Tuesday, October 14, 2008

சினிமா சினிமா.....என்னோட ரெண்டு பைசா!!

சினிமா பற்றி எங்கிட்டே கேட்டிருக்கிற ஆயில்ஸை நினைச்சா எனக்கு அழறதா, சிரிக்கறதான்னுக் கூட தெரியல..ஏன்னா எனக்கும் சினிமாவுக்குமான சம்பந்தம் அப்படி!
சினிமா/சினிமாப் பாடல்கள் பொதுவாக எங்கள் வீட்டில் தடா! அதுவும் தியேட்டருக்கு போவது பற்றி கேட்கவே வேண்டாம். ”அந்த மூனு மணிநேரத்தில நீ எவ்வளவோ செய்யலாம்(ம்ம்..என்னத்தை செஞ்சி,அதை விடுங்க,,வேற கதை!!),மரத்தை சுற்றி அவனுங்க
டூயட் பாடுறத பார்க்கணூமா” என்று எங்கள் வீட்டினரால் அது ஒரு நல்ல காரியமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கட்டுப்பாட்டினாலேயே,நான் ஹிந்திக்கு மாறினேன்..ஏன்னா, தமிழ் படம் பார்த்ததான திட்டுறாங்க, ஹிந்தின்னா விட்டுவாங்க..ஆனா இதைவிட மோசமா இருக்கும் அதில, ஆனா வீட்டுல இருக்கறவங்களுக்குப் மெயினா பாட்டிக்குப் புரியாதே!!இதுதான், நான் இந்திப் பாடல்களை/ஆல்பங்களை ரசிக்க முதல் காரணம். பள்ளி முடிக்கறவரைக்கும் அவங்கதான் என் எதிரி. ஆனா, இப்போதான், அதுவும் நான் ஒரு குழந்தையோட எதிர்காலத்துக்கு பொறுப்பாளின்னு ஆனதுக்கு அப்புறம்தான், அவங்க நிலைமை புரியுது!!

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்

அதாவது எனக்கு ரொம்ப சின்ன வயதில..அநேகமா இரண்டு வயது இருக்கும்போது சகலகலா வல்லவன், தியேட்டரில் பார்த்ததாக என் பாட்டி சொல்கிறார்கள். ஏன்னா, அப்போ அந்த சினிமாவால எனக்கு எந்த பாதிப்பும் வரக் கூடிய பாதகம் இல்லைன்னு நினைச்சிருக்கலாம். அப்போ நாங்க ஆம்பூரில் ஐந்து குடித்தனக்காரர்கள் இருந்த வீட்டில் இருந்தோம்.அப்போ வேலைக்கு போகிறவர்களை அனுப்பிவிட்டு வீட்டிலிருக்கும் பெண்கள் எல்லாருமாக மாட்டினிக் காட்சிக்குக் கிளம்பிப் போயிருக்கிறார்கள்.

ஆனால் நினைவு தெரிந்து பார்த்த சினிமா என்றால், மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்தது, அதுவும் ஐஸ்கிரீம் மற்றும் பலூன் பிடிக்க கை நீட்டியது மங்கலாக நினவில் இருக்கிறது. அதிலும் முன்சீட்-டில் இருப்பவர்கள் பிடித்துவிட போகிறார்கள் என்று எண்ணியது அதைவிட நன்றாக நினைவிருக்கிறது.

அந்த வயதில் என்ன பீல் பண்ணினேன் என்றால், சொன்னால் சிரிப்பு வரும்..நேராகவே யாராவது வந்து பேசுவார்கள், அப்புறம் போய் வேறே ட்ரெஸ் செய்துக் கொண்டு வருவார்கள் என்றுதான் நீண்டநாள் நினைத்திருந்தேன். அதுவும், ஃப்ளாசஷ்பாக் வந்ததென்றால், அவர்கள் சின்ன வயதாயிருக்கையிலே எடுத்துவிடுவார்கள் போல என்றும் மனதிற்கும் எண்ணியிருக்கிறேன். ஆனால்,இதுவரை இந்த நினைவை என் கல்லூரி நண்பர்கள் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்தததில்லை. (இந்த மாதிரி மொக்கைத்தனமாக யோசிப்பதில் நான் கில்லாடியாக்கும்!!)

