Friday, April 03, 2009

புத்தகங்கள் - தலைமுறை இடைவெளிகளில்!!

செல்வேந்திரனின் புத்தகப் பதிவுக்காக! பெரிம்மா கடந்த வாரயிறுதியில் வந்திருந்தார்கள். பப்புவோடு சேர்த்து வீட்டில் நான்கு தலைமுறைகள்.

"பெரிம்மா, ஒரு வீட்டிலே கண்டிப்பா இருக்க வேண்டிய 10 புக்ஸ் சொல்லுங்க” - நான்

”பாரதியார் கவிதைகள், டேல் கார்னிக்..” - பெரிம்மா

நடுவில் ஒரு குரல், “ சத்திய சோதனை” - பாட்டிதான்!

“ஆயா, படிக்கற புத்தகமா சொல்லுங்க, நம்ம வீட்டிலே கூடத்தான் இருக்கு,ஒரு சாப்டருக்கு மேலே படிக்க முடிஞ்சதேயில்ல,முதல்ல நீங்க படிச்சிருக்கீங்களா?!”

“புக்குன்னெல்லாம் சொல்ல முடியாது, ஆத்தர் சொல்றேன், அந்த ஆத்தரோட ஒரு புத்தகம் படிச்சாக்கூட போதும், சார்லஸ் டக்ளஸ், எஸ் ராமகிருஷ்ணன்” - பெரிம்மா.

“பெண்ணின் பெருமை” - வேற யாரு, எங்க ஆயாதான்!

இது சரிவராதுடா சாமியென்று, ஆளுக்கொரு பேப்பர் கொடுத்தேன். ஒரு குடும்பம். நான்கு தலைமுறைகள். Reading habbit! தலைமுறை இடைவெளி எப்படி இருக்குன்னு பாருங்க!!

ஆயாவின் லிஸ்ட் :

1. சத்தியசோதனை
2. பகவத்கீதை
3. இராமாயணம்
4. ஓஷோ
5. பெண்ணின் பெருமை - திரு.வி.க
6. பாரதியாரின் கவிதைகள்
7. நெல்சன் மண்டேலா பற்றிய நூல்
8. கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல் - பெயர் நினைவில் இல்லை
9. திருக்குறள்.
10. தேம்பாவணி - வீரமாமுனிவர்

11-ஆவதா வீரப்பனின் புத்தகம் (நக்கீரன் வெளியீடு) சேர்த்துக்க சொன்னாங்க!
இந்த புத்தகங்களையெல்லாம் எங்க ஆயா படிச்சிருக்காங்களாம், உறுதிபடுத்திக்கிட்டேன்! (அவ்வ்வ்வ்)இப்போ புரியுது, வீட்டுக்கு வர்ற என் ப்ரெண்ட்ஸ்-க்கு எல்லாம் எங்க ஆயாவைத்தான் பிடிக்கும்! (Mary, are you listening??)


பெரிம்மாவின் லிஸ்ட்:
(ஆசிரியர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால், அவர் எழுதிய ஏதாவது ஒரு புத்தகம் என்று பொருள் கொள்க!)

1. பாரதியார் கவிதைகள்
2. பாரதிதாசன் கவிதைகள்
3. பெரியார்
4. Dale carnegie
5. எம்.எஸ்.உதயமூர்த்தி
6. Who moved my cheese
7. Charles douglas
8. Shakespeare's dramas
9. எஸ்.ராமகிருஷ்ணன்
10. Roots - Alex Haley
11. Anna karinina - Leo Tolystoy
12. Mother - Maxim Gorky
13. Anton chekov's short stories
14. O Henry's short stories
15. Mythili sivaraman's articles
16. Darwin -Origin of Species

என்னோட லிஸ்ட் :

ஏற்கெனவே பதிவுலகில் ஒரு முறை பட்டியல் எடுத்தபோது எழுதிய பதிவு..புத்தகக்கூட்டிலே

1. அக்னிச் சிறகுகள் - கலாம்
2. I dare - Kiran bedi
3. The Roots/ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேய்லி
4. Any book by R.K Narayan (The Guide/Financial Expert)
5. anna karenina - டால்ஸ்டாய் (Tolstoy)
6. tough times never last but tough people do - robert schuller
7. பாரதியார் கவிதைகள்
8. Works of Anton chekov
9. பெண் ஏன் அடிமையானாள்?
10. The Bible

உலகில் இருக்கும் இன்னும் உன்னதமான பல புத்தகங்களை i am yet to read. ஆனால், இதுவரை படித்ததை வைத்தே எனது இந்த பட்டியல்!

