Saturday, April 18, 2009

பப்பு - 360 டிகிரி!


(படம் : மூன்றாம் டெர்மின், கடைசி நாளன்று!)

முதல் டெர்ம்..., இரண்டாம் டெர்ம்... தற்போது பள்ளியின் மூன்றாம் டெர்ம் கடந்த ஒன்பதாம் தேதியோடு நிறைவுக்கு வந்தது!எவ்வளவு மாற்றங்கள், விரும்பத்தகுந்ததும், விரும்பத்தகாததுமாக!!


1. ”உன் பேச்சு க்கா” என்றும், “நீ என் ஃப்ரெண்ட் இல்ல” என்றும், ”சேலஞ்ச்' என்றும் சொல்கிறாள். “க்கா” சொல்லிவிட்டால், பேசக் கூடாது என்பது இப்போதெல்லாம் மாறிவிட்டது போல. பழம் விடுதலும், கட்டைவிரலை உயர்த்தி ”சேலஞ்ச்” செய்து அடுத்தவர் கட்டைவிரலை தொடுவதாக பரிணாமம் பெற்றுள்ளது.

2. நிறைய ஆங்கில வார்த்தைகள் புழக்கத்தில் வந்திருக்கிறது. தண்ணீர் பாட்டிலை பப்பு பையில் வைக்கும்போது, தெரியாமல் கொட்டி விட்டேன். ”ஆச்சி, வாட் இஸ் திஸ்?”!!
நோ டச்சிங், ஒன் பை ஒன்...etc!

3. இந்த டெர்மில் சில நாட்கள், “நான் ஸ்கூலுக்கு போகல” என்று விடிந்தது. அநேக நாட்கள், பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது, வேனிலிருந்து இறங்க மறுத்து, பள்ளிக்கே செல்லப் போவதாகவும் ஆயா சொல்லக் கேட்டேன்! :-)

4. “ஜனகன ” தாகம் போய் ”ரகுபதி ராகவ”தான் அவள் வாயில் இப்போது! இன்னும் ரெக்கார்ட் செய்யவில்லை! அவள் புதிதாக ஏதும் முணுமுணுக்கும் போது, ஓடிப்போய் அவளது பாடல் புத்தகத்தை திருப்பும் என் பழக்கமும் இன்னும் மாறவில்லை!

5.இந்த டெர்மில், சாப்பிட என்ன எடுத்துச் செல்வதென்று முடிவு செய்வது அவளது உரிமையாக உருவெடுத்திருக்கிறது. கத்திரிக்கோலைக் கையாள்வதுதான் மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. வளையல்கள், ரப்பர் பேண்டுகளை கைகளில் மாட்டிக் கொளவது, கழுத்தில் மணிகள் சில சமயங்களில் தொப்பியுடன் பள்ளிச் செல்ல விரும்புகிறாள்..:-) என் பள்ளி/கல்லூரி நண்பர்கள் இதைப் படித்தால் புரிந்துக் கொள்வார்கள், எங்கிருந்து இந்த பழக்கம் வந்திருக்குமென்று!

மொத்தமாக, 3 டெர்ம்கள். 360 மாற்றங்கள்.

வீட்டை விட்டு எங்கும் அதிகமாக சென்றறியாத ஒரு 2 1/2 வயதுச் சிறுமி தனக்கென்று பள்ளியில் ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொள்கிறாள். கடிகாரத்தை அறியாதவள், “இப்போ டைம் என்னா” என்றுக் கேட்கிறால், அதற்கு மேல் அதிகமாய் அறியாவிட்டாலும்! பெயர்கள் சொல்லி அட்டெண்டென்ஸ் எடுக்கிறாள்! பேசும் மொழியின் பெயர் தமிழென்றும் அறியாதவள், “இங்கிலீஷ்-ல என்ன” என்றுக் கேட்கிறாள். காலையில் பள்ளி வாகனத்தில் ஏறியதும், என்னைத் திரும்பிப் பார்ப்பவள், கடைசியாக என்னை அப்படித் திரும்பிப் பார்த்தது எப்போதென்று யோசிக்கிறேன்!!

பள்ளிச் செல்லத் துவங்கிய நாட்களை நினைத்துக் கொள்கிறேன்!

நன்றிகள் அவளது பள்ளிக்கும், மோத்தி ஆண்ட்டிக்கும், சித்ரபாலா ஆண்ட்டிக்கும்!
லஷ்மி ஆயாவிற்கும் அம்சா ஆயாவிற்கும் நன்றிகளும் வணக்கங்களும்!

