Wednesday, April 22, 2009

எங்கே போகலாம் டோரா?!

மேடேஸ்வரனின் டோரா பதிவு - என்னையும் இழுத்து விட்டது.

ஒரு விடுமுறை நாளின் பிற்பகுதி. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க, பப்பு மட்டும் தூங்க மறுத்து விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென எழுந்து வந்து என் கையை பிடித்துக் கொண்டு நாம டோரா விளையாடலாம் வா என்றாள்.

என் கையை பிடித்துக் கொண்டு, “நாம எங்க போகலாம் டோரா?!” என்றாள்.

ஆகா, மாட்டிக் கொண்டேன் போலிருக்கிறதே!

காடு...

வீட்டின் ஹாலை சுவர் ஓரமாக சுத்திக் கொண்டு சென்றோம்.

அப்புறம் எங்கே போகலாம் டோரா?!

எனக்குத் தெரியலைப் பப்பு, நீயே சொல்லு.

நான் புஜ்ஜி. நீதான் டோரா. புஜ்ஜி சொல்லு!!

தெரியலை புஜ்ஜி!

கையை பிடித்து ஹாலின் மற்றொரு மூலை. இதோ ஆப்பிள் மரம் - பப்பு!

எனக்கு என்ன செய்வதென் புரியவில்லை. பப்பு கையை நீட்டி பறித்து பறித்து சாப்பிடும் ஆக்ஷன் செய்துக் கொண்டிருந்தாள். நீயும் சாப்பிடு. பறிச்சுக்கோ.

நானும்!

நிஜ ஆப்பிளை ஒரு நாளும் இவ்வளவு ஆர்வமாய் சாப்பிட்டதில்லை அவள்!! அவ்வ்வ்வ்!

மறுபடியும், “எங்கே போகலாம்..” ஆப்பிள் சாப்பிட்டதில் எனக்கு வந்த தெம்பில், பாலம்.
மறுபடியும் ஹாலின் எதிர் மூலை..ஒஹ்ஹொ!

மறுபடியும், “எங்கே போகலாம்...” - மலை! வீட்டுக்குள் வாக்கிங் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று அனுபவித்தேன்!
ஒரு மரச் சேரை எடுக்க கொஞ்சம் சிரமப்பட்டேன். பப்பு என்னிடம், “நான் உதவி செய்யட்டுமா?” என்றாள். இதற்கு முன்பும் அப்படிக் கேட்டிருக்கிறாள், பல சமயங்களில். நானும் வாய்ப்பை நழுவ விட்டதில்லை! அன்று அவள் கேட்டதும், வேண்டாமென்று சொல்லிவிட்டு எடுத்துக் கொண்டேன். பார்த்திக்கொண்டிருந்த பப்பு,

“நீயே உனக்கு உதவி செஞ்சுக்கிட்டியா, ஆச்சி!”!!

தன் கையே தனக்குதவி - பழமொழிதான் நினைவுக்கு வந்தது. சொல்லவில்லை!

20 comments:

G3 said...

Firstu :)))

G3 said...

//வீட்டுக்குள் வாக்கிங் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று அனுபவித்தேன்! //

:))))))))

G3 said...

//“நீயே உனக்கு உதவி செஞ்சுக்கிட்டியா, ஆச்சி!”!! //

Chooo chweet :)))

தீஷு said...

//மறுபடியும், “எங்கே போகலாம்...” - மலை! வீட்டுக்குள் வாக்கிங் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று அனுபவித்தேன்!

//

வீட்டுக்குள் வாக்கிங்கா? காடு மலை எல்லாம் சுத்துனேனு சொல்லுங்க. பப்பு கோவிசிக்கப் போறா.

ஆயில்யன் said...

ஜெகண்டு :))

ஆயில்யன் said...

//
மறுபடியும், “எங்கே போகலாம்...” - மலை! வீட்டுக்குள் வாக்கிங் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று அனுபவித்தேன்! //

ம்
ம்

ஆயில்யன் said...

