Friday, February 27, 2009

சாக்லேட் கதைகள்..

80/90-களில் வளர்ந்தவர்கள் இந்த இனிப்புகளை சுவைத்திருப்பீர்கள்..ஆனால் இப்போதும் இருக்கிறதாவென சந்தேகமாக இருக்கும்/ நான் மிஸ் செய்யும் இனிப்புகளை தொகுத்திருக்கிறேன்.. கவர்களின் வண்ணங்களையே சாக்லேட் பெயர்களுக்கும் கொடுத்திருக்கிறேன்....நினைவிலிருந்தவரை!!

Ravelgaon - ராவல்கன் டாஃபி. இது ராவல்பிண்டியில் தயாரானகும் டாஃபி, ராவல்பிண்டி பாகிஸ்தானி இருக்கு என்று பொது அறிவுத்தனமாக பேசிக்கொண்டே....நிறைய
கவர்களை சேர்த்து அனுப்பியிருக்கிறோம். ஆனால் ஒருபோதும் பரிசு வந்ததில்லை!
ole - ஸ்ட்ராபெர்ரி வடிவத்திலிருக்கும் கேண்டி! tangy-யான சுவை!
campco - கோகோ பார் சாக்லேட்....அதன் அட்டையை வெட்டி புக்மார்க்-ஆக பயன்படுத்தியிருக்கிறேன்..
cigarette choco - சிகரெட் வடிவ சாக்லேட்..மேலே பேப்பரால் சுற்றப்பட்டு உள்ளே வெள்ளை வடிவத்திலிருக்கும். ரொம்ப ஷோ விடுவோம்....ஆனால், பெரியவர்களுக்கு எரிச்சல்!
melody - மெலடி சாக்லேட். கவரின் ஒரு முனை மட்டுமே சுற்றப் பட்டிருக்கும். இப்போதும் கிடைக்கிறதாவெனத் தெரியவில்லை.
caramilk - டாஃபி. பல சுவைகள். பெரும்பாலும் பிறந்தநாளுக்கு பள்ளியில் கொடுப்பதற்கு இதுதான்!
naturo - இது கெட்டிப்படுத்தப் பட்ட பழச்சாறு. ஆரம்பத்தில் மாம்பழச் சுவையில் மட்டுமே கிடைத்தது. பின் கொய்யா மற்றும் மற்றொரு
சுவையில் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போதும் மாம்பழச் சுவையில் கடைகளில் பார்க்கிறேன்!
pan pasaand - இது கொஞம் வெற்றிலை பாக்கு சுவையில் இருக்கும். தலை சுத்துவது போல் இருக்கும். வீட்டிற்கு தெரியாமல் சாப்பிடனும்(படிக்கற பசங்க வெத்தலை சாப்பிடக் கூடாது!)..ஆனால் வாசனையேக் காட்டிக் கொடுத்து விடும்.
doodh doodh doodh doodh…
peeyo glass full doodh…
garmiyon me daalo doodh mein ice…
doodh ban gaya very nice…

....
gimme more , gimme more
gimme gimme gimme gimme more wonderful doodh


ஒரு நாஸ்டால்ஜிக் விளம்பரம்...விளம்பர வரிகளை நோட் செய்து எழுதிக்கொண்டது இன்னும்கூட நினைவில் இருக்கிறது..பள்ளி விழாவிற்கு இந்த இசையை காப்பியடிக்கலாமாவென்றுக்கூட யோசனை செய்திருக்கிறோம்! இதேபோல், அண்டே (முட்டை)-க்கான ஒரு விளம்பரமும் இருந்தது..யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்!

39 comments:

எம்.எம்.அப்துல்லா said...

மீ த ஃபர்ஷ்ட்டூ :)

பதிவ படிச்சுட்டு வர்றேன்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆமா முட்டை பாட்டும் நல்லாருக்கும் ...முல்லை..
அந்த மாம்பழ கெட்டிச்சாறு இப்பவும் வாங்கிவச்சு நானும் கணவரும்மட்டும் சாப்பிடுறோம். :)

எம்.எம்.அப்துல்லா said...

அண்டே (முட்டை)-க்கான ஒரு விளம்பரமும் இருந்தது..யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும் //


சாப்பிடுவாய் என்னுயிரே கோழிமுட்டை...

