Tuesday, April 28, 2009

பப்பு டைம்ஸ்!

பப்பு,

42 மாதங்கள். உனது மாதாந்திர பிறந்த நாள் இன்று. மூன்றரை வயது, இன்றோடு.

நிறைய பேசுகிறாய். பெரியவர்கள் போல் கிண்டல் செய்து சிரிக்க எத்தனிக்கிறாய். you make silly faces too. ஜிக்-சாக் புதிர்கள் செய்வதில் மகிழ்ச்சியடைகிறாய். அதைவிட மகிழ்ச்சி, டோராவைப் பார்க்கும்போது! 24-பகுதிகள் கொண்ட புதிரை முழுமையாய் செய்யும்போது உனக்கு மிகச்சரியாய் மூன்றேகால் வயது!

புத்தகங்கள் படிக்க விருப்பப் படுகிறாய். ஆனால் என் உதவி தேவைப்படுகிறது! இருந்தாலும் நீயாகவே கதைகள் சொல்கிறாய், ப்டங்கள் பார்த்து. ஏப் மற்றும் குரங்குகளை இனம் காணத் தெரிகிறது உனக்கு! where is the party தான் உன் விருப்பப் பாடல், தற்போது!

தூங்கிக் கொண்டிருந்த சித்தப்பாவின் மேலும், முருகன் மேலும் தண்ணீர் ஊற்ற சின்ன ஆயா உன்னை அழைத்தார்கள். கையில் தண்ணீர் எல்லாம் கொண்டு வந்து மொட்டை மேலே தெளிக்கலாம் வா என்றழைத்த போது தண்ணீரை கையில் வாங்கிக்கொண்டு மறுத்தபடியே பினனால் நகர்ந்துக் கொண்டிருந்தாய். ஏனென்று கேட்டபோது, “தண்ணீ ஊத்தினா பயந்துடுவாங்க” என்றாய்! பப்பு, இவ்வளவு யோசிக்கும் நீ, அன்று முடிவெட்டிக் கொண்டது எங்ஙனம்? :-)

பள்ளியின் ரெவ்யூ சொல்கிறது கதைகளும், பாடல்களும் உனக்கு விருப்பமானவைகள். உனக்கென்று வெண்மதி, வர்ஷினி என்று குட்டி க்ரூப் இருக்கிறது. நீங்கள் சேர்ந்து சஞ்சய்க்கு “வாலு” என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள்! அடிக்கடி உங்களுக்குள் சிரித்துக் கொள்வதும் உண்டாம்!

உனது எல்லைக்குள் எவர் வந்தாலும் கத்தல்களும், வன்முறையும் கிடைக்கப் பெறுகிறோம்!
சிடி பிளேயரை இயக்க நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறாய். வீட்டின் ஸ்விட்ச்-களை இயக்க நீ அறிந்துக் கொண்டபோதைவிட அதிகமாக பயங்கொள்கிறேன் இப்போது! ரோடில் கையை பிடித்து நடக்க உனக்கு விருப்பமில்லை.

பத்திரமாக பார்த்துக் கொள்வாயா பப்பு, உன் அம்மாவை...இதையெல்லாம் படிக்கும் போது வேறு யாருக்கு உதவி தேவைப்படுமென்று நினைக்கிறாய்?!

34 comments:

தமிழ் பிரியன் said...

ஹைய்யா.. மூன்றரை வயசுக்கு வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

எங்க பப்பு மூன்றரை வயசில் செய்யும் நல்ல விஷயங்களை எங்க ஆச்சி பத்து வய்சில் கூட செஞ்சு இருக்கலயாம்... ;-))))

david said...

Pappu-vodu valargiraal enaku therintha oru chutti ponnu. Great Job girls you rock. Curious children make wise parents. Awesome!

ஆகாய நதி said...

வாழ்த்துகள் பப்பு! :)

அருமையான பதிவு பப்புவிடம் இப்படியே பேசிவிட்டீர்கள் :)

விரைவில் இதையும் பப்பு படிக்கக் கற்றுக்கொண்டுவிடுவாள்!

