Wednesday, March 18, 2009

MISHA என்றொரு ரஷ்ய மாத இதழ்மிஷா - இந்த ஒரு வார்த்தை எனக்குள் கொண்டுவரும் உணர்வுகள்..நினைவுகள்..!!
அப்போது..(ஐந்தாம் வகுப்பு - எட்டாம் வகுப்பு)ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரமும் நான் எதிர்பார்த்து காத்திருப்பது இரண்டு விஷயங்களுக்காக! ஒன்று பேப்பர்கார அண்ணா கொண்டு வரும் கோகுலம் புத்தகம், இரண்டு தபால்காரர் கொண்டுவரும் மிஷா புத்தகம்! மிஷாவின் ஒவ்வொரு இதழும் ரத்தினம்...ஆனால், அது அப்போதுத் தெரியவில்லை! அதற்குள் அவ்வளவு செய்திகள், கதைகள், விஞ்ஞான செய்திகள், சிறுவர்களுக்கான ஆக்டிவிட்டீஸ், விதவிதமான புதிர்கள்..மிஷாவுக்கு இணை மிஷாதான்! இந்த மிஷா, ஒரு குட்டி கரடிபொம்மை. அது, அப்போது நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் சின்னம்..அதுவும் ரஷ்யாவில் நடைபெற்றது என்று நினைவு!

மிஷாவை நினைத்தவுடன் எழுவது அந்த புத்தகத்தின் வழுக்கும் பக்கங்களும், மென்மையான ஒரு புத்தம் புதிய புத்தகத்தின் வாசனையுமே! என் நினைவடுக்களில் இன்னமும் அந்த வாசனையை உணர்கிறேன். எனக்கு ரஷ்யக் கதைகள் பொதுவாக பிடிக்கும்..ரஷ்ய இலக்கியங்களும் நமது இலக்கியங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக எங்கோ படித்தேன்!
“செவ்வணக்கங்கள்”, போனி எம்-ன் “ரஸ்புடீன்”, அன்னா கரீனினா, கடைசி ஜார் மன்னன் சரணடைந்த அடர் சைபிரீயக் காடுகள், அந்தோன் சேகவ்-வின் கதைகள் முக்கியமாக பள்ளத்து முடுக்கில், பாலிசிக் பெத்புரூமஸ்(கதையில் வரும் சிறுவன்) சேர்த்து வைத்த ரூபிள்கள், செஸ்சில் பிரபலமாயிருந்த விளாடிமிர் (?) என்று என்று எனக்குள் எத்தனையோ ரஷ்யச் சின்னங்கள்தான்..எல்லாமே புத்தகங்கள் வாயிலாகத்தான்! புத்தகங்களும் வாசிப்பனுபமும் எவ்வளவு மகத்தான திறன் படைத்தவை!!

அல்டர்கோஸையும், ஹெர்குலிஸையும், யெலிராவையும், பூமி பற்றிய விஞ்ஞான தகவல்களையும் நான் அந்த வயதில் அறிந்துக் கொண்டது மிஷாவின்
வாயிலாகத்தான்! அதில் ஒரு பகுதி, சிறுவர்கள் வரைந்து அனுப்பும் ஓவியங்கள் பிரசுரிக்கப் படும். அதில் எப்போதாவது இந்தியாவிலிருந்து அதுவும் காஷ்மீர் அல்லது மும்பை அலல்து டெல்லியிலிருந்து யாரோ அனுப்பியிருப்பார்கள். அதைப் பார்த்ததும் ஏற்படுமே ஒரு மகிழ்ச்சி..:-) அவ்வளவு ஏன், பாகிஸ்தானிலிருந்து என்று இருந்தபோதும் கூட மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்..நம்ம பக்கத்து ஊரு டைப் சந்தோஷம்தான்! (oh, silly me!!)

