Wednesday, April 01, 2009

அழியாத கோலங்கள் - தொடர் பதிவு

அழைத்த தீபாவிற்கும் , தொடங்கி வைத்த மாதவராஜ் அவர்களுக்கும் நன்றிகள்!

ஹாய் மீனு,

உன் கடிதம் கிடைத்தது.எத்தனை வருடங்களுக்குப் பிறகு....!!! எப்படி இருக்கிறாய்? உன் மகள் மற்றும் கணவர்? இங்கே நாங்களனைவரும் நலமே!

நீ எழுதியக் கடிதம் எனக்குள் பல நினைவலைகளைத் தூண்டிவிட்டது! பழைய கடிதங்களையும், ஆட்டோகிராப் நோட்டுகளையும் தோண்டி எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன்! இப்போதுதான் நாம் சந்தித்ததுபோல் இருக்கிறது, ஆனால் எவ்வளவு நடந்துவிட்டிருக்கிறது! oh..our sweet bygone days!

பலசமயங்களில் நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் எந்தச் சூழ்நிலைகளில் என்று இப்போது ஞாபகமில்லை! உன்னிடம் பகிர்ந்துக் கொள்ள நிறைய இருப்பதுபோலவும் தோன்றுகிறது, அதேசமயம், பேசுவதற்கு ஒன்றுமில்லாததுபோலவும் இருக்கிறது..ம்ம்..உண்மைதான், குழந்தைகளையும், குடும்பத்தைத் தாண்டி பேச
ஒன்றுமில்லாதது போல்தான் இருக்கிறது..நான் பார்த்த கடைசி ஷாருக் படம் கூட நினைவில் இல்லை! ஹேய்..கடைசி எக்சாம் முடித்து, நம் கிளாஸ்மேட்ஸ் அனைவருடனும்கூட நாம் தியேட்டரில் பார்த்தோமே..என்ன படம் அது?!

முன்பு, எனது கஸின்சிஸ்டர்ஸை பார்த்து வியந்திருக்கிறேன், இவர்களுக்கு குழந்தைகளைத் தாண்டிப் பேச ஒன்றுமிராதாவென்று, எனக்கு ஒரு குழந்தைப் பிறக்கும் வரை! எங்கோ படித்தது தான் நினைவுக்கு வருகிறது, மின்சார ரயிலிலிருந்து இறங்கியதுமே, ஆண்கள்
டீ குடிக்கவோ பேசவோ நண்பர்களுடன் கூட்டாகப் போய் விடுகிறார்கள், ஆனால், பெண்கள் கீரை வாங்கவும், காய்கறி பேரம் பேசி வாங்கவும் தயாராகி விடுகிறார்களென்று! எவ்வளவு உண்மை! ஒருவேளை நாம் மகள்களாக வளர்க்கப் படாமல், மருமகளாக்கப்படுவதற்காகவே
வளர்க்கப் படுகிறோமோ!!வீடு, குழந்தைகளென்று ஒரு விடுபடவே முடியாத நத்தைக்கூடு நம் கண்களுக்குத் தெரியாமலே நம் முதுகில் ஏற்றிவிடப்படிட்டிருக்கின்றதோ, மீனா! விடுபட்டாலும் எங்கே போக!!

நீ வேலை செய்கிறாயா, மீனா?! நான் மூன்று கம்பெனிகள் மாறிவிட்டேன்....ஆபிஸூம், அதைவிட்டால் வீடும்தான் மாறிமாறி...மீனா, ஆன்சைட் போவதுதான் என் கனவு என்று சொல்லிக்கொண்டிருப்பேனே..ஆனால், இன்னும் ஒருமுறைக்கூட போகவில்லை! வாய்ப்புக் கிடைக்காமலில்லை, ஆனால், கல்யாணத்திற்கு முன் அம்மா போக விடவில்லை, கல்யாணத்திற்குப் பின் சந்தர்ப்பம் போக விடவில்லை! எங்கே, வீட்டையும், குட்டீஸையும் விட்டுவிட்டு போவது..சிலசமயங்களில் தோன்றுகிறது, ஒருவேளை நாம் தான் ரொம்ப நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, நாம் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காதென்று!ஒருவேளை நாம் care-givers-ஆக இல்லாமலிருந்தால், equations மாறுமோ! மீனா, நாம் லைப்ரரில்யிலிருந்து எடுத்துப் படித்தோமே...அம்பையின் புத்தகம்..வீட்டின் மூலையில் சமையலறை..ஞாபகமிருக்கிறதா..நிறைய விவாதித்தோமே! நான் இதுவரைக்கும் ஆயிரம் தோசைகள் செய்திருப்பேனா..நீ எவ்வளவு செய்திருப்பாய்?:-)


