Tuesday, October 28, 2008

பிறந்த நாள் கலாட்டா!

பப்புவின் பிறந்தநாளுக்கான எங்களதுத் திட்டங்கள்,

1. ஒரு விளையாட்டு
2. இரு போட்டோ ஆல்பங்கள்
3. மூன்று கொண்டாட்டங்கள்

ஒரு விளையாட்டு:

பப்புவுக்காக நாங்கள் வாங்கிய பரிசினை சுவாரசியமாய் அவளிடம் கொடுக்க் நினைத்தோம்.அதனால், treasure hunt with two clues. இரண்டாவது துருப்புச் சீட்டு, பரிசுப் பொருளைக்கான இடத்தைக் குறிக்கும்.
பொம்மையின் கையில் இருக்கும் முதல் சீட்டினுள் சைக்கிளின் படம் இருக்கும். அவள் சைக்கிளிடம் செல்ல வேண்டும்.சைக்கிள் கூடையில் இருக்கும் சீட்டு, வீட்டினுள் இருக்கும் ஒரு அலமாரியின் படம் கொண்டிருக்கும்.அந்த அலமாரி அவளது விளையாட்டுப் பொருட்கள் வைக்குமிடம். (அந்த இடத்தை தேர்ந்தெடுக்கக் காரணம், she hardly uses that place! :-)))இதுதான் ப்ளான். நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியது! இன்னும் கொஞ்சம் எப்பெக்டிவ்வாகவும் இருந்திருக்கலாம். (so, i am reserving this game with more clues for next year too!)


லேண்ட்மார்க் கவரில் இருக்கும் இருக்கும் பரிசுபொருள், ஒரு ட்ரெயின் செட்! அவளுக்கு ட்ரெயின், மற்றும் கார் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு.அந்த செட் அவளுக்கு பிடித்திருந்தது. பிற்காலத்தில் உண்மையை அவள் சொல்லக்கூடும் ;-)!! 28அம் தேதி அவளுக்கு பள்ளி இருந்ததாலும், ட்ரெய்னை செட் செய்து விளையாடுவாள் என்ற காரணத்தினாலும், birthday eve அன்று இந்த ஈவெண்ட் நடந்தது !!

இரண்டு ஆல்பங்கள்

”The terrific twos” - இதுதான் ஒரு ஆல்பத்தின் பெயர். கடந்து சென்ற இரண்டாம் வருடத்தில்/வயதில் அவள் செய்த ”எல்லா முதல்”கள்.. முதல் விசிட் டூ த ஜூ, தனியாய் விளையாடின முதல் சறுக்கல் etc! இந்த ஆல்பத்திற்கு இன்ஸிபிரேஷ்ன் நிலா பாப்பாவின் போட்டோஸ் தான்! நன்றி நிலா பாப்பாவிற்கும், போட்டோ டிப்ஸ் வழங்கிய நிலா அப்பாவிற்கும்! போட்டோக்கள் எடுத்ததென்னவோ, போட்டோக்ராபர்தான். ஆனால், www-வில் தேடி, எக்ஸ்க்ளூசிவ் குழந்தைகள் போட்டோஸ் தேடி, ஐடியா கொடுத்து, நன்றாக வந்திருக்கிறது ஆல்பம்!!
படங்கள் அடுத்த போஸ்டில்!!


இன்னொரு ஆல்பம், எல்லா உறவினர்களோடும் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களோடும்! படங்கள் எடுத்தாகிவிட்டது, album is under making now.


மூன்று கொண்டாட்டங்கள்

மூன்று வயது, மூன்றுக் கொண்டாட்டங்கள் என்றும் கொள்ளலாம்! (நான்கு வயது என்றால், நான்கு கொண்டாட்டங்கள் என்று அர்த்தம் அல்ல!! ஆயில்ஸ், உடனே தான் எத்தனை கொண்டாட வேண்டுமென்று கணக்குப் போடவேண்டாம்!)