பப்புவின் லிஸ்ட் :
( இப்போதெல்லாம் இந்த புத்தகங்களை வைத்து தானாக கதைகள் சொல்லிக்கொள்கிறாள்! அதை வைத்து எனது அனுமானம், இப்படித்தான் இருக்கவேண்டுமென!!)

1. டாக்டர் பவுடர்பில்
2. கசகச பறபற
3. கோல்டிலாக்ஸ் & 3 பியர்ஸ்
4. ரேவா & மோடோ
5. Rabbits happy day
6. தூக்கம் வரவில்லை சிறுமி மாஷாவுக்கு
7. ஏதாவது ஒரு போட்டோ ஆலபம் (அம்மா & அப்பா கல்யாண ஆல்பம்/பப்புவின் முதல் பிறந்த நாள் ஆல்பம்)
8. Gada Gada Gudu Gudu the marble rolls
9. At the zoo
10.Peter Pan

இந்த பதிவுக்கு காரணமான செல்வேந்திரனுக்கு நன்றிகள்!

31 comments:

Deepa said...

நல்ல பதிவு. ஆட..வாசிக்கும் பழக்கம் உள்ள நிறைய பேர் உண்டு போல குடும்பத்தில். தலைமுறை இடைவெளி ரசிக்க வைத்தது.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

குடும்பப்புத்தகப்பட்டியல்.. நாலு தலைமுறை... நல்ல ஐடியா..:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நாலு தலைமுறைக்கும் வாசிப்பு அனுபவம் உள்ளதென்பதே ஆச்சரியம் தான்.

அதுவும் நீங்கள் பட்டியிலிட்டு வழங்கியது நன்றாக இருக்கிறது.

உங்க ஆயா கிட்ட கொஞ்சம் பேசனும் நானு. பெண்ணின் பெருமையை அறிஞ்சவங்களாச்சே....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஆயாஆஆஆஆஆஆஆஆ

நட்புடன் ஜமால் said...

நல்ல அறிமுகங்கள்

இத்தனை புத்தகங்கள் படிப்பவர் என்பது உங்கள் எழுத்துகளில் தெரிகிறது.

தீஷு said...

உங்க பெரியம்மா சொன்னது போல் எஸ்.ராமகிருஷ்ணனுடைய எழுத்துக்கள் வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டும் முல்லை. சோறு என்ற அவர் படைப்பு ஒன்று விகடனில் வந்து, அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது. அதன் பின் அவர் படைப்புகளைத் தேடி படிக்கும் பழக்கம் எனக்கு உண்டு.

அமுதா said...

நல்ல பதிவு முல்லை. உங்கள் தலைப்பும் தொகுப்பும் சுவாரசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

மூன்று தலைமுறைகளாக இருந்த பாரதியார் கவிதைகள் விரைவில் பப்புவும் கைக்கும் (4வது) வரும் என நம்புகிறேன்

கவிதா | Kavitha said...

மூன்று தலைமுறைகளாக இருந்த பாரதியார் கவிதைகள் விரைவில் பப்புவும் கைக்கும் (4வது) வரும் என நம்புகிறேன்

//

ரீப்பீட்டிக்கிறேன்... :)

கவிதா | Kavitha said...

புத்தகப்பட்டியில் தலைமுறை வாரியாக சூப்பர்... :)

தமிழ் பிரியன் said...