இன்னும் ஒன்று சொல்லவேண்டும் மீனா, யூ வில் பி எக்சைட்டட்..எங்கள் அலுவலகத்தில் நாங்கள் பெண்கள் மட்டும் ஒரு குழுமம் உருவாக்கியிருக்கிறோம்..எங்காவது ஓரிடத்ட்க்ஹில் நாம் நாமாக இருக்கவேண்டுமில்லையா! எங்கள் கம்பெனி ஜிஎம் முதல் எல்லோரும் அதில்! நினைவிருக்கிறதா, நாம் காலேஜில் விளையாடுவோமே கிறிஸ்மா, கிறிஸ்சைல்ட்...அதிலிருந்து ஆரம்பித்து, காலேஜில் ஒரே கலர் தீம் வைத்து உடைஉடுத்திக்கொண்டு வருவோமே..அப்புறம் புடவை டே இதெல்லாமே..இங்கேயும்..விளையாட்டுப் போட்டிகள், எல்லோரும் ஒரே கலர் குர்தா..மாதத்தில் அல்லது இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியே சென்று ப்ரீக் அவுட்..என்றாவது ஒரு நாள் பாட் லக்! எல்லாம் சிண்ட்ரெல்லாவின் காலணியில்தான்!

இப்படி நாமாக ஏதாவது சுவாரசியமாக செய்துக்கொண்டால்தான் உண்டு! சம்திங் டூ கீப் அஸ் கோயிங்! மதிய உணவிற்கு லேடிஸ் மட்டுமாக அமர்ந்து சாப்பிடுவோம்..அப்படிதான் நேர்ந்துவிடுகிறது..அவ்வளவு கிண்டலும் கலாட்டாவுமாக, சிரிப்புமாக..அப்போதுதான் தெரியும், ஒவ்வொருவருக்குள்ளேயும் ஒரு குறும்புப்பெண் ஒளிந்துக்கொண்டிருப்பதை! பசங்க கிண்டல் செய்வாங்க, “என்ன மேடம், அவ்வளவு சிரிப்பு, நீங்களா ஒருத்தருக்கொருத்தர் பார்த்து, ஹேய், நீ இன்னிக்கி ரொம்ப அழகாயிருக்கே” அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுக்குவீங்களா” அப்படின்னு! எவ்வளவு கிண்டல் பாரேன்! அப்புறம் பாட் லக் வைத்திருந்தோம்..அதுவும் நாங்கள் பெண்கள் மட்டும்! உடனே,பசங்க, “மேடம், இது சூசைட் அட்டெம்ட் இல்லையா, நீங்களே சமைச்சு நீங்களே சாப்பிடறது?!” “நீங்க இபப்டில்லாம் கிண்டல் செஞ்சா உங்களுக்கு கொடுத்துடுவோம்னு நினைக்காதீங்கன்னு” சொல்லிட்டு நாங்க ஜாலியா பாட் லக் எஞ்சாய் செய்தோம்! ஒன்றாக ஒருமுறை சினிமாவுக்குக்கூட போயிருக்கிறோம், அலுவலக் பெண் தோழிகளாக! இதுதான் எங்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய மகிழ்ச்சி, அன்றாட வாழ்வின் இறுக்கங்களிலிருந்து விடுபட!

ஓக்கே மீனா, ரொம்ப போரடிக்க விரும்பவில்லை! நாந்தான், கடிதம் எழுதினா பக்கம் பக்கமா பரிட்சை பேப்பரை விட அதிகமா எழுதுவேனே...விடுமுறைக்கு நாங்கள் சென்னை வருவோம், தொலைபேசியில் அழைக்கிறேன்!

N. B: இன்னும் இந்த “Guess me!" அப்புறம் “open with smile" இதெல்லாம் போடுவதை விடமாட்டியான்னு திட்டாதே!geeee!

With sunshine and rainbows
கVதா!! :-) (இப்படி சைன் செய்து நீண்ட நாட்களாகிவிட்டன, மீன்ஸ்!)வெகு இயல்பாக, அதே சமயம் நம்மையும் நமது அனுபவங்களோடு அசை போடவைக்கும்படியும், 'மனசைப் பிழியற' மாதிரியும் பதிவெழுதும் நமது அமித்து அம்மாவை இதைத் தொடர அழைக்கிறேன்!

