Friday, March 27, 2009

250-உம் நன்றிகளும்!!


(pappu : @ nine months old!)

என்னுடைய கடந்த இடுகை 250வது இடுகை. பதிவுகளின் எண்ணிக்கையைக் குறித்து அவ்வளவாக சிலாகித்துக் கொள்வதில்லையென்றாலும் நன்றி சொல்லவதற்காகவேனும் இதைக் பதிவு செய்வது அவசியமாகத் தோன்றுகிறது எனக்கு! நான் ஒன்று பெரிய எழுத்தாளரோ கவிஞரோ இல்லை! ஆனால் பள்ளி/கல்லூரி போட்டிகளுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், நிகழ்வுகளைக் குறித்துக் கொள்வதற்காகவும், சில சமயங்களில் பள்ளிக் கல்லூரித் தோழியருக்கு நெடுங் கடிதங்கள் என்றுதான் எழுதியிருந்திருக்கிறேன்! எதையாவது எழுதுவது என்பது என்னை எனக்கு உணர்த்தியிருக்கிறது..எழுத்து எனக்கு தஞ்சமளித்திருக்கிறது..அடுத்தவரிடம் சொல்ல முடியாதபொழுதுகளில்..அல்லது பிறர்
புரிந்துக்கொள்ள முடியாத பொழுதுகளில்! வாசிப்பு எழுத்தும் என்னை ஓருபோதும் காயப்படுத்தாதவை!

வேலை மாற்றங்கள், திருமணம், குழந்தை என்றிருக்கும்போதுதான் வலைப்பதிவு அறிமுகமானது! பப்பு ஒருவயதை நெருங்குகையில் 28 இடுகைகளைத் தொட்ட என் வலைப்பதிவு, அவளது இரண்டாம் அகவையில் 18 இடுகைகளாக குறைந்து அவள் பள்ளி செல்லவாரம்பித்தபின் 145 ஆக எகிறியிருக்கிறது! இதில் மறைந்திருக்கும் இன்னொரு் பொருள்..பப்புவிற்கும் எனக்கும் இடையேயிருக்கும் பிணைப்புக்கயிறு நாள்பட நெகிழ்ந்து, பப்பு அவளது விளையாட்டுலகத்துடன் நெருக்கமாகியிருக்கிறாள்.. நான் பதிவுகளுடன்!!

வலைப்பதிவுகளின் மூலம் பல நல்ல நண்பர்களை பெற்றிருக்கிறேன்..ஒரு சிலரை நேரில் சந்தித்துமிருக்கிறேன்! இந்தப் பதிவின்மூலம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான்....உங்கள் பின்னூட்டங்கள் ஊக்கமளித்திருக்கின்றன....மேலும் பதிவுகளிட கிரியை செய்திருக்கின்றன....பலசமயங்களில் மறுமொழிக்கு மறுமொழி இடாவிட்டாலும் தொடர்ந்து மறுமொழியிடும் உங்கள் கனிவுக்கும் பெருந்தன்மைக்கும் வந்தனங்கள்!

என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும், பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
வலைப்பதிவுகளுக்கு தளமாக இருக்கும் தமிழ்மணத்திற்கு நன்றி!!

53 comments:

நிஜமா நல்லவன் said...

பிரசண்ட் போட்டுக்கிறேன்!

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ :))

ஆயில்யன் said...

//மறுமொழியிடும் உங்கள் கனிவுக்கும் பெருந்தன்மைக்கும் வந்தனங்கள்!
/

ஹய்யோ....!

நீங்கள் எங்களை நொம்ம்ப்ப்ப புகழுறீங்கோ!

எனக்கு வெக்கம் வெக்கமா வருது :)

நிஜமா நல்லவன் said...

ஆஹா...250 வது பதிவில் வாழ்த்து சொல்ல முடியாம போச்சே....அதனாலென்ன இந்த பதிவில் என்னோட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!

நட்புடன் ஜமால் said...

250க்கு வாழ்த்துகள் ...

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//மறுமொழியிடும் உங்கள் கனிவுக்கும் பெருந்தன்மைக்கும் வந்தனங்கள்!
/

ஹய்யோ....!

நீங்கள் எங்களை நொம்ம்ப்ப்ப புகழுறீங்கோ!

எனக்கு வெக்கம் வெக்கமா வருது :)/


ரிப்பீட்டேய்...!

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள், நானும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். என்னுடைய பல்லவர்களுடன் ஒரு அனுபவம் பதிவில் நீங்கள் என்னை ஊக்கமளித்து பின்னூட்டமிட்ட நாள் முதல்.

