நிலாவும் அம்மாவும் நெடுநாட்களுக்கு முன் பப்புவை ஒரு தொடர்பதிவு-க்கு அழைத்திருந்தார்கள்! பப்புவுக்கு பிடித்த நபர்கள் பற்றி!
பப்புவிற்கு எல்லாரையுமே பிடிக்கும்..அவளிடம் பேசுகிற, அவளைப் பார்த்துக் புன்னகைத்துக் கொண்டே எங்கள் தெருவைக் கடக்கும் நபர்கள், பலூன் விற்கும் ஆயா, தண்ணீர் கொண்டு வரும் அண்ணா என எல்லோரையுமே! மெத்தப் பிடித்தது, ஆயாக்களையும் தாத்தாவையும்! ஆனால் பப்புவுக்கு பிடித்த இன்னொரு பெரிய பட்டியலுண்டு!
சண்முகம் ஆயா - இவர் பப்புவை 4 மாதத்திலிருந்து 14 மாதங்கள் வரை பார்த்துக் கொண்டார்...இல்லை...வளர்த்தார் என்றே சொல்லலாம். கும்பகோணத்திலிருந்து வந்து எங்கள் வீட்டோடு தங்கியிருந்தார். "டாடா சொல்லு" என்று பப்புவிற்கு கையை பிடித்து ஆட்டுவார், நாங்கள் அலுவலகம் செல்லும்போது! அவரது பெண்ணிற்கு வேலைக் கிடைக்கவே சென்றுவிட்டார், பெண்ணின் திருமணம் முடிந்தபின் வருவதாகக் கூறி! போகும்முன் பப்புவின் ஃபோட்டோவை வாங்கிக்கொண்டார் ஞாபகமாக...:-)
குண்டு ஆயா - பக்கத்துத் தெருவிலிருந்து வந்தார். ஒரு மாதம் மட்டுமே இவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது..பப்பு ஓடியாட ஆரம்பித்திருந்ததால், அவளின் பின் செல்ல மிகவும் கஷ்டப்பட்டார். முடியாததினால், விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.
செல்வி - I - பாண்டிச்சேரியிலிருந்து வந்தவர். வீட்டோடு தங்கியிருந்தார். அவரதுக் குடும்பசூழல் காரணமாக ஒரு மாதத்திலேயே விடைபெற்றுக் கொண்டார். ஆனால் பப்புவோடு ஓடியாடி விளையாடுவார்.
திருப்பத்தூர் ஆயா - இரண்டு மாதங்கள் வரை பப்புவை கவனித்துக் கொண்டார். பப்புவோடு சொப்பு வைத்து விளையாடுவார். பப்புவை வாக்கிங் அழைத்து செல்வார். தூக்கி வைத்துக் கொள்ள அலுத்துக் கொண்டதேயில்லை, முழங்கால் வலியிருந்தபோதும்!
செல்வி - II - ஏஜன்சி மூலமாக வந்தவர். ஒரு மாதம் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது, பப்பு இவரிடம் விளையாட மறுத்ததால்! பப்பு ஒருவரை மறுதலிப்பது இதுவே முதன்முறை!
ராணி - இவர் வரும் சமயம் பப்புவுக்கு தெரிந்திருந்தது, வருபவர்கள் அவளைக் கவனித்துக் கொள்ளத்தான் வருகிறார்களென்று. அதனால் அவளாகவே முதலில் போய் அவர்களிடம் பழக் முற்பட்டாள். இவரும் ஏஜென்சி மூலம் வந்தவர். பெரம்பூர். பதினொரு மாதங்கள் வரை வீட்டோடுத் தங்கி இருந்தார். பப்புவிற்கு சப்பாத்தி மேல் விருப்பம் ஏற்பட செய்தவர். பப்புவின் விளையாட்டு சாமான்களை வைத்து விதவிதமாக விளையாட்டுக் காட்டுவார். பத்திரமாகப் கவனித்துக் கொண்டார், பொறுமையோடும்! பப்பு இப்போதும் பப்பு இவரை சிலசமயங்களில் கேட்பாள்.இவர் விட்டுச் சென்றுவிட்ட பின்பும் பப்பு இவரை மறப்பதுக் கடினமாக இருந்தது!
தனம் - இவரும் ஏஜென்சி மூலம் வந்தவர். அரக்கோணம். வீட்டோடு தங்கியிருந்தார். பப்புவை சமாளிக்க கஷ்டப்பட்டார். இரண்டு மாதங்களில் விடைப் பெற்றுக் கொண்டார்.
