Monday, April 20, 2009

அ ஃபார் ....


ஃபார் அவ்வ்வ்வ்வ்!


அவ்வ்வ்வ் என்பது பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் என்னால் தவிர்க்க முடியாததாகிவிட்டது!
:-) ஆனால், அது என்னைப் பொறுத்த வரை அழுவது மாதிரி மட்டுமல்ல! அதிர்ச்சி அல்லது
ஜெர்க்கான ப்லீங்சை பிரதிபலிக்கவும்தான்! இன்று நான் சந்தித்த சில அவ்வ்வ்வ் தருணங்கள்!


தருணம் 1 :

காலையில் எழுந்தவுடனே பப்பு கதை சொல்லு என்றாள், பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்து!

உனக்கேத் தெரியுமே, நீ சொல்லு பப்பு!

நாளைக்கு நீ சொன்னது, எனக்கு ஞாபகம் இல்ல! இன்னொரு வாட்டி சொல்லு!

அவ்வ்வ்வ்!

தருணம் 2 :

தற்போது வீட்டு வேலைக்கு உதவியாயிருந்த ஷோபனா அக்காவும் நின்றுவிட திரும்பவும் ஆள் தேடும் வேட்டை. இன்று காலை ஒரு ஆயா வந்திருந்தார்கள்.மேல்வேலைகளுக்கு மட்டும்.
பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார்கள்.

சமையல் செய்வீங்களா?

ம்ம்..செய்வேன்மா, அங்க இருந்தேன்ல, ரெண்டு நாய்ங்களுக்கு நாந்தான் சாப்பாடு செய்வேன்!
சாப்பாடு வைப்பேன்!!

அவ்வ்வ்வ்வ்வ்!

முன்பு வேலை செய்த இடத்தில் இரு நாய்க்குட்டிகளை கவனித்துக் கொண்டார்களாம்,அந்த நாய்க்குட்டிகளுக்கு் சாப்பாடு செய்ததைத் தான் அப்படி சொல்லியிருக்கிறார்கள்! I dropped the idea!அ ஃபார் ...

இது புதிதாக தோன்றிய ஐடியா,பப்புவிடமிருந்துதான்! அவள் எதற்கோ அப்படி சொல்லப் போக என்னையும் தொத்திக்கொண்டது. அ, ஆ, இ, ஈ என்று தொடங்கும் எழுத்துகளில் தோன்றுவதைப் பதிவிடலாமென்று. தினமும் போடுவேனென்று சொல்ல முடியாது, ஆனால் இந்த சீரிஸை தொடர்வேன்!

33 comments:

G3 said...

Firstu vandhutaena???

G3 said...

//நாளைக்கு நீ சொன்னது, எனக்கு ஞாபகம் இல்ல!//

Naalaikku sonna kadhaiya??? Avvvvvvvvvvv

G3 said...

//அங்க இருந்தேன்ல, ரெண்டு நாய்ங்களுக்கு நாந்தான் சாப்பாடு செய்வேன்!
சாப்பாடு வைப்பேன்!!//

LOL :))))))

G3 said...

//ஆனால் இந்த சீரிஸை தொடர்வேன்!//

Deal pakka :))))

ராமலக்ஷ்மி said...

அந்த ஆயாவின் பதில்...

:))))))))))))))!

எம்.எம்.அப்துல்லா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

:))

ஸ்ரீமதி said...

hahaha super... Adhuvum andha aayaa matter... nijamaave :)))))))))))))))))

வித்யா said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது முல்லை. உங்க ரியாக்ஷனை பார்க்கமுடியலயேன்னு ஒரு சின்ன வருத்தம்:)

நிஜமா நல்லவன் said...

/நாளைக்கு நீ சொன்னது/


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

ஆ.முத்துராமலிங்கம் said...

அ ஃபார் அவ்வ்வ்வ்வ்!

:::)

அமுதா said...

/*ம்ம்..செய்வேன்மா, அங்க இருந்தேன்ல, ரெண்டு நாய்ங்களுக்கு நாந்தான் சாப்பாடு செய்வேன்!
சாப்பாடு வைப்பேன்!!
*/
:-)))))))))))))))

மணிநரேன் said...

தருணம் 1 :;)
தருணம் 2 ;(

கைப்புள்ள said...

//தற்போது வீட்டு வேலைக்கு உதவியாயிருந்த ஷோபனா அக்காவும் நின்றுவிட திரும்பவும் ஆள் தேடும் வேட்டை. இன்று காலை ஒரு ஆயா வந்திருந்தார்கள்.மேல்வேலைகளுக்கு மட்டும்.
பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார்கள்.//

யூ மீன் ஹோபனா அக்கா?

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா இருக்கு உங்க "அ ஃபார் ...."
மத்த ....... ஃபாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். பாப்புவோட ரியாக்ஷனோட உங்க ரியாக்ஷனையும் சேர்த்து பார்க்கணும் போல இருக்கு....

ஆயில்யன் said...

//ம்ம்..செய்வேன்மா, அங்க இருந்தேன்ல, ரெண்டு நாய்ங்களுக்கு நாந்தான் சாப்பாடு செய்வேன்!
சாப்பாடு வைப்பேன்!!///


நல்லா ஆளைத்தான் புடிச்சிருக்கீங்க :))))

தீஷு said...