அந்த அளவிலா மகிழ்ச்சியையும் எதிர் நோக்கியிருங்கள்! :)

ஆயில்யன் said...

//பத்திரமாக பார்த்துக் கொள்வாயா பப்பு, உன் அம்மாவை...இதையெல்லாம் படிக்கும் போது வேறு யாருக்கு உதவி தேவைப்படுமென்று நினைக்கிறாய்?!///

எதை கொடுத்து வளர்க்கிறீர்களோ அதை திரும்ப பெறுவீர்கள் - அன்பை கொடுத்து அன்பை பெறுவீர்கள் கவலை வேண்டாம் சகோதரி!

இனிய வாழ்த்துக்களுடன்...!

குடுகுடுப்பை said...

பத்திரமாக பார்த்துக் கொள்வாயா பப்பு, உன் அம்மாவை...இதையெல்லாம் படிக்கும் போது வேறு யாருக்கு உதவி தேவைப்படுமென்று நினைக்கிறாய்?!//

இது சரியான கேள்வி

ராமலக்ஷ்மி said...

பத்திரமாய் பார்த்துக் கொள்வாள் பப்பு.
உங்களையும் தன்னையும்:)!

பிரேம்குமார் said...

//பத்திரமாக பார்த்துக் கொள்வாயா பப்பு, உன் அம்மாவை...இதையெல்லாம் படிக்கும் போது வேறு யாருக்கு உதவி தேவைப்படுமென்று நினைக்கிறாய்?!//

பப்பும்மா, அம்மாவ கவனி :)

கானா பிரபா said...

//ஆயில்யன் said...
//பத்திரமாக பார்த்துக் கொள்வாயா பப்பு, உன் அம்மாவை...இதையெல்லாம் படிக்கும் போது வேறு யாருக்கு உதவி தேவைப்படுமென்று நினைக்கிறாய்?!///

எதை கொடுத்து வளர்க்கிறீர்களோ அதை திரும்ப பெறுவீர்கள் - அன்பை கொடுத்து அன்பை பெறுவீர்கள் கவலை வேண்டாம் சகோதரி!

இனிய வாழ்த்துக்களுடன்...!//

Repeatu :)


மேலே காமெண்ட் இட்டது சின்னப்பாண்டியா? நம்பவே முடியல இவ்வளவு அடக்கமாவா :(

வித்யா said...

வாழ்த்துகள் பப்புக்கு.

Deepa said...

அழகான பதிவு. பப்புக்குட்டிக்கு அன்பு வாழ்த்துக்கள்.

//உனக்கென்று வெண்மதி, வர்ஷினி என்று குட்டி க்ரூப் இருக்கிறது. நீங்கள் சேர்ந்து சஞ்சய்க்கு “வாலு” என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள்! //

மினி ரௌடி? பாவம்பா அவ க்ளாஸ் பசங்க!


//இதையெல்லாம் படிக்கும் போது வேறு யாருக்கு உதவி தேவைப்படுமென்று நினைக்கிறாய்?!//

classic!

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் பப்பு பாப்பா.
அம்மாவைப் பார்த்துப்பே நீ. அம்மாவும் உன்னைப் பார்த்துப்பாங்க. நல்லா இருடா ராஜா.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆமா அம்மாவுக்குத்தான் உதவி தேவை இப்ப.. பாருங்க ப்ரேம்குமார் நல்லாகவனின்னு சொல்லிக்குடுக்கறாங்க . ரொம்ப கவனிச்சிடபோறா.. :))

G3 said...

பப்புவுக்கு வாழ்த்துக்கள் !!!

எனக்கு அபியும் நானும் படம் டயலாக் தான் ஞாபகம் வருது.. "குழந்தை பிறக்கும் போதே கூடவே ஒரு அப்பாவும் பிறக்கிறான்" [இங்க அப்பாக்கு பதில் அம்மாவ ரீப்ளேஸ் பண்ணிக்கோங்க :)) ]

அமுதா said...