சரளா - ஏஜென்சி மூலம் திருச்சியிலிருந்து வந்தவர். இவர் பப்புவோடு ஓடியாடி விளையாட அலுக்கவே மாட்டார். எப்படியாவது சாப்பிட வைத்துவிடுவார். பப்புவை யானையேற்றிக் கொண்டு வலம் வருவார். அவரதுக் குடும்பச் சூழல் காரணமாக மூன்று மாதங்களிலேயே விடைப் பெற்றுக் கொண்டார். பப்பு இன்றும் கூட இவரைக் கேட்பாள். பப்புவின் நினைவுகள் சில சமயம் இவரை சுற்றி ரீங்காரமிடுவதுண்டு.
இவர்களிருக்கும் வரையிலும், சென்றபின்னும் சிலரை இன்னும் நினைவில் கொண்டும்... பப்புவிற்கு, பிடித்தமானவர்களாகவே இருந்திருக்கிறார்கள் இவர்கள் ஏதாவதொரு வகையில். பப்புவைக் கவர்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள், அவரவர் வழிகளில்!
கவலையின்றி நான் வேலையில் கவனம் செலுத்த உதவியிருக்கிறார்கள். சம்பளத்துக்காகத்தானென்றாலும், பாதுகாப்பாக பப்பு இருக்கிறாள் என்று என்னை உணர வைத்திருக்கிறார்கள். சிலசமயங்களில் பப்பு என்னை விடுத்து, அவர்களிடம் உணவருந்தப் பிரியப்பட்டிருக்கிறாள். அவர்களிடமிருந்து என்னிடம் வர மறுத்திருக்கிறாள்! அவர்கள் பிரிந்துச் சென்றபோது வருந்தியிருக்கிறாள்! பப்புவின் சின்னஞ்சிறு உலகம் இவர்களால் ஆனதுதான்!
அதற்காக, பிரச்சினைகள் இல்லாமலில்லை..there were so many problems..hiccups. (hmm..that deserves a seperate post). ஆனால், இப்படியொரு supporting system இருந்ததால்தான், நான் மற்ற ஆப்ஷன்களை(creche etc) பற்றி நினைக்க முடியாமலிருந்தது. we, as a family, salute these ladies who dare to come out of their family and served us.
இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது, சசியையும் (பத்மாவிற்கு பிடித்தவர்களைப் பற்றியும்), வித்யாவையும்(ஜூனியருக்கு பிடித்தவர்கள் பற்றியும்)!
25 comments:
பப்புவின் லிஸ்ட்டாகத்தான் நான் எதிர்ப்பார்த்தேன் (ஆவளுடன்)
ஆனாலும் பப்பு
உன்னை எங்களுக்கு நிறைய பிடிக்கும்
அன்புடன்
பப்பு பேரவை
சிங்கை கிளை.
:( வீட்டோடு யாரையும் நான் வைத்துக்கொள்ளவில்ல என்பதற்கு பல ப்ரச்னல் காரணங்கள்
ஆனால் கிரச்சி'ில் நவீனை விட்டுவிட்டு நான் பட்ட பாடு எனக்கு த்தான் தெரியும்..
ஆனால் எப்படியோ தனியாகவே அவனை வளர்த்துவிட்டேன்.. :)
//திருப்பத்தூர் ஆயா //
கவிதாக்கா திருப்பத்தூரா சொல்லவே இல்லை!
முல்லை நான் பேபி சிட்டர்களைப் பற்றி ஒரு பதிவை நேற்று தான் கம்ப்ளீட் பண்ணேன். ம்ம்ம்ம் அடுத்த வாரம் ஜூனியர் லிஸ்டை கொடுக்கிறேன்:)
////திருப்பத்தூர் ஆயா //
கவிதாக்கா திருப்பத்தூரா சொல்லவே இல்லை!//
ம்ம்..எல்லாருக்கும் தெரியும் விழுப்புரம் னு.. தேவையில்லாம திருப்பத்தூரை ஏன் இழக்கறீங்க..
உங்களுக்கு ஆயா த்தானே சொல்லனும்.. அந்த "குண்டு ஆயா" வை சொல்லிக்கோங்க... :) எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. :)
வருபவர்கள் அவளைக் கவனித்துக் கொள்ளத்தான் வருகிறார்களென்று. அதனால் அவளாகவே முதலில் போய் அவர்களிடம் பழக் முற்பட்டாள்..
