Sunday, October 05, 2008

முதல் டெர்ம்...

முடிந்தது வெற்றிகரமாக!!

(முதல் டெர்மின் கடைசி நாளன்று எடுத்தது )


தேர்வுகள் அல்லது முன்னேற்ற அட்டை (progress card!!) எதுவும் இல்லை..
ஆனால், பப்புவிடம் நான் பார்க்கும் சில மாற்றங்கள்..

1. பள்ளிக்கு செல்வதற்கு அழுவதில்லை. தயக்கம் காட்டுவது இல்லை. உடம்பு சரியில்லாத நாட்களில், அவளது வகுப்பறை வீட்டிற்கு வந்துவிடுகிறது. அவள், மோதி ஆண்ட்டி-யாகி விடுகிறாள்..எதிரில் பிள்ளைகள் அமர்ந்திருப்பதுப் போல் கற்பனையுடன்!! ”யெஸ் ஆண்ட்டி சொல்லு” என்பது முதல் பாடல்கள் கற்பித்து, “ஆகாஷ், ஏன் வெண்மதியை கிள்றே?” வரை!! மண்டே சின்ட்ரோம் சிலசமயங்களில் உண்டு, தட்ஸ் ஒக்கே!!


2.விளையாடி முடித்ததும் அவளது பாயை நான் மடிக்கும்போது உதவுகிறாள். பாயை சுருட்டி தூக்கமுடியாமல் தூக்கி கீழே விழுந்தாலும் (பாய்தான்!!)
எடுத்து ஓரமாக வைக்கிறாள்.

3. கை துடைக்கும் துண்டுகள் (நாப்கின்ஸ்), சிறிய துண்டுகளை மடித்து வைத்து விடுகிறாள். (இந்த கடமை உணர்ச்சிக்கு எல்லையில்லாமல் போய்கொண்டிருக்கிறது!உபயோகித்த துண்டுகளும் மடிக்கப் பட்டுவிடுகின்றன!!)

4.பட்டன்கள், சாக்ஸ்கள் அவளாகவே போட்டுக் கொள்கிறாள்.(ஆனால், உடை போட்டுக்கொள்ள மறுத்து ஆர்ப்பாட்டம் செய்யும் ஒருசிலதருணங்கள் விதிவிலக்கு!!) ட்ரேயில் 10 காகித தம்ளர்கள் வைத்து காபி குடிங்க என்று நீட்டுகிறாள்.

5.புத்தகங்கள் படித்தவுடன் அதற்குரிய இடத்தில் வைக்கப்ப்டுகின்றன ஒரு சில சமயங்களில்!!

7. எல்லாவற்றிற்கும் மேலாக, அவளாகவே கரண்டியினால் சாப்பிடுகிறாள்.இது, பள்ளி செல்லவாரம்பித்த ஒன்றிரண்டு வாரங்களிலிருந்து இந்தப் பழக்கத்தில் முன்னேற்றம்!!

மாண்டிசோரி அம்மையாருக்கும் அவளதுப் பள்ளிக்கும் நன்றிகள் பல!!

எனது சந்தேகங்களை தீர்த்து, சில விளக்கங்களையும் கொடுத்த புதுகைத் தென்றலுக்கும் நன்றிகள்!! அவரது மாண்டிசோரி பற்றிய பதிவுகள் எனக்கு உதவியாயிருந்தது!!

16 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அம்மா கொடுத்த க்ரேட் எத்தனைன்னு சொல்லலையே.. ? :)

AMIRDHAVARSHINI AMMA said...

மிகவும் ஆச்சர்யமாயிருக்கிறது.

Pappu - THE GREAT

எனக்கு ஒரு ஹெல்ப்
West Saidapet அதன் சுற்றுவட்டாரத்தில் ஏதாவது மாண்டிசோரி முறை கல்விக்கூடம் இருப்பின் தெரியப்படுத்துங்கள். ப்ளீஸ்

நிலா said...

http://dheekshu.blogspot.com/ இங்கயும் மாண்டிசோரி பத்தி கொஞ்சம் பாருங்க.

தாமிரா said...

கிரேட் கிளிப்பிங்ஸ். (ஆமா ரொம்ப பிஸியா? நம்ப கடைக்கு வர்றமாதிரியே தெரியலையே..)

Little bud said...

ஆமாம் சந்தனமுல்லை. தீஷு கூட மாண்டிசோரி பள்ளிக்கு தான் போகிறாள். நான்கு மாதங்களில் நல்ல மாற்றம். தானே சாப்பிடுதல், சாப்பிட்ட பின் மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை Trashயில் போட்டு விட்டு spoon, plate மட்டும் sinkயில் போடுதல், விளையாண்டு முடித்தவுடன் எடுத்த இடத்தில் வைப்பது போன்ற நிறைய மாற்றங்கள் அவளிடம். Thanks to Montessori.

கானா பிரபா said...

பப்பு அடுத்த டெர்மிலும் கலக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ;)

ஆயில்யன் said...

பப்பு நல்லா படிக்கணும் என்னிய மாதிரி என்ன ஒ.கேவா?

rapp said...

எங்கக்கா பையன், இங்கிருக்கும்போது சீக்கிரம் போகனும்னு அந்த சிலம்பு சலம்புவான், ஆனா லீவ் போட்டா ஜாலியா இருப்பான். இப்போ அங்கு
(அரிசோனா) போனதும், பள்ளிக்கு போயே ஆகனும்னு அழரானாம்.

