Monday, April 13, 2009

அண்ணன் என்னடா தம்பி என்னடா?!

நான் ஒரு வீட்டுப் பறவை. அவன் வீட்டில் இருந்ததாக சரித்திரம் கிடையாது.எனது அலமாரியின் ராக்கு-களை நான் சுத்தமாக வைத்துக் கொள்வேன்(அப்போது!!). அவனுடையது அப்படியே தலைகீழ். நான் புத்தகப்புழு.அவன் புத்தகங்களை புரட்டக் கூட மாட்டான். கைகளில் மண் படிய விரும்பாதவள் நான். தெருவில் இருக்கும் நாய்குட்டிகளை எடுத்துவந்து கொட்டாங்குச்சியில் பால் ஊற்றச் சொல்வான் அவன். அவன் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட விரும்பினான். பிரிட்ஜ்-ல் இருந்த ஐஸ்கட்டிகளையும், கிண்ணங்களில் நீரூற்றி ஐஸ் செய்தும் பலகணியில் போட்டு விளையாட வைத்தது் நான். திட்டு வாங்கியதும்தான்! சதுரங்கத்தில் அவனிடம் தோற்கும்போது அவனுக்கு வயது ஆறு! அதன்பின் சதுரங்கம் ஆடுவதையே நிறுத்தியவள் நான்! பின் அவன் சதுரங்கத்தில் முழுமூச்சுடன். நான் பப்ளிக் எக்சாம், ட்யூசன், எண்ட்ரன்ஸ்! அவன் செஸ் அசோசியேஷன்,IM,arbitrator,VIT என்றும், நான் கல்லூரி,வேலை என்றும் பாதைகள் பிரிந்தன.

அவன் என் தம்பி.

பலமுறை, தம்பிக்குப் பதில் எனக்கு ஒரு அண்ணன் இருந்திருக்க்கூடாதா என ஏங்கியிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பலருக்கு அண்ணாக்கள் அல்லது தங்கைகள். தம்பிகள் இருந்த ஒருசிலரும் ”தம்பியா, ஒரே சண்டை” என்றுதான் அனுபவப்பட்டிருந்தனர். அண்ணன்கள் வாய்க்கப் பெற்ற பலரும் ”அண்ணா வரைஞ்சது, அண்ணா சைக்கிள்-ல வந்தேன்” என்று வெறுப்பேற்றியிருந்ததும் காரணமாக இருக்கலாம்!

ஒரு கோடை விடுமுறை.பரணில் இருக்கும் சோடா மேக்கர் உபயோகத்துக்கு வந்திருந்தது.
அதை இயக்கும் அதிகாரம் வீட்டில் எனக்கு மட்டுமே . விருந்தினர்கள் வந்தால், மிகப் பெருமையாக இயக்கி பெப்சி அல்லது லெமன் ஃப்ளேவர் போட்டு தரப்படும். மற்றபடி, அதன் முழு உபயோகம் எனக்கும் அவனுக்கு மட்டுமே! சோடா மேக்கரோடு மூன்று அல்லது நான்கு கண்ணாடி பாட்டில்கள். கண்ணாடி பாட்டில்களானதால் அதனை கவனத்துடன் கையாளும் அதிகாரம் எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கலாம், மேலும் “பெரிய பெண்” எனும் அங்கீகாரம்.

ஊரிலிருந்து கஸின்ஸ். விடுமுறைக்கு வந்திருந்தார்கள். காலை, மாலை, மதியம் எல்லாம் சோடா மயம். அதிலும், யார் நிறைய கேஸோடு குடிப்பது என்றும் போட்டி! அதுவும் கேஸ் அதிகமாக பாட்டில் தண்ணீரில் நிரப்பி உடனே பெப்சி ஃப்ளேவரை ஊற்றினால் நுரை பொங்கும். விளம்பரத்தில் வருவதுபோல ஷேக் செய்து, அப்படியே குடித்து என்று ஒரே கும்மாளம்.

இன்னும் கேஸ், இன்னும் கேஸ், என்று எல்லாரும் கேட்டுக்கொண்டதில், கொஞ்சம் அதிகமாக அழுத்திவிட்டேன்.

”பட்” என்று உள்ளே ஒரு சத்தம்.

திறந்துப் பார்த்ததில், பாட்டில் துண்டுகளாக.