47 comments:

ஆயில்யன் said...

சூப்பரேய்ய்ய்ய்! :)))

ஆயில்யன் said...

//கVதா!!///


அட டிபரெண்டா இருக்கே! :)

”தா”வுக்கும் ரெண்டு கையை ஏந்துற மாதிரி இருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும் :)))))

ஜோதிபாரதி said...

கலக்கல்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

wow

excellent mullai!!!!!!!!!!!!!!!!!!!!!

மருமகளாக்கப்படுவதற்காகவே
வளர்க்கப் படுகிறோமோ!!வீடு, குழந்தைகளென்று ஒரு விடுபடவே முடியாத நத்தைக்கூடு நம் கண்களுக்குத் தெரியாமலே நம் முதுகில் ஏற்றிவிடப்படிட்டிருக்கின்றதோ, மீனா! விடுபட்டாலும் எங்கே போக!!

அட்சர லட்சம் பெறும் வார்த்தைகள்.

இது கடிதமல்ல, ஒவ்வொரு பெண்ணிலும் உள்ளிருக்கும் உயிர்த்திருக்கும் ஒரு பெண்ணின் குரல்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

N. B: இன்னும் இந்த “Guess me!" அப்புறம் “open with smile" இதெல்லாம் போடுவதை விடமாட்டியான்னு திட்டாதே!geeee!

With sunshine and rainbows
கVதா!! :-) (இப்படி சைன் செய்து நீண்ட நாட்களாகிவிட்டன, மீன்ஸ்!)

ரசித்தேன். ரசித்துக்கொண்டே............

அமிர்தவர்ஷினி அம்மா said...

கோத்து வுட்டுடீங்களே ஆச்சி

முயற்சிக்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//கVதா!!///


அட டிபரெண்டா இருக்கே! :)

”தா”வுக்கும் ரெண்டு கையை ஏந்துற மாதிரி இருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும் :)))))

ஆரம்பிச்சிட்டீங்களா ஆயில்ஸ் அண்ணா.

உங்களுக்குன்னு தனியே ஒரு கமெண்ட் மாடரேஷன் வைக்கனும் போல.

வித்யா said...

chrismom chrischild கொசுவத்தி சுத்த வச்சீட்டீங்க:)

சின்ன அம்மிணி said...

கடிதமெல்லாம் மின்மடல்ங்கற பேர்ல காணாம போச்சே. கலக்கலா இருக்கு

Deepa said...

Super! Excellent! கலக்கிட்டீங்க. You have set an entirely different mood and tone to the chain post!

// ஒருவேளை நாம் மகள்களாக வளர்க்கப் படாமல், மருமகளாக்கப்படுவதற்காகவே
வளர்க்கப் படுகிறோமோ!!//

சே! ஜஸ்ட் லைக் தட் எவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்லிட்டீங்க?

//நான் மூன்று கம்பெனிகள் மாறிவிட்டேன்....//

நான் ஆறு கம்பெனிகள் மாறி இப்போது குழந்தைக்காக வீட்டுக் கம்பெனியைப் பார்த்துக் கொள்கிறேன்! :-).

//எல்லாம் சிண்ட்ரெல்லாவின் காலணியில்தான்! இப்படி நாமாக ஏதாவது சுவாரசியமாக செய்துக்கொண்டால்தான் உண்டு! சம்திங் டூ கீப் அஸ் கோயிங்! //

நிச்சயமாக. உன் வார்த்தைகள் உண்மையில் மீனாவுக்கு மட்டுமல்ல தீபாவுக்கும் புது இரத்தம் பாய்ச்சியதைப் போல் இருக்கிறது.

Eagerly awaiting Amithu amma's post.

அன்புடன்,
மீனா..இல்ல இல்ல தீபா

ஆயில்யன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
ஆயில்யன் said...
//கVதா!!///


அட டிபரெண்டா இருக்கே! :)

”தா”வுக்கும் ரெண்டு கையை ஏந்துற மாதிரி இருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும் :)))))

ஆரம்பிச்சிட்டீங்களா ஆயில்ஸ் அண்ணா.

உங்களுக்குன்னு தனியே ஒரு கமெண்ட் மாடரேஷன் வைக்கனும் போல.
11:58 AM//


:((

ஆஹா

அப்ப என்ன பண்ணமுடியும்

எனக்கே எனக்கா சாங்க் பாடிக்கிட்டு கும்மி அடிக்க வேண்டியதுதான்!

