Thursday, April 16, 2009

படம் சுட்டி பொருள் விளக்கம்!!அவளாக வரைந்து, ஒரு அவுட்லைன் வரைந்துக் கொண்டு அதனுள் வண்ணங்கள் தீட்டியது. இந்த படத்திலுள்ள உருவங்கள் எதைக் குறிக்கிறது என்று நானறியேன், ஆனால், வட்டங்கள், முக்கோணங்கள், நீள் வட்டங்கள் என்றும், சில சமயங்களில் பழங்களாகவும் (ஆரஞ்சு, ஆப்பிள்) என்றும் ஓவியங்கள் உருவாகின்றன! ஏற்கெனவே வரைந்திருக்கும் படத்தில் வண்ணம் தீட்டுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. ஒருவேளை, அவளது boundary-களை அவள்தான் தீர்மானிக்கவேண்டுமென்று எண்ணுகிறாள் போலும்!
தனிஷ்க்-ஜிஆர்டி-ஓகேஜே-ஆலுக்காஸ் சுந்தரீஸ்......ஜாக்கிரதை!

நகையைக் கழுத்தில் போட்டதும், போட்டோ எடுக்கறேன் என்று சொன்னதும், பப்பு கொடுத்த போஸ்!
நோ.நோ..அஸ்வினி ஹேர் ஆயிலுக்கும்..


..இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

இது முடி வெட்டிக்கொள்வதற்கு முன். கால் நீளம் வர வேண்டும் என்று அடம்பிடித்தவள் பேச்சுவார்த்தைக்குப்பின் கடைசியில் சம்மதித்தது இந்த நீளத்திற்கு! அவள் கவனம் முழுதும் சடையை(பூ) முன்னால் போட்டுக்கொள்ளத்தான்!
நாமிருவர் நமக்கொருவர் ?!


அவள் தூங்குமுன், பொம்மைகளையும் சாரி நண்பர்களை இப்படித் தூங்க வைத்துவிடுகிறாள். இந்த தூங்கும் பொம்மைகள் ஒருவேளை, depicts a family - The concept?! அப்பாக் கரடி, அம்மாக் கரடி, மற்றும் குட்டிக் கரடி! கு.க திட்டத்திற்கு விளம்பரமாக இதை அனுப்பலாமெனிருக்கிறேன்! ;-)


குறிப்பு :- காப்புரிமை பெற்றது. ஆர்ட் தேவைப்படுவோர் தனிமடலிடவும்!

ஆயில்ஸ் :- நன்றி!

37 comments:

G3 said...

:))))

Pappu fan clubla admission nadakkudha ;) naan seranum :D

அமுதா said...

/*ஒருவேளை, அவளது boundary-களை அவள்தான் தீர்மானிக்கவேண்டுமென்று எண்ணுகிறாள் போலும்!*/
இருக்கலாம்

/*இது முடி வெட்டிக்கொள்வதற்கு முன். கால் நீளம் வர வேண்டும் என்று அடம்பிடித்தவள் பேச்சுவார்த்தைக்குப்பின் கடைசியில் சம்மதித்தது இந்த நீளத்திற்கு! அவள் கவனம் முழுதும் சடையை(பூ) முன்னால் போட்டுக்கொள்ளத்தான்!*/
:-))

எம்.எம்.அப்துல்லா said...

//ஒருவேளை, அவளது boundary-களை அவள்தான் தீர்மானிக்கவேண்டுமென்று எண்ணுகிறாள் போலும்!

//

:))

ஆயில்யன் said...

//நகையைக் கழுத்தில் போட்டதும், போட்டோ எடுக்கறேன் என்று சொன்னதும், பப்பு கொடுத்த போஸ்! ///


எங்க பப்பு கொடுத்த போஸெல்லாம் ஒ.கே!

பட் போட்டோ கிராபர் சரியில்ல ..!


மொதல்ல போட்டோகிராபரை மாத்தணும்!

பப்பு பேரவை

ஆயில்யன் said...

//காப்பிரைட் உரிமை பெற்றது//


காப்பி ரைட்

உரிமை பெற்றது????


அதுவுமா காப்பிரைட் பண்ணிட்டாங்க !

ஆயில்யன் said...