//கை துடைக்கும் துண்டுகள் (நாப்கின்ஸ்), சிறிய துண்டுகளை மடித்து வைத்து விடுகிறாள். (இந்த கடமை உணர்ச்சிக்கு எல்லையில்லாமல் போய்கொண்டிருக்கிறது!உபயோகித்த துண்டுகளும் மடிக்கப் பட்டுவிடுகின்றன!!)//
பப்புவுமா, நாங்களும் கொஞ்ச நாள் இந்தக் காமடியால் பாடுபட்டோம்:):):)

//எல்லாவற்றிற்கும் மேலாக, அவளாகவே கரண்டியினால் சாப்பிடுகிறாள்.இது, பள்ளி செல்லவாரம்பித்த ஒன்றிரண்டு வாரங்களிலிருந்து இந்தப் பழக்கத்தில் முன்னேற்றம்!!
//

ஆமாம் மிகச் சரியாக சொல்லி இருக்கீங்க, அவங்க எப்படி பழக்கப் படுத்தராங்கன்னே, தெரியறதில்லை. ஆனால் குழந்தைகள் அவ்ளோ க்யூட்டா தானே சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்:):):)

எனக்கு உங்களை பார்த்து அவ்ளோ ஆச்சர்யமா இருக்கு, ஏன்னா நீங்க பப்புவோட டைரியை அவ்ளோ அழகா வழங்கி வருகிறீர்கள்:):):) சூப்பர்:):):)

rapp said...

//அம்மா கொடுத்த க்ரேட் எத்தனைன்னு சொல்லலையே.. ? :)//


என்னங்க முத்து இப்படி கேக்குறீங்க, நீங்க, சந்தனமுல்லை எல்லாரும் நூத்துக்கு நூறு தானே கொடுப்பீங்க:):):)

புதுகைத் தென்றல் said...

மாண்டிசோரி முறைக்கல்வியின் சிறப்பே அதுதான்.

எண்ணும், எழுத்தும் மட்டும் கற்பது கல்வியல்ல, நடைமுறை வாழ்க்கைக்கு தயார்படுத்துதலும் தான் கல்வி.

பப்புவுக்கு வாழ்த்திற்கு. இவற்றை எங்களுக்கு அறியத்தந்த பப்புவின் அம்மாவிற்கு ஷ்பெஷல் வாழ்த்து.

SK said...

சூப்பர் பதிவு

சூப்பர் கொழந்தை

சூப்பர் அம்மா.

ராப் சொன்னா போல அழகா ஒரு டைரி மாதிரி எழுதிட்டு வர்றீங்க. அழுதரத்தை விட்டுடாதீங்க. கோவம் எதாவது வந்த என்ன போல பதிவு எல்லாம் அழிச்சுடதீங்க. :(

சந்தோஷ் = Santhosh said...

பப்பு வோட டைரி ரொம்ப interesting ஆக இருக்கிறது படிக்க.. தொடர்ந்து எழுதிட்டு வாங்க :))..

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி! ராப் சொல்லிட்டாங்களே கரெக்டா! நான் வளரும்போது எங்க அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தாங்க. சோ அப்படி இருக்க வேண்டாம்னு பார்க்கறேன், கிரேட் விஷயத்தில!! :-))

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா, தனிமடலில் தொடர்பு கொள்வோம்.


நன்றி நிலாக்குட்டி!! தீஷூவோட பதிவுகள் ரொம்ப இன்ப்ர்மேட்டிவ்வா இருக்கு இல்லையா!!

நன்றி தாமிரா, ஊருக்குப் போயிருந்தேன், அதான் படிக்க முடியல!

நன்றி லிட்டில் பட். மாண்டிசோரி சான்ஸே இல்லை. ஆனா ஏன் எல்லா பள்ளிகளிலும் அதை பாலோ பண்ண மாட்டேங்கறாங்க?!

சந்தனமுல்லை said...

நன்றி கானாஸ்!
நன்றி ஆயில்ஸ்..பெரிய பாண்டிYஅ கரெக்டா பாலோ பண்றீங்களே..:-)

நன்றி ராப்!! அதான் மாண்டிசோரி பள்ளியின் மகிமை..:-). இப்போ இப்படி இருக்காங்க..பெரிசாக பெரிசாகதானே தெரியும் அதான் இப்பவேஎ எழுதி வைச்சிக்கிட்டா, பின்னாடி காட்டலாம் இல்லை. ;-)
உங்க அக்கா பையனுக்கு ஒரு ஹை!!

நன்றி புதுகை. உங்க மாண்டிசோரி பதிவுகளை இன்னும் தொடருங்க!! எங்களுக்ககு உதவியாயியிருக்கும்.

சந்தனமுல்லை said...

நன்றி sk. ரொம்ப புகழுறீங்க..சூப்பர் அம்மாவான்னு போக போகத்தான் தெரியும். :-)

நன்றி சந்தோஷ்!! தொடர்ந்து வாங்க பதிவுக்கு!!

விக்னேஷ்வரி said...

குழந்தைனா, இம்சைனு நினைச்சிட்டு இருந்த எனக்கு, உங்க பதிவுகளைப் படித்தே குழந்தை ஆசை வருகிறது. ஐ லவ் பப்பு.