31 comments:

மணிகண்டன் said...

ஸ்வீட் கேர்ள் பப்பு. அவளோட குழந்தைதனத்த ரொம்ப அழகா எழுதறீங்க. இன்னும் கொஞ்ச நாள்ல எதுக்கு எழுதறன்னு கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவா !

மாதவராஜ் said...

குழந்தைகளைப் பற்றி எழுதினாலும், பேசினாலும் அவைகள் கவிதைகளாகிவிடுகின்றன. குழந்தைகளின் மகத்துவமே இது என புரிந்துகொள்கிறேன். இன்று இதையெல்லாம் பதிவு செய்கிறீர்கள்.நாளை இந்தக் குழந்தை அதைப் படித்து எப்படி உணர்வு கொள்ளும் என நினைக்கிறேன். உங்கள் பதிவுகள் நினைவுகளைக் கிளறி விடும் ஆற்றல் பெற்றவையாய் இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

" உழவன் " " Uzhavan " said...

360டிகிரியா? இதுதான் சுத்தி சுத்தி அடிக்கிறதோ? ;-)

வித்யா said...

நான் வளர்கிறேனே மம்மி:)

G3 said...

:)))))))))))))))


பப்புவயும் அவ செயல்களாஇயும் நீங்க எம்புட்டு ரசிக்கறீங்களோ அதே அளவு எங்களையும் ரசிக்க வைச்சிடறீங்க :)))

பப்பு is great.. பப்பும்மா is double great :)))

ராமலக்ஷ்மி said...

வளர்கிறாளே பப்பு:))!

அபி அப்பா said...

சூப்பர்! பப்புக்கு லீவ் விட்டாச்சா? அழகா பப்புவை கூட்டிகிட்டு ஒரு டூர் அடிச்சுட்டு வாங்க!

Deepa said...

அழகான யதார்த்தமான அதே சம்யம் நுட்பமான பதிவு. ரசித்துப் படித்தேன்.


//பேசும் மொழியின் பெயர் தமிழென்றும் அறியாதவள், “இங்கிலீஷ்-ல என்ன”//

ஏய், அப்படி நினைக்காதீர்கள். அது ஒரு ஆச்சிரியம் தான். பெரியவர்களுக்குக் கூட எளிதில் கை கூடாத பன்மொழிப் புலமை சில குழந்தைகளுக்கு இயல்பாகச் சாத்தியப்படும்!

ஆயில்யன் said...

//பப்பு is great.. பப்பும்மா is double great :)))
//

றீப்பிட்டேய்ய்ய்ய்ய்!

ஜி3 is டிரிபிள் கிரேட் :)))

anbudan vaalu said...

பப்புவின் வளர்ச்சி மகிழ்ச்சி தருகிறது...உங்க பப்புவிற்கு கிட்டத்தட்ட நான் ஒரு விசிறியாயிட்டேன்..என் நன்பர்களிடம் நான் ஒரு rolemodel mom and girl duo வாக குறிப்பிடுவது உங்களைதான்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

மாதவராஜ் said...
குழந்தைகளைப் பற்றி எழுதினாலும், பேசினாலும் அவைகள் கவிதைகளாகிவிடுகின்றன. குழந்தைகளின் மகத்துவமே இது என புரிந்துகொள்கிறேன். இன்று இதையெல்லாம் பதிவு செய்கிறீர்கள்.நாளை இந்தக் குழந்தை அதைப் படித்து எப்படி உணர்வு கொள்ளும் என நினைக்கிறேன். உங்கள் பதிவுகள் நினைவுகளைக் கிளறி விடும் ஆற்றல் பெற்றவையாய் இருக்கின்றன. வாழ்த்துக்கள்.
//

என்ன இருந்தாலும் சீனியர் சீனியர்தான். எவ்வளவு அழகா சொல்லிட்டுப்போறார் பாருங்க.. நானும் இதச்சொல்லத்தான் இத்தனை நாளா போராடிக்கிட்டிருக்கேன்..

ஆகாய நதி said...