ஆயில்யன் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
ரசித்தேன். ரசித்துக்கொண்டே............//

தூங்கிட்டீங்களா பாஸ்!

சரி சரி வழக்கமா ஆபிஸ்ல பண்றதுதானே :)))))

நட்புடன் ஜமால் said...

இது தொடங்கி வைத்தவருக்கு நன்றிகள் பல.

அருமையாக உள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த ஒரு நல்ல சந்தர்ப்பம்.

வாழ்த்துகள். நல்லாயிருக்கு.

நட்புடன் ஜமால் said...

\\வெகு இயல்பாக, அதே சமயம் நம்மையும் நமது அனுபவங்களோடு அசை போடவைக்கும்படியும், 'மனசைப் பிழியற' மாதிரியும் பதிவெழுதும் நமது அமித்து அம்மா\\


(ரொம்ப நாட்களுக்கு பிறகு)

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யம் முல்லை:)!

கவிதா | Kavitha said...

யம்மா உங்க தொடர் பதிவு இம்சை தாங்கலம்மா..!! ஒன்னு முடிஞ்சா இன்னோனு போட்டு தாக்கறீங்க... :))) ம்ம்ம்ம் நடத்துங்க..

இது என்ன்ன? இது எதை பற்றி..

பதிவை இன்னும் படிக்கல.. வரேன்..

வெயிலான் said...

யப்பா!!!!

மழை பெய்து முடித்த மாதிரி இருக்கு.

கடிதத்துலேயே இப்படின்னா, நேர்ல பாத்தீங்கன்னா???? :)

கவிதா | Kavitha said...

With sunshine and rainbows
கVதா!! :-) //

இது எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு :) ஐ லவ் 2 சி திஸ்..:)

ம்ம் (லவ்)லெட்டர் சுவாரசியம்.. அப்படித்தான் இருப்போம் எல்லோரும் நம்மை மறந்து நம்மை சுற்றியுள்ளவர்கள் மறந்து... :)

அன்பு said...

ஆஹா ரொம்ப ஆத்மார்த்தமான நடை... வர வர... ரொம்ப செமய்யா எழுதறீங்க.
அதுபோக மெனக்கிடாம அதுவே ஒரு ஃபுளோள அசத்தலா வந்து விழுவது அனுபவிக்க முடிகிறது, பெரிய ஆளா இருப்பீங்க போல.

(அல்லது இப்பத்தான் கொஞ்சகொஞ்சமா உங்களைப் படிக்கிறனா தெரியல:)

அருமை!

மணிநரேன் said...

அழியாத கோலங்களை அழகாக தொடர்ந்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

//எங்கோ படித்தது தான் நினைவுக்கு வருகிறது//

நீங்கள் குறிப்பிட்ட வாக்கியத்திற்கு பலரும் காரணகர்தாவாக உள்ளனரே என நினைக்கும்போது மனம் மிகவும் சங்கடப்படுகிறது.

ஆகாய நதி said...

//
மருமகளாக்கப்படுவதற்காகவே
வளர்க்கப் படுகிறோமோ!!வீடு, குழந்தைகளென்று ஒரு விடுபடவே முடியாத நத்தைக்கூடு நம் கண்களுக்குத் தெரியாமலே நம் முதுகில் ஏற்றிவிடப்படிட்டிருக்கின்றதோ, மீனா! விடுபட்டாலும் எங்கே போக!!
//
superb... :) நாம் கூட அப்படித் தானே மாறிவிடுகிறோம்.... அப்படி திருமணம், கணவர், குழந்தை, புகுந்த வீடு என்று...

அந்த நத்தைக் கூட்டை சுமப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது...


//
நான் மூன்று கம்பெனிகள் மாறிவிட்டேன்....
//

ஹா!ஹா! நான் அந்த சிரமமே வேண்டாமென்று என் சொந்தக் கம்பெனியில் தற்போதைக்கு செட்டில் ஆகிவிட்டேன்... இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது...

ஆகாய நதி said...

//
பலசமயங்களில் நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் எந்தச் சூழ்நிலைகளில் என்று இப்போது ஞாபகமில்லை! உன்னிடம் பகிர்ந்துக் கொள்ள நிறைய இருப்பதுபோலவும் தோன்றுகிறது, அதேசமயம், பேசுவதற்கு ஒன்றுமில்லாததுபோலவும் இருக்கிறது
//

சூப்பர் ஆச்சி!... இந்த வரிகள் அடிக்கடி நம் மனதில் தோன்றுபவை :)

ஆகாய நதி said...