இந்த இதழ்கள் எல்லாமே படித்தபின், பத்திரமாக சேகரிக்கப் பட்டவை. நான் ஒரு கலெக்டர்..எந்த நகருக்குமில்லை..:-)..அதாவது, எனது வழிகளில் கடந்துவரும் எதையுமே சேமிப்பவள். இதைத்தான் என்றில்லை..ஏதாவது ஒரு சிறு நினைவு அந்தப் பொருளோடு தொடர்பிருந்தால் போதும், எனது பீரோவின் ரகசிய அலமாரியில் அதற்கோர் இடமுண்டு! பல பதப்படுத்தப்பட்ட இலைகள், ஹிண்டுவிலிருந்து வெட்டப் பட்ட காகிதத்துண்டுகள், பத்தாம் வகுப்பு ப்ராக்ரஸ் கார்டு + ஹால் டிக்கட், வாழ்த்தட்டைகள், இப்படிப் பல..! அதேபோல், கோகுலம், ஹிந்துவின் யங் வேர்ல்ட் இதெல்லாம் ஒரு அட்டைப் பெட்டியில். பெரியவர்களுக்கான ரீடர்ஸ் டைஜஸ்ட், விஸ்டம் (இது எங்களுக்காக வாங்கியது..;-)..ஆனால் நாங்கள் அப்படி நினைப்பதில்லை) விமன்ஸ் எரா இதெல்லாம் தனித்தனி அட்டைப் பெட்டிகளில்! அப்படித்தான் நான்கு வருடங்களுக்கு மேலாக வாங்கிய மிஷாவில் மூன்று வருடங்கள் + ஒரு வருடத்தில் சில இதழ்கள் மட்டும் !! பெரியவர்களுக்கான புத்தகங்கள் இப்போது இல்லை!! :-(


மிஷா புத்தகங்கள் பப்புக்கு இந்த வயதில் ஏற்றவை அல்ல! அவளாகவே படிக்க ஆரம்பித்த பின்னர் தான் இதன் அருமைத் தெரியும் என எண்ணுகிறேன்..ஆனால், அந்த குணாதிசயம் எனது சரித்திரத்தில் இல்லை..அதாவது எங்கள் வீட்டுப் பெரியவர்கள் ட்ரெஷர் செய்ததை நான் மதித்தது இல்லை..அது அவர்கள் செண்டிமென்ட். அவர்களுக்கு முக்கியம்...எனக்கல்ல என்பது போல! ;-). எனக்கு மிஷா-வைப் போல் பப்புவிற்கு டோரா போல இருக்கிறது,இப்போது!! (Both are Mascots too!)


USSR பிரிந்தபின் மிஷா வருவது நின்று போயிற்று. எவ்வளவோ சொன்னாலும், மிஷாவைப் பற்றியும் அதனுடன் எனது பிணைப்புகளையும் இன்னும் முழுதாக சொல்லவில்லை என்ற உணர்வுதான் ஏற்படும்.அதனால், முடிவாக, USSR -ரையும் மிஷாவையும் அவர்கள் என்னிடமிருந்துப் பிரித்திருக்கலாம், அதன் பின் பல காரணிகளிலிருக்கலாம்..ஆனால், எனக்குள்ளிருந்து மிஷாவையோ, USSR-யோ ஒருபோதும் பிரித்துவிட முடியாது, எந்தவொரு காரணியாலும்!!

Misha, I love you!


பிகு
இது கடந்த வருடத்தில் எழுதியது...தீபாவின் மிஷா பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே என் சிறு வயது புத்தகங்களைக் குறித்து எழுதியிருந்ததால், இதை வெளியிடாமல் வைத்திருந்தேன்! நன்றி தீபா, நினைவூட்டியமைக்கு!

20 comments:

நட்புடன் ஜமால் said...

\\இந்த இதழ்கள் எல்லாமே படித்தபின், பத்திரமாக சேகரிக்கப் பட்டவை. நான் ஒரு கலெக்டர்..எந்த நகருக்குமில்லை..:-)\\

ஹா ஹா ஹா

lol

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல கலெக்டர் நீங்க...
( ஆனா ஒரு பாட்டுல ஆகாத கலெக்டர்:) )

ஆயில்யன் said...

//தீபாவின் மிஷா பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது///

மீ 22222222222 :)

ஆயில்யன் said...

//ஆயில்யன் said...