ரோஷினி ஹோம் @ பள்ளிக்கரணை

ரோஷினி ஹோம், அவ்வப்போது/ இயலும்போது கம்பெனி மூலமாகவும், எங்கள் அலுவலகத்தின் பெண்கள் க்ரூப்பின் மூலமாகவும் உதவி வரும் ஒரு
குழந்தைகள் காப்பகம். நாற்பது சிறார்கள், தங்கி படித்து வருகிறார்கள்! 3 வயதிலிருந்து 18 வயது வரை! ஞாயிறுக்கிழமை செல்வதாக ஏற்பாடு!
ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு சென்றோம். வீட்டில் இரு டீச்சர்கள் இருக்கும்போது சிறார்களை எண்டெர்டெயின் செய்யும் கவலை விட்டது! பெரிம்மா, சிறார்களுக்கான் விளையாட்டுக்கள் (டீம் பில்டிங் மாதிரியான) நடத்த எல்லாரும் குதித்து விளையாட, கலகலப்பாய் இருந்தது ஹோம்! யாரும் தயக்கம் இல்லாமல் எங்களிடம் ஒட்டி கொண்டனர், விளையாட்டுக்கள், கைத்தட்டல்கள் என்று உற்சாகமாயிருந்தது! பப்புவிற்கு அவ்வளவாய் புரியாவிட்டாலும், எல்லாரும் ஓடும் போது ஓடிக்கொண்டிந்தாள்! பின்னர், அம்மா, சிறார்களுக்கான பாடல்கள் பாடி ஆக்ச்ஷனுடன் கற்றுத் தந்தார்! மிகவும் ஆர்வமாக கற்றுக் கொண்டனர்! அம்மா பாடல்கள் கற்றுக் கொடுக்கும்போது, உணவுப் பண்டங்களை அடுக்குவதில் இருந்த்தால், சரியான படம் இல்லை! :-(


விளையாட்டுகள் முடிந்து, "பாப்பா பேரு குறிஞ்சி மலர், நாளன்னிக்கு பாப்பாவுக்கு பர்த் டே, அதை உங்க கூட சேர்ந்து கொண்டாடலாம்னுதான் வந்திருக்கிறோம்-"என்று சொன்னபோது அனைவரும் ஹேப்பி பர்த் டே பாடினர்! நெகிழ்வாய் இருந்தது..பாடல் முடிந்தபோது ஒரு சிறுவன் "பாப்பாவுக்கு எத்தனை வயது?" என்று கேட்க "மூன்று" என்றதும்
மூன்று முறை கை தட்டினர்! ஏனோ கண்கள் பனித்தன!!

கப்கேக்குகளும், உருளைகிழங்கு சிப்ஸ் மற்றும் மாம்பழம், ஆரஞ்சு பழ ஸ்க்வாஷ்-ம் மெனு!அதன்பின், அவர்கள் ஒரு சிறு நாடகம் மற்றும் பிரமிடு, யோகா செய்துக் காட்டினர்! வாழ்த்திவிட்டு வீடு திரும்பினோம்! நிறைவாய் இருந்தது மனது, அதே சமயத்தில் பாரமாயும்!


பள்ளி :

28ஆம் தேதி பட்டுப் பாவாடையுடன் காலை பள்ளி! பப்பு பள்ளியில் நோ ஸ்வீட்ஸ், நோ சாக்லேட்ஸ்! ஏதாவது ஹெல்த்தியான உணவுப் பொருட்கள் மட்டும்!! ம்ம்..சீட்லெஸ் பேரீச்சம் பழம்! இதுவும் வித்தியாசமாகத்தான் இருந்தது! :-).


வீடு:உறவினர்கள் சூழ, வெகு ஆவலாய் எதிர்ப்பார்க்கப் பட்ட டோரா கேக் வெட்டப்பட்டது!
வெட்டும் வரை அதை பாதுக்காப்பது பெருங்காரியமாய் இருந்தது. ஐ டோரா கண்ணு, டோரா வாய் என்று கையை விட்டு எடுக்கப் போய்...kids are always kids..:-)!
காம்பவுண்டில் இருக்கும் குழந்தைகள் அனைவரோடும் பட்டாசு வெடித்து, இப்படியாக முடிந்தது, மூன்றாம் பிறந்தநாள்!!


பப்பு,


உன் வருகைக்குப் பின் மிகவும் சுவாரசியமாய் இருக்கிறது எங்கள் வாழ்க்கை, முன்பை விடவும்! உன் சுட்டித்தனமான பேச்சுக்களாலும், செய்கைகளாலும், எங்களை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறாய் நீ! சில சமயங்களில் உன் “ஏன்” களாலும்!!