சத்தமில்லாமல், சுத்தம் செய்துவிட்டு மாடியில் அடுத்த விளையாட்டு. நடந்த எதுவும்..என்ன போட்டி, யார் உடைத்தது என்று எதுவும் குட்டிக்குத் தெரியாது. அவன் அப்போது வீட்டில் இல்லை...

ஊகித்திருப்பீர்களே...அதேதான்...பாட்டில் உடைந்தது ஆயாவிற்கும் பெரிம்மாவிற்கும் தெரிந்து விட்டது, நான் அசந்த ஏதோவொரு கணத்தில் !

“எனக்குத் தெரியாது, அவன் தான் உடைச்சிருப்பான்”!- மிக சுலபமாக வார்த்தைகள் என்னிடமிருந்து!

இதற்கு முன்பாக இப்படியெல்லாம் நிகழ்ந்துதான் இருக்கிறது. அவன் உடைத்ததெல்லாம் நானென்றும், நான் உடைத்ததையெல்ல்லாம் அவனென்றும் என்று மாறி மாறி கோள் சொல்லிக் கொண்டது!ஆனால் அப்போது அவன் செய்ததுதான் மிக ஆச்சர்யமானது.

ஒன்றும் சொல்லாமல், ஆமாமென்று ஒப்புக்கொண்டுவிட்டு திட்டு வாங்கிக்கொண்டான். (வீட்டில் ஒரு பழக்கம், எங்களை மற்றவர்கள் முன்னால் திட்ட மாட்டார்கள். அப்படி நடப்பதென்றால் அது தனியாக, எங்கள் இருவரை மட்டும் வைத்துத்தான் நடக்கும்!திட்டுவது என்பது அட்வைஸ் என்று பொருள் கொள்க.)சண்டை போட்டுக்கொள்வோமென்று நினைத்த எனக்கு, அவனது இந்த gesture அதிர்ச்சி. அதன்பின், நாங்கள் அதைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை.

அந்த நிமிடம் அவன் எனக்கு அண்ணனைப் போல நடந்துக் கொண்டான், மிகப் பெருந்தன்மையாக!

என் தம்பியின் மேல் பாசமாயிருக்கக் கற்றுக்கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று! As years passed by, தம்பி இருப்பதும் மிகவும் fun/ஜாலி என்றுணர்ந்தேன்.


Note to my brother:

குட்டி, அந்த பாட்டிலை நாந்தான்டா உடைச்சேன். :-) உன்னை ஏன் மாட்டிவிட்டேன்னு இப்போ எனக்குத் ஞாபகமில்லை(sibling rivalry)!! இப்போவும் நாம திட்டு (அட்வைஸ் அட்வைஸ் அட்வைஸ்!!) வாங்கறோம், ஆனா அதெல்லாம் நாம் ஒன்னா சேர்ந்து செஞ்ச காரியங்களுக்காக இல்லை!

61 comments:

ஆயில்யன் said...

சேச்சி எந்தா ஃபீலிங்குஸு ???

நான் கண் கலங்கிபோயி....!

ஆயில்யன் said...

//அவன் என் தம்பி. //

இவன் எண்ட அஞ்சனாக்கும்!!!

ஆயில்யன் said...

//பரணில் இருக்கும் சோடா மேக்கர் உபயோகத்துக்கு வந்திருந்தது.
அதை இயக்கும் அதிகாரம் வீட்டில் எனக்கு மட்டுமே //

எண்ட அம்மே இ சேச்சி ஹவுஸில் வல்லிய ஸக்தி கொண்ட ஆளாக்கும் :)

கானா பிரபா said...

எந்தா சேச்சி இது, அனியன் கூட ஓர்மம் கண்டு?

Subbu said...

"அண்ணன் என்னடா தம்பி என்னடா?!"

ஆயில்யன் said...

இப்புடு மா கமெண்ட்டு ரீலிசு செய்யண்டீ

ராஜா said...

//உன்னை ஏன் மாட்டிவிட்டேன்னு இப்போ எனக்குத் ஞாபகமில்லை//

ஹ்ம்ம் என்னோட ஒரு தங்கை கூட 4 வருஷம் பேசாம இருந்தேன், ஏன்னு ஞாபகம் இல்லை. ஆனா இப்போ ஒரு நாள் அப்படி இருக்க சொன்னாலும் முடியாது.