அடுத்த லைன் எல்லாம் தெரியல. மறந்துடுச்சு.

புதுகைத் தென்றல் அக்கா இந்த மாதிரி பழைய மேட்டர் எல்லாம் நல்லா ஞாபகம் வச்சு இருப்பாங்க. அவங்க கிட்ட கேப்போம் :)

கைப்புள்ள said...

ஆஹா...நீங்களும் நோஸ்டால்ஜியாவை ரசிக்கிறவங்களா?

நீங்க சொல்ற அந்த முட்டை விளம்பரம். National Egg Co-ordination Committee(NECC)யோடது.

"Meri Jaan Meri Jaan Murgi ke Ande
Meri Jaan Meri Jaan Murgi Ke Ande
Sunday ho ya Monday roz khaaye Ande"

பஞ்சதந்திரம் படத்துல வருமே பாட்டு - "வை ராஜா வை உன் வலது கையை வை" அதே மெட்டு தான்.

ஆனா இதோட மூலம் - ஒரு பழைய இந்தி பாட்டு - ஜானி வாக்கர் பாடற மாதிரி வரும்.

கைப்புள்ள said...

"நியுட்ரின் நியுட்ரின் பான் பான்" அப்படின்னு ஒரு ஜிங்கிள் கேட்ட ஞாபகம் இருக்கா?

Nutrine Bon-Bon. இப்போ அந்த நியுட்ரினை Perfetti டேக் ஓவர் பண்ணிக்கிட்டதா படிச்ச ஞாபகம்.

கைப்புள்ள said...

அப்புறம் Cadbury' Dairy Milk - A gift for someone you love.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப ஷோ விடுவோம்...

ஆச்சி எப்ப எனக்குத் தெரியாம இவ்ளோ செஞ்சியா நீய்யி
இவ்ளோ சாக்லேட் சாப்பிடுவியா
என்ன மட்டும் சாப்டாத அப்டின்னு சொல்ற

உம் பேச்சி ஆன மேல பூன மேல டூ க்கா.

(இப்படின்னு பப்பு என் காதுல சொல்லி பின்னூட்டமா போட சொன்னா)

வந்த வேலை முடிஞ்சுது வரட்டா

ரைட் ரைட்

கைப்புள்ள said...

செம பதிவு. கடந்த காலத்தை நெனச்சி பாக்கறதுனாலே ஒரு ஆனந்தம் தான் இல்லையா. ரொம்ப யோசிக்க வச்சிடுச்சு உங்க பதிவு.

Pan Pasand, Ravelgaon, Melody இதெல்லாம் இன்னும் இருக்கு. ராவல்கான்ல அந்த ரெட் கலர் மிட்டாய் ரொம்ப சுவையா இருக்கும். Pan Pasand கூட Ravalgaon தயாரிப்பு தான்.

Poppins மறந்துட்டீங்களே - அதுவும் இன்னும் இருக்கு.

தமிழ் பிரியன் said...

இந்த சாக்லேட் பெயரை எல்லாம் கேள்விப்பட்டதில்லீங்கோ சம்பந்தி!

கைப்புள்ள said...

Parry's Coffy Bite வெளம்பரமும் ரொம்ப ஃபேமஸ்.

Its Coffee. Right..Its Toffee. Thats what I said...its Coffee... அப்படின்னு வரும்.

சந்தனமுல்லை said...

நன்றி அப்துல்லா! கைப்ஸ் அண்ணா சொல்லிருக்கார் பாருங்க!

நன்றி முத்துலெட்சுமி..ஏன் இப்படி?

நன்றி கைப்ஸ் அண்ணா..சூப்பர்! என்னோட நிறைய போஸ்ட் ஒரே நினைவுகளும் நாஸ்டால்ஜிக்-உம் தான்! வரிகளுக்கு நன்றி!

சந்தனமுல்லை said...

ஆகா கைப்ஸ் அண்ணா..நான் நியூட்ரின் விட்டுட்டேனே..அதுல kokonaka ன்னு ஒரு கேண்டி..முயல்லாம் கூட வரும்!
கேட்பரிஸ் க்ளாசிக் இல்லையா!! :-) காசு சேர்த்து வைச்சு ஒவ்வொரு கட்டமா சாப்பிடறதோட சுவை இப்பவும் நினைவுல இருக்கு! அப்புறம் Parry's Coffy Bite இப்போவும் வருது..the arguemnet continues அப்படின்னு! மிக்க நன்றி..நிறைய நினைவூட்டினீர்கள்!