பப்பு, நீ மிகவும் அன்பானவள்..உன் வயதுக்கேயுரிய குறும்புகள் நிறைந்தவள்..ஆர்வம் படைத்தவள், இவை எல்லாவற்றினால் மட்டுமே நான் உன்னை நேசிக்கவில்லை, உண்மை என்னவெனில், இவற்றில் எதுவும் இல்லாமற் போனாலும் உன்னை நேசிப்பேன்!!

சில சமயங்களில் உன் வயதை மீறிய பொறுமையையும், வளர்ச்சியையும் உன்னிடம் நான் எதிர்பார்த்திருக்கிறேன்! மன்னித்து விடு!

வாழ்த்துக்கள், பப்பு, இன்னும் நிறைய குறும்புகளோடும், பள்ளியில் நிறைய நண்பர்களோடும் இந்த வருடம் உனக்கு எல்லா செல்வங்களையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்!

இனி வரும் வருடத்தில், ஒருவருக்கொருவர் இன்னும் கவனமாய் உற்றுக் கேட்டுக்கொள்வோம்..நீ என்ன சொல்ல வருகிறாய் என நானும், நான் சொல்ல வருவதை நீயும்..நிறைய விளையாடுவோம்...நிறையக் கற்றுக் கொள்வோம்!!


அம்மா!

31 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டு தங்கச்சி!

கலக்கல்ஸ் :)))

ஆயில்யன் said...

//பப்புவுக்காக நாங்கள் வாங்கிய பரிசினை சுவாரசியமாய் அவளிடம் கொடுக்க் நினைத்தோம்.அதனால், treasure hunt with two clues. இரண்டாவது துருப்புச் சீட்டு, பரிசுப் பொருளைக்கான இடத்தைக் குறிக்கும்.//

பப்புவை நீ எம்புட்டு கஷ்டப்படுத்தியிருக்கிற தங்கச்சி ?!!!

ஆயில்யன் said...

//The terrific twos” - இதுதான் ஒரு ஆல்பத்தின் பெயர். கடந்து சென்ற இரண்டாம் வருடத்தில்/வயதில் அவள் செய்த ”எல்லா முதல்”கள்.. முதல் விசிட் டூ த ஜூ, தனியாய் விளையாடின முதல் சறுக்கல் etc! இந்த ஆல்பத்திற்கு இன்ஸிபிரேஷ்ன் நிலா பாப்பாவின் போட்டோஸ் தான்//

மீ டூ வில் டிரையிங்க் தங்கச்சி பட் அதுக்கு முன்னாடி நான் இந்த ஆல்பத்தை பாக்கணும்!

(என்னோட ஆல்பத்தை ரீலிசு பண்ணினா அப்புறம் ஒஹோதான்!)

ஆயில்யன் said...

//ஆனால், www-வில் தேடி, எக்ஸ்க்ளூசிவ் குழந்தைகள் போட்டோஸ் தேடி, ஐடியா கொடுத்து, நன்றாக வந்திருக்கிறது ஆல்பம்!!
படங்கள் அடுத்த போஸ்டில்!!//மீ டூ

தேடல் தொடங்கியதேஏஏஏஏஏஏஏஏஏ

ஆயில்யன் said...

//ரோஷினி ஹோம், அவ்வப்போது/ இயலும்போது கம்பெனி மூலமாகவும், எங்கள் அலுவலகத்தின் பெண்கள் க்ரூப்பின் மூலமாகவும் உதவி வரும் ஒரு
குழந்தைகள் காப்பகம். நாற்பது சிறார்கள், தங்கி படித்து வருகிறார்கள்! 3 வயதிலிருந்து 18 வயது வரை! ஞாயிறுக்கிழமை செல்வதாக ஏற்பாடு!//


குட்!
வெரிகுட்!

பின்னே தங்கச்சி ஆச்சே கொஞ்சமாச்சும் அண்ணனோட ஃபீலிங்க்ஸ் இருக்கும்ல :))

வாழ்த்துக்கள்ம்மா!

ஆயில்யன் said...

தங்கச்சி!