//அவளது boundary-களை அவள்தான் தீர்மானிக்கவேண்டுமென்று எண்ணுகிறாள் போலும்!//


இதையேத்தான் எங்க தலைவரு எப்பவோ சொல்லிட்டாரே...!

உன் பவுண்டரி உன் கையில்ன்னு
:)))

ராமலக்ஷ்மி said...

//அவளது boundary-களை அவள்தான் தீர்மானிக்கவேண்டுமென்று //

நைஸ்:)!

பிரேம்குமார் said...

ஆகா, ஒரு சூப்பர் மாடல் உருவாகுறாங்க போல் இருக்கே....:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

/*இது முடி வெட்டிக்கொள்வதற்கு முன். கால் நீளம் வர வேண்டும் என்று அடம்பிடித்தவள் பேச்சுவார்த்தைக்குப்பின் கடைசியில் சம்மதித்தது இந்த நீளத்திற்கு! அவள் கவனம் முழுதும் சடையை(பூ) முன்னால் போட்டுக்கொள்ளத்தான்!*/

:))))

super snaps.

Sasirekha Ramachandran said...

////நகையைக் கழுத்தில் போட்டதும், போட்டோ எடுக்கறேன் என்று சொன்னதும், பப்பு கொடுத்த போஸ்! ///


எங்க பப்பு கொடுத்த போஸெல்லாம் ஒ.கே!

பட் போட்டோ கிராபர் சரியில்ல ..!//

நானும் அப்டித்தான் நினைக்கிறேன்!!

இப்பவே மாடலிங் பண்றா.....nice nice!!!

Deepa said...

படங்களும் அதற்கு உங்கள் குறிப்புக்களுமே கவிதையாய்
இருக்கின்றன.

பூ வைத்த பப்பு கொள்ளை அழகு!

ஆனாலும் மொட்டை போட்ட நேஹாவை இப்படியா நீங்க வெறுப்பேத்தறது..? too bad!

//அவள் தூங்குமுன், பொம்மைகளையும் சாரி நண்பர்களை இப்படித் தூங்க வைத்துவிடுகிறாள்//

ஹேய்! நான் கூட சின்ன வயசில் இப்படிச் செய்ததுண்டு. ரொம்ப பாசக்காரியோ பப்புக் குட்டி?
;-)

வித்யா said...

ஆலுக்காஸ் சுந்தரியா:)
Cute pappu:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரசனையான பகுதிகள்.!

(உண்மையில் சரியான தூரம், சரியான கோணத்தில் எடுக்கப்பட்டிருந்தால் படங்கள் இன்னும் பிரமாதமாய் வந்திருக்கும்)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அட்டகாசம்.. விளம்பரக் காப்பி ரைட்டர் ,விளம்பர மாடல், எல்லாமே ஒரே வீட்டில் கிடைக்கிறாங்க.. :)

ஆகாய நதி said...

எனக்கு அந்தப் படங்கள் மனித முகம், தலை, கற்கள், பாறை போன்று காட்சியளித்தன :) பப்பு க்ரேட் வொர்க்!

ஹேர் ஸ்டைல் சூப்பர் பப்பு!
//
அவள் கவனம் முழுதும் சடையை(பூ) முன்னால் போட்டுக்கொள்ளத்தான்
//

:)

//
எங்க பப்பு கொடுத்த போஸெல்லாம் ஒ.கே!

பட் போட்டோ கிராபர் சரியில்ல
//

:)

//அவளது boundary-களை அவள்தான் தீர்மானிக்கவேண்டுமென்று எண்ணுகிறாள் போலும்!//

நல்ல விஷயம் தான்!:)

ஆகாய நதி said...

//
இந்த தூங்கும் பொம்மைகள் ஒருவேளை, depicts a family - The concept?! அப்பாக் கரடி, அம்மாக் கரடி, மற்றும் குட்டிக் கரடி! கு.க திட்டத்திற்கு விளம்பரமாக இதை அனுப்பலாமெனிருக்கிறேன்! ;-)
//

ம்ம்ம்... நல்ல ஐடியா!

மண்குதிரை said...

thanks santhanamullai

கைப்புள்ள said...

//அவள் தூங்குமுன், பொம்மைகளையும் சாரி நண்பர்களை இப்படித் தூங்க வைத்துவிடுகிறாள். இந்த தூங்கும் பொம்மைகள் ஒருவேளை, depicts a family - The concept?! அப்பாக் கரடி, அம்மாக் கரடி, மற்றும் குட்டிக் கரடி!
//


Very creative.
:)

தமிழ் பிரியன் said...