நன்றி அமித்து அம்மா..சந்தோஷமா இப்போ?! :-))

நன்றி தமிழ்பிரியன் அண்ணா..

வித்யா said...

naturo இப்போதும் கிடைக்கிறது முல்லை. mango & apple flavour:)

pan pasand என் நினைவில் நீங்கா இடம் பெற்ற ஒன்று. infact a sad story too:(

மற்றவை நான் கேள்விபட்டதில்லை. இப்போதெல்லாம் coffee bite தென் படுவதேயில்லை:(

சரவணகுமரன் said...

Lacto King
Aasai

சரவணகுமரன் said...

அந்த ஆசை சாக்லேட் பேப்பர இழுத்தா நல்லா நீளமா வரும். :-)

சரவணகுமரன் said...

நான் எதிர்பார்த்து வந்தது இததான்... :-)

தேன் மிட்டாய்
உரல் மிட்டாய்
மிளகா மிட்டாய்
கல்கோனா
கமர்கட்
பர்பி

சந்தனமுல்லை said...

நன்றி வித்யா..காஃபி பைட் இப்போதும் கிடைக்கிறது! naturo மாங்கோதான் பார்த்திருக்கிறேன்..இன்னொரு சுவை ஆப்பிள் என்பதுதான் மறந்துபோனது..ஆனால் அது மிகவும் ஆர்ட்டிஃபிஷியலாக இருந்தது..ஓ..உங்க pan pasand கதை என்ன? ;-)

சந்தனமுல்லை said...

நன்றி சரவணகுமரன்..ஆசை இப்போது இருக்கிறது..அதுதான் அப்போது சீப்..ப்தினைந்து பைசா என்று நினைக்கிறேன்..அந்த இழுக்கும் விளையாட்டு :-)) நீங்கள் சொன்ன மிட்டாய்கள் பற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள்..இவற்றை யாராவது நினைவுக்கூர வேண்டுமல்லவா..அதான்! :-)

Kathir said...

To add a few others:

Cadburys "Eclairs"

"Maha Lacto"

"5 star"

:))

தாரணி பிரியா said...

ம் சின்ன வயசுக்கு கூட்டிட்டு போயிட்டிங்க நன்றி முல்லை :)

வருங்கால முதல்வர் said...

pan pasaand - இது கொஞம் வெற்றிலை பாக்கு சுவையில் இருக்கும். தலை சுத்துவது போல் இருக்கும். வீட்டிற்கு தெரியாமல் சாப்பிடனும்(படிக்கற பசங்க வெத்தலை சாப்பிடக் கூடாது!)..ஆனால் வாசனையேக் காட்டிக் கொடுத்து விடும்.

//
தம் அடிச்சப்புரம் போட்டா தம்மு வாடை வராது.. அதெல்லாம் அந்தக்காலம்.

குடுகுடுப்பை

பாண்டியன் புதல்வி said...

அந்த முட்டை பாட்டு:

சாப்பிடுவாய் சாப்பிடுவாய்
என்னுயிரேக் கோழி முட்டை

ஆம்ல்ட் செய்தும்
------- செய்தும்
சாப்பிடுவாய் சாப்பிடுவாய் கோழி முட்டை..

2-3 egg item காட்டுவார்கள். இளம் மனைவிக்கு கணவன் செய்துக் கொடுப்பதைப் போன்று படமெடுத்து இருப்பார்கள். ஞாபகம் படுத்தியதிற்கு நன்றி முல்லை.

நசரேயன் said...

நான் இன்னும் குச்சி மிட்டாயும், குழி உருண்டையும் தான் சாப்பிட்டு கிட்டு இருக்கேன்

பாண்டியன் புதல்வி said...

Cadburys Dairy milk is my all time favorite. அதன் விளம்பரம்களும் நல்லா இருக்கும்.