//அவன் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட விரும்பினான். பிரிட்ஜ்-ல் இருந்த ஐஸ்கட்டிகளையும், கிண்ணங்களில் நீரூற்றி ஐஸ் செய்தும் பலகணியில் போட்டு விளையாட வைத்தது் நான்.//

பப்பு ஏன் எக்ஸ்ட்ரா அறிவோட பல வேலைகளைச் செய்றான்னு இப்போ தான் புரியுது. குட்டி பதினாறடி :-).

மணிநரேன் said...

//ஒன்றும் சொல்லாமல், ஆமாமென்று ஒப்புக்கொண்டுவிட்டு திட்டு வாங்கிக்கொண்டான். //

விட்டுக்கொடுத்து போகும்போது பெரும்பாலும் அந்த உறவு வலுவடைகிறது.அதுவும் சகோதர-சகோதரி எனில் சொல்லவேவேண்டாம்.

ஆயில்யன் said...

டிஸ்கி பின்னூட்டம் !

பாஸ் நாங்க பதிவு பத்தி ஒண்ணுமே கமெண்ட் போடலைன்னு ஒண்ணும் ஃபீல் பண்ணாதீங்கோ நாளைக்கு சித்திரை விஷு கை நீட்டம் :))

நாங்க கொஞ்சம் தெறக்காணு!

விஷு ஆஷாம்ஷம்ங்கள் :)))

ஆயில்யன் said...

ஹம்!

தமிழ் மே கமெண்ட் நய் டாலேகா!

கானா பிரபா said...

யோ சின்னப்பாண்டி

நீர் விட்டா பாரதவிலாஸ் படம் எடுத்திடுவீர் போல

ச.முத்துவேல் said...

என் அக்காவால் என் மண்டையுடைந்து தையலெல்லாம் போட்டிருக்கிறேன். (தையலைப் போற்றுவோம்)அப்புறம் எப்படியோ ராசியாயிட்டோம்.
மலரும் நினைவுகளை கொண்டுவைத்துவிட்டது, பதிவு .

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
யோ சின்னப்பாண்டி

நீர் விட்டா பாரதவிலாஸ் படம் எடுத்திடுவீர் போல

6:15 PM///

ஹேய் மேன்!

வாட் யூ ஆர் டாக்கிங்க்
இஸ் திஸ் போஸ்ட் ஃபுல் ஃபீலிங்க்ய்யா ஃபீலிங்க்ஸ்

6 யூ நோ 6 நாட்

வல்லிசிம்ஹன் said...

முல்லை,
தம்பிக்கும் கல்யாணமாகிவிட்டதா:)

பப்புவுக்கு தம்பி வேண்டாமா:)
புது வருட வாழ்த்துகள்மா.

ஸ்ரீமதி said...

இப்போ என்ன பண்ணனும்?? :((

ராமலக்ஷ்மி said...

ஆயில்யன் அடிக்கடி உபயோகிக்கும் ‘தங்கச்சியக்கா’ பதத்துக்கு முழு அர்த்தம் இப்போதுதான் புரிந்தது. உங்க தம்பி ஒரு ‘தம்பியண்ணா’:)!

KVR said...

//நான் கண் கலங்கிபோயி....!//

இது எந்த ஊரு மலையாளம்? இப்படி மலையாளம் பேசினா நான் சென்னைத்தமிழ்ல ஆரம்பிச்சிடுவேன்.

ஆயில்யன் said...

//KVR said...
//நான் கண் கலங்கிபோயி....!//

இது எந்த ஊரு மலையாளம்? இப்படி மலையாளம் பேசினா நான் சென்னைத்தமிழ்ல ஆரம்பிச்சிடுவேன்.

6:42 PM///


ஆ....!

இஜ்க்காங்....!

இது எங்கட நாட்டு தமிழ்லையாளம் :)

Divyapriya said...

really really cute post mullai :))

ஆயில்யன் said...

//வல்லிசிம்ஹன் said...
முல்லை,
தம்பிக்கும் கல்யாணமாகிவிட்டதா:)

பப்புவுக்கு தம்பி வேண்டாமா:)
புது வருட வாழ்த்துகள்மா//


பப்புக்கு ஒரு அப்பு!

தமிழன்-கறுப்பி... said...

நானும்தான் எங்க வீட்டுல
ஒரே ஒரு தம்பி..!
அதான் இப்படி தனியா வந்து மாட்டினதுல ரொம்ப கஷ்டப்படறேன்.