மை டியர்...க்கு அப்புறம் ஒரு ஆங்கில சினிமா..டாம் சாயர், ஹல்வா வாலா ஆகையா பாடல் வரும் இந்தி படம் இவை பார்த்து அடுத்ததாக நான் தியேட்டரில் பார்த்த படம்
அஞ்சலி!!அஞ்சலிக்கு அப்புறமா நான் தியேட்டரில் போய் பார்த்தது ஜூராசிக் பார்க்!! எவ்ளோ பெரிய கேப்!!இப்போது புரிந்திருக்குமே, எங்கள் வீட்டைப் பற்றி!!அதே தான்..சினிமா பார்த்து பசங்க கெட்டுப் போயிடுவாங்க என்ற மைண்ட் செட் உள்ள ஒரு நடுத்தரக் வர்க்க குடும்பம்!!

ஆனால் இதற்கு எல்லாம் சேர்த்து கல்லூரி காலத்தில் ஈடு கட்டிவிட்டேன்!! வாரத்துக் ரெண்டு சினிமா பார்த்து பார்த்து சினிமாவே பிடிக்காம போனது வேறு கதை!

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அஞ்சாதே! உறவினர்கள் யாராவது வந்தால் பப்புவை விட்டுவிட்டு முகிலுடன் சத்யம் தியேட்டரில் நைட் ஷோ!

ப்லாக் ரெவ்யூ பார்த்துவிட்டு அல்லது ஒரு சில இயக்குநர்களின் படம் என்றால் பார்க்கப் போவது என்றாகி விட்டது!பெரும்பாலும் லக்கியின் ரெவ்யூவிற்கு எங்கள் வீட்டில் மரியாதை உண்டு..ஆனால் இப்போதெல்லாம் லக்கி மொக்கைப் படங்களுக்கும் நல்ல கமெண்ட் கொடுத்துவிடுகிறார்! அஞ்சாதே பற்றி நல்லா எழுதுவாரென்று நினைத்தேன்,ஆனால் கிழிகிழியென்று கிழித்துவிட்டார்! :-).

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ம்ம்..டவுன்லோடு செய்து பார்த்த ஆண்பாவம். சிரிசிரியென்று சிரித்தேன். எந்த மாதிரியும் பொல்யூஷனும் (வன்முறை, வுமென் எக்ஸ்ப்ளாய்ட்டேஷனோ என்று பொருள் கொள்க!) இல்லாத படம். ஒரு சண்டைக் காட்சி வரும், அதுவும் சிரிப்பாகவே இருக்கும்!

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

பருத்திவீரன்! பார்த்து ரெண்டு மூன்று நாட்களுக்கு சரியாக தூக்கம் இல்லாமல், அமீருக்கு லெட்டர் எழுதப் போறேனென்று, முகிலிடம் புலம்ப வைத்தது.
மடிப்பாக்கம் வேலன்/வெற்றிவேலனோ என நினைக்கிறேன்! அப்புறம் ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை! தங்கரின் படங்கள் எதையும் மிஸ் பண்ணக் கூடாதென எண்ணியிருக்கிறேன்.

அப்புறம் நகைச்சுவைக்காக, தில்லுமுல்லு, சென்னை-28 என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

ரஜினி மன்னிப்பு கேட்டது!!

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இப்போ ஆனந்த விகடனில் என்ன இருக்குன்னு நினைக்கறீங்க..சினிமா, சினிமா நடிக/நடிகையர் பற்றி செய்திகள்தானே! சினிமாவையே வேறு வடிவத்தில் பார்ப்பது
போல் இருக்கிறது சில நேரம்! எங்கள் வீட்டில் இருக்கும் பழைய ஆ.வி.யை கம்பேர் செய்யும்போத்யு இன்றைய ஆ.வியில் சினிமா தூக்கலாக இருப்பது உண்மை!!