ஆச்சரியமாகவும் கொஞ்சம் நெகிழ்வாகவும் இருக்கிறது முல்லை.
நாம் பக்கத்தில் இல்லாத குறையை அறிந்து குழந்தைப் பருவத்திலேயே தன்னை பழக்கிக்கொள்வது.
ரியலி ஹாட்ஸ் ஆஃப் டு மை டியர் பப்பு.
நல்ல வேலை எனக்கு இது போன்ற பிரச்னை இல்லை நான் வீட்டிலேயே இவர்களுக்காக இருப்பதால்!
பிடித்தவர்களின் லிஸ்ட் நெறயவே இருக்கே.பப்புவை பிடித்தவர்கள் பற்றிகூட நீங்கள் எழுதலாமே!:)
எழுதினா என்னையும் சேத்துக்கோங்க.சரியா
we, as a family, salute these ladies who dare to come out of their family and served us.
பெண்கள் தினத்துக்கு வாழ்த்து சொல்ல சரியானதொரு தேர்வு.
தலைப்பு வேறுபடுத்தியிருந்தாலும்.
பப்புவிற்கு எல்லாரையுமே பிடிக்கும்..
:)-
எங்க எல்லாருக்கும் கூட பப்புவை ரொம்ப பிடிக்கும் ஆச்சி,,
அமித்து டூ.....
பப்புக்கு பிடித்த பத்து!நல்லா தான் இருக்கு அத்தானை முத்தும்!
ப்பபு கடும் ஆள்தான்போல... :)
கவிதா | Kavitha said...
////திருப்பத்தூர் ஆயா //
கவிதாக்கா திருப்பத்தூரா சொல்லவே இல்லை!//
ம்ம்..எல்லாருக்கும் தெரியும் விழுப்புரம் னு.. தேவையில்லாம திருப்பத்தூரை ஏன் இழக்கறீங்க..
உங்களுக்கு ஆயா த்தானே சொல்லனும்.. அந்த "குண்டு ஆயா" வை சொல்லிக்கோங்க... :) எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. :)
\\
அப்ப கவிதா ஒரு 100கிலோ இருப்பாங்களா...:)
\\
அப்ப கவிதா ஒரு 100கிலோ இருப்பாங்களா...:)//
:) தமிழன் கறுப்பி... 100 கிலோ தான் உங்க ஊர்ல குண்டா??
நான் 103.94 கிலோ.. இப்பவும் சொல்லுவீங்களா? குண்டுன்னு?!! :)
அச்சச்சோ....பப்புவுக்கு என்னை பிடிக்காதா???
ஆனாலும் எனக்கு பப்புவை ரொம்ப பிடிக்கும்...!
Very nicely honoured mullai..you guys should be lucky to have had those ppl..
my love to pappu ..
cheers ,
janu
இவ்வளவு பேரையும் அட்ஜஸ்ட் செய்து கொண்ட பப்புவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்
பாராட்டுக்கள் பப்புவுக்கு!!!
மளிகை கடை பட்டியல் மாதிரியே இருக்கு
அதுக்குள்ள பப்புவ இத்தன பேர் பாத்துட்டாங்களா? ஹப்ப்பா...
இத்தனை சிறிய வயதில்...
இவ்வளவு மனிதர்களைக்கடந்து வந்த
பப்புவை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.
நீ நல்லா இருப்படா பப்பு!
நிச்சயமா இப்படி ஆட்கள் கிடைப்பது போன ஜென்மத்து புண்ணியம்ன்னு தான் சொல்லிக்கனும்.. ஏன்னா ஆட்கள் கிடைக்காம திண்டாடியவர்களை நிறைய பார்த்திருக்கிறேன்..
:) sweet
சூப்பர்:):):) எங்க அக்காவை பாட்டி வளத்தாங்க. என்னை இப்டி ஒரு அக்காதான் வளர்த்தாங்க. அவங்க பேர் குப்பு. இப்போ என் கலயானத்துக்குக் கூட ஊர்ல இருந்து கணவரோட வந்து வாழ்த்திட்டு போனாங்க. அவ்ளோ ஜாலியா விளையாட்டு காட்டுவாங்க. சூப்பரா பார்த்துப்பாங்க. இப்டி நம்பிக்கையான சூப்பர் ஆட்கள் இப்பவும் கிடைக்கறாங்கன்னு பார்க்க சந்தோஷமா இருக்கு:):):)
Post a Comment