மொத்தத்தில ஒரு உயிரூட்டமுள்ள கடிதம்... இப்படி எழுதியும் படித்தும் பல வருடங்கள் ஆகின்றன!

நன்றி ஆச்சி!

அமித்து அம்மா அவர்களே வாழ்த்துகள் முன்னதாகவே கூறிவிடுகிறேன்! :)

மாதவராஜ் said...

அடேயப்பா! அசந்தே போனேன். அருமை.
//வீடு, குழந்தைகளென்று ஒரு விடுபடவே முடியாத நத்தைக்கூடு நம் கண்களுக்குத் தெரியாமலே நம் முதுகில் ஏற்றிவிடப்படிட்டிருக்கின்றதோ, //
கண்கலங்க வைத்து விட்டீர்கள்.

அன்புடன் அருணா said...

கலகலன்னு படிச்சுட்டே வந்தேன்...அப்பிடியே கண்ணீர் கட்டிக்கிச்சு...சந்தோஷமா? சோகமா? புரியலை..
அன்புடன் அருணா

அமுதா said...

ஆகா முல்லை. என்ன அழகா எழுதி இருக்கீங்க..
"ஒருவேளை நாம் மகள்களாக வளர்க்கப் படாமல், மருமகளாக்கப்படுவதற்காகவே
வளர்க்கப் படுகிறோமோ!!வீடு, குழந்தைகளென்று ஒரு விடுபடவே முடியாத நத்தைக்கூடு நம் கண்களுக்குத் தெரியாமலே நம் முதுகில் ஏற்றிவிடப்படிட்டிருக்கின்றதோ, மீனா! விடுபட்டாலும் எங்கே போக!!"
ம்...எங்கே போக... போனாலும் மனம் வீட்டில் தான் சிறைபடுகிறது...

Divyapriya said...

super mullai!!!

சுரேகா.. said...

வாழ்வின் அவிழ்க்க முயன்றுகொண்டே இறுகும் முடிச்சுகளின் மீது தண்ணீர் ஊற்றியிருக்கிறீர்கள்...ஸாரி கண்ணீர் ஊற்றியிருக்கிறீர்கள். முடிச்சு இறுகிக்கொண்டுதான் இருக்கிறது..என்றாவது ஒரு நாள் அவிழும். அதுவரை பொறுமை காப்போம்.

அற்புதமான கடிதம்..!

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல்...!

தமிழன்-கறுப்பி... said...

மிகச்சுவாரஸ்யமாய் இருக்கும் போல இந்த தொடர் விளையாட்டு...

தமிழன்-கறுப்பி... said...

நான் எழுதி அனுப்பாமல் நிறைய கடிதங்கள் இருக்கிறது ஏதாவது ஒன்றை பதிவாக்க வேண்டியதுதான்...

நிலாவும் அம்மாவும் said...

நல்லா இருக்கு முல்லை

சரி நீங்க கவிதாவா முல்லையா

குடுகுடுப்பை said...

இப்படியெல்லாம் என்னால கடிதம் எழுத முடியாதுப்பா.

நாலு வரி தாண்டுனாலே பெரிசு.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அழகா எழுதி இருக்கீங்க.. நான் எவ்வளவு தோசை சுட்டேன்னு கணக்கு வச்சிக்கலையே.. :))

♥ தூயா ♥ Thooya ♥ said...

WOWWW

தீஷு said...

// ஒருவேளை நாம் மகள்களாக வளர்க்கப் படாமல், மருமகளாக்கப்படுவதற்காகவே
வளர்க்கப் படுகிறோமோ!!//

உண்மை முல்லை. அசத்தலா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.

naathaari said...

இப்படி ஆழ்மனசை தோண்டி எடுத்துப்போடும் உங்கள் எழுத்துக்களுக்கு நான் ரசிகனாகிவிட்டேன் உண்மையில் உங்களுக்கு எழுத்து நன்றாக கைகூடிவருகிறது உணர்வோட்டத்திற்க்கு வேட்டுவைக்காத நடை.வேறு எங்காவதும் இதை பதிவு செய்யலாமே சரி
நான் சொல்லி எதைக்கேட்டிறுகிறீர்கள்
கவிதை உட்பட
என்ன்னமோ பண்ணுங்க

" உழவன் " " Uzhavan " said...