:-)

ஸ்ரீமதி said...

Cute pappu... :)))

வெயிலான் said...

// நீங்கள் சேர்ந்து சஞ்சய்க்கு “வாலு” என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள்! //

:)))

தீஷு said...

வாழ்த்துகள் பப்பு.

//நீங்கள் சேர்ந்து சஞ்சய்க்கு “வாலு” என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள்! //

இப்பவேவா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் பப்பு

பின்னொரு நாளில் பப்பு இதைப் படிக்க நேர்ந்தால் எப்படி ரியாக்ட் செய்வாள் என்பதை கற்பனை செய்து பார்க்கிறேன்.

கொஞ்சமல்ல நிறையவே நெகிழ்ச்சி...

மாதவராஜ் said...

//பத்திரமாக பார்த்துக் கொள்வாயா பப்பு, உன் அம்மாவை...//

ஆஹா...!

விக்னேஷ்வரி said...

ஹே, பப்பு மூன்றரை வயது பெரிய மனுஷி ஆகிட்டாளா... வாழ்த்துக்கள் பப்பு.

“தண்ணீ ஊத்தினா பயந்துடுவாங்க” என்றாய்! பப்பு, இவ்வளவு யோசிக்கும் நீ, அன்று முடிவெட்டிக் கொண்டது எங்ஙனம்? :-) //

It happens sometimes. :)

உனக்கென்று வெண்மதி, வர்ஷினி என்று குட்டி க்ரூப் இருக்கிறது. நீங்கள் சேர்ந்து சஞ்சய்க்கு “வாலு” என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள்! அடிக்கடி உங்களுக்குள் சிரித்துக் கொள்வதும் உண்டாம்! //

பப்பு வளர்ந்து அவளின் டைரிக் குறிப்பை நீங்கள் எழுதி வருவதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைவாள்.

பத்திரமாக பார்த்துக் கொள்வாயா பப்பு, உன் அம்மாவை... //

ரொம்ப அழகு. இதை பப்பு கிட்ட கேட்டீங்கன்னா, "கவலைப்படாத ஆச்சி. நான் இருக்கேன்ல." னு சொல்லுவா.

கவிதா | Kavitha said...

“தண்ணீ ஊத்தினா பயந்துடுவாங்க” என்றாய்! பப்பு, இவ்வளவு யோசிக்கும் நீ, அன்று முடிவெட்டிக் கொண்டது எங்ஙனம்? :-)
//

முல்ஸ் !! அன்னைக்கே தான் முடி வெட்டின பிறகு ரொம்ப அழகா இருக்கேன் னு சொல்லிட்டா இல்ல. .அவ மறந்தாலும் நீங்க மறக்க மாட்ட்டீங்க போலவே.?!! :)

பப்புவிடம் நான் கண்டது ரொம்ப கீன் ஆ வாட்ச் பண்றது, ஞாபகசக்தி, அற்புதமான கற்பனை திறன், இது எல்லா குழந்தைகளுக்கும் அமைய பெறாது. :))

பப்புவிற்கு கவிதா ஆன்ட்டி'யின் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

சின்ன அம்மிணி said...

//உன் அம்மாவை...இதையெல்லாம் படிக்கும் போது வேறு யாருக்கு உதவி தேவைப்படுமென்று நினைக்கிறாய்//

அதெல்லாம் பப்பு கைவிடமாட்டாள். எவ்வளவு கவனம் எடுத்து வளத்தறீங்க

ஆயில்யன் said...

//மேலே காமெண்ட் இட்டது சின்னப்பாண்டியா? நம்பவே முடியல இவ்வளவு அடக்கமாவா :(//

B சீரியஸ் !


(Blogla post serious periya pondi!)

Sasirekha Ramachandran said...

amazing actitities....keep rocking so!!

Sasirekha Ramachandran said...

இந்த அத்தனையையும் பத்மாவும் செய்கிறாள்,ஒன்றைத் தவிர....அந்த முடி வெட்டுதல்.:-)

சந்தனமுல்லை said...

