Saturday, April 04, 2009

பப்பு சீன்ஸ்

அழுவதா சிரிப்பதா - சீன் 1

அலுவலகத்தில் இருக்கும்போது, வீட்டிற்கு இரண்டு முறை தொலைபேசி விடுவதுண்டு. எடுப்பது பெரும்பாலும் பப்புவாகத்தான் இருக்கும்! அன்றும் அப்படிதான்...பப்புதான் எடுத்தாள்.

”என்ன பண்றே, பப்பு?” - வழக்கமான கேள்விதான்! ”சாப்பிட்டியா” என்று ஆரம்பிக்கும் அல்லது ”என்ன பண்றே, இப்போ” என்றுதான் தொடங்கும்! ஆனால் பதில்தான் வித்தியாசமா இருக்கும்!

”நான் வீடு தொடச்சிக்கிட்டு இருக்கேன்!”

”என்னது?” - நான்!

பதிலில்லை!

....போனை வைத்துவிட்டு சென்றுவிட்டாள் போல.

”வீடு ஃபுல்லா தண்ணியா ஆக்கி வைச்சிருக்கு, கேட்டா தொடக்கிறேன்னு சொல்லுதும்மா” - ஆயா!

சரி, நீங்க எங்கேயும் நடக்காதீங்க, நாங்க வந்தப்புறம் பார்த்துக்கலாம்!

சிலசமயங்களில் மாப் செய்ய விரும்புவாள்...கொடுப்போம்..ஆசை தீர்ந்ததும் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுவாள். இந்த மாதிரி நாம் செய்வதை அபப்டியே செய்ய விரும்புவது குழந்தைகள் இயல்பு என்றாலும், தண்ணீரில் விளையாடுவது அதுவும்
பெரியவர்கள் யாரும் அருகிலில்லாதபோது விளையாடுவது கண்டிக்கத்தக்கதே!

ஹால் முழுவதும் ஈரம்,தண்ணீர் வேறு ஆங்காங்கே!

“அதை எதுவும் திட்டிடாதே!” - ஆயாதான்!

துடைத்துவிட்டு ஃபேனை போட்டுக் காயவிட்டப்பிறகு,பொறுமையாகக் கேட்டேன்!

”காலையிலேதான பப்பு xxx ஆண்ட்டி தொடச்சாங்க? ஏன் நீ இப்போ தொடச்சே?! ” ரொம்பப் பொறுமையாய், எல்லாக் கடுப்பையும் விழுங்கியபடி!

“ஆதி இங்கே உச்சா போய்ட்டான், அதான் தொடச்சேன்!”

ஆதி அவளுடைய பொம்மைகளில் ஒன்று!

அவள் சமயங்களில் ஈரம் செய்துவிடும்போது நாங்கள் செய்வதுதான்! பள்ளியிலும் ஒருவேளை பார்த்திருப்பாளாயிருக்கும்!

யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!!

31 comments:

நட்புடன் ஜமால் said...

\\ரொம்பப் பொறுமையாய், எல்லாக் கடுப்பையும் விழுங்கியபடி!\\

கொஞ்சம் கஷ்டம்தான்


\\யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!!\\

உண்மையிலே வியப்புதான்.

ராமலக்ஷ்மி said...

சர்ர்ரியான காரணம்:)))!

ஆயில்யன் said...

//பெரியவர்கள் யாரும் அருகிலில்லாதபோது விளையாடுவது கண்டிக்கத்தக்கதே!//

ஆமாம்...! அப்படியே ஆச்சியும் அவுங்க அம்மா பேச்சை கேட்டு தண்ணி பக்கமே போனது கிடையாது பாருங்க...!

தொடரும் கண்டிப்புக்களுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்!

பப்பு பேரவை
தோஹா - கத்தார்

ஆயில்யன் said...

//யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!!//

ஹை ஆச்சி - இது புது டிரெண்டாட்டம் தெரியுது ஜூப்பரே....!

தமிழ் பிரியன் said...

எல்லா குழந்தைகளுக்கும் தண்ணீர் என்றால் கொள்ளைப் பிரியம் தானே.. :)

பிரேம்குமார் said...

//யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!! //

பப்பு உக்காந்து யோசிப்பாங்க போல :)

Deepa said...

//ஆதி இங்கே உச்சா போய்ட்டான், அதான் தொடச்சேன்!”

ஆதி அவளுடைய பொம்மைகளில் ஒன்று! //


சே! புள்ள எவ்ளோ பொறுப்பா இருக்கு? அதை போய்த் திட்டுறீங்களே!

சமத்துக்குட்டி! குழந்தைகளின் கற்பனைக்கு எல்லையே இல்லை.

வித்யா said...

தண்ணீரில் விளையாட காரணம்:)
ஜூனியர் எப்போவாவது ஹாலில் உச்சா போய்ட்டா பக்கத்தில் எந்த துணி இருந்தாலும் அதன் மேல் போட்டு துடைப்பான். Including mu dupattaa:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அழுவதா சிரிப்பதா .. நல்ல கேள்வி ..
இப்படி ஒரு காரணம் இருக்கும்ன்னு யாருமே யோசிச்சிருக்கமுடியாது.. பப்பு தி க்ரேட் ன்னு நிரூபிக்கிறா...

வல்லிசிம்ஹன் said...

பப்பு அம்மாவுக்கு ரொம்பப் பொறுமை. ஒத்துக்கறோம்.
பப்புமா!! ஆச்சி நடக்காத இடத்தில தண்ணி கொட்டுடா கண்ணா:)

நிலாவும் அம்மாவும் said...

