Tuesday, April 07, 2009

பப்பு சீன்ஸ்

அழுவதா சிரிப்பதா!! - சீன் 2

சில சமயங்களில் பப்பு மாலை 5.30 மணிக்கு தூங்கி விடுகிறாள். காலை மூன்று மணி அல்லது இரண்டரைக்கு எழுந்துக் கொள்கிறாள். பிரச்சினை அதுவல்ல!

சென்ற வாரத்தில் ஒருநாள், அப்படிதான் ஆயிற்று. பையை வைத்துவிட்டு, சோபாவில் உட்கார எத்தனித்த போது சோபா முழுதும் ஏதோ foam-ஐ வெட்டிப் போட்டது மாதிரி இருந்தது. மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களில்! அருகில், பொம்மைகள். புரிந்துவிட்டது.

ஆயா, கட் பண்ணுச்சா, பொம்மையெல்லாம்? என்றதற்கு ஆயா

ஆமாம்மா, என் முடியைக் கூட கட் பண்ணியிருக்கு கொஞ்சம்!

அவ்வ்வ்! சேதாரம் அதிகமில்லை, நுனியில்தான்!

சட்டென்று கீழே பார்த்தேன். கறுப்பு முடி. சுருள் சுருளாக. ஆயாவிற்கு கறுப்பு முடியில்லையே. தூங்கிக்கொண்டிருந்த பப்புவின் தலையைப் பார்த்தேன்!

ஓ..நோ! எது நடந்திருக்கக் கூடாதென நினைத்தேனோ அது நடந்தேவிட்டிருக்கிறது!

ஆமாம், அவளாகவே தலையில் நெற்றிக்கு மேலாக வெட்டியிருக்கிறாள்!

ouch! கடந்த வாரத்தில்தான் சம்மர் கட் செய்திருந்தோம், ஒட்ட வெட்டி. இப்போது அதிலும் முன்னால் இருக்கும் முடி இல்லையெனில், எப்படி இருக்கும்!

இப்படித்தான் இருந்தது, அன்று!!மறுநாள் காலை.

”பப்பு, போய் கண்ணாடி பாரு”

”அழகா இருக்கேன் ஆச்சி, நானே முடி வெட்டிக்கிட்டு!”

oh baby! உன் மேல் உனக்கிருக்கும் நம்பிக்கை மகிழ்ச்சியைத் தருகிறது எனக்கு..ஆனால்..ஆனால்..:(

ஏன் பப்பு, வெட்டினே! - மிக மெதுவாய் கேட்டேன்!

முடி வளர்ந்துடுச்சு இல்ல, அதனாலதான் வெட்டினேன்!

யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!!அவளை வேனில் ஏற்றிவிட்டு திரும்பும்போது, பள்ளியில் மற்ற/பெரிய வகுப்பு சிறார்களை எப்படி எதிர்கொள்ளுவாள்? ஆசிரியை என்ன நினைத்துக் கொள்ளுவார்கள்? எப்படி அணுகுவார்கள்? இதுவரை தன் தோற்றத்தைக்குறித்து சற்றும் கவலைப்படாதவள், வெட்கம் கொள்வாளா?! so many thoughts!

அன்று மாலை திரும்பக் கேட்டேன்!

ஸ்கூல்ல என்ன சொன்னாங்க பப்பு, ஆண்ட்டி பார்த்தாங்களா?!

நல்லாயில்லேன்னு சொன்னாங்க...நான் அழகா இருக்கேன்னு சொல்லிட்டேன்!