தமிழன்-கறுப்பி... said...

இந்த ரெண்டு சேட்டனுங்கள் தொல்லை தாங்க முடியலை முல்லை...

;))

KVR said...

//இது எங்கட நாட்டு தமிழ்லையாளம் :)//

சம்சாரிக்கு சாரே சம்சாரிக்கு. விஷு ஆஷாம்ஸம்கள்.

ஆயில்யன் said...

//KVR said...
//இது எங்கட நாட்டு தமிழ்லையாளம் :)//

சம்சாரிக்கு சாரே சம்சாரிக்கு. விஷு ஆஷாம்ஸம்கள்.

6:51 PM//

ஞான் நன்றி பறையும் சாரே :)))

ஆகாய நதி said...

ஹூம்... இப்படியெல்லாம் பதிவு எழுதுறீங்களே! என்ன மாறி அண்ணன் தம்பி இல்லாதவங்க கண் கலங்குது...

சென்ஷி said...

:-)

ஆயில்யன் said...

//தமிழன்-கறுப்பி... said...
நானும்தான் எங்க வீட்டுல
ஒரே ஒரு தம்பி..!
அதான் இப்படி தனியா வந்து மாட்டினதுல ரொம்ப கஷ்டப்படறேன்.

6:50 PM//


டோண்ட் ஃபீல்யா

வீ 6 ஹியர் லைக் யுவர் பிரதர்ஸ்!

எந்தா சேட்டா நாம் பறைஞ்சது ஸரிதானே!

கோபிநாத் said...

கலக்கல் பதிவு ;))) என்னை என்னோட அந்த சின்னவயசுக்கு கூட்டிக்கிட்டு போயிடுச்சி ;))

ம்ம்ம்..எத்தனை எத்தனை சண்டை..!!!!

\\அந்த நிமிடம் அவன் எனக்கு அண்ணனைப் போல நடந்துக் கொண்டான், மிகப் பெருந்தன்மையாக! \\

இந்த மாதிரி எத்தனை பெருந்தன்மை காரியங்கள் செய்திருக்கேன்.;))

நன்றி ;)

பிரேம்குமார் said...

//அவன் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட விரும்பினான். பிரிட்ஜ்-ல் இருந்த ஐஸ்கட்டிகளையும், கிண்ணங்களில் நீரூற்றி ஐஸ் செய்தும் பலகணியில் போட்டு விளையாட வைத்தது் நான். திட்டு வாங்கியதும்தான்! //

எனக்கு ஒரு அக்கா இருந்திருக்கவில்லையேன்னு ஏங்க வச்சிட்டீங்க முல்லை

//நான் கண் கலங்கிபோயி....!//
அதே அதே....

அன்புடன் அருணா said...

Feelings of bro ...ரொம்ப உணர்வு பூர்வமானதா இருந்துதும்மா!!! எனக்கு ரெண்டு தம்பிங்க!!!!புரியுது....
அன்புடன் அருணா

குடுகுடுப்பை said...

குட்டி, அந்த பாட்டிலை நாந்தான்டா உடைச்சேன். :-) உன்னை ஏன் மாட்டிவிட்டேன்னு இப்போ எனக்குத் ஞாபகமில்லை(sibling rivalry)!! இப்போவும் நாம திட்டு (அட்வைஸ் அட்வைஸ் அட்வைஸ்!!) வாங்கறோம், ஆனா அதெல்லாம் நாம் ஒன்னா சேர்ந்து செஞ்ச காரியங்களுக்காக இல்லை!//

உங்களுக்கு யாரு அட்வைஸ் பண்றது..நம்ப முடியலேயே,,

அப்புரம் இதே போல ஒரு பதிவ பப்பு சீக்கிரம் போடுறதுக்கு வாழ்த்துக்கள்

அபி அப்பா said...

முல்லை! தலைப்பை பார்த்துவிட்டு என் பதிவுக்கு எதிர் பதிவா இருக்குமோ என நினைத்து வந்தேன். ஆனா செம திட்டு திட்டிவிட்டீகள் (அட்வைஸ் அட்வைஸ் அட்வைஸ்). சின்ன வயசு மாதிரி ஏண்டா இன்னமும் இருக்கீங்க ஒத்துமையா இருக்க வேண்டியது தானேன்னு சொல்வது போல இருக்கு!

நாமக்கல் சிபி said...