உன் வருகைக்குப் பின் மிகவும் சுவாரசியமாய் இருக்கிறது என் வாழ்க்கை, முன்பை விடவும்! உன் பேச்சுக்களாலும், செய்கைகளாலும், என்னை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறாய் நீ!


வாழ்த்துக்களுடன்...!

ஆயில்யன் said...

//(நான்கு வயது என்றால், நான்கு கொண்டாட்டங்கள் என்று அர்த்தம் அல்ல!! ஆயில்ஸ், உடனே தான் எத்தனை கொண்டாட வேண்டுமென்று கணக்குப் போடவேண்டாம்!)//

அதான் எப்பவோ போட்டாச்சே!

கொண்டாட்டம் கொஞ்சம் அதிகமா இருக்கு! நமக்கு அம்புட்டு கொண்டாட்டம் கொண்டாடுற அளவுக்கு பட்ஜெட் தாங்காது தங்கச்சி! - கணக்கு போட்டு பார்த்தாச்சு :)))

புதுகை.அப்துல்லா said...

கடந்த வருடங்களைப் போல் அல்லாமல் இந்தவருடம் பப்புவின் பிறந்தநாள் உடல் ஆரோக்கியத்தோடும், மகிழ்வோடும் நடந்ததில் மிக,மிக,மிக மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்டா செல்லம் :)

சந்தோஷ் = Santhosh said...

பப்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. கொஞ்ச லேட்டானாலும் லேட்டஸ்டா சொல்லியிருக்கோம்..ஹிஹி..

ரொம்ப வித்தியாசமா பிறந்த நாளை கொண்டாடி இருக்கீங்க.. :)

AMIRDHAVARSHINI AMMA said...

No words to express my feelings.

Happy birthday Pappu

ரொம்ப நல்லா பப்புவோட பர்த்டே கொண்டாடி இருக்கீங்க.

மறுபடியும் எனக்கு ஒரு வழிகாட்டியாய் இருக்கிறது இந்த பதிவு. நன்றி முல்லை

முத்துலெட்சுமி-கயல்விழி said...

விமரிசையா நடந்திருக்கு பிறந்த நாள்.. வாழ்த்துக்கள்.. :)

அமுதா said...

Belated wishes to pappu.

ஜீவன் said...

நல்ல முறையில் கொண்டாடி இருக்கீங்க
குழந்தைக்கு வாழ்த்துக்கள்!!

தமிழ் பிரியன் said...

பப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

பிறந்தநாளை மிகவும் வித்தியாசமா கொண்டாடி இருக்கீங்க.. அதற்கு சிறப்பு வாழ்த்துக்கள் பப்புக்கும், பப்பம்மா, பப்பப்பாவுக்கும்.. :)

தமிழ் பிரியன் said...

//(நான்கு வயது என்றால், நான்கு கொண்டாட்டங்கள் என்று அர்த்தம் அல்ல!! ஆயில்ஸ், உடனே தான் எத்தனை கொண்டாட வேண்டுமென்று கணக்குப் போடவேண்டாம்!)//
நானும் கை விரல்களை எல்லாம் மூன்று முறை வரை எண்ணிப் பார்த்தேன்... ம்ஹூம் பட்ஜெட்டில் பெரிய வேட்டியே விழும் போல இருக்கு.. ;)))

Anonymous said...

Best wishes, belated greetings to Pappu

- Chandra

லக்கிலுக் said...

Sorry..

Late Bday wishes to Pappu.

Late Diwali wishes to Pappu's family

warm regards
lucky

ராமலக்ஷ்மி said...

நாங்களும் கலந்து கொண்ட நிறைவைத் தந்து விட்டது பதிவு.

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ்...நீங்கதான் பர்ஸ்ட்டு !!

//பப்புவை நீ எம்புட்டு கஷ்டப்படுத்தியிருக்கிற தங்கச்சி ?!!!//

இது எல்லாம் ஓவர்!! இருக்கற குருவி மூளையை உபயோகிச்சி,..அதுவும் நானே வரைஞ்சு (அலமாரி மட்டும்!!)ம்ம்..ஹூம்!!

//மீ டூ வில் டிரையிங்க் தங்கச்சி பட் அதுக்கு முன்னாடி நான் இந்த ஆல்பத்தை பாக்கணும்! //

அடக் கடவுளே!! அனுப்பறேன்!