(பொய்யோ உண்மையோ நானறியேன்,ஆனால், அவளது செய்கையைக் குறித்து வெட்கப் படவில்லை, I wish, her self-esteem grows like this!)அவள் முடியை வெட்டிக்கொண்ட அன்று இரவு ரொம்ப அப்செட்டாக இருந்தது. முடி போனதினால் மட்டுமல்ல. சமையலறையில் இருந்த கத்திரிக்கோலை நாற்காலி போட்டு எடுத்திருக்கிறாள்...what ifs..etc..etc! ஆன்லைனில், Golda அக்கா இருந்தார்கள். காலேஜில் என்னோட சீனியர். அவர்களிடம் புலம்பினேன். Golda அக்கா சொன்னார்கள் இதெல்லாம் சகஜமென்று. மேலும், அவர்கள் கொடுத்த டிப்ஸ், timeout. கத்திரிக்கோலை அவளுக்கு இன்னும் கொஞ்சநாள்கள் கொடுக்காதே என்றும்.

என்னை ஆறுதல் படுத்தி, சகஜ நிலைக்கு கொண்டுவந்த,அடுத்த நாள் காலை பப்புவை மென்மையாக அணுக ஊக்கமூட்டிய Golda அக்காவிற்கு நன்றி!

39 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

பெரிய வளர்ச்சி தான்.. உங்களுக்கு அவ சேரில் ஏறி இதை செய்யும் அளவு வளரலைன்னு தோன்றி இருக்கு.. அவ வளர்ந்துட்டாளே.. ஹ்ம்.
ஓகே கவனமா சில விசயங்களைப் பற்றி எது எதெல்லாம் நாமா செய்துக்கக்கூடாதுன்னு வேறஎப்பவாச்சும் பேச்சோடு பேச்சா சொல்லி வச்சிக்குங்க..

வித்யா said...

இந்த விஷயம் கொஞ்சம் டேஞ்சர் தான். பப்புவின் பேச்சு ஆச்சரியம் அளிக்கிறது.

சின்ன அம்மிணி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் முல்லை.

கத்திரிக்கோல் பப்பு கைல கிடைக்கற மாதிரி வைக்காதீங்க. உங்க தலைமுடியும் இப்படி ஏதாவது ஆகிடப்போகுது.

கவிதா | Kavitha said...

கத்தி, கத்திரிக்கோல், அருவாய்மனை, ஊசி, வத்திப்பெட்டி, கேஸ் லைட்டர், ஆஸிட் பாட்டில், டாய்லட் கிளீனிங் ஐடம்ஸ், பூச்சி கொல்லுகிற ஸ்ப்ரே பாட்டில்கள்

இவை எதுவுமே குழந்தைகள் கண்ணில் படக்கூடாது, லாக் அண்ட் கீ யில் வைங்க...

இப்படியா முடிய வெட்டிக்கிட்டா? நாங்க பார்க்கும் போது நல்லா வளந்துடுச்சி போலவே சுத்தமா தெரியல.. நீங்க சொன்னத்தான் தெரியுது :)

நட்புடன் ஜமால் said...

பப்புவை ஆதரித்து போர் கொடி எழுப்ப நினைத்தேன்

சகோதரிக்கு(பப்புவின் ஆச்சி) வாழ்த்து சொல்ல வேண்டிய நாள் என்பதால்


“வாழ்த்துகள்”

அபி அப்பா said...

என்ன கொடுமை இது. குழந்தை கண்ணுல படுவது மாதிரியா கத்திரியை வைக்கனும்??

இதை கண்டிச்சு பப்பு பேரவை கத்தார் தல பாஅதி மொட்டை போட்டுக்க போறார் பாருங்க:-)

G3 said...

//நல்லாயில்லேன்னு சொன்னாங்க...நான் அழகா இருக்கேன்னு சொல்லிட்டேன்!/


:))))))))))சமத்து பப்பு :))))

தீஷு said...

ஒவ்வொரு நிமிஷமும் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கு முல்லை. தீஷு இரண்டு மாசத்திற்கு முன்னால் மூக்குள்ள பாசியைப் போட்டுவிட்டாள். அவள் டாக்டர் எடுக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டதனால் ENT கிட்ட போய் எடுத்தோம். அந்த மூன்று மணி நேரமிருந்த டென்ஷன் சொல்ல முடியாது. அவுங்க விளையாட்டா எல்லாத்தையுமே முயற்சி செய்து பாக்கிறாங்க..