கர்பிணி மனைவியும் கணவனும் shopping செய்யும் போது, மனைவி dairy milk எடுக்க, வேண்டாம் என்று கணவன் தலை அசைக்க, மனைவி எனக்கில்லை பாப்பாக்கு என்பதைப் போல் மேடிட்ட வயிற்றை காண்பிப்பார். உரையாடல் இன்றி பின்ணணி இசை மட்டுமே இருக்கும். நல்ல நினைவுகளை கிளப்பி விட்டீர்கள் முல்லை.
Have a Happy and sweet week-end:)

பிரேம்குமார் said...

ஓ! சாக்லேட் கொசுவர்த்தியா??? கலக்கல் தான் போங்க :)

கணினி தேசம் said...

ஹாய்! இனிப்பான பதிவு

எனக்கு மிகவும் பிடித்தது....

தேன் மிட்டாய், (இத அடிச்சிக்கவே முடியாது)

Coffee Bite

அப்புறம் Big fun !!

நன்றி

நட்புடன் ஜமால் said...

நமக்கு பிடித்தது

சூட - மிட்டாய் - அது இப்போது கிடைப்பது மிக அரிதாக உள்ளது.

அத சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தா ...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா -

சுகமோ சுகம் தான்

சுவையோ சுவை தான்

தாமிரா said...

pan pasaand - இது கொஞம் வெற்றிலை பாக்கு சுவையில் இருக்கும். தலை சுத்துவது போல் இருக்கும். வீட்டிற்கு தெரியாமல் சாப்பிடனும்(படிக்கற பசங்க வெத்தலை சாப்பிடக் கூடாது!)..ஆனால் வாசனையேக் காட்டிக் கொடுத்து விடும்.//

ஹாஹா.. ரசனை.!

தாமிரா said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அந்த மாம்பழ கெட்டிச்சாறு இப்பவும் வாங்கிவச்சு நானும் கணவரும்மட்டும் சாப்பிடுறோம். :)//

இது அதைவிட அழகு.. ஹிஹி..!

சுரேகா.. said...

அடடே லேட்டா வந்துட்டேனே...இவ்ளோ மேட்டர் ஓடிக்கிட்டிருக்கா?

சாக்லேட்...! இந்த வரிசையில்..
சிறுவயதில் பைத்தியமாய்த்திரிந்தது..

BIG FUN ன்னு ஒரு சூயிங்கம்தான்..

அதுல ரன் சேத்து விளையாடி...3 கவர் கொடுத்து ஒரு மிட்டாய் வாங்கின்னு...

அது ஒரு பொற்காலம்..!

சுரேகா.. said...

அடடே ரொம்ப லேட்டா வந்துட்டேனே..!


சாக்லேட் நினைவுகளில்...

அது சூயிங்கமா இருந்தாலும்..!

BIG FUN தான் சின்னவயசில் கிறுக்குப்பிடிக்க வச்சது!

ரன் சேக்குறது..
3 கவர் கொடுத்து ஒரு மிட்டாய் வாங்குறதுன்னு..

அது ஒரு பொற்காலம்..!
ம்ஹ்ஹ்ம்..!

அமுதா said...

ஹா... சாக்லேட்... எனக்கும் Bigfun பப்பிள்கம் பைத்தியம் பிடித்து கவர் சேகரித்தது நினைவில் இருக்கிறது. அப்புறம் "டபுள் டெக்கர்" சாக்லேட்க்கு ஏங்கினது ஞாபகம் இருக்கு. எங்க வீட்ல எப்பொழுதாவது தான் டபுள் டெக்கர் இல்லாட்டி 5 ஸ்டார் கிடைக்கும்.

சந்தனமுல்லை said...

நன்றி கதிர், தாரணி!
நன்றி குடுகுடுப்பை..அந்தக் காலத்துக்கே போயிட்டீங்க போல :-)!
நன்றி பாண்டியன் புதல்வி..உங்க பேர் அழகா இருக்குங்க...என்னோடு சேர்ந்து நீங்களும் நினைவு கூர்ந்ததற்கு நன்றி!

நன்றி நசரேயன்..குச்சி மிட்டாய் தெரியும்..குழி மிட்டாய் - ?

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்..ஓ..இப்போதும் கிடைக்கிறது சூடமிட்டாய்! :-)

நன்றி பிரேம்..

நன்றி கணினிதேசம், தாமிரா!