என்னோட தலைமுறையில் தான் பள்ளிக்கூடம் பக்கமே போய் இருக்கோம்..இனி என் பேரன் பேத்தி காலத்தில் இது மாதிரி யாராவது பதிவு போடுவார்கள் என்று நினைக்கிறேன்.

ஆயில்யன் said...

ஆச்சி டிபரெண்டா திங்க் பண்ணியிருக்கீங்கோ சூப்பரூ!

எனக்கென்னமோ ஆயா சொன்ன புக்ஸ் படிச்சுட்டு அப்படியே பெரியம்மா சொன்ன புக்ஸ் முடிச்சா போதும் அதற்கு பிறகு நீங்க சொன்ன பப்பு சொல்லியிருக்கிற மாதிரியான புக்ஸ் எல்லாம் எழுதிடலாம் நாமளே :))))) (கொஞ்சம் டெரரா யோசிச்சுருக்கேன்ல..!?)

ஆயில்யன் said...

//உங்க ஆயா கிட்ட கொஞ்சம் பேசனும் நானு. பெண்ணின் பெருமையை அறிஞ்சவங்களாச்சே....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஆயாஆஆஆஆஆஆஆஆ//


பாவம் அமித்து அம்மாவுக்கு பாதி கமெண்ட்லயே ஆபிஸ் ஞாபகம் வந்திருச்சு போல!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
//உங்க ஆயா கிட்ட கொஞ்சம் பேசனும் நானு. பெண்ணின் பெருமையை அறிஞ்சவங்களாச்சே....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஆயாஆஆஆஆஆஆஆஆ//


பாவம் அமித்து அம்மாவுக்கு பாதி கமெண்ட்லயே ஆபிஸ் ஞாபகம் வந்திருச்சு போல!

ஆமாம் பாஸ்
அதுவும் உங்க முறுக்கும், ஓலை பக்கோடாவும் சாப்பிட்டதுல கொஞ்சம் ஜாஸ்தியாவே ஆகிப்போச்சு.

என்னை ஆபிஸ்ல தண்ணி தெளிச்சு எழுப்பினாங்கன்னா பார்த்துக்கோங்க!!!!!!!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழ் பிரியன் said...
என்னோட தலைமுறையில் தான் பள்ளிக்கூடம் பக்கமே போய் இருக்கோம்..இனி என் பேரன் பேத்தி காலத்தில் இது மாதிரி யாராவது பதிவு போடுவார்கள் என்று நினைக்கிறேன்.


என்னுடைய கருத்தும் இதே.

அபி அப்பா said...

என் தாத்தாவின் அப்பா இசை சாஸ்திரீட சங்கீதம் பத்தி3 புத்தகம் எழுதி இப்போது அது அண்ணாமலை பலகலைகழகத்திலேயும் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்ற இசை கல்லூரியிலும் பாடமாக இருக்கின்றது. அதன் காரணமாக என் வீட்டில் நூற்றுகனக்கான இசை சம்மந்தபட்ட புத்தக்கம் இருந்தது. ஆனா இசை ஆராய்ச்சியாயர் திரு, பாண்டிசேரி டாக்டர் பி. எம் சுந்தரம் அவர்களுக்கு நான் எல்லாத்தையும் கொடுத்துட்டேன்.

அதன் பின்னே என் அப்பா சித்தப்பா எல்லாரும் திமுக சார்பு ஆகையால் பாரதிதாசன் அண்ணா புத்தகங்கள் மட்டுமே எங்கள் வீட்டில் நிரைந்து இருந்தன. பெரியார் புத்தகம் எல்லாம் ஒரு முறை அப்பா பாரதிதாசனை பெரியார் மதிக்காமல் அண்ணாவிடம் சண்டை போட்டதால் போட்டு கொளுத்தி விட்டாங்க.

ஆனா அதுக்கு பின்ன எனக்கு கிடைச்ச புத்தகங்கள் என் வள்ளியம்மை அத்தை(அவர்களுக்கு பெயர் வைத்தது மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையார்(என் பாட்டி தான்) - தில்லையாடி வள்ள்ளியம்மை நியாபகமாக) கொடுத்த புத்தகங்கள் எல்லாம் இன்றும் அபிராமிக்கு நான் கொடுத்த சொத்துகள்!