அமுதா said...

:-) வாண்டு...

ஆயில்யன் said...

/அபி அப்பா said...
என்ன கொடுமை இது. குழந்தை கண்ணுல படுவது மாதிரியா கத்திரியை வைக்கனும்??

இதை கண்டிச்சு பப்பு பேரவை கத்தார் தல பாஅதி மொட்டை போட்டுக்க போறார் பாருங்க:-)

2:59 PM
//


நோ ஓஓ


கான்பிடண்ட்

கான்பிடண்ட் காமிச்சுருக்காங்க எங்க பப்பு இதெல்லாம் ச்சும்மா சாதாரணமான டெரரரிசம் கேட்டகிரியிலதான் வரும் என்னமோ பெருசா ரவுடியிசம் பண்ணுன மாதிரியில்ல ஆச்சி நீங்க ஃபீல் பண்றீங்கோ!

பப்பு பேரவை
தோஹா - கத்தார்

ஆயில்யன் said...

பை தி பை அந்த தங்க அக்காவுக்கு நன்றிகள்!(அது கோல்டு இல்ல கோல்டா அப்படி இப்படின்னுல்லாம் பேசப்பிடாது நாங்க அப்படித்தான் கூப்டுவோம்!)

எங்க பப்புவை சரியா பார்த்துக்க ஆச்சிக்கு டிப்ஸ் கொடுத்ததுக்கா

ராமலக்ஷ்மி said...

பப்புவின் self-esteem ஆச்சரியத்தைத்தான் கொடுக்கிறது. கத்திரியை கண்ணில் படாத கைக்கெட்டாத தொலைவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். என் தங்கை பெண்ணும் இப்படியே. கத்திரி கிடைத்தால் கொண்டாட்டம். பெட் ஸ்ப்ரெட், சோஃபா கவர் எதையும் விட்டு வைப்பதில்லை. எல்லாம் ஒரு ஸ்டேஜ் வரைதான். அப்புறம் தானாகப் புரிந்து விடுகிறது. விவரமாகி விடுகிறார்கள்:)!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஸ்கூல்ல என்ன சொன்னாங்க பப்பு, ஆண்ட்டி பார்த்தாங்களா?!

நல்லாயில்லேன்னு சொன்னாங்க...நான் அழகா இருக்கேன்னு சொல்லிட்டேன்!

(பொய்யோ உண்மையோ நானறியேன்,ஆனால், அவளது செய்கையைக் குறித்து வெட்கப் படவில்லை, I wish, her self-esteem grows like this!)

ஆச்சரியத்தோட விளிம்பு இது.

வளர்ந்த குழந்தைகளே (பெரியவங்க) இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ள தயங்க, juz like that ANSWER.

உங்களோட சேர்ந்து நானும் விஷ் பண்றேன் பப்புவ.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ouch! கடந்த வாரத்தில்தான் சம்மர் கட் செய்திருந்தோம், ஒட்ட வெட்டி. இப்போது அதிலும் முன்னால் இருக்கும் முடி இல்லையெனில், எப்படி இருக்கும்!

இப்படித்தான் இருந்தது, அன்று!!

அழகா தான் இருக்காங்க ஆச்சி பப்பு,

அதான் அவங்களே சொல்லிட்டாங்களே

அப்புறமென்ன..

(நாமதான் பயப்பட்டு அப்செட் ஆகி இன்னும் என்னவெல்லாமோ ஆகிறோம்)

கானா பிரபா said...

ஆகா படத்தை பார்த்து முதலில் என்னவோ ஏதோன்னு நினைச்சேன். இப்படியான வஸ்துக்களை இன்னும் மறைவா வச்சிருங்க. பப்புவின் செய்கையை விட அதை அவள் நியாயப்படுத்தும் துணிச்சல் ......கிரேட்

கைப்புள்ள said...