//மிஷா என்றொரு குழந்தைகள் மாத‌ இத‌ழ் வ‌ந்து கொண்டு இருந்த‌து. ஆஹா! எவ்வ‌ள‌வு அழ‌கிய‌ வெண்ணெய் போன்ற‌ காகித‌தில் முழுக்க‌ முழுக்க‌ வ‌ண்ண‌ப் ப‌ட‌ங்க‌ளும் க‌தைக‌ளும் துணுக்குகளும், ப‌ட‌க்க‌தைக‌ளும் நிறைந்த‌ அருமையான‌ இத‌ழ‌ அது. அப்ப‌டி ஒரு குழ‌ந்தைக‌ள் இத‌ழை நான் இன்று வ‌ரை பார்க்க‌வில்லை//

ஓ எனக்கு ஒரு முறை உறவினர் வீட்டிற்கு சென்றபோது மிகவும் பிரியப்பட்டு பார்த்த புத்தகம் வண்ணவண்ணமயமான படங்கள் முகப்பில் பல ரஷ்ய பெண்கள் நிற்கும் படம் கூட எனக்கு நினைவில் இருக்கிறது :)

சோவியத் யூனியன் என்ற சொல்லினை கேட்டாலே எனக்கு அந்த புத்தகம் பார்த்த ஞாபகம் மட்டுமே வரும்!

ஏன் அது உடைஞ்சது என்ன ஏதுன்னு அவ்ளோவா தெரியாட்டியும் கூட எதோ ஒரு சோகம் மனதில் படரும் :((
///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

வித்யா said...

நான் இந்தப் புத்தகத்தை இப்போதுதான் கேள்விப்படூகிறேன். எனக்கு டிங்கிள், கோகுலம் அப்புறம் கொஞ்சம் வளர்ந்த பிறகு இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் மேன் ரொம்ப முக்கியமா ராஜேஷ் குமார் நாவல்ஸ்:)

கவிதா | Kavitha said...

இந்த இதழ்கள் எல்லாமே படித்தபின், பத்திரமாக சேகரிக்கப் பட்டவை. நான் ஒரு கலெக்டர்..எந்த நகருக்குமில்லை..:-)..//

ஸ்ஸ் யப்பா ஒரு நிமிஷன் பக்கு'ன்னு ஆயிடுத்து.. மிஷா படிச்சி கலெக்டர் ஆயிட்டாங்களான்னு :)

கவிதா | Kavitha said...

அதன் பின் பல காரணிகளிலிருக்கலாம்..ஆனால், எனக்குள்ளிருந்து மிஷாவையோ, USSR-யோ ஒருபோதும் பிரித்துவிட முடியாது, எந்தவொரு காரணியாலும்!!
//

Touching Touching.. :) Mizha and Mullai.. :)

மிஸஸ்.டவுட் said...

சோவியத் டுடே என்றொரு புத்தகம் வரும் முன்பு,நான்காம் வகுப்பிலோ...ஐந்தாம் வகுப்பிலோ சரியாக நினைவில்லை என் பிரெண்டின் அப்பா சில மாலை நேரங்களில் அந்தப் புத்தகத்தை எங்களிடம் கொடுத்து வாசிக்கச் சொல்வார்.இது முற்றிலும் சிறுவர்களுக்கான புத்தகமே இல்லை ஆனால் ஒன்றிரண்டு கார்டோங்கள் வரும்.எனக்கு அதில் வெளியிடப் படும் கார்ட்டூன்களில் அலாதி பிரியம்."
"கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் முன்பு அப்பாவின் நண்பர் ஒருவர்"விளாடிமிர் மிகநோவ்ச்கியின் " புத்தகம் ஒன்றை பரிசளித்தார். கதை கொஞ்சம் லாடம் தான் என்னளவில்."ராதுகா பதிப்பக வெளியீடு அது.
"பூந்தளிர்"
"சிறுவர் மலர்"
"கோகுலம்" இவற்றின் மேல் பைத்தியமாக இருந்த காலங்கள் "வசந்த காலங்களே"

அமிர்தவர்ஷினி அம்மா said...

தீபாவின் பதிவையடுத்து, உங்களின் பதிவில் தான் மிஷா வைப் பற்றி கேள்விப்படுகிறேன். பத்திரப்படுத்தியது குறித்தும் ஆச்சரியப்படுகிறேன்.

மிஷாவை நினைத்தவுடன் எழுவது அந்த புத்தகத்தின் வழுக்கும் பக்கங்களும், மென்மையான ஒரு புத்தம் புதிய புத்தகத்தின் வாசனையுமே! என் நினைவடுக்களில் இன்னமும் அந்த வாசனையை உணர்கிறேன்//
ரசனை..

இதைத்தான் என்றில்லை..ஏதாவது ஒரு சிறு நினைவு அந்தப் பொருளோடு தொடர்பிருந்தால் போதும்,

நானும் இதே மாதிரிதான்.
எனக்கு பொக்கிஷம், பிறருக்கோ குப்பைகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த இதழ்கள் எல்லாமே படித்தபின், பத்திரமாக சேகரிக்கப் பட்டவை. நான் ஒரு கலெக்டர்..எந்த நகருக்குமில்லை..:-).