என்னது காப்புரிமையா?... ஹிஹிஹி ஓவரா இருக்கே... கரடிக்குட்டிகள் தூக்கம் அருமையான கலைநயம்!

கவிதா | Kavitha said...

:)) முல்ஸ் ஓவியங்கள் எனக்கு பல உருவங்களை காட்டுகிறது..

ம்ம்.. நகைப்போட்டுக்கொள்ள அவ்வளவு ஆசையா??? :))

அடுத்த இரண்டு.. என்னை நினைவு கூர்கிறது.. :)) பாப் வெட்ட அழைத்தால்.. ஓடுவேன் பாருங்கள்.. ஸ்ஸ் பிடிக்கவே முடியாதளவு ஓடுவேன், நீட்டாக முடி வேண்டும் பின்னிக்கொள்ள வேண்டும் என்று அழுது அட்டகாசம் செய்வேன். .ஆனால் பேன் தொல்லை காரணமாக வெட்டி வெட்டி விட்டுவிடுவார்கள் :(

அடுத்து முல்ஸ் நீங்க படிச்சீங்களா என்னோட அணில் குட்டி இப்படித்தான் தூங்கவச்சி.. நானே கொன்னுட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ் :( அப்புறம் ஒரு பெண் பொம்மை வைத்து இருந்தேன்.. கண்ணை மூடி மூடி திறக்கும் அது என்னிடம் பட்ட பாடு இருக்கிறதே.. பப்பு இப்படி ஏதாவது செய்யும் போது எல்லாம் எனக்கு என் பொம்மைகளின் நினைவு வந்துவிடுகிறது :))

மிஸஸ்.தேவ் said...

பாப்பு செய்வதெல்லாம் பப்புவும் பார்க்கப் பார்க்க சிரிப்பு அள்ளிக் கொண்டு போகிறது ...

இன்னும் என்னென்ன சுவரஸ்யங்களை இந்தக் குட்டிப் பெண் (குழந்தைகள் என்று நாம் தான் சொல்லிக் கொள்கிறோம் ...அவர்கள் அதை விரும்புவதில்லையோ!!!) செய்யப் போகிறாளாம்?! பார்க்க அலுக்கவில்லை .

தீஷு said...

//தனிஷ்க்-ஜிஆர்டி-ஓகேஜே-ஆலுக்காஸ் சுந்தரீஸ்//

ஆமாம் முல்லை. எல்லா மாடல்களுக்கும் போட்டி ஆளைப் பார்த்து பயந்து போயிருங்காங்களாம். Pappu is so cute.

Divyapriya said...

:))
//Pappu fan clubla admission nadakkudha ;) naan seranum :D//

நானும் தான் :)

அன்புடன் அருணா said...

//அவளது boundary-களை அவள்தான் தீர்மானிக்கவேண்டுமென்று எண்ணுகிறாள் போலும்!//

தீர்மானிக்கட்டும்...தீர்மானிக்கட்டும்!!
வாழ்த்துக்கள்...
அன்புடன் அருணா

Poornima Saravana kumar said...

பப்பு நல்லா போஸ் கொடுக்க பழகிட்டாங்க!

Poornima Saravana kumar said...

கடைசி படமும் அதற்கான கருத்தும் சூப்பர்:)

நிலாவும் அம்மாவும் said...

இந்த படத்திலுள்ள உருவங்கள் எதைக் குறிக்கிறது என்று நானறியேன்/////


engalukku theriyuthu...ungalukku theriyaliya.....sari illiye

கணினி தேசம் said...

குட்டி ஓவியருக்கு வாழ்த்துகள்
:)))

நாமக்கல் சிபி said...

//அவளது boundary-களை அவள்தான் தீர்மானிக்கவேண்டுமென்று எண்ணுகிறாள் போலும்!//

பின்னே! அதுல நீங்க ஏன் தலையிடுறீங்க?

குடுகுடுப்பை said...

கு.க திட்டத்தில் இன்னோரு குட்டி பொம்மை தேவை. நீங்கள் வாங்கி கொடுத்தால் அதுவும் அங்கே தூங்கும்

குடுகுடுப்பை said...

