Thursday, April 30, 2009

பரீட்சை நேரக் கவிதை!

வாழ்வின்விடியலுக்காய்
நான் காத்திருக்கிறேன்!
விடியும் நேரம் நான்
விழிக்காமல் போகலாம்!
எனினும்,
கடந்துசென்ற நேற்றும்
நிகழ்கின்ற இந்த நொடியும்
என் கைகளில் கிடைத்தால்
கண்ணாடிபெட்டியில்
பூட்டிவைத்துக் கொள்வேன் நான்!
வரப்போகும் நாளையை
முறையாய் பயன்படுத்த
எனக்கது பாடஞ்சொல்லும்!!

(உபயம் : பள்ளிக்காலத்து டைரி!)

நோ டென்ஷன்..ப்ளீஸ்!! முழு ஆண்டு பரீட்சை ஆரம்பிக்குதுன்னு கால அட்டவணை கொடுப்பாங்கல்ல, அதுக்கு அப்புறம்தானனே நாம புத்தகத்தையே புரட்டுவோம்..இவ்வளவு இருக்கே, இதை எப்படிடா படிச்சு முடிக்கறதுன்னு ஒரு மலைப்பு வருமே..அந்த நேரத்துல எழுதினது இது! அதுக்காக அடுத்த வருஷம் புத்தி வந்துருக்கும்னா நினைக்கறீங்க...ஹிஹி!

26 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்லாருக்கு.............

ராமலக்ஷ்மி said...

பரீட்சை நேரக் கவிதை எல்லோருக்கும் பாடம் சொல்கிறது:)! நன்று!

வித்யா said...

கவுஜ கவுஜ:)

பரீட்சை நேரத்தில் தான் நமக்கு இந்த மாதிரியெல்லாம் தோணும்:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

விடியும் நேரம் நான்
விழிக்காமல் போகலாம் //

ADHU THERINJA KADHAIDHAANEE AACHI

வரப்போகும் நாளையை
முறையாய் பயன்படுத்த
எனக்கது பாடஞ்சொல்லும்!!

COMEDY KEEMEDY PANNALAIYEEE

நோ டென்ஷன்..ப்ளீஸ்!!
VEENAAM
NAA AZUDHURUVEEN

AAAMMAA

ஸ்ரீமதி said...

kavithai nallaa irukku akka.. :)))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நாங்க டென்சன்ல அடுத்தவங்க எழுதிய கவிதைய ரேடியோல பாட்டா போடுவாங்க அதை கேட்போம் .. முல்லை நீங்க கவிதையாவே எழுதிட்டீங்களா பேஷ்..

விக்னேஷ்வரி said...

ஐ, நல்லாருக்குப்பா.

அதுக்காக அடுத்த வருஷம் புத்தி வந்துருக்கும்னா நினைக்கறீங்க...ஹிஹி! //

கவிதையை விட, நீங்க சொன்ன உண்மை நல்லாருக்கு. ;)

தீஷு said...

நல்லாயிருக்கு முல்லை.

//அதுக்காக அடுத்த வருஷம் புத்தி வந்துருக்கும்னா நினைக்கறீங்க...//

நானும் ஒவ்வொரு வருஷமும் நினைப்பேன் தினமும் படிக்கனுமினு.. பண்ணினதே இல்லை.

ஆயில்யன் said...

நல்லா இருக்கு ஆச்சி ! :)

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
kavithai nallaa irukku akka.. :)))
//

அட நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா......!!!!

ஆயில்யன் said...

//அதுக்கு அப்புறம்தானனே நாம புத்தகத்தையே புரட்டுவோம்.//

நாமன்னு ஏன் எங்களையெல்லாம் சேர்க்கறீங்க!!! நாங்கெல்லாம் டெய்லி படிச்ச குரூப்பாக்கும் !

ஆயில்யன் said...