பப்புவோட இந்த செய்கையை ஏத்துக்கறது கஷ்டமா இருந்திருக்கும்ங்கிறது புரியுது. ஆனா இப்போ சரியாயிருப்பீங்கன்னு நெனக்கிறேன். எனக்கும் இது ஒரு பாடம் தான்...குழந்தை வளர்ப்பு கலையில். பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி.

ஜோசப் பால்ராஜ் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா.
நான் கூட சின்னப்புள்ளய இருக்கப்ப இப்டி வேலையெல்லாம் செஞ்சுருக்கேன். ஆனா வீட்ல ரவுண்டு கட்டி அடிச்சுட்டாங்க. நீங்க பரவாயில்ல நல்லபடியா அணுகியிருக்கீங்க.

பிரேம்குமார் said...

//யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!! //

அதே தான்.

கணினி தேசம் said...

//ஏன் பப்பு, வெட்டினே! - மிக மெதுவாய் கேட்டேன்!

முடி வளர்ந்துடுச்சு இல்ல, அதனாலதான் வெட்டினேன்!
//

நான் வளர்கிறேனே மம்மி!!


:)))

Sasirekha Ramachandran said...

உங்கள் பதிவை படிக்கும் முன் என் கண்ணில் பட்டது பப்புவின் புகைப்படம்.பார்த்ததும் எனக்கு குபீர் என்றாகிவிட்டது.இன்னும் எனக்கு அந்த குபீர் போகவில்லை என்றாலும் இதற்குக் காரணம் நீங்கள்தான்......ஏன் அந்த கத்தரிக்கோலை அவளுக்கு எட்டும்படி வைத்தீர்கள்?பாவம் பாட்டி,அவங்க முடியையும் வெட்டி............ம்ம்ம்......உங்க மேலதான் தப்பு.......ஐயோ..நா போய் கைக்கெட்டும் கத்தரிகொலை எடுத்து வைத்து விட்டு வருகிறேன்.

நசரேயன் said...

யாருக்கு தெரியும் இதுவே பிற்காலத்திலே பேஷன் ஆக மாறினாலும் மாறும்

நிலாவும் அம்மாவும் said...

”அழகா இருக்கேன் ஆச்சி, நானே முடி வெட்டிக்கிட்டு!”
/////

நான் வளர்கிறேனே மம்மி

பின்னாடி பெரிய ஆளா வருவா பப்பு

போட்டோ பயங்க cute...

ஆமா..இனிமே கத்தரிக்கோல் குடுக்காதீங்க....

நிலாவும் அம்மாவும் said...

ஏன் அந்த கத்தரிக்கோலை அவளுக்கு எட்டும்படி வைத்தீர்கள்?

///
ஹி ஹி..பிறந்த நாள் அதுவுமா இந்த பதிவை போட்டு நல்ல வாங்கி கட்டிக்கிட்டீங்களா .

ஆதிமூலகிருஷ்ணன் said...

:(.. இப்பிடில்லாம் கூட நடக்குமா.? ரொம்பத்தான் கேர்ஃபுல்லா இருக்குணும் போலயே.. இந்த நிகழ்ச்சியிலும் உங்கள் எண்ணங்களும், நடவடிக்கைகளும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. நல்ல தோழியர் உங்களுக்கு.. லக்கி!

நானானி said...

//நல்லாயில்லேன்னு சொன்னாங்க...நான் அழகா இருக்கேன்னு சொல்லிட்டேன்!/

GOOD ATTITUDE! DEVELOP THE SAME WITH PAPPU. I USED TO HIDE ALL THE DANGEROUS ITEMS WHEN MY GRANDSON COMES. THESE HAPPENINGS ARE ALL FOR A TEMPERORY PERIOD. NO NEED WORRY. BUT BE CAREFUL.

HAPPY BITHDAY!!MULLAI!!

THOUGH IT'S BELATED!!

" உழவன் " " Uzhavan " said...

//முடி வளர்ந்துடுச்சு இல்ல, அதனாலதான் வெட்டினேன்! //

ஒரே காமெடிதான் போங்க :-)

சந்தனமுல்லை said...