I am suffering from fever... னு மட்டுமே லெட்டர் எழுதிய எங்களுக்கு, இப்படிப்பட்ட கடிதத்தைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. உங்களின் நட்பு கிடைக்கப்பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். :-)
வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ், உங்க பின்னூட்டம் பார்த்தப்புறம்தான் சரி தேறிட்டோம் போலன்னு ஒரு நிம்மதி வந்தது! ஏன்னா, ஒரு புலம்பலா மாறிடக்கூடாது நினைச்சுக்கிட்டே எழுதினேன்! :-)

நன்றி ஜோதிபாரதி!

நன்றி அமித்து அம்மா! உங்கள் பாராட்டு ஊக்கமளிக்கிறது! அப்புறம், ஆயில்ஸ் அண்ணவைப் போய் அப்படி சொல்லலாமா! அவருக்கு நோ மாடரேஷன்! ஓக்கே! ;-))

சந்தனமுல்லை said...

நன்றி வித்யா..

நன்றி சின்ன் அம்மிணி, அதனாலதான் மாதவராஜ் அய்யா, உயிர்ப்பிக்க இப்படி ஒரு ஆட்டம் தொடங்கியிருக்கார்! :-)

நன்றி தீபா! மீனாவுக்கு பிடிச்சதான்னு கேட்டு சொல்லுங்க! :-)நீங்கள் சீக்கிரம் வீட்டுக் கம்பெனியிலிருந்து பிரமோஷன் பெற வாழ்த்துகள்!

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்!நீங்களும் எழுதலாமே!

நன்றி ராமலஷ்மி!

நன்றி கவிதா, படிக்கறதுக்கு முன்னாடியே இவ்வளவு சவுண்டா! அவ்வ்வ்!
நீங்க் இந்த மாதிரி சைன் செஞ்சுருக்கீங்களா?!!

சந்தனமுல்லை said...

நன்றி அன்பு! ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி! பெரிய ஆளெல்லாம் இல்லைங்க...உங்களுக்குத் தான் தெரியுமே! உங்களனைவரின் வார்த்தைகள்தான் என்னை எழுத வைக்கிறது!

நன்றி மணிநரேன், சீக்கிரம் காலங்கள் மாறும் என நம்புவோம்!

நன்றி வெயிலான்! நேர்ல பார்த்தா சுனாமிதான்!

நன்றி ஆகாயநதி! ஆகா, உங்களையும் அப்படி நம்பவைத்து விட்டார்களா..நத்தைக்கூட்டில் சுகம் இருப்பதாக! :-)

சந்தனமுல்லை said...

நன்றி மாதவராஜ்! தீபாவின் பதிவில் எதிர்பார்ப்புடன் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள்..என் பதிவு பூர்த்திச் செய்ததாவெனத் தெரியவில்லை! உங்கள் பாராட்டுக்கு நன்றி!

நன்றி அமுதா..உங்க பதிவுக்கு வெயிட்டிங்!

நன்றி திவ்யா! உங்கள் தொடராதரவுக்கு நன்றி!

நன்றி சுரேகா...அந்த நம்பிக்கைதான்!

நன்றி தமிழன் - கறுப்பி..நீங்களும் எழுதுங்கள்..அலல்து வெளியிடுங்கள்!!ஆவலுடன் இருக்கிறோம்!

சந்தனமுல்லை said...

நன்றி நிலாவும் அம்மாவும்! ஹஹ்ஹா..இரண்டும் சேர்ந்த கலவை நான்!! :-))


நன்றி குடுகுடுப்பையார்..இப்படி சொல்லி தப்பிக்க பார்க்கிறீங்களா?!! விடமாட்டோம்!

நன்றி முத்து..ஆகா..மிஸ் பண்ணிட்டீங்களா! சரி சப்பாத்தி கணக்காவது வச்சிருக்கீங்களா?! வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!! ;-)

சந்தனமுல்லை said...

நன்றி தூயா!

நன்றி தீஷு! ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை இங்கே பார்க்கிறதே சந்தோஷமா இருக்கு!


நன்றி நாதாரி! விரைவில் கவிதை எழுதுகிறேன்! அவ்வ்வ்! உங்கள் ஊக்கம் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது! (விடமாட்டோம்ல)

நன்றி உழவன்! அயோ நிஜத்துல கடதம் எழுதறதுல்லீங்க..ஒரு காலத்துல பக்கம் பக்கமா எழுதினது இப்போ கை கொடுக்குது..அவ்ளோதான்!

நிலாவும் அம்மாவும் said...

ஆர்குட்-ல உங்க போட்டோ பார்த்தேனே :o)

நசரேயன் said...

கலக்கல்