Saturday, March 07, 2009

சிநேகம்

என் உயிர்ப்பறவை
உந்தன் நிழல் தேடிப் போகும்
ஆசைகள் உறவுக்கூட்டினிலிட்ட
முட்டைகளாய்
நிச்சலனமாய் நிம்மதியாய் உறங்கும்!
எங்கோ தூரத்தில் கேட்ட
மணியோசையாய்...
தொலைவில் பெய்தமழையால்
மூக்கை நெருடும் மண்வாசனையாய்
மனம் பழைய நினைவுகளில் ரீங்கரிக்கும்...
உன்னைச் சந்திக்கும் காலம்
வருவதற்குள்
என் உயிர்ப்பறவை
முந்திக் கொண்ட காலனின்
அம்பினுள்!

(உபயம் : பள்ளிக்காலத்து நோட்டுபுக்)

26 comments:

தமிழன்-கறுப்பி... said...

me the first!

தமிழன்-கறுப்பி... said...

அந்தக்காலத்துலயே பெரிய கவுஞ்ஜராத்தான் இருந்திருக்கிறிங்க...!

தமிழன்-கறுப்பி... said...

பழைய காலத்து குறிப்புகள் எப்பொழுது படித்தாலும் உணர்வுகள் நிறந்தவை தான் இல்லையா...

பழமைபேசி said...

அப்பவே, இந்தளவுக்கா? அபாரம்...

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

பள்ளிக்கால கவிதையே நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

SUREஷ் said...

//உறவுக்கூட்டினிலிட்ட
முட்டைகளாய்//


எப்படிங்க இப்படியெல்லாம்

ராமலக்ஷ்மி said...

பள்ளிக் காலமா:)? வந்துவிட்டேன் ரசிக்க:)! சோக முடிவெனிலும் முடித்த விதம் அருமை:
//என் உயிர்ப்பறவை
முந்திக் கொண்ட காலனின்
அம்பினுள்!//

தமிழ் பிரியன் said...

அம்மாடியோவ்... அப்பமே கவுஜ எழுதி இருக்கீங்களே.. பரவாயில்லை...:)

நட்புடன் ஜமால் said...

அருமையா இருக்கு.

பழைய கவிதைகளா ...

மகளீர் தின வாழ்த்துகள்

நசரேயன் said...

பள்ளிக் ௬டத்தில் கவிதை .. நீங்க ரெம்ப பெரிய ஆளு தான்

நட்புடன் ஜமால் said...

tamilishல் சேர்க்கலையா

அமுதா said...

பள்ளிக் காலமா? !!!
அப்பவே இப்படியா?
கலக்கறீங்க முல்லை...

நிஜமா நல்லவன் said...

Aahaa...appave kavithaayani thaanaa?

Iyarkai said...

ஓ! நீங்க‌ அப்போவே அப்ப‌டியா:‍))))

பிரேம்குமார் said...

அருமை முல்லை... அப்போ நல்லாத்தான் எழுதிகிட்டு இருந்திருக்கீங்க (இப்போ மொக்க போடுறேனான்னு கேட்க கூடாது)

சந்தனமுல்லை said...

நன்றி தமிழன் - கறுப்பி! ஆமா, கவுஞ்சரா இருந்து திருந்தியிருக்கேன் இப்போ! ஹ்ம்ம்...உண்மைதான், அவை அந்தக் காலத்துக்கே நம்மை கொண்டுப் போகும் வல்லமை படைத்தவை!

நன்றி பழமைபேசி...:-)

சந்தனமுல்லை said...

ஆகா..டாக்டர்..நீங்களுமா..:-)..நன்றி!

நன்றி SUREஷ் .

நன்றி ராமலஷ்மி..வாங்க..வாங்க..:-)

நன்றி தமிழ்பிரியன் அண்ணா..இப்போக்கூடத்தான் எழுதறேன்..என்ன நீங்கதான் படிக்கறது இல்லை! ;-)

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால், சேர்க்கணும் தமிழிஷ்-இல்!

நன்றி நசரேயன், அமுதா, நிஜமா நல்லவன் அண்ணா!

நன்றி இயற்கை..எல்லாரும் இப்படியே சொல்றீங்க..அவ்வ்வ்!

நன்றி பிரேம்..இப்பவும் அப்படி எழுதறதாத்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன்! :-)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓ .. எத்தனை சோகம்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப நல்லா இருக்குப்பா

பள்ளிக்காலத்துல ரொம்ப நல்லா கவிதை எழுதுவீங்க போல இருக்கு

ஆனா இப்பதான் கவுஜக்கு மாறிட்டீங்க போல இருக்கு (தவளை கனவுகள்(

குடுகுடுப்பை said...

இப்படியெல்லாம் கவுஜ இஸ்கூல்யே புரியாம எழுதின உங்கள் யாரு பாஸ் போட்டது

வல்லிசிம்ஹன் said...

முல்லை, முதல்ல வாழ்த்துகளைப் பிடிங்க.

சக்திவிகடன்ல வந்ததுக்கு.
அடுத்தாப்பில உயிர்ப்பறவையைப் பறக்க விடுங்கப்பா. சோகம் வேண்டாம்.

சந்தோஷமாகக் கவிதையில் பறக்கச் சங்கடம் ஏன்:(

ஆயில்யன் said...

//வல்லிசிம்ஹன் said...

முல்லை, முதல்ல வாழ்த்துகளைப் பிடிங்க.

சக்திவிகடன்ல வந்ததுக்கு.
அடுத்தாப்பில உயிர்ப்பறவையைப் பறக்க விடுங்கப்பா. சோகம் வேண்டாம்.

சந்தோஷமாகக் கவிதையில் பறக்கச் சங்கடம் ஏன்:(
//

வல்லியம்மா சொன்னதுக்கு ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

//தமிழன்-கறுப்பி... said...

அந்தக்காலத்துலயே பெரிய கவுஞ்ஜராத்தான் இருந்திருக்கிறிங்க...!//


என்ன அந்த காலத்துலயேன்னு ஒரு இழுவை...??

வயசானாலும் எங்க பாஸ் இன்னும் மனசளவில யூத்துதாம்ல :)))

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........கவித கவித:):):)

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி..அது ஒரு மென்சோகம்..நீங்க பீலிங்ஸ் ஆகாதீங்க! :-)

நன்றி அமித்து அம்மா...திருந்திட்டோம்ல!

நன்றி வல்லியம்மா..உங்கள் வாழ்த்துகளைக் கண்டு மகிழ்ச்சி..ஆயில்ஸ்- வல்லியம்மா-க்கு சொன்னதே உங்களுக்கும்! :-)

நன்றி ராப்..ஹப்பாடா..இப்போதான் மனசு நிம்மதியா இருக்கு! :-))