நன்றி தமிழ்பிரியன் அண்ணா, ஆமா //எங்க ஆச்சி பத்து வய்சில் கூட செஞ்சு இருக்கலயாம்// அதென்னமோ உண்மைதான்! :-)

ஹய்ய்ய்..வாங்க மிஸஸ்.டேவிட், எனக்கு ரொம்ப சந்தோஷம் அக்கா, its a great feeling u knw, நமக்குத் தெரிஞ்சவங்க, நம்மை தெரிஞ்சவங்க -reading my blog-nnu! நன்றி அக்கா!!

நன்றி ஆகாயநதி, மிகவும் உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்!

நன்றி ஆயில்ஸ், :-) உங்கள் வார்த்தைகள் மகிழ்ச்சியளிக்கின்றன!

நன்றி குடுகுடுப்பை..சரியாக புரிந்துக்கொண்டீர்கள்..:-)

சந்தனமுல்லை said...

நன்றி பிரேம்...சொன்னதுக்கு அப்புறம்தான் தெரியுதா?!!

நன்றி கானாஸ், ஆமா, அவர் இப்போ அடக்கத்தின் சிகரம்! :-)

நன்றி வித்யா!

நன்றி தீபா, //மினி ரௌடி?// அதை நீங்கதாங்க சொல்லனும்..:-) நேஹாவுக்கு வாழ்த்துகள்!

நன்றி வல்லியம்மா, உங்கள் ஆசி எப்போதும் இருக்கட்டும் எங்களுக்கு!

சந்தனமுல்லை said...

நன்றி முத்து, சொல்லி கேக்கறவங்ளையா நாம வீட்டுல வச்சிருக்கோம்?! ;-))

நன்றி G3, ரொம்ப புகழாதீங்க..ஹிஹி..கூச்சமா இருக்கு!

நன்றி அமுதா, ஸ்ரீமதி!

நன்றி வெயிலான்,தீஷு...அதான் ரொம்ப ஆச்சரியமா இருக்கு..

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா, உங்கள் வார்த்தைகள் எனக்கும் நெகிழ்ச்சியாயிருக்கிறது! :-)


நன்றி மாதவராஜ்!

நன்றி விக்னேஷவ்ரி, ஆமா, சொன்னாலும் சொல்வா,

நன்றி கவிதா, சின்ன அம்மிணி..:-)

நன்றி சசி..ஆகா..யான் பெற்ற ;-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

காலத்தைத்தாண்டி நிற்கப்போகும் கடிதங்கள்.!

தமிழன்-கறுப்பி... said...

கானா பிரபா said...
//ஆயில்யன் said...
//பத்திரமாக பார்த்துக் கொள்வாயா பப்பு, உன் அம்மாவை...இதையெல்லாம் படிக்கும் போது வேறு யாருக்கு உதவி தேவைப்படுமென்று நினைக்கிறாய்?!///

எதை கொடுத்து வளர்க்கிறீர்களோ அதை திரும்ப பெறுவீர்கள் - அன்பை கொடுத்து அன்பை பெறுவீர்கள் கவலை வேண்டாம் சகோதரி!

இனிய வாழ்த்துக்களுடன்...!//

Repeatu :)


மேலே காமெண்ட் இட்டது சின்னப்பாண்டியா? நம்பவே முடியல இவ்வளவு அடக்கமாவா :(
\\

டோட்டலா ஒரு ரிப்பீட்டு ! :)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
எங்க பப்பு மூன்றரை வயசில் செய்யும் நல்ல விஷயங்களை எங்க ஆச்சி பத்து வய்சில் கூட செஞ்சு இருக்கலயாம்... ;-))))
\\

ரிப்பீட்டு ! :))

திருமுருகன் said...

இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு, முல்லை! அப்படியே பப்பு அம்மாவைப்ப் பத்தி என்ன நேனைக்கராங்கன்னும் கேட்டு ஒரு பதிவு போடுங்க, நல்லா இருக்கும்.