“ஆதி இங்கே உச்சா போய்ட்டான், அதான் தொடச்சேன்!”
////////

ஆதிக்கு potty-train பண்ணனும் போல இருக்கே

ஜீவன் said...

;;))

ஆகாய நதி said...

//
“ஆதி இங்கே உச்சா போய்ட்டான், அதான் தொடச்சேன்!”
//

இது தான் குழந்தைகளோட விரிந்த உலகம்.... பொம்மைகளுக்கும் உயிர் கொடுக்கும் பண்பு குழந்தையாய் இருக்கும் வரை நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது :) ஆனாலும் சேட்டைக்கு அதை காரணமாக்கிய பப்பு மேடம் ஒரு அதி புத்திசாலி! :)

குடுகுடுப்பை said...

“ஆதி இங்கே உச்சா போய்ட்டான், அதான் தொடச்சேன்!”//

பொறுப்பான குழந்தை.

கானா பிரபா said...

//பெரியவர்கள் யாரும் அருகிலில்லாதபோது விளையாடுவது கண்டிக்கத்தக்கதே!//

ஆமாம்...! அப்படியே ஆச்சியும் அவுங்க அம்மா பேச்சை கேட்டு தண்ணி பக்கமே போனது கிடையாது பாருங்க...!

தொடரும் கண்டிப்புக்களுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்!

பப்பு பேரவை
தோஹா - கத்தார்//

கண்டனங்களை வழிமொழிகிறோம்

பாட்டி பேரவை
சிட்னி

அமிர்தவர்ஷினி அம்மா said...

யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!!

ரொம்பவே ஆச்சரியப்பட வைக்கிறது, பப்புவோட பதிலும், அவளின் பொறுப்பான !!!! செயலும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எங்க வீட்டுக்குட்டி அதுக்கு மருந்து கொடுத்தவுடன் குடித்து முடித்துவிட்டு, கடமை தவறாமல் வீட்டில் இருக்கும் கரடி பொம்மைக்கும் கொடுக்கும்.....

முன்னெல்லாம் வெறும் பாலாடைய கொடுத்தா ஓக்கே, இப்ப அந்த பாலாடையில் தண்ணீர் இருக்கவேண்டும், அப்பதான் மேடம் அத மருந்துன்னு அட்லீஸ்ட் நம்புவாங்க.............

அமுதா said...

:-))

எம்.எம்.அப்துல்லா said...

//யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!! /


:))

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்,ராமலஷ்மி!

நன்றி ஆயில்ஸ்..எப்போவும் என்னையே கண்டிக்கறீங்களே..உங்களையும் பப்புவையும் தான் கண்டிக்கனும் போலிருக்கே! அப்புறம் இந்த டிரெண்டில் இனும் ஒரு பதிவு இருக்கு! :-)

நன்றி தமிழ்பிரியன்...அப்ராரும் அப்படித்தானோ!!

சந்தனமுல்லை said...

நன்றி பிரேம்குமார்...பொழில் சீக்கிரம் வந்து யோசிக்கட்டும்! ;-)

நன்றி தீபா..ஆகா..நீங்களும் சேர்ந்துட்டீங்களா..சப்போர்ட் பண்றதுக்கு! :-)

நன்றி வித்யா..ஹஹ்ஹா..

நன்றி முத்துலெட்சுமி!

சந்தனமுல்லை said...

நன்றி வல்லியம்மா..ஆகா..இது நல்லாருக்கே! :-)

நன்றி பொன்னாத்தா...இப்படி ஒண்ணு இருக்கோ??ஹ்ம்ம்..:-)

நன்றி ஜீவன்!

நன்றி ஆகாயநதி..பொழில் நடக்க ஆரம்பிக்கட்டும்..;-)

சந்தனமுல்லை said...

நன்றி பெரிய பாண்டி..ஆரம்பிச்சுட்டீங்களா?!! அவ்வ்வ்வ்!

நன்றி அமித்து அம்மா..இப்படித்தான் ஆரம்பிக்கும்..:-))..அப்புறம், சாப்பாடு, தண்ணி, குளிக்க வைக்கறேன்..ன்னு வந்து முடியும்! என்சாய்!

நன்றி அமுதா,அப்துல்லா!

தீஷு said...

\\யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!!\\

அவுங்களுடைய செயல்களுக்கு ஒரு காரணமிருக்கிறது. நமக்கு தான் வெளிப்படையாக புரிய மாட்டேங்குது.

ராஜா said...

//“ஆதி இங்கே உச்சா போய்ட்டான், அதான் தொடச்சேன்!”//

இத படிக்கிறப்போ உங்களோட பதிவில் இருக்கும்
ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்... தான் நினைவுக்கு வருது. pappu is sooooooooooooooooo cute....

Sasirekha Ramachandran said...

ஹஹ்ஹா..........எனக்கும் இப்டி ஒரு மோசமா............ந அனுபவம் உண்டு.அதியாப் இன்னலில் எழுதுகிறேன்.

Divyapriya said...

//ஆதி அவளுடைய பொம்மைகளில் ஒன்று!//

OMG…ROTFL :D

நசரேயன் said...

சிரிக்க வேண்டிய சீன்

♥ தூயா ♥ Thooya ♥ said...

kikikikiki

கைப்புள்ள said...

//யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!!//

ஹி...ஹி...நல்ல காரணம் தான்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

அவளுடைய குறும்பையும் மீறி அவளுக்கு இப்பவே ஒரு பொறுப்புணர்ச்சி இருப்பதை கவனித்தீர்களா அக்கா? :-)

தைரியமாக பப்புவுக்கு தம்பி தங்கை கொடுக்கலாம். கண்டிப்பா நல்லபடியா பார்த்துப்பா. :-)