நன்றி முத்து..:-))//உங்களுக்கு அவ சேரில் ஏறி இதை செய்யும் அளவு வளரலைன்னு தோன்றி இருக்கு..//
நான் அந்த மாதிரி அர்த்தத்தில சொல்ல வரலைப்பா...சமயலறை மேடைல ஹோல்டரில் கத்தி இருக்கு..பக்கத்துல கேஸ் ஸ்டவ் இருக்கு..ஒருவேளை...(நான் சொல்லக்கூட விரும்பாம கற்பனைக்கு விட்டுருந்தேன்..சொல்ல வைக்கறீங்க..!!) அதையெல்லாம்..அப்படின்றதுக்காக போட்டிருந்தேன்! ஓக்கேவா!

சந்தனமுல்லை said...

நன்றி வித்யா..ஆமா, ஒரு ஹேர் டை விளம்பரம் வேற அப்படி வருது..பப்பு அதை பார்த்துக்கேக்கறா..என்னை செயய் வேண்டாம்னு சொல்லறீங்க அந்த அங்கிள் மட்டும் கத்திரிகோல்-ல கட் பண்றாங்களேன்னு!

நன்றி சின்ன அம்மிணி..அவகிட்டே இருக்கறது பொம்மைக்கத்திரிக் கோல்தான்! இது நான் இல்லாதப்போ நடந்தது! :-)

சுரேகா.. said...

வாவ்...
கலக்குற பப்பு!

நான் நல்லாருக்குன்னு சொல்லிட்டென் தான் சூப்பர்!

இதைவிட வேற என்னங்க வேணும்..!?

சந்தனமுல்லை said...

நன்றி கவிதா..ரொம்ப சரியா பட்டியலிட்டு இருக்கீங்க! இது நடந்து 10 நாளுக்கு மேல ஆச்சு! :-)


நன்றி ஜமால்..கொஞ்சம் லேட் போல நீங்க !

நன்றி அபி அப்பா...ஆகா..தல மத்தவங்களுக்குத்தான் போடுவாரு போல!

நன்றி G3! :-)

சந்தனமுல்லை said...

நன்றி தீஷூ...ஆகா..மேடம் இவ்வளவு வேலை பண்றாங்களா..டென்ஷன் தான் போங்க!
நினைக்கவே பகீர்-ங்குது! :(

நன்றி அமுதா...

நன்றி ஆயில்ஸ்..ஆகா..நல்லா பண்றீங்கப்பா சப்போர்ட்..;-)) அப்புறம் ஆயில்ஸ்..எங்க golda அக்கா உங்க கமெண்ட்-அ நல்லாவே ரசிச்சாங்க! :-)

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி..ஆமா கொஞ்சநாள் பொம்மை கத்திர்கோலை கொடுத்திருந்தேன்..இப்போ மேடம் நிஜகத்திரிக்கு வந்திட்டாங்க!


நன்றி அமித்து அம்மா..நல்லாருக்கு நம்பித்தானே வெட்டிக்கிட்டா..அபப்டியேதான் இன்னும் நம்பறா! lol!

நன்றி கானாஸ்..நான் அப்செட்-ஆனது கூட அவளுக்குத் புரியலைன்னா பார்த்துக்கோங்க! அவ்வ்வ்!

நன்றி கைப்ஸ்..ஆமா..அப்செட்டிங்காதான் இருந்தது..அன்னைக்கு சாப்பிடக்கூடத் தோணலை! முடி வெட்டிக்கிட்டது பெரிய விஷயமாத் தோணலை..ஒருவேளை வேற ஏதாவது இதே மாதிரி முயற்சி செய்திருந்தால் எனும் எண்ணமே காரணம்! :(

சந்தனமுல்லை said...

நன்றி ஜோசப்..:-)..வெட்டிக்கிட்ட அப்புறம் என்ன செய்ய முடியும்?!!