ராமலக்ஷ்மி said...

உங்கள் வலைப்பூ நீங்கள் தமிழ்மண நட்சத்திரமாய் ஜொலித்த போது முதல் அறிமுகம். அப்போது முதல் அவ்வப்போது சிலதை தவற விட்டாலும் தவறாமல் வருவதாய்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்:))! ஸோ நன்றிகளை ஏற்றுக் கொண்டு இன்னும் இப்படி நல்ல பல பதிவுகள் தர வாழ்த்துக்கிறேன் முல்லை!!

ராமலக்ஷ்மி said...

ஆயில்யன் said...

//மீ த பர்ஸ்ட்டூ :))//

ஆயிலு யூ மிஸ்டூ:))!

ஆ.முத்துராமலிங்கம் said...

வாழ்த்துகள்

தமிழ் பிரியன் said...

சரி....அதெல்லாம் இருக்கட்டும்..250 க்கு பார்ட்டி எப்ப கொடுப்பீங்க..
(இதை ஆயில் கேட்கச் சொன்னார்)

தமிழ் பிரியன் said...

250 க்கு வாழ்த்துக்கள்! நான் எத்தனைன்னு எண்ணவே இல்லியே..:(

முத்துலெட்சுமி-கயல்விழி said...

251 க்கு வாழ்த்துக்கள்.. மொய்ப்பணம்மாதிரியே இருக்கு..:)

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
சரி....அதெல்லாம் இருக்கட்டும்..250 க்கு பார்ட்டி எப்ப கொடுப்பீங்க..
(இதை ஆயில் கேட்கச் சொன்னார்)


இதுதான் பாஸ் உலகம்!

இராம்/Raam said...

பப்பு படம் சூப்பரு... :))

G3 said...

251-க்கு வாழ்த்துக்கள் :)))

வெயிலான் said...

// நான் ஒன்றும் பெரிய எழுத்தாளரோ கவிஞரோ இல்லை! //

நீங்க பெரிய எழுத்தாளர்/கவிஞர்னு நாங்க சொல்லவே இல்லையே ;)

சரி... சரி.... பெருங்கவிஞர்னு சொல்ல வந்தோம்.

கணினி தேசம் said...

250க்கு வாழ்த்துகள் ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

251 க்கு வாழ்த்துக்கள்.

// நான் ஒன்றும் பெரிய எழுத்தாளரோ கவிஞரோ இல்லை! //

ஆனால் ஒரு தாயாய் உங்கள் பப்புவின் வளர்ச்சியை பதிவிடும் தான் உங்கள் பதிவிற்கு வரச்செய்தது, என் மகளைப் பற்றி எழுதவும் செய்தது.

என் பதிவில் வந்து, அமித்துவைப் பற்றி நீங்கள் கேட்டபோதுதான்
ஆரம்பமாகிறது அமித்து படலம் என்று நான் என் அமித்துவை நான் என் மனரீதியாக அணுக ஆரம்பித்தேன். கண்டிப்பாக இதற்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்’

வாழ்த்துக்கள்
எழுதுங்கள், அவ்வப்போது கவிதைகளையும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//மறுமொழியிடும் உங்கள் கனிவுக்கும் பெருந்தன்மைக்கும் வந்தனங்கள்!
/

ஹய்யோ....!

நீங்கள் எங்களை நொம்ம்ப்ப்ப புகழுறீங்கோ!

எனக்கு வெக்கம் வெக்கமா வருது :)

repetttttttttteeeeeeeeee

கானா பிரபா said...

250 வாரங்கள் ஓடி பாக்ஸ் ஆபிஸ் நிரப்பிய அருமைச்சகோதரி, பப்புவின் திருவிளையாடல்களை எமக்களித்துக் களிப்படைய வைத்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்

பாட்டி பேரவை
சிட்னி
டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே

ஜீவன் said...

வாழ்த்துக்கள்!!250 வது பதிவிற்கு!!

மங்களூர் சிவா said...

Great

Congrats for 250

மிஸஸ்.டவுட் said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

251 க்கு வாழ்த்துக்கள்.. மொய்ப்பணம்மாதிரியே இருக்கு..:)


ரிப்பீட்டேய்...!

ஆயில்யன் said...

250 வாரங்கள் ஓடி பாக்ஸ் ஆபிஸ் நிரப்பிய ஆச்சி, எங்கள் பப்புவின் திருவிளையாடல்களை சித்திரகூடத்தில் எமக்களித்துக் களிப்படைய வைத்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்..!