//இதை எப்படிடா படிச்சு முடிக்கறதுன்னு ஒரு மலைப்பு வருமே//

அந்த மலைப்பு பேப்பர் திருத்துற வாத்தியாருக்கு வரமாதிரிதான் பயங்கர டெரரா படிச்சு எச்சாமு எழுதுவோம் நானெல்லாம்!

ஆயில்யன் said...

//ஹிஹி!//


நான் போட்ட பின்னூட்டங்களுக்கெல்லாம் மொத்தமா ஹிஹி!

" உழவன் " " Uzhavan " said...

//கண்ணாடிபெட்டியில்
பூட்டிவைத்துக் கொள்வேன் நான்!//

சிந்திக்க வைத்த இடம்.

//அதுக்காக அடுத்த வருஷம் புத்தி வந்துருக்கும்னா நினைக்கறீங்க...ஹிஹி!//

சிரிக்க வைத்த இடம்

நசரேயன் said...

இன்னும் படிச்சி முடிக்கலையா??

ஆகாய நதி said...

ம்ம்ம்... நல்லாருக்கு :)

அன்புடன் அருணா said...

//அதுக்காக அடுத்த வருஷம் புத்தி வந்துருக்கும்னா நினைக்கறீங்க...ஹிஹி! //

அப்பிடீல்லாம் புத்தி வந்திருந்தால் இப்போ எங்கேயோ போயிருக்க மாட்டோமா????
ஹி..ஹி..
அன்புடன் அருணா

கரவைக்குரல் said...

பரீட்சை நேரத்தில் தான் ஞானமே பிறக்கும்\
ஆழமான உண்மைக்கவிதை
முல்லையே நல்லாக இருக்கு

சந்தனமுல்லை said...

நன்றி முனைவர்.இரா.குணசீலன், ராமலஷ்மி!

நன்றி வித்யா..ஆமா, அப்போ மட்டும் நல்லவங்களாகிடுவோம்ல..:-)

நன்றி அமித்து அம்மா, நோ..நோ டென்ஷன்!! ஓக்கே!!

நன்றி ஸ்ரீமதி, முத்து!

நன்றி விக்னேஷ்வரி..இதெல்லாம் வரலாற்று உண்மைகள் இல்லையா..:-)

நன்றீ தீஷு..சேம் பிளட்!

நன்றி சின்னபாண்டி...பெரிய பாண்டி வரட்டும், உண்மை தெரிஞ்சுடும்! :-))

சந்தனமுல்லை said...

நன்றி உழவன், ஆகாயநதி!

நன்றி நசரேயன்..ஹிஹி!

நன்றி அருணா...அதானே! :-)

நன்றி கரவைக்குரல்...

மாதவராஜ் said...

//வாழ்வின்விடியலுக்காய்
நான் காத்திருக்கிறேன்!
விடியும் நேரம் நான்
விழிக்காமல் போகலாம்!

ரொம்பத் தெளிவுங்க.

படிக்கும் காலத்தின் வேதனைகள் இப்போது சுகமாய்த்தான் இருக்கிறது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-)

பிரேம்குமார் said...

ஏனிந்த கொலவெறின்னு மொதல்ல கேட்க நினைத்தாலும் நல்லாயிருக்குன்னு சொல்லாமயிருக்க முடியல :)

Divyapriya said...

periya aal thaan pola...schooliaye kavidhai ellaam eludha aarambichiteenga..

KVR said...

கவிதைக்கு விளக்கம் சொல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். "நான்", "என்"ல்லாம் இல்லாம இப்போ திரும்ப இதே கவிதையை முயற்சித்துப் பாருங்க.

அமுதா said...

/*கடந்துசென்ற நேற்றும்
நிகழ்கின்ற இந்த நொடியும்
என் கைகளில் கிடைத்தால்
கண்ணாடிபெட்டியில்
பூட்டிவைத்துக் கொள்வேன் நான்*/
சூப்பர்