நன்றி சசி..நான் எங்கே கைக்கெட்டும் படி வைத்தேன்..அவ ஏறி ஹோல்டரிலேர்ந்து எடுப்பான்னு நான் நினைக்கலை..நீயாவது சுதாரிச்சுக்கோ :-)

நன்றி நசரேயன்..ஹஹ்ஹ்ஹா!

விக்னேஷ்வரி said...

குழந்தை எவ்வளவு அழகா, ரௌண்டா கட் பண்ணிருக்கா.... ஏங்க, பாராட்டுறதை விட்டுட்டு, இப்படி திட்டுறீங்க. சேட்டை பண்ணா தான் குழந்தைங்க. Enjoy :)

சந்தனமுல்லை said...

நன்றி பொன்னாத்தா....:-)..க்யூட்டாவா இருக்கு உங்களுக்கு..அவ்வ்வ்வ்!
எல்லோரும் என்னைத்தான்ப்பா திட்டறாங்க..நீங்களாவது என் பக்கதிலே இருக்கீங்களே!! :-)

நன்றி ஆதி! :-)

நன்றி நானானி..பொதுவா பொம்மை கத்திரியை வச்சுதான் விளையாடுவா..ஒருவேளை முடிவெட்டினதை பார்த்ததாலே அவளும் முயற்சி செய்ய நினைச்சுக்கிட்டா போலன்னு ஆயா சொன்னாங்க! :-) வாழ்த்துகளுக்கு நன்றி!

உழவன்...உங்களுக்கு காமெடியா இருக்கா...க்ர்ர்ர்ர்ர்ர்ர்! :-)

சந்தனமுல்லை said...

நன்றி சுரேகா..ஹ்ம்ம்..நீங்க சொல்றதும் சரிதான்! :-)

நன்றி விக்னேஷ்வரி....ஆமாப்பா..சேட்டை செய்தாத்தான் குழந்தைகள்! ஆனா பாராட்டினா நமக்கும் வெட்ட வந்துடுவாங்களேப்பா! :-))

வல்லிசிம்ஹன் said...

இப்ப எல்லாம் பெற்றோர்களுக்குக் கவனம் எத்தனையோ முன்னேறிவிட்டது முல்லை.
என்ங்க வீட்டுக் குட்டிகள் மூணும் வளரும்போது குளியலறையில் இருந்த ஷேவிங் ரேஸர், பளபளான்னு ஒரு கத்தி இதை ,பக்கெட் மேல ஏறி பெரியவன் எடுக்க, தங்கச்சியும் அண்ணாவுமா சோஃபாக் கீறி பஞ்சையும் பறக்கவிட்டார்கள்:))
நான் பின்னால் நல்ல தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தேன் இடுப்பில் கடைசி வாரிசு:))
என்ன செய்ய!! இப்பவும் திகிலாக இருக்கிறது.கவலைப் படாதீர்கள்.இத்தோட போச்சே!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

சின்ன பசங்க தான் செய்யுறது எதுவா இருந்தாலும் அதை பாஸிடிவ்-ஆ எடுத்துப்பாங்க (பெற்றோர் வளர்ப்புமுறை பொருத்தது).. சில நேரங்களில் பெரியவங்களுக்கு இருக்க வேண்டிய self esteem சின்ன பசங்களுக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கும். அது அவங்க பெரியவங்க நம்மளை பார்த்துதான் கற்றுக்கொள்கிறார்கள். ஆனா, நாமத்தான் அதே self esteem-ஐ சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள மாட்றோம்.

சின்ன பசங்க யூஸ் பண்றதுக்காகவே மொக்கையான கத்தரிக்கோல் கடையில் விப்பாங்களே.. அது வாங்கிக் கொடுங்க.. விளையாட்டுக்கு விளையாட்டா பப்பு யூஸ் பண்ணிக்கொள்வாள்.. அதே நேரம் billu barber-ஆ ஆக சான்ஸ் கிடைக்காது. ;-)

தமிழன்-கறுப்பி... said...

அதுக்கு பப்பு சொன்ன காரணம் ஆஹா...:)