2, 3 தடவை படிச்சவுடன் தான் புரிஞ்சுது.

பதிவு நடுவுல பஞ்ச் வெச்ச ஆச்சி வாழ்க.

எம்.எம்.அப்துல்லா said...

//நான் ஒரு கலெக்டர்..எந்த நகருக்குமில்லை..:-).. //


நான் இப்பவும் கலெக்ட்டர்தான்....ஊர் ஊரா பொறுக்கிக்கிட்டு இருக்கதச் சொல்றேன் :)

அப்புறம் மிஷாவின் பக்கத்தைத் திருப்பும்போது வழுக்கிக்கொண்டு முந்தைய பக்கங்களே வருமே!!! என்னை என்னுடைய ஆறாம் வகுப்பு “அ” பிரிவுல உக்கார வச்சுட்டீங்க முல்லை.

தமிழ் பிரியன் said...

:)

எம்.எம்.அப்துல்லா said...

//பதிவு நடுவுல பஞ்ச் வெச்ச ஆச்சி வாழ்க. //

அ.அம்மா குறும்பு அமித்துவவிட நாளுக்குநாள் ஜாஸ்தி ஆகுது!!!
:)

மாதேவி said...

சிறுவர்களுக்கான "மிஷா புத்தகம்"எங்கள்வீட்டு நூலகத்திலும் இடம்பிடித்திருந்தது.அருமை.

Deepa said...

நன்றி சந்தனமுல்லை.
உங்கள் பதிவில் மிஷாவைப் பற்றி நான் சொல்லாமல் விட்ட ஏராளமான சுவாரசியமான் விஷயங்களைச் சொல்லி இருக்கிறீர்கள். எனக்குள் இப்போது நிறைய நினைவலைகள்!

//அதாவது, எனது வழிகளில் கடந்துவரும் எதையுமே சேமிப்பவள். இதைத்தான் என்றில்லை..ஏதாவது ஒரு சிறு நினைவு அந்தப் பொருளோடு தொடர்பிருந்தால் போதும், எனது பீரோவின் ரகசிய அலமாரியில் அதற்கோர் இடமுண்டு! பல பதப்படுத்தப்பட்ட இலைகள், ஹிண்டுவிலிருந்து வெட்டப் பட்ட காகிதத்துண்டுகள், பத்தாம் வகுப்பு ப்ராக்ரஸ் கார்டு + ஹால் டிக்கட், வாழ்த்தட்டைகள், இப்படிப் பல..! //

நானும் அதே அதே! :-)

பாண்டியன் புதல்வி said...

சோவியத் யூனியன் படித்திருக்கிறேன். மிஷா ஞாபகம் இல்லை. சேமித்து வைக்கவில்லை :( அண்ணன்கள் நோட்டுப் புத்தகத்திற்கு அட்டைப் போடப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து நானும், பக்கத்து வீட்டு நண்பர்கள் என்று நீண்டு பள்ளியில் புது தோழியிடம் நெருக்கமாக அன்பளிப்பு அளித்து, கடைசியில் வகுப்பாசிரியர் தன் பிள்ளைகளின் உபயோகத்திற்கு என்று கேட்டு வாங்கி எப்படியோ அழித்துவிட்டோம். இன்று எங்கள் பிள்ளைகளுக்கு (படிக்கதாங்க அட்டை போட இல்ல) என்று யோசிக்கும் போது நானும் அண்ணன்களும் தலைகுனிகிறோம். பப்பு ரொம்ப லக்கி.

நசரேயன் said...

நான் எதோ மிசா சட்டம்ன்னு ல நினைச்சேன்

நசரேயன் said...

//எனக்கு மிஷா-வைப் போல் பப்புவிற்கு டோரா போல இருக்கிறது//

என் வீட்டிலயும் டோரா மண்டச்சி தான் 24 மணி நேரமும்

நசரேயன் said...

//நான் ஒரு கலெக்டர்..எந்த நகருக்குமில்லை..:-)//

புக் கலெக்டர்

Anonymous said...

Hi,
I also read the misha book during my 4-6 standard.I am still having some of the books.
I start to like russia becos of the book only.I am very happy to know that u r a misha fan.Thanks for bringing me my old memories.

regards,
Senthil from trichy