//அண்ணன் என்னடா தம்பி என்னடா?!//


எதிர்பார்த்த தலைப்புதான்!

மாதவராஜ் said...

எழுதுவதற்கு வார்த்தைகளின்றி இருக்கிறேன். மிகச் சாதாரணமாக நம் வீடுகளில் நடக்கும் ஒரு நிகழ்வுதான். ஞாபக அடுக்குகளிருந்து அதை எடுத்து விரித்த உண்மையில் பழைய ஞாபகங்கள் என்னை புரட்டிப்போட்டு இருக்கிறது. என் தம்பியோடு ஏற்பட்ட தருணங்கள் வளைய வருகின்றன. அவனைப்பற்றி.... இப்போது வேண்டாம்..பிறிதொரு கணம் பகிர்ந்துகொள்வேன்.

anbudan vaalu said...

same pinch mullai....

எனக்கும் அண்ணன் craze இருந்தது....வளர வளர என் தம்பியோடு இருப்பதும் ஜாலிதான் என புரிந்துகொண்டேன்

anbudan vaalu said...

same pinch mullai....

எனக்கும் அண்ணன் craze இருந்தது....வளர வளர என் தம்பியோடு இருப்பதும் ஜாலிதான் என புரிந்துகொண்டேன்

தமிழ் பிரியன் said...

நோ ஃபீலிங்ஸ் ஆப் இந்தியா தங்கச்சி!

தமிழ் பிரியன் said...

//ஆயில்யன் said...///
ஹேய் மேன்! எந்தா இது ஏட்டா.. இது எண்ட முல்லையோட ஃபீலிங் பதிவல்லே.. இங்கன கும்மியடிச்சங்கில் எந்தா நியாயம்??

JP said...

ரொம்ப நல்ல பதிவு.... என் தம்பி, தங்கச்சி கூட போட்ட சண்டைய எல்லாம் நெனைச்சு பாக்க வச்சிடுச்சு...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல பதிவு முல்லை.. நான் என் தம்பியையும்.. என் மக அவ தம்பியையும் கோச்சிக்கிட்டு சண்டையிடுவதெல்லாம் நினைச்சிக்கிறேன்.. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன ஆச்சி

தத்துவ சாங் டைட்டில் போட்டு ஆரம்பிச்சி கடைசி வரைக்கும் வெச்ச கண் வாங்காம படிக்க வெச்சிட்டீங்க.

ம்ஹூம்
அண்ணனுமில்ல, தம்பியுமில்ல
அட்வைஸுமில்ல

அக்கா மட்டும்தான், அவளும் அடுத்த அம்மா மாதிரி நடந்துகிட்டதால இது போன்ற அனுபவங்களேதுமில்லை.

தீஷு said...

//பரணில் இருக்கும் சோடா மேக்கர் உபயோகத்துக்கு வந்திருந்தது.
அதை இயக்கும் அதிகாரம் வீட்டில் எனக்கு மட்டுமே //

அக்காவா இருக்கிறதுல இது மாதிரி நிறைய அட்வான்டேஜ் முல்லை.

அமுதா said...

/*As years passed by, தம்பி இருப்பதும் மிகவும் fun/ஜாலி என்றுணர்ந்தேன்*/
ஆமாம்.. நாம் கூட அட்வைஸ் கொடுக்கலாம் :-))

சின்ன அம்மிணி said...

எனக்கு இப்படியெல்லாம் அடிச்சிக்க தம்பி இல்லைன்னு இன்னும் தோணும். என் சிறு வயது நண்பர்கள் எல்லாம் என்னை விட 2 வயசு கம்மிதான். இன்னும் தொடர்புல இருக்கொம். எப்ப இந்தியா போனாலும் சந்திப்போம். நல்ல நினைவ்வுகளை கிளறிட்டீங்க

Sasirekha Ramachandran said...

//பரணில் இருக்கும் சோடா மேக்கர் உபயோகத்துக்கு வந்திருந்தது.
அதை இயக்கும் அதிகாரம் வீட்டில் எனக்கு மட்டுமே //


வீட்ல உங்கள மாதிரி பெருசுங்க அட்டகாசம் தாங்கமுடியல...என்ன மாதிரி சிறுசுங்க பாடுதான் ரொம்ப கஷ்டம்ப்பா..

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்க்கையின் ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்கள்.!

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...