//நீயே உனக்கு உதவி செஞ்சுக்கிட்டியா, ஆச்சி!”!!//


ஆச்சி is குட் கேர்ள்

Suresh said...

நல்ல பதிவு

உங்கள் பதிவு படித்தது உங்க பப்புவோடு கைப்பிடித்து ஒரு அழகிய நதி கரையோரம் நடந்தது போன்ற உணர்வு

மாதேவி said...

நீயும் சாப்பிடு. பறிச்சுக்கோ.

எனது மகளும் சாறி உடுத்து ரீச்சர் ஆகி பாடம் நடத்தியதை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.குழந்தைகள் உலகமே தனிதான்.

ஆயில்யன் said...

ஆஹா டெக்னிக்கலி நான் மூடூ ச்சே தேர்ட்டு :(

Rithu`s Dad said...

நல்ல பதிவு முல்லை இந்த கார்ட்டூன்கள் எந்தளவு குழந்தைகளின் மனதில் இடம்பிடித்துள்ளன என்று... இங்கயும் ரித்து அப்டி தான்.. எல்லா கார்ட்டூன்ஸ் பேரும் சொல்லிட்டே தான் மேடம் தூங்கறாங்க.... அவங்க எல்லம் தூங்கீட்டாங்க நீ இப்பொ தூங்கினால் தான் காலைல எழுந்து அவங்கள எல்லாம் பார்க்கலாம்னு சொல்லி அவங்கள தூங்க வைப்பதற்குள்... போதும் போதும் தான்.. ..


இந்த கார்ட்டூன்கள் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக்கு தானே .. பின் படிப்பு ... வேலை.. வாழ்க்கை.. ஒரு முழு வட்டமும் இருக்கே சுற்ற..

ராமலக்ஷ்மி said...

//நிஜ ஆப்பிளை ஒரு நாளும் இவ்வளவு ஆர்வமாய் சாப்பிட்டதில்லை அவள்!! அவ்வ்வ்வ்!//

:))!

குழந்தைகளின் கற்பனா உலகமுமே தனி. அதற்குள் செல்லுகையில் நாமும் குழந்தைகளாகி விட வேண்டும்:)!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

\\நிஜ ஆப்பிளை ஒரு நாளும் இவ்வளவு ஆர்வமாய் சாப்பிட்டதில்லை அவள்!! அவ்வ்வ்வ்!//

:)
ஆமா யாரு நரி ??

பிரேம்குமார் said...

//பார்த்திக்கொண்டிருந்த பப்பு,

“நீயே உனக்கு உதவி செஞ்சுக்கிட்டியா, ஆச்சி!”!! //

பரவாயில்லையே.. கார்டூன்களால் சில சமயம் நன்மைகளும் நடக்கும் போல

ஆகாய நதி said...

ம்ம்ம்... சூப்பர் பப்பு... டோராவும் புஜ்ஜியும் பொழிலனுக்கு ஆப்பிள் தரலையே!

Sasirekha Ramachandran said...

//“நீயே உனக்கு உதவி செஞ்சுக்கிட்டியா, ஆச்சி!”!! //
highlight..
கலக்குற பப்பு!!!

Divyapriya said...

டோரா :D

ஸ்ரீமதி said...

Romba cute.. :)) Love you pappu..:))

கானா பிரபா said...

பப்புவிற்கு நிஜ் ஆப்பிள் வாங்கிக் கொடுக்காததை கண்டிக்கிறோம்

பாட்டி பேரவை
சிட்னி

விக்னேஷ்வரி said...

வீட்டுக்குள் வாக்கிங் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று அனுபவித்தேன்! ///

ஹாஹாஹா....

நீயே உனக்கு உதவி செஞ்சுக்கிட்டியா, ஆச்சி! ///

ஐயோ, அழகு.