அட புத்தகங்கள் பத்தி சொன்னா சொல்லிகிட்டே போகலாம். என் வீட்டில் இப்போதைக்கு ஒரு 800 பழைய புத்தகம் இருக்கு! அரிய க்கிடைக்காத புத்தகங்கள் எல்லாம்!!

ச.முத்துவேல் said...

அப்படியே உங்க வீட்டுல நடந்த நிகழ்வை, கற்பனையில ஓட்டிப் பார்க்கிறேன்.இப்படியொரு யோசனையும்,அதைச் செய்து பாத்தவிதமும் நல்லாஇருக்கு. நாலு தலைமுறையினரும் படிப்பாளிகளாய் (இலக்கிய)இருப்பது, பொறாமை(சும்மா)ப்பட வைக்குது.

சந்தனமுல்லை said...

நன்றி தீபா! ஆமா, வீட்டிலே எல்லாரும் ஏதாவது படிச்சிக்கிட்டே இருப்பாங்க..அதனாலேயே எனக்கும் படிக்கற பழக்கம் வந்தது!

நன்றி முத்து! ஆமா..ஒரு சண்டே மாலை..இப்படியாக போச்சு!

நன்றி அமித்து அம்மா...தாராளமா வந்து பேசுங்க..என்ன கஷ்டம்..பெண்ணின் பெருமையில்!!

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்...ஆகா..இது ஆப்பா?!

நன்றி தீஷூ..ஆமா..நானும் படிச்சிருக்கேன்..அப்புறம் துணையெழுத்தும்!

நன்றி அமுதா..நீங்க உங்க லிஸ்டை போடுங்களேன்!

நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் ..கண்டிப்பாக..பாரதியார் கவிதைகள் தலைமுறை தாண்டி நிற்குமே!!

சந்தனமுல்லை said...

நன்றி கவிதா..:-)..இதெல்லாம் சும்மா ஒரு டைம்பாஸ்!

நன்றி தமிழ்பிரியன் அண்ணா..கண்டிப்பாக நிறைவேறும்! புத்தகங்கள் என்ன அண்ணா..வாழ்க்கையை விடவா புத்தகங்கள்..சொல்லுங்கள்!!

நன்றி ஆயில்ஸ் அண்ணா..ஆகா..இதுவும் நல்லா இருக்கே..என் புத்தகத்த படிக்க நீங்க எல்லாரும் ரெடியா?!!

சந்தனமுல்லை said...

நன்றி அபிஅப்பா..சுவாரசியமான பின்னூட்டம்! புத்தகங்கள் என்றவுடன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்கள் போல!

நன்றி ச.முத்துவேல்..இந்த வார்த்தைகளெல்லாம் அதிகம்ங்க...எல்லோரும் டீச்சர்ஸ்.அதான் படி படின்னு படிக்கறாங்க..:-)

குடுகுடுப்பை said...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நாலு தலைமுறைக்கும் வாசிப்பு அனுபவம் உள்ளதென்பதே ஆச்சரியம் தான்.//

ஆமாங்க.

என்னோட வீட்லேயும் எல்லாரும் நிறைய படிப்பாங்க, என்னோட வாசித்தல் அனுபவம் ஒரு பதிவா போட்டேன் உலகமே சிரிச்சது.

எனக்கு ஒரு சந்தேகம் என்னோட மொக்கையெல்லாம் படிக்கறீங்களே நீங்க ரொம்ப நல்லவரா இருப்பீங்க போல. அதே சமயத்தில் நீங்கள் நிஜமாகவே பாராட்டும் அளவுக்கும் பதிவும எழுதியுள்ளதில் எனக்கு மகிழ்ச்சி.

நசரேயன் said...