எனக்கு இப்படியெல்லாம் அடிச்சிக்க தம்பி இல்லைன்னு இன்னும் தோணும். என் சிறு வயது நண்பர்கள் எல்லாம் என்னை விட 2 வயசு கம்மிதான். இன்னும் தொடர்புல இருக்கொம். எப்ப இந்தியா போனாலும் சந்திப்போம். நல்ல நினைவ்வுகளை கிளறிட்டீங்க
//

நீங்க சின்ன அம்மினியா பெரிய அம்மியா?

கைப்புள்ள said...

//என் தம்பியின் மேல் பாசமாயிருக்கக் கற்றுக்கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று! As years passed by, தம்பி இருப்பதும் மிகவும் fun/ஜாலி என்றுணர்ந்தேன்.


Note to my brother:

குட்டி, அந்த பாட்டிலை நாந்தான்டா உடைச்சேன். :-) உன்னை ஏன் மாட்டிவிட்டேன்னு இப்போ எனக்குத் ஞாபகமில்லை(sibling rivalry)!! இப்போவும் நாம திட்டு (அட்வைஸ் அட்வைஸ் அட்வைஸ்!!) வாங்கறோம், ஆனா அதெல்லாம் நாம் ஒன்னா சேர்ந்து செஞ்ச காரியங்களுக்காக இல்லை!

//

சான்ஸே இல்லை... ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு இந்த வரிகள்.

// ஆதிமூலகிருஷ்ணன் said...
வாழ்க்கையின் ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்கள்.!
//

ரிப்பீட்டேய்

Poornima Saravana kumar said...

மலர்ந்த நினைவுகள்:))

Poornima Saravana kumar said...

எங்கள் வீட்டிலும் இந்த கோல் மூட்டு வேலை நடக்கும்....

இப்போ நினைக்கையில் சிரிப்பா வருது:))))

உண்மையிலேயே அது ஒரு அழகிய காலம்னு சொல்லலாம்.. அப்படியே இருந்திருக்கக் கூடாதானு தோனுது:(

என்னை என் பழைய காலத்திற்க்கு அழைச்சிட்டு போயிட்டீங்க:)

Suresh said...

:-) Super pathivu thalaiva

குடுகுடுப்பை said...

Suresh said...

:-) Super pathivu thalaiva

//

படிக்காம பின்னூட்டம் போட்டா ஆணா பெண்ணான்னு எப்படி தெரியும்

சந்தனமுல்லை said...

நன்றி பாண்டிஸ்....உங்க மல்லு பாசம் ஓவரா இருக்கு!பார்தது...:-)

பாடறீங்களா சுப்பு?

நன்றி கேவிஆர்/ராஜா - ஆமா, இப்போ பேசறதே வாரத்துக்கு ஒருதடவைதான்..:)..ஹஹ்ஹா!

நன்றி மணிநரேன்..ஆமா, பலநேரங்களில் அது நமக்கு புரிவதில்லையே! சரியாகச் சொன்னீர்கள்!

பாண்டீஸ்..உங்க தேசபற்று புல்லரிக்க வைக்குதுப்பா!:-))

சந்தனமுல்லை said...

நன்றி ச.முத்துவேல், டெரராத்தான் இருந்திருக்கீங்க!

நன்றீ வல்லியம்மா, தம்பிக்கு ரொம்ப சின்னப் பையன்..இப்போதான் காலேஜ் முடிச்சிருக்கான்..;-)


ஸ்ரீமதி..வேற எங்கேயாவதுபோட வேண்டிய பின்னூட்டமா இது இல்ல ஆணி அதிகமோ??:-P உங்களை எதுவும் செய்ய சொல்லலையே நான்..

நன்றி ராமலஷ்மி...ஒரு ஆயில்ஸ் போதாதாங்க..:-))

நன்றி திவ்யாபிரியா..:-)

நன்றி தமிழன்-கறுப்பி..ஆகா..அதான் நாங்கள்ளாம் இருக்கோமே..அந்தக் கவலையை விடுங்க! சரியா..:-) அப்புறம் இந்த பாண்டிஸ் பத்திதான் தெரிஞ்ச கதையாச்சே..கண்டுக்காதீங்க!


நன்றி ஆகாயநதி..நோ ஃபீலிங்ஸ்..உங்க தங்கச்சியும் தம்பிக்கு கொஞ்சமும் குறைஞ்சவங்களா இருக்க மாட்டாங்கன்னு நம்பறேன்! :-)

நன்றி சென்ஷி!