ஆச்சி பேரவை
தோஹா
ஒபாமாவுக்கு பி.ஏன்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே...!

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
250 வாரங்கள் ஓடி பாக்ஸ் ஆபிஸ் நிரப்பிய அருமைச்சகோதரி, பப்புவின் திருவிளையாடல்களை எமக்களித்துக் களிப்படைய வைத்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்

பாட்டி பேரவை
சிட்னி
டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே
//

பாஸ் சூப்பரேய்ய்ய்ய்ய்! :))

Divyapriya said...

vaazhthukkal...kalakkunga :)

RAMYA said...

250 பதிவிற்கு வாழ்த்துக்கள் முல்லை!!

இன்னும் நீங்கள் பல ஆயிரம் பதிவுகளை தரவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !!

கவிதா | Kavitha said...

முல்ஸ் ஸ்டைலில்...செம செம !!

வாழ்த்துக்கள் டா.. ஆனா..மச்சி ட்ரீட் எப்ப? சும்மா 250 ன்னா விட்டுடுவோமா... ?!! :))

:)))))))

கவிதா | Kavitha said...

பப்பு போட்டோ சூப்பரா இருக்கு..:)

நசரேயன் said...

வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எழுத , நீங்க பப்புவை பத்தி எழுதுவது மிகவும் பிடிக்கும்

Thamizhmaangani said...

தொடர்ந்து கலக்குங்க. குழந்தை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப cuteஆ இருக்காங்க!:)

Sasirekha Ramachandran said...

congrats!!!keep writting!!!

பாண்டியன் புதல்வி said...

Congrats Mullai :)

பிரேம்குமார் said...

வாழ்த்துகள் முல்லை

பப்பு பற்றின பதிவுகளுக்காகவே தொடர்ந்து உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். ஆக பப்புவிற்கு நன்றி

தொடர்ந்து நல்ல கதைகள், குழந்தைகளை பற்றிய கட்டுரைகளை எழுதுங்கள்.

வாழ்த்துகள்

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

"பப்புவிற்கும் எனக்கும் இடையேயிருக்கும்பிணைப்புக்கயிறு நெகிழ்ந்து",எம்மையும் பிணைக்கவைக்கிறது.

எம்.எம்.அப்துல்லா said...

250 க்கும் இந்த வருடம் வரப்போகும் 500 வது பதிவுக்கும் வாழ்த்துகள்.

//பலசமயங்களில் மறுமொழிக்கு மறுமொழி இடாவிட்டாலும் தொடர்ந்து மறுமொழியிடும் உங்கள் கனிவுக்கும் பெருந்தன்மைக்கும் வந்தனங்கள்!

//


வேலையினால சிலநேரம் படிச்சுட்டு பின்னூட்டம் போடாம ஓடிப் போய்விடுவதற்காக நீங்கதான் வருத்தப்படக்கூடாது சிஸ்டர் :)

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் முல்லை!

இய‌ற்கை said...

250க்கு வாழ்த்துகள் :-)

ஜி said...

இன்னும் பப்புவை பற்றிய பதிவுகளுடன் அடிச்சு ஆட வாழ்த்துக்கள் :)))

வல்லிசிம்ஹன் said...

சித்திரக்கூடத்திற்கு அடிப்படை காரணமாக பப்புவும் உங்கள் பாசமும் தான். இன்னும் நூறு நூறு பதிவுகள் பதிந்து எங்களை மகிழ்விக்கப் போகும் சந்தனமுல்லைக்கு வாழ்த்துகள்.

ச.முத்துவேல் said...

வாழ்த்துக்கள் .வெளிப்ப்டையான, மனந்திறந்த கருத்துக்கள் ஈர்த்தது.

ஆகாய நதி said...

வாழ்த்துகள்... மற்றும் நன்றிகளும் கூட எங்களை உங்கள் பப்புவோடும், பதிவோடும் பிணைத்தமைக்கு... :)

பல மாதங்களுக்குப் பிறகு நான் எழுதும் முதல் பின்னூட்டம் ஒரு வாழ்த்தாக அமைவதில்... அதிலும் அது தங்களுக்கான வாழ்த்தானதில் மிக்க மகிழ்ச்சி... :)

சந்தனமுல்லை said...

நன்றி நிஜமா நல்லவன் அண்ணா, ஆயில்ஸ் அண்ணா!

நன்றி ஜமால்!