எப்படி முடி வெட்ட சம்மதிக்க வெக்கறீங்க.

தாரணி பிரியா said...

பப்புவோட மாடலிங் போட்டோ சூப்பர்

ஆயில்யன் said...

இம்பார்டெண்ட் அறிவிப்பு

பப்பு பேரவையில சேர்றதுக்கு கூட்டம் அலைமோதும் நிலையில் தாங்கள் பப்பு பேரவையின் அகில உலக அமைப்பு தலைவர் ஆயில்யன் அவர்களின் அனுமதி முதலில் பெறவேண்டும் என்று இச்சமயத்தில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது!

பப்பு பேரவை
தோஹா கத்தார்
(வேறு எங்கும் தலைவர்கள் கிடையாது!)

விக்னேஷ்வரி said...

Good snaps and very good comments.

சந்தனமுல்லை said...

நன்றி G3..ஆயில்ஸ் என்னவோ சொல்றார் பாருங்க..:-)..!!

நன்றி அமுதா,அப்துல்லா!


நன்றி ஆயில்ஸ்,

//பட் போட்டோ கிராபர் சரியில்ல ..!


மொதல்ல போட்டோகிராபரை மாத்தணும்!
//

அதெல்லாம் இல்ல..கேமிரா சரியில்லை..உங்க டெல்ஸ்கோப்..சாரி கேமிராவை அனுப்பிவையுங்க..ஓக்கேவா!! :-)

//உன் பவுண்டரி உன் கையில்ன்னு
:)))//

ஆகா...!

நன்றி ராமல்ஷ்மி!

நன்றி பிரேம்..அதையேன் கேக்கறீங்க..போஸ் கொடுக்க மாட்டாளான்னு இருந்தது போய் அவளாவே என்னை எடுங்க என்னை எடுங்கன்னு சொல்ற அளவுக்கு ஆயாச்சு! :-)

வாம்மா, சசி..

\\பட் போட்டோ கிராபர் சரியில்ல ..!//

நானும் அப்டித்தான் நினைக்கிறேன்!!
\\

இப்போ மட்டும் போய் கூட்டு சேர்ந்துக்குவியே! :-)

நன்றி தீபா..அப்போ ஸ்கார்ப்பியன்ஸ் -ல்லாம் இப்படித்தானோ?!! :-)

சந்தனமுல்லை said...

நன்றி வித்யா!

நன்றி ஆதி,

//(உண்மையில் சரியான தூரம், சரியான கோணத்தில் எடுக்கப்பட்டிருந்தால் படங்கள் இன்னும் பிரமாதமாய் வந்திருக்கும்)
//

ஆகா..அப்புறம் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்..?! :-)..

நன்றி முத்து, இல்லையா பின்னே!!

நன்றி ஆகாயநதி,மண்குதிரை, கைப்ஸ்!

நன்றி தமிழ்பிரியன் அண்ணா, நோ டென்ஷன்..ஓக்கே..:-)

நன்றி கவிதா..உங்க நினைவுகளை பகிர்ந்துக்கிட்டது! உங்க ஆயாவை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!

நன்றி மிஸஸ்.தேவ்!

நன்றி தீஷு, ஹஹ்ஹா..

நன்றி திவ்யாபிரியா....உங்களுக்கு இல்லாததா! :-)

நன்றி அன்புடன் அருணா..

நன்றி பூர்ணி, ஆமா..ஆனா நாம சொல்லும்போது போஸ்கிடைக்காது..:-)

நன்றி நிலாவும் அம்மாவும்..அதானே..நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்..ஒரு ஓவியரோட ஓவியம் இன்னொரு ஓவியருக்குத்தான் புரியும்! ;-)

நன்றி கணினி தேசம்!

சந்தனமுல்லை said...

நன்றி சிபி...நான் எங்கேங்க தலையிட்டேன்..என் தலையை கழுத்து மேலேதான் வச்சிருக்கேன், இன்னமும்! ஹிஹி!

நன்றி குடுகுடுப்பை, முடி வெட்ட வைக்கிறது.. கொஞ்சம் இல்ல..பெருங்கஷ்டம் தான்!

நன்றி தாரணி!

ஆயில்ஸ்...பல்பொடி ரேஞ்சுக்கு ஆக்கிடுவீங்க போலிருக்கே..;-))

நன்றி விக்னேஷ்வரி!