தமிழ் சினிமா இசை?

இதுவும் நான் சினிமா பார்த்த கதைதான். அதாவது ஒன்று நினைவு தெரியாத வயதாயிருக்கையில் வாங்கிய கேசட்டுகள்/ஒலித்த பாடல்கள். அதுவும் உனக்கு நான், எனக்கு நீ என்று பாடல்கள் வந்தால் அது கட்.ஏதோ ஒளியும் ஒலியும் புண்ணியம் கட்டிக்கொண்டது!ஆனால், ஒருசில பாடல்கள் என் சித்தப்பா போட்டுக் கேட்பார் இது ஒரு பொன்மாலை பொழுது...மாதிரியான ஹிட்ஸ். ஆனால், வீட்டில் எனக்குத் தெரிந்து ஒலித்தவை போனி எம், அபா, எரப்ஷன், பீட்டில்ஸ் இன்னபிற. ஆனால், நான் வளர ஆரம்பித்த பின், எங்கள் வீட்டு பெரியவர்கள் சினிமா/பாட்டு பார்த்த/கேட்டது மில்லை விட்டதுமில்லை... :(..அதனால்தான் இப்போது ரேடியோஸ்பதியின் ஒரு பதிவினை விடுவதில்லை...ஆனால் வேலைக்கு வந்தபின்/திருமணத்திற்கு பின் கேட்பவை முழுவதும் இந்த ம்யூசிக் சானல்கள்தான்!

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இந்தியில் ப்ளாக், தாரே..! ஆங்கிலத்தில சவுண்ட் ஆஃப் ம்யூசிக், கான் வித் த விண்ட். சவுண்ட் ஆஃப் ம்யூசிக் எப்பவுமே பார்க்கப் பிடிக்கும்.
அப்புறம் ஷாருக்கின் படங்கள் in 90s!

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

அப்படியெல்லாம் எதுவும் இல்லாம இருக்கறதே, தமிழ் சினிமா மேம்பட உதவும்!


தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதுக்கு குசும்பனோட பதில்தான் ரொம்பப் பொருத்தம். ரொம்ப சிரிச்சேன், அதைப் படிச்சிட்டு!

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

:-)). நான் 13 வருடங்களாக(என் பால்ய காலத்தை) வாழ்ந்த வாழ்வை எல்லாருமே வாழ்வீர்கள்! தமிழில் நிறைய இசை ஆல்பங்கள் வரலாமென எதிர்பார்க்கிறேன். ஆல்பத்தின் பாடல்களிலியே ஒரு சினிமாவை அடக்கிவிடலாம்!

அழைத்த ஆயில்ஸுக்கு நன்றி! நான் அழைக்கும் ஐந்து பேர்!!

அமிர்தவர்ஷினி அம்மா
தாமிரா
பிரேம்குமார்
சிநேகிதி
அமுதா

27 comments:

ஆயில்யன் said...

தங்ககோச்சி மீ த பர்ஸ்ட்டூ :))

ஆயில்யன் said...

//அந்த வயதில் என்ன பீல் பண்ணினேன் என்றால், சொன்னால் சிரிப்பு வரும்..நேராகவே யாராவது வந்து பேசுவார்கள், அப்புறம் போய் வேறே ட்ரெஸ் செய்துக் கொண்டு வருவார்கள் என்றுதான் நீண்டநாள் நினைத்திருந்தேன். அதுவும், ஃப்ளாசஷ்பாக் வந்ததென்றால், அவர்கள் சின்ன வயதாயிருக்கையிலே எடுத்துவிடுவார்கள் போல என்றும் மனதிற்கும் எண்ணியிருக்கிறேன். ஆனால்,இதுவரை இந்த நினைவை என் கல்லூரி நண்பர்கள் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்தததில்லை. (இந்த மாதிரி மொக்கைத்தனமாக யோசிப்பதில் நான் கில்லாடியாக்கும்!!)///

தங்கச்சி உன்னிய நினைச்சா எனக்கு நொம்ப பெருமையா இருக்கும்மா!