நன்றி குடுகுடுப்பையார்..உங்கள் பதிவுகள் அதற்கு முதலிலேயே படித்திருந்தாலும் பின்னூட்டமிட்டது போட்டது அப்போதுதான்!

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி..ஆமா, நீங்க எப்போதும் பப்புவின் பதிவுகளை மிஸ் செய்வதே இல்லை! தம்ஸ் அப்!!

நன்றி ஆ.முத்துராமலிங்கம்!

நன்றி தமிழ்பிரியன்...எண்ணிட்டீங்களா?! இந்த வாரம் ஓக்கே..எங்கேன்னு ஆயில்ஸ்கிட்டே கேட்டு சொல்லுங்க! அவர்தானே ட்ரீட் கொடுக்க ஆசையா கேட்டுருக்கார் உங்ககிட்டே! :-)

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி, ஆகா..நீங்கதான் எப்பவும் மொய் புத்தகத்திலே எழுதுவீங்களா?! :-)

நன்றி ராம், யார் போட்டோன்னு கரெக்டா கண்டுபிடிச்சதுக்கு!இதெல்லாம் ஓவராத் தெரியலை??

நன்றி G3!

சந்தனமுல்லை said...

நன்றி வெயிலான்..சொல்லலைன்னா விட்டுடுவோமா!! :-) எப்படியோ ஒப்புக்கொண்டா சரிதான்!

நன்றி கணினி தேசம்!

நன்றி அமித்து அம்மா..உங்க உணர்ச்சிபூர்வமான பின்னூட்டதுக்கு!

நன்றி கானாஸ்..சின்னபாண்டி கூட சேராதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! ரெண்டுபேரும் அடிக்க கலாட்டா இருக்கே! :-)

சந்தனமுல்லை said...

நன்றி ஜீவன்!

நன்றி மங்களூர் சிவா, டவுட்..நீங்களும் முத்து மாதிரிதானா!

நன்றி Divyapriya, ரம்யா..உங்கள் ஆசைப்படி ஆகட்டும்! :-)

நன்றி கவிதா..கொடுகக்ப் போறது நீங்கதானே..இதுக்கெல்லாம் கூப்பிட்டா மறுக்கவா போறேன்! ;-)

சந்தனமுல்லை said...

நன்றி நசரேயன்..உங்க மண்டச்சி பதிவு இன்னும் மறக்கமுடியலை..ரொம்ப நேரம் சிரிச்சேன்!

நன்றி Thamizhmaangani, சசி!

நன்றி பாண்டியன் புதல்வி!

நன்றி பிரேம்..ஆமாம், அறிவேன் நான், வலைச்சரத்தில் பப்பு பதிவை சுட்டியபோது!!

நன்றி மாதேவி! :-)

சந்தனமுல்லை said...

நன்றி அப்துல்லா, அபி அப்பா,இயற்கை!

நன்றி ஜி..கண்டிப்பா! :-)

நன்றி வல்லியம்மா..உங்க ஆசிப்படி! :-)


நன்றி ச.முத்துவேல்!

நன்றி ஆகாயநதி..ஆமாம்..நீண்ட நாட்களாயிற்று பொழிலன் அப்டேட்ஸ் பார்த்து!!

அமுதா said...

வாழ்த்துகள் முல்லை...

அன்பு said...

ஓரிரு நாள் இந்தப்பக்கம் வராட்டி கூட நிறைய மிஸ் பண்ண வேண்டியிருக்குது:(

வாழ்த்துக்கள். பப்புவின் ஊக்கம் தொடரட்டும், நீங்கள் தொடர்ந்து பதிய:)

(pappu : @ nine months old!)
என்ற குறிப்பு பாக்காட்டி, அந்த இரு முன்பற்கள் தவிர நிறைய மாற்றங்கள்....
இப்பல்லாம் மாட்டுஜீஸ் மட்டுமல்லாமா ஆச்சியோட சாப்பாடு சாப்பிடக்கூட ரொம்பத்தான் பப்பு சிரமப்படுவது தெரிகிறது, உண்மையா!?

Deepa said...

வாழ்த்துக்கள் முல்லை!
உங்கள் எழுத்து ந்டை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நீங்கள் நட்சத்திரப் பதிவராக இருந்திருக்கிறீர்கள் சொல்லவே இல்லை? தமிழ்மணத்தில் பார்த்தேன். இன்று உங்கள் நட்சத்திரப் பதிவுகளைத் தான் படிக்கப் போகிறேன்.