வாழ்த்துக்களுக்கு நன்றி அப்துல்லா,
சந்தோஷ்,அமித்து அம்மா,முத்துலெட்சுமி,ஜீவன்,அமுதா,தமிழ்பிரியன்,chandra,லக்கி, ராமலஷ்மி!

தீஷு said...

Hi Sandamullai, Excellent post. Taking kids to some homes teaches them to share, to think about their blessed life etc. We are planning to follow this every year once we are back. Once again, wishes to Pappu!!!

Sorry to type in English.

சந்தனமுல்லை said...

நன்றி லக்கி!

பிரேம்குமார் said...

முல்லை, மிகவும் மகிழ்ச்சியடைய செய்தது பதிவு. மிக அற்புதமாய் கொண்டாடியிருக்கிறீர்கள். கூடவே பலருக்கு நல்லதொரு முன்னுதாரணமாகவும் இருப்பீர்கள் இந்த பதிவு மூலம்.

அப்புறம் ஒன்னு, இந்த பதிவே பாப்பாவுக்கு சிறப்பான ஒரு பிறந்த நாள் பரிசு தான் :)

குட்டிப் பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

பிரேம்குமார் said...

:)

SK said...

First class. Excellent.

Belated Birthday wishes. Please motivate the same. This is what younger generation needs to learn.

புதுகைத் தென்றல் said...

super post.

I am very happy that u have enjoyed each and everything.

Papu is blessed to have a sucha dedicated mother.

Best wishes to papu and her amma.

Thamarai said...

Belated birthday wishes to PAPPU..

it feels really good on reading about your lil adventures in motherhood. I hope pappu had a fantastic birthday..

நந்து f/o நிலா said...

ஹையோ, இவ்ளோ லேட்டா இந்த போஸ்ட்ட பாக்கறேனே. :(

இன்ஸ்ப்ரேஷனுக்கு நிலா ஓகேதான். ஆனா நான் கொடுத்ததெல்லாம் ஒரு டிப்ஸ்ன்னு நன்றி சொல்றீங்களே என்னன்னு சொல்ல?

உண்மையில் பப்புவைப் பற்றி நீங்கள் எழுதியவைதான் ரியல் ஆல்பம். பொக்கிஷம்.

ரொம்பவே லேட்டா சொன்னாலும் பரவாயில்ல.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா பப்புகுட்டி.

எழுத்தில் கொண்டு வரும் பப்புவுடனான உங்கள் உணர்வுகளை படிக்கும் ஒவ்வொரு பதிவிலும் ஏதேனும் ஒரு இடத்திலாவது எனக்கு மனம் நெகிழ்வதை உணரமுடிகிறது.

ஹாட்ஸ் ஆஃப் முல்லை.

சந்தனமுல்லை said...

நன்றி தீஷூ,பிரேம்,sk,புதுகைதென்றல், தாமரை,நிலா அப்பா!

கானா பிரபா said...

அடடா மிஸ்பண்ணிட்டேனே தங்கச்சி


பப்பு

உன் வருகைக்குப் பின் மிகவும் சுவாரசியமாய் இருக்கிறது எங்கள் வலையுலகம், முன்பை விடவும்! உன் சுட்டித்தனமான பேச்சுக்களாலும், செய்கைகளாலும், எங்களை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறாய் நீ! சில சமயங்களில் உன் “ஏன்” களாலும்!!

Anonymous said...

இன்று உங்களின் அனைத்து பதிவுகளையும் படித்தேன். உங்கள் குழந்தை பற்றி நன்றாக எழுதி இருக்குறீர்கள். உங்கள் குழந்தை கேள்வி கேட்பதை பற்றி படிக்கும் போது என் 5 வயது மகன் சிறு வளர் குறைபாட்டால் இன்னமும் கேள்வி கேட்க தெரியாமல் இருப்பது நினைவுக்கு வந்தது. நான் ஆண் என்றாலும் கண்களின் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை. காத்திருக்கிறேன் என் மகன் என்னிடம் கேள்வி கேட்கும் நாட்களுக்காக. .- இப்படிக்கு ஒரு குற்றமும் செய்யாமல் தன மகனை ஏன் இப்படி கடவுள் படைத்தான் என்று நினைத்து தினமும் அழும் ஒரு தகப்பன்.