நன்றி கோபிநாத், அவ்ளோ நல்லவரா நீங்க?!!

நன்றி பிரேம்..நோ..நோ..ஃபீலிங்ஸ்..கண் துடைச்சிக்கோங்க..

சந்தனமுல்லை said...

நன்றி அருணா..ரெண்டு தம்பிங்களா..அப்போ கலாட்டாக்கு குறைவே இருக்காதே! :-))

ஆகா..குடுகுடுப்பையார்..எனக்கு அட்வைஸே பிடிக்காது, என்னைப் போல் இப்படி சொல்லிட்டீங்களே!! அவ்வ்வ்!

நன்றி அபிஅப்பா..ஆனாலும் உங்களை அடிச்சிக்க முடியுமா?!!:-)


நன்றி சிபி..நீங்க என்ன சொல்ல வர்றீங்க?!!


நன்றி மாதவராஜ், உங்க தம்பி பத்திய பதிவை படிக்க ஆவலாயிருக்கேன்!

நன்றி anbudan vaalu - சேம் பிளட்!

நன்றி தமிழ்பிரியன்..ஆமா..பாண்டிஸ் எப்போவுமே இப்படித்தானே.ஃப்ரீயா விடுங்க! :-))

நன்றி JP, முத்துலெட்சுமி!

நன்றி அமித்து அம்மா...அப்போ தங்கமான அக்காதான் உங்களுக்குன்னு சொல்லுங்க;)

நன்றி தீஷூ, உண்மைதான்!


நன்றி அமுதா, ஆகா உங்க தம்பி ரொம்ப நல்லவர் போலிருக்கே!! ;-)

நன்றி சின்ன அம்மிணி, உங்க நினைவுகளை பகிர்ந்துக்கிட்டதுக்கு!

நன்றி சசி மேடம்..எதுக்கு இப்படி ஒரு சீனு??!! :-))

நன்றி ஆதி!

நன்றி கைப்ஸ், ஆகா..உங்க தடிப்பசங்க எனக்கு மிகவும் பிடிச்ச பதிவுகள்!

நன்றி பூரணி, உங்க ஃபீலிங்ஸேதான் ப்பா..அது ஒரு அழகிய காலம்! ஹ்ம்ம்! :-)

ச.முத்துவேல் said...

/நன்றி ச.முத்துவேல், டெரராத்தான் இருந்திருக்கீங்க!/

ஏங்க அடிவாங்கின அப்பாவிங்க நானு. ஓ. வடிவேல் ஸ்டைல்ல சொல்றீங்களா!

சுரேகா.. said...

ஆமாங்க.. எனக்கு ஒரே தங்கைதான்!

எனக்கும் அக்கா இல்லையேன்னு பீலிங்க்ஸ் உண்டு !

எது இல்லையோ அதுக்குத்தானே ஆசைப்படுவோம்..!
அவளுக்கு தம்பி இல்லையேன்னு தோணியிருக்கும்!

அழகான நாட்கள்!
:)

மேடேஸ்வரன் said...

உங்கள் வலைப் பூ சுவாரஸ்யம் .....முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன்....

ஸ்ரீமதி said...

//ஸ்ரீமதி..வேற எங்கேயாவதுபோட வேண்டிய பின்னூட்டமா இது இல்ல ஆணி அதிகமோ??:-P உங்களை எதுவும் செய்ய சொல்லலையே நான்..//

அந்த பின்னூட்டம் சின்ன பாண்டியால வந்த வினை... (சாரி ஆயில்ஸ் அண்ணா);)) இப்போ தான் பதிவ படிச்சேன்... என் அண்ணாகிட்ட சின்ன வயசுல "நீ போயிட்டு எனக்கு அக்காவ அனுப்பு.. நீ வேண்டாம்"-ன்னு அழுதுருக்கேன் சண்ட வந்தா... ஆனா, இப்போ எனக்கு எல்லாமே அவன் தான்.. Really touching... :)

Rithu`s Dad said...

இப்பதிவின் மூலம் மலரும் நினைவுகளை எல்லோருக்கும் ஏற்படுத்தியுள்ளீர்கள் முல்லை..

திருமுருகன் said...

ரொம்ப டச்சிங். ரொம்ப எளிமையான எழுத்து நடை. நீங்களும் என்னோட பேவரிட் பதிவராயிட்டங்க. Keep it up!