//ம்ம்..செய்வேன்மா, அங்க இருந்தேன்ல, ரெண்டு நாய்ங்களுக்கு நாந்தான் சாப்பாடு செய்வேன்! //

:-)))). நல்ல வேளை. சமைக்கிறத்தற்கு முன்னாலே சொன்னாங்க..

ஆயில்யன் said...

// G3 said...
//ஆனால் இந்த சீரிஸை தொடர்வேன்!//

Deal pakka :))))
//

வழிமொழிகிறேன் :)

அபி அப்பா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அவங்க ஒருவேளை பழைய ஒனரைத்தான் நாய்ன்னு திட்டியிருப்பாங்களோ! (சும்மா)

சீரியஸா தொடர போவதா உத்தேசமா?அப்ப காமடியா இருக்காதா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

படிச்சுட்டு நேத்திக்கு வந்து பின்னூட்டம் போடுறேன், சரியா பப்பு.?

கவிதா | Kavitha said...

//நாளைக்கு நீ சொன்னது, எனக்கு ஞாபகம் இல்ல!//

இது ராகவன் சார் க்கு மட்டும் தெளிவாக புரியும் :)

//
யூ மீன் ஹோபனா அக்கா?
//

கைப்பூ.....ஏன்ன்ன்ன்ன்ன்ன்??!! :))

//
ரெண்டு நாய்ங்களுக்கு நாந்தான் சாப்பாடு செய்வேன்!
சாப்பாடு வைப்பேன்!!
//

:))))) சே... என்னம்மா உண்மை பேசறாங்கப்பா ?!! :)))))

தமிழ் பிரியன் said...

;-))))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Deepa said...

//வித்யா said...
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது முல்லை. உங்க ரியாக்ஷனை பார்க்கமுடியலயேன்னு ஒரு சின்ன வருத்தம்:)//

REPEAT!!
:-))

Divyapriya said...

அவ்வ்வ்வ் :D

ஆகாய நதி said...

நல்ல ஐடியா! :)

முதல் தருணம் இன்பம் அடுத்த தருணம்.. அவ்வ்வ்வ்... :( என்ன கொடுமை முல்லை இது...

குடுகுடுப்பை said...

ஆஆஆஆஆஆஆ பார் ஆச்சர்யம்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:)) உங்க ஜெர்க்கான ஃபீலிங் எங்களுக்கு நல்ல நகைச்சுவையா அமைஞ்சுடுச்சு.. :)
உங்க ஐடியா பேங்க் வேறயாரு பப்புவாத்தான் இருக்கும்ன்னு எங்களுக்கு தெரியுமே.. சொல்லனுமா..?

Poornima Saravana kumar said...

ஜெர்க் பீலிங் 2ம் சூப்பர்:))

" உழவன் " " Uzhavan " said...

//அங்க இருந்தேன்ல, ரெண்டு நாய்ங்களுக்கு நாந்தான் சாப்பாடு செய்வேன்!
சாப்பாடு வைப்பேன்!!//

இதுதாங்க ஹைலைட்டே!!!!!

ச.முத்துவேல் said...

அவ்வ்வ்வ்வ்வ்!

முதன்முறயா இப்படிப் பின்னூட்டம் போடுறேன். எவ்வளவுப் பொருத்தம்.
ஆ,இ,ஈ லல்லாம் இன்னும் எவ்வளவு மேட்ட்ர் இருக்குதோ. சீக்கிரம் எழுதுங்க.

சந்தனமுல்லை said...

வாங்க G3..நீங்கதான் ஃபர்ஸ்டு! ஆமாப்பா..ஆனா ஞாபகம் இல்லன்னு சொன்னா பாருங்க...அதுதான் அவ்வ்வ்! உங்க தொடர் ஆதரவுக்கு நன்றி!

நன்றி ராமல்ஷ்மி, அப்துல்லா,ஸ்ரீமதி!

நன்றி வித்யா, அந்த ஆயாவை உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கறேன்..;-) ரியாக்‌ஷன் காட்ட! ஓக்கேவா!

நன்றி நிஜமா நல்லவன், அமுதா,
மணிநரேன்!

நன்றி கைப்ஸ், அதேதான்..:-))

நன்றி விக்னேஷ்வரி..கூடிய விரைவில் மத்த ஃபார் எல்லாம்! :-)

நன்றி ஆயில்ஸ், தீஷு!

நன்றி அபிஅப்பா..ஹ்ம்ம்..என்னவோ போங்க!

நன்றி ஆதி!

நன்றி கவிதா..அதையே கேக்கறீங்க! அவ்வ்!
நன்றி தமிழ்பிரியன், தீபா, திவ்யாபிரியா!

சந்தனமுல்லை said...

நன்றி ஆகாயநதி! ஹ்ம்ம்..:-)

நன்றி குடுகுடுப்பை..நீங்களும் ஆரம்பிக்கறீங்களா..:-))

நன்றி முத்து, அடேங்கப்பா..பெரிய ஆளுங்க நீங்க!!

நன்றி பூர்ணி, உழவன்!

நன்றி ச.முத்துவேல், :-) எழுதிட்டா போச்சு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

தருணம் 1 : :)0-

தருணம் 2 : அவ்வ்வ்வ்வ்வ்!

ராஜா | KVR said...

//ஆனால் இந்த சீரிஸை தொடர்வேன்!//

படிக்கக் காத்திருக்கிறோம்...