Thursday, March 19, 2009

பப்பு டைம்ஸ்!

Rant

ஆயா, நான் போய் சிடி பார்க்கப் போறேன், நீங்களும் வாங்க!

என்னால வர முடியாதுடா, நீ போய் பாரு.

நான் உங்களை தூக்கிட்டுப் போறேன்... ...laughes at her own joke!!தலைக்கனம்!?!

பப்பு ஒரு நீளமான துண்டை எடுத்து தலைமுடியாக்கினாள். வழக்கமாய் போடும் ஸ்ரன்ச்சி போரடித்ததோ என்னவோ, கிளிப் போடச் செய்தாள். அப்போதுதலையை மேலே தூக்கியபடி இருமுறை கேட்வாக்கியபின், என்னுடைய proud peacock-ற்கு கண்ணாடி பார்க்கும் ஆசை வந்துவிட்டது. அதே ஸ்டையிலில், தலையை மேலே தூக்கி, அடுத்த அறையில் சென்று பார்த்தாள். நானும் ஆயாவும் மட்டும்தான் இருந்தோம் அப்போது. அங்கிருந்து கேட்டாள்,

“என்னை யாரு வந்து தூக்கிக்கிட்டு போ(க)ப் போறது?”


”என்னை வந்துத் தூக்கிட்டுப் போ” என்னு சொல்றதுக்கு பதிலா!! :-) offer period முடியும் போது சொல்வார்களே..அதேபோல்!
Role play !?!

எங்க அம்மா, பெரிம்மாவையெல்லாம் அவளுடைய அம்மா என்றும் எனக்கு யாரையும் கொடுக்க மாட்டாளென்றும் கடைசியில் ”உனக்கு யாரு அம்மா?” என்று ஒரு கேள்வி கேட்பாள். நான் யாரை சொன்னாலும், “பெரிய ஆயா”, ”விழுப்புரம் ஆயா” என்று சொன்னாலும் அவர்களெல்லாம் அவளுடைய ப்ரெண்ட்ஸ். திரும்ப ”உனக்கு யாரு அம்மா?” என்ற கேள்வி! ஒருநாள், நீதான் எங்க அம்மா” என்றதும் ரொம்ப குஷி. அதிலிருந்து அவ்வப்போது அவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்... சில சமயங்களில் அவளாகவே..அவளை பால் குடிக்கவைக்க வேண்டியிருக்கும் சமயங்களில் என்னால்!

30 comments:

நட்புடன் ஜமால் said...

ஹையா பப்பு!

இரு படிச்சிட்டு வாறேன்.

வெயிலான் said...

// நான் உங்களை தூக்கிட்டுப் போறேன்... //

:)

நட்புடன் ஜமால் said...

...laughes at her own joke!!\\

அப்படியே கற்பனை செய்ய முடிகிறது என்னால்

பப்புவின் ரியாக்‌ஷன்ஸ் மனப்பாடம்

நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

...laughes at her own joke!!\\

அப்படியே கற்பனை செய்ய முடிகிறது என்னால்

பப்புவின் ரியாக்‌ஷன்ஸ் மனப்பாடம்/


ரிப்பீட்டேய்...!

ஆயில்யன் said...

:))

நட்புடன் ஜமால் said...

\\“என்னை யாரு வந்து தூக்கிக்கிட்டு போ(க)ப் போறது?”\\

ஆஹா! பப்பு நான் விடமாட்டேன் யாரையும் என் மருமகளை தூக்க

ராமலக்ஷ்மி said...

:)!

வித்யா said...

:))

Sathananthan said...

”உனக்கு யாரு அம்மா?” என்ற கேள்வி! ஒருநாள், நீதான் எங்க அம்மா” என்றதும் ரொம்ப குஷி. அதிலிருந்து அவ்வப்போது அவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்...

:):):) Sooooo chweeeeeet

நசரேயன் said...

நல்ல பகிர்வு.. வாழ்த்துக்கள் பப்பு

Poornima Saravana kumar said...

:)))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆஃபர் பீரியட்.. நல்ல உதாரணம்.. அனுபவித்து அறியாத இளைஞர்களுக்கு நல்லா புரிஞ்சுடும்..

அமுதா said...

:-)

பாண்டியன் புதல்வி said...

அய்யோ!! cute. உங்களின் இது போன்ற பதிவுகள் என்னையும் என் வால்களின் (two boys) குறும்புகளைப் பதிவிட தூண்டுகின்றன.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் உங்களை தூக்கிட்டுப் போறேன்... ...laughes at her own joke!!

haa haa : பப்பு ஜோக்ஸ் நு தனியா ஒரு பதிவு போடுங்க இனிமே.

ன்னுடைய proud peacock-ற்கு கண்ணாடி பார்க்கும் ஆசை வந்துவிட்டது

அழகியல் வார்த்தைகள். ரசித்தேன்

“என்னை யாரு வந்து தூக்கிக்கிட்டு போ(க)ப் போறது?”
சந்தேகமே இல்லாம உன்னோட ரசிகர்களாகிய நாங்கள் தான் பப்பு.

