கமா சாப்பிடுவான் மிட்டாயும் பிஸ்கட்டும் அளவே கிடையாது.. எதிர்த்த வீட்டுலயும் சரி .. பாட்டுக்ளாஸ்லும் சரி போய் கிஸ்மிஸ் தாங்கன்னு கேட்டு வாங்குவான் நான் எத்தனை சொல்லியும் கேப்பதில்ல.. அவங்க இது எங்களுக்கு பிடிச்சிருக்கு அவனுக்கு தரதில எங்களுக்கு சந்தோஷன்னு சொன்னாலும் எனக்கு அய்யோன்னு முட்டிக்கலாமான்னு வரும்.. :( வீட்டிலிருந்து சின்ன டப்பால எடுத்துட்டு போனாலும் அதை முடிச்சிட்டு திரும்ப அவங்க கிட்ட போயிடுவான்..:)

Newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

விவேக் said...

என்னுடைய இரண்டு வயது மகள் யாழினியின் குணங்களை ஞாபகப்படுத்துகிறது.
அவளுடைய சேட்டைகளை கருவாக்கி பதிவு செய்வதற்கு நீங்கள் ஒரு தூண்டுகோல். எழுதியதும் தங்களுக்கும் அறிவிக்கிறேன் :-)

தமிழ் பிரியன் said...

சேம் பிளட்!

குடுகுடுப்பை said...

நான் பெரிய எச்சரிக்கை பண்ணி வெச்சிருக்கேன்.தெரியாதவங்ககிட்ட வாங்க கூடாதுன்னு.

//
\\கீரை சட்னியா..ஓ..தொவையல், அது..(முடி வளரும் என்றுச் சொன்னப் பிறகுதான் சாப்பிட்டாள்)\\

நல்ல யோசனை.நானும் முயற்சி செய்து பாக்கிறேன்(எனக்கல்ல)

//

Sasirekha Ramachandran said...

// மாலை தூங்கி எழுந்ததும் ”ஆச்சி” சாப்பிடுவது அவைகளைதான்.//

unmaiyo unmai....

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

கொண்டாட்டங்களும், ரசனைகளும் மட்டுமே அல்லாத உண்மைக்கு மிக நெருக்கமான பதிவுகள் உங்களுடையவை.. பின்னாளில் அரிய தொகுப்பாக உங்கள் பதிவுகள் உருவாகலாம்.!

எம்.எம்.அப்துல்லா said...

இங்கயும் சேம் பிளட் :)

Divyapriya said...

குழந்தைங்க தான் எத்தனை விதம், எத்தனை அழகு :)) சிரிப்பா இருக்கு...இது இன்னும் கலக்கல்

//ஆமா, நான் தொகையல் சாப்பிட்டேன். முடி நீளமா வளர்ந்துடுச்சு!//

:))

நசரேயன் said...

//குழந்தைங்க அப்படிதான், ஒன்னைப் பார்த்து இன்னொன்னு ஆசைப்படும்..”///
எல்லோருக்கும் இருக்கும்

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்!

நன்றி அமித்து அம்மா..நீங்களும் பப்புகூட சேர்ந்து வளர்ந்தீங்கன்னா நல்லாருக்கும்..பேர் கூப்பிடற விஷயத்தைச் சொன்னேன்..:-))

//
இனிமேதான் வரும், எனக்கு இந்தக் காலகட்டம்,,//

ஆமா, ரெடியா இருந்துக்கோங்க!

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ்..

//மாலை தூங்கி எழுந்ததும் ”ஆச்சி” சாப்பிடுவது அவைகளைதான்.//

ஏன்..ஏன் இந்தக் கொலவெறி!!

//பாவம் காக்கா அதுங்க என்னிக்குத்தான் கீரிம் சாப்பிட போகுதுங்களோ :(((//

ஆகா..நீங்கதானா அது!!


//எம்புட்டு பெரிய விசயம்....!//

அதைச் சொன்னது யாரு..! :-)

நன்றி கவிதா...உங்க அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

சந்தனமுல்லை said...

நன்றி அன்பு! ஆகா..ஒரு க்ரூப்பாதான் இருக்கீங்க போல! :-)

நன்றி மிஸஸ் டவுட்..உங்கள் அனுபவ பகிர்வுக்கு!

நன்றி அமுதா!

நன்றி முத்து..உங்க அனுபவம்/ஆதங்கம்...புரியுது! :)

சந்தனமுல்லை said...

நன்றி விவேக்..வாழ்த்துகள்!

நன்றி தமிழ்பிரியன் அண்ணா..

நன்றி குடுகுடுப்பையார்..நல்ல எச்சரிக்கை! //நல்ல யோசனை.நானும் முயற்சி செய்து பாக்கிறேன்(எனக்கல்ல)//

:-) அப்புறம் என்னாச்சுன்னு சொல்லவும்!

நன்றி சசி!

சந்தனமுல்லை said...

நன்றி தாமிரா..//உண்மைக்கு மிக நெருக்கமான பதிவுகள் // ல்லாம் இல்லைங்க..உண்மையேதான்!

நன்றி அப்துல்லா, திவ்யா!