நன்றி சுரேகா,அமுதா..ஆமாம் பிக் ஃபன்னை விட்டுட்டேன்..பபிள்கம் சாப்பிட விடமாட்டாங்க வீட்டுலே..அது தொண்டையிலே மாட்டி ஒரு பையன் செத்துட்டான் அப்ப்டின்னு பயமுறுத்துவாங்க..அதுவும் பபிள் விடும்போது அந்த பபிள் வெடிச்சு உள்ளே போய்டுச்சு..அப்படின்னு! :(

அபி அப்பா said...

ஸ்வீட்டா இருக்கு பதிவு!

கவிதா | Kavitha said...

முட்டை பாட்டோட வரணும்னு இந்த பக்கம் வராமல் இருந்தேன்.. எங்க முட்டை பாட்டை தேடி தேடி.. கிடைக்கலப்பா.. இப்பத்தான் பார்த்தேன் நீங்க புது பதிவே போட்டுட்டு ஏரியாவை காலி பண்ணிட்டீங்க.. :(

சரி நீங்க கடைய எனக்காக இன்னொரு வாட்டி ஓபன் செய்யங்க...

எனக்கு பிடிச்ச ஸ்கூல் படிக்கும் போது சாப்பிட்ட சாக்லெட் பத்தி சொல்லிட்டு போறேன்..

தேன்முட்டாய் - இதுல நடுவில் தேன் இருக்கும்.. இப்பவும் கிடைக்கிறது ஆனால் தேனும் இல்லை சக்கர தண்ணீர் கூட வைக்காம்ல ட்ரையாக இருக்கு..

கமரகட் :- இது கடிச்சி சாப்பிட ரொம்ப கஷ்டமா இருக்குன்னு எனக்கு எப்ப கிடைத்தாலும் அண்ணாக்கு கொடுத்து விடுவேன்.. இப்ப இது இருக்கான்னு தெரியல...

cigarette choco : இது ரொம்ப பிடிக்கும்.. :) சிகிரேட் மாதிரி ஊதி காட்டி உதையும் வாங்குவேன்..:)

caramilk :) :)))

ஹார்லிக்ஸ் மிட்டாய்:- இது ஹார்லிக்ஸ் சுவையிலேயே இருக்கும்.. :)

Cadburys "Eclairs" - இது பிறந்தநாளைக்கு ரொம்ப அடம் பிடித்து கேட்டு வாங்குவேன்.. :)

rapp said...

இதுல சொல்லிருக்கரதுல, ஒன்னு கூட விட்டதில்ல:):):)அப்போல்லாம் புடிபுடியாத்தான் சாக்லெட் அள்றது. யப்பா, எப்டி சாப்டுவேன். அதுக்கு அப்புறம் இதை குறைக்கவே எங்க வீட்ல எனக்கு திருப்தி தரும் வடிவில் இருக்கும்னு, டைரி மில்க் வாங்கிக் கொடுத்தாங்க. ஏன்னா, பெருசா இருக்கு, நெறைய சாப்டாச்சுன்னு பீலிங் வரும்னு. அது கொஞ்சம் வேல செஞ்சிதுன்னு நெனைக்கிறேன்.

rapp said...

//Parry's Coffy Bite வெளம்பரமும் ரொம்ப ஃபேமஸ்.

Its Coffee. Right..Its Toffee. Thats what I said...its Coffee... அப்படின்னு வரும்.//

இதுதான் என்னோட பேவரைட் விளம்பரம் ரொம்ப நாளைக்கு :):):)

சந்தனமுல்லை said...

நன்றி அபிஅப்பா!

நன்றி கவிதா..முட்டை பாட்டு கிடைக்கலன்னு உடனே நீங்க பாடிடாதீங்க..;-) அப்புறம் நீங்க சொன்ன்னதெல்லம் ஏற்கெனவே நிறைய பதிவுகளில் பார்த்ததாலே இந்த லிஸ்ட்..! உங்க ஃபேவரைட் இனிப்புகளை பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி!

நன்றி ராப்..ஆமா அந்த விளம்பரமும் நல்லாருக்கும்! பெரிய பார்ட்டிதான் நீங்க..ரொம்ப ரேர் காட்பரிஸ்..மாசத்துக்கு ஒன்னுதான்..அதுவும் மளிகைசாமான் வாங்கும்போது வாங்கிக் கொடுப்பாங்க! lol!