//
அநேக நாட்கள், பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது, வேனிலிருந்து இறங்க மறுத்து, பள்ளிக்கே செல்லப் போவதாகவும் ஆயா சொல்லக் கேட்டேன்! :-)
//
சூப்பர் பப்பு... என்னை மாதிரியே இருக்கியே சூலுக்கு(ஸ்கூல் இப்படி தான் என் வாய்ல வரும் 3வயதுல) போறதுல... :-)

//
ஜனகன ” தாகம் போய் ”ரகுபதி ராகவ”தான் அவள் வாயில் இப்போது! இன்னும் ரெக்கார்ட் செய்யவில்லை! அவள் புதிதாக ஏதும் முணுமுணுக்கும் போது, ஓடிப்போய் அவளது பாடல் புத்தகத்தை திருப்பும் என் பழக்கமும் இன்னும் மாறவில்லை!
//

:)

//
வளையல்கள், ரப்பர் பேண்டுகளை கைகளில் மாட்டிக் கொளவது, கழுத்தில் மணிகள் சில சமயங்களில் தொப்பியுடன் பள்ளிச் செல்ல விரும்புகிறாள்..:-) என் பள்ளி/கல்லூரி நண்பர்கள் இதைப் படித்தால் புரிந்துக் கொள்வார்கள், எங்கிருந்து இந்த பழக்கம் வந்திருக்குமென்று!
//

:) தாயைப் போல் பிள்ளையா?

//
திரும்பிப் பார்ப்பவள், கடைசியாக என்னை அப்படித் திரும்பிப் பார்த்தது எப்போதென்று யோசிக்கிறேன்!!
//

நல்ல மாற்றம் :)வளர்ச்சியும் கூட :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) அழகு தான்..

Divyapriya said...

sema maatramaa irukku :)) i think pappu will change even more in the summer hols :)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//பப்பு is great.. பப்பும்மா is double great :)))
//

றீப்பிட்டேய்ய்ய்ய்ய்!

ஜி3 is டிரிபிள் கிரேட் :)))
\\

ரிப்பீட்டு...!! :)

நிலாவும் அம்மாவும் said...

பப்பு கிட்ட இருந்து தான் நீங்க ஆங்கிலம் கத்துக்குறீங்க போல இருக்கே

பொம்பளைங்கள கூட புரிஞ்சுக்கலாம்..இந்த பொடுசுங்களை.......ஹ்ம்ம்..என்னத்த சொல்ல

சின்ன அம்மிணி said...

என்னதான் கான்வெண்ட்ல படிச்சாலும் உம்பேச்சு கா, பழம் விட்டாச்சு இதெல்லாம் என்னைக்கும் மாறாது. என்னோட சின்ன வயசு ஞாபகம் வந்தது

தாரணி பிரியா said...

பப்பு இந்த லீவுல இன்னும் நிறைய கத்துக்குவான்னு தோணுது. பப்பு வளர்கிறாளே ஆச்சி

மாதேவி said...

"3 டெர்ம்கள். 360 மாற்றங்கள்."

பப்புவின் ஆற்றல்கள் வளர வாழ்த்துக்கள்.

பிரேம்குமார் said...

வெளியுலக தொடர்புகள் கிடைக்கும் போது பிள்ளைகள் இன்னும் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். வாழ்த்துகள் பப்பு :)

தீஷு said...

பப்புக்கு ஜூனிலிருந்து புது ஸ்கூலா இல்ல இந்த ஸ்கூலிலேயே தொடரப் போகிறாளா?

சந்தனமுல்லை said...

நன்றி மணிகண்டன், ஆமா, கேக்கும் போது நிறுத்திட வேண்டியதுதான்! ;-)

நன்றி மாதவராஜ், இப்படி எழுதி வைப்பதிலும் சுயநலம்தான்..தனிமை தாங்க முடியாத ஓர்நாள் வந்தால் படித்துப்பார்க்கலாமே என்று!

நன்றி உழவன், வித்யா!

நன்றி G3..நான் சொல்ல வந்ததை ஆயில்ஸ் சொல்லிட்டார்..:-)

நன்றி ராமல்ஷ்மி!

நன்றி அபிஅப்பா, நாங்களும் அதுதான் நினைச்சோம்..ஆனா வெயிலை நினைச்சா..அவ்வ்வ்! :-)

நன்றி தீபா..//எளிதில் கை கூடாத பன்மொழிப் புலமை சில குழந்தைகளுக்கு இயல்பாகச் சாத்தியப்படும்!
//

உண்மைதான்!

நன்றி ஆயில்ஸ்..சேம் பின்ச்!


நன்றி anbudan vaalu..எங்க தகுதிக்கு இதெல்லாம் கொஞ்ச ஓவர்தான்..ஆனாலும் மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது! :-)!!

நன்றி ஆதி, ஆகாயநதி, முத்து!