எங்க குடுமத்திலே நான் ஒருத்தான் மழைக்கு பள்ளி ௬டம் ஒதுங்கி இருக்கேன், மத்தவங்களுக்கு எம்.ஜி.ஆர் படம் தான் புத்தகம் படிப்பு எல்லாம்

JP said...

இன்று தான் உங்களோட வலைபூவ முதன் முதல்ல படிச்சேன். ரொம்ப நல்ல எழுதுறீங்க. கிட்டதட்ட எல்லா பதிவையும் படிச்சிட்டேன்(ரொம்ப வெட்டியா அலுவலகுதுல இருக்கேன்னு எல்லாம் உண்மைய நினைக்க கூடாது :) )....
ஜெயகந்தனோட புத்தகாம் இல்லாதது கொஞ்சம் ஆச்சர்யம் தான்...

இப்படிக்கு
ஜெய்

Divyapriya said...

romba cube padhivu mullai :) enakku pappuvoda list thaan pidichudhu :)

பிரேம்குமார் said...

நாலு தலைமுறையும் வாசிப்பில் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது :)

ஆகாய நதி said...

தலைமுறை இடைவெளிகளில் புத்தகங்களின் வரிசையும் வேறுபாடும் சுவாரசியம். புத்தகங்கள் மீது எப்போதுமே தீராக் காதல்.... இந்த பதிவினை படிக்கும் போதே மகிழ்ச்சியாய் இருக்கிறது! :)

ராஜா said...

//இந்த பதிவுக்கு காரணமான செல்வேந்திரனுக்கு நன்றிகள்!//

நான்கு தலைமுறை பெண்களின் புத்தக ரசனையை வெளில கொண்டு வந்ததுக்கு நாங்களும் செல்வேந்திரனுக்கு நன்றி சொல்லிக்கிறோம் :-)

கைப்புள்ள said...

//6. தூக்கம் வரவில்லை சிறுமி மாஷாவுக்கு//

இது ரஷிய புத்தகம் தானே? சிறு வயதில் முன்னாள் சோவியத் யூனியனில் வெளிவந்த புத்தகங்களின் தமிழ் பதிப்பை New Century Book House வெளியிட்டு படித்திருக்கிறேன்.

உங்க லிஸ்டுல இருக்கற பெரும்பாலான புத்தகங்களை நான் படித்ததில்லை. கற்றது கைம்மண்ணளவு தான்.

சந்தனமுல்லை said...

நன்றி குடுகுடுப்பையார்...
//எனக்கு ஒரு சந்தேகம் என்னோட மொக்கையெல்லாம் படிக்கறீங்களே நீங்க ரொம்ப நல்லவரா இருப்பீங்க போல. அதே சமயத்தில் நீங்கள் நிஜமாகவே பாராட்டும் அளவுக்கும் பதிவும எழுதியுள்ளதில் எனக்கு மகிழ்ச்சி.// இது யாருக்குச் சொன்னீங்க...அமித்து அம்மாவுக்கா இல்ல எனக்கா?!:-) ஏன் இவ்வளவு தன்னடக்கம் திடீர்ன்னு!

நன்றி நசரேயன்....ஹ்ம்ம் இந்த காலத்து படங்களை நினைச்சா!! அவ்வ்வ்!

நன்றி JP..ஹ்ம்ம் தெரியலை ஏன்னு எனக்கும்!

நன்றி திவ்யா...ஹஹ்ஹா..

சந்தனமுல்லை said...

நன்றி பிரேம்!

நன்றி ஆகாயநதி..நீங்களும் பதிவிடலாமே!

நன்றி ராஜா!

சந்தனமுல்லை said...

நன்றி கைப்ஸ் அண்ணா..ஹை...நீங்களும் படிச்சிருக்கீங்களா..சூப்பர்! என்கிட்டே நிறைய ராதுகா, நியு செஞ்சுரி புத்தகங்கள் இருந்தது..இப்போ, பப்புக்கு நான் என்னொட புத்தகங்களை கொடுத்துட்டேன்..http://sandanamullai.blogspot.com/2008/10/blog-post_07.html.