நாள், நீதான் எங்க அம்மா” என்றதும் ரொம்ப குஷி. அதிலிருந்து அவ்வப்போது அவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்...

ஹா ஹா ஹா

நாம அவங்களை குழந்தைகளா நெனைக்கிறோம், ஆனா அவங்க நமக்கு அம்மாவாக இருக்க ஆசைப்படுறாங்க,, என்ன ஒரு அழகிய முரண்.

கவிதா | Kavitha said...

//”விழுப்புரம் ஆயா” //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது எங்க ஆயா... ??!! ஹவ் கம் பப்புவுக்கும்?!!

கவிதா | Kavitha said...

//நான் உங்களை தூக்கிட்டுப் போறேன்... ...//

நான் வந்த போதுக்கூட கேட்டாளே.. உங்களால மாடிப்படி ஏறமுடியுமான்னு

நானும் ஆயா மாதிரி முடியாதுன்னு சொல்லி இருந்தால் என்னையும் தூக்கிட்டு போறேன் னு சொல்லி இருப்பாள் போல...

ம்ம்.. பாயிண்ட் நோட்டட், அடுத்த முறை வரும் போது அவள் என்னை தூக்கறாளான்னு டெஸ்ட் பண்ண போறேன்.. :)))

யூ டோன்ட் ஒரி எனக்கு ஒன்னும் ஆகாமா நான் பார்த்துக்குறேன்..:) ஆனா பப்புவுக்கு... ஹா ஹா... :)))

♥ தூயா ♥ Thooya ♥ said...

கடைசி....கவிதை :)

புதுகைத் தென்றல் said...

அவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்...//

என் அம்ருதம்மா போல் உங்களுக்கும் பப்பும்மாவா!!

நாம் அவர்களை அம்மா என்று அழைத்தால் ரொம்ப சந்தோஷ்ம்.
அதை அனுபவிக்கும்போதுதான் புரியும்.

பிரேம்குமார் said...

கலக்குற பப்பு...... :)

தமிழ் பிரியன் said...

:)

தமிழன்-கறுப்பி... said...

good times!

தமிழன்-கறுப்பி... said...

பப்பு கலக்குவது ஒரு புறம்,

நீங்கள் பதிவுகளாக போட்டு தாக்குகிறீர்கள் பல பதிவுகளை படிக்கவில்லை படிச்சுட்டு சொல்லுறேன்...

மிஸஸ்.டவுட் said...

//புதுகைத் தென்றல் said...
அவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்...//

என் அம்ருதம்மா போல் உங்களுக்கும் பப்பும்மாவா!!

நாம் அவர்களை அம்மா என்று அழைத்தால் ரொம்ப சந்தோஷ்ம்.
அதை அனுபவிக்கும்போதுதான் புரியும்.//

என் பாப்பு தான் எனக்கும் அம்மா .

புரியுது புதுகை தென்றல் ,

பப்பு வளர்கிறாள் .பெருமையாக இருக்கிறது தானே முல்லை .அதே இந்த சந்தோஷமும்வளரும் அவளோடு கூட.

Sasirekha Ramachandran said...

//அவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்...//

so sweet.
ingeyum adhan nadakkudhu.

அபி அப்பா said...

அபி என்னிடம் "அப்பா நான் தான் உங்க அம்மாவாம்" அப்படின்னு சொன்னது நியாபகம் வருது. அவள் மடியில் தலை வச்சுக்க சொல்லும் போது நெகிழ்வா இருக்கும்! ஹும் அதல்லாம் நியாபகம் வருது!

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால், வெயிலான், நிஜமா நல்லவன், ஆயில்யன், ராமலஷ்மி, வித்யா, Sathananthan,நசரேயன், பூர்ணிமா சரண், முத்துலெட்சுமி, அமுதா!

நன்றி பாண்டியன் புதல்வி, கண்டிப்பாக பதிவிடுங்களேன்!

நன்றி அமித்து அம்மா..அனுபவிச்சி படிச்சிருக்கீங்க!

சந்தனமுல்லை said...

நன்றி கவிதா..//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது எங்க ஆயா... ??!! ஹவ் கம் பப்புவுக்கும்?!!// இது என்ன புதுக்குழப்பம்??

நன்றி தூயா, புதுகைத்தென்றல், பிரேம், தமிழ்பிரியன் தமிழன் - கறுப்பி, டவுட், சசி, அபி அப்பா!

Vadivelan R said...

அட என்று சொல்ல வைக்குது உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லாவே இருக்கு நானும் என் குழந்தை பருவத்திற்கு போய் வந்த மாதிரி இருக்குது. குழந்தைகளுக்கான பதிவு உங்களுடையது மட்டுமே நன்றி தொடரட்டும் உங்கள் பணி

மங்களூர் சிவா said...

nice