நன்றி Divyapriya..ஆமா, அதுவும் ஊர் ட்ரிப்-ல்லாம் இருக்கு..அதிலேயும் மாற்றங்கள் வரும் இல்லையா! :-)

நன்றி நிலாவும் அம்மாவும்..பத்த வைச்சுட்டியே பொன்னாத்தா! ;-))

நன்றி சின்ன அம்மிணி..அபப்டியே கொஞ்சம் கொசுவத்தி சுத்துங்களேன்..நாங்களும் தெரிஞ்சுப்போம்ல..சின்னவயசு சின்ன அம்மிணியை!! :-)

சந்தனமுல்லை said...

நன்றி தமிழன் - கறுப்பி..நீங்க லாஜிக் படி, ஆயில்ஸ்
4ஸ் கிரேட் ந்னு தான் சொல்லியிருக்கணும்..ஹிஹி!

நன்றி தாரணி, மாதேவி, பிரேம்!!

நன்றி தீஷு..இதே பள்ளிதான்!

கவிதா | Kavitha said...

//சில சமயங்களில் தொப்பியுடன் பள்ளிச் செல்ல விரும்புகிறாள்..:-)//

???? ஏன்ன்?? :)))

வளர்ச்சி... இத்தூணூண்டா பிறந்துவிட்டு இப்ப என்ன பாடு படத்தறடான்னு நவீனிடம் சொன்னால், சிரித்துக்கொண்டே... .எல்லாருமே இத்தூணூண்டாதாம்மா பிறப்பாங்க.. அதுக்காக அப்படியே வா இருக்க சொல்ற.. நாங்களும் வளருனுமில்ல.. ஹி ஹி..!! என்கிறான்..

அது மாதிரி பப்புவின் வளர்ச்சியும் மாற்றங்களும் ஆச்சரியங்கள் தான்.. மணிகண்டன் சொல்றாப்ல ஏன்ம்மா எழுதறன்னு கேள்வி கூட கேட்பா..

அமுதா said...

வளர்கிறாளே பப்பு!

நானானி said...

”உன் பேச்சு க்கா, நோ டச்சிங், ஒன் பை ஒன்"
ஆஹா குழந்தைகள் பள்ளியிலிருந்து கற்று வரும் பேச்சுக்களே நம்மை வியக்கவும் வைக்கும், ரசிக்கவும் வைக்கும்.
அடுத்து உங்க துப்பட்டாவை சுத்திக்கொண்டு கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு டீச்சர் மாதிரி நடிக்கப் போகிறாள் பாருங்கள்!
என் மகள் அப்படித்தான் செய்வாள்

கானா பிரபா said...

ரசித்தேன், பப்பு கண்முன்னே வளர்கிறாள்

விக்னேஷ்வரி said...

குழந்தைய உங்க அளவுக்கு வாட்ச் பண்ணி, ரசிக்க முடியுமாங்குறது எனக்கு ஆச்சரியமா இருக்கு. பப்பு ரொம்ப லக்கி, இப்படி ஒரு அம்மா கிடைச்சதுக்கு.

சந்தனமுல்லை said...

நன்றி கவிதா..:-) பல்பு வாங்கறது நமக்குதான் கை வந்த கலையாச்சே! :-)) ஆமாப்பா, சொன்னாலும் சொல்லுவா! :-))


நன்றி அமுதா!

நன்றி நானானி! ஆமாங்க சில சமயம் அதுவும் நடக்குது..அவ டீச்சரா மாறுவது! :-))ஆனா இப்போவரைக்கும் பொம்மைங்க தான் அவளோட ஸ்டூடண்ட்ஸ்!

நன்றி கானாஸ், ஆமா, உங்க தொடர் ஆதரவுக்கும் ஆசிக்கும் நன்றிகள்!

நன்றி விக்னேஷ்வரி! :-) காலம் பதில் சொல்லும்..ஹிஹி!

.:: மை ஃபிரண்ட் ::. said...

பப்புக்கு ஒரு கடிகாரம் வாங்கிக்கொடுங்க..டைம் என்னன்னு கேட்க ஆரம்பித்தவளுக்கு டைம் பார்ப்பது எப்படி என்று சொல்லிக்கொடுக்க இதுதான் சரியான சமயம்..

:-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//பப்பு is great.. பப்பும்மா is double great :)))
//

றீப்பிட்டேய்ய்ய்ய்ய்!

ஜி3 is டிரிபிள் கிரேட் :)))
\\

ரிப்பீட்டு...!! :)//

ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டேய்.. :-)