ஆயில்யன் said...

//ஆனால் இதற்கு எல்லாம் சேர்த்து கல்லூரி காலத்தில் ஈடு கட்டிவிட்டேன்!! வாரத்துக் ரெண்டு சினிமா பார்த்து பார்த்து சினிமாவே பிடிக்காம போனது வேறு கதை!//

அதானே பார்த்தேன்! நானே இவ்ளோ நேரமும் கை காலெல்லாம் கிள்ளி பார்த்த்துக்கிட்டிருந்தேன்!

ஆயில்யன் said...

//ம்ம்..டவுன்லோடு செய்து பார்த்த ஆண்பாவம். சிரிசிரியென்று சிரித்தேன். எந்த மாதிரியும் பொல்யூஷனும் (வன்முறை, வுமென் எக்ஸ்ப்ளாய்ட்டேஷனோ என்று பொருள் கொள்க!) இல்லாத படம். ஒரு சண்டைக் காட்சி வரும், அதுவும் சிரிப்பாகவே இருக்கும்!//

மாசம் மாசம் ஒரு நாளைக்கு இந்த படம் பாக்குறது ஒரு பொழப்பா வைச்சிருக்கே நானு :)

AMIRDHAVARSHINI AMMA said...

கலக்கிட்டீங்க போங்க.

கடைசியில என் பேரையும் போட்டு எனக்கு ஒரு கலக்கத்தை உண்டு பண்ணீட்டீங்க.

ஆயில்யன் said...

//AMIRDHAVARSHINI AMMA said...
கலக்கிட்டீங்க போங்க.

கடைசியில என் பேரையும் போட்டு எனக்கு ஒரு கலக்கத்தை உண்டு பண்ணீட்டீங்க.
//

அட இதுக்கெல்லாம் கலங்க கூடாது தங்கச்சி!

சீக்கிரம் பதிவு போடுங்க :))

புதுகை.அப்துல்லா said...

உங்க வீடு மாதிரியேதான் எங்க வீடும். நோ சினிமா நோ பாட்டு. கல்லூரி வந்துதான் அதுவும் வெளியூர்ங்கிறதால தைரியமா ரவுண்டு கட்டி படம் பார்க்க ஆரமிச்சேன்
:))

ஜீவன் said...

நல்லா! நல்லா!! நல்லாத்தான் இருக்கு!

அமுதா said...

ஆ.... இவ்ளோ கொஸ்டீனுக்கு ஆன்ஸர் பண்ணணுமானு மலைப்புல பின்னூட்டம் போடவே மறந்துட்டேன்...

/*அந்த வயதில் என்ன பீல் பண்ணினேன் என்றால், சொன்னால் சிரிப்பு வரும்..நேராகவே யாராவது வந்து பேசுவார்கள், அப்புறம் போய் வேறே ட்ரெஸ் செய்துக் கொண்டு வருவார்கள் */
நானும் இப்படி தான் யோசிச்சுட்டிருந்தேன்...;-).

வெரி குட் ஆன்ஸர் பேப்பர் :-)

கானா பிரபா said...

இந்தத் தொடரை எப்படி எழுதுவேன்னு கலங்கியிருந்தவங்க கலக்கிப்புட்டீங்க. உண்மையிலேயே படு இயல்பாக உங்கள் பதில்களைக் கொடுத்தீங்க. ஆயில்ஸ் மாதிரி நானும் ஒரு தபா தங்கச்சி போட்டுக்கிறேன் ;-)

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்யன்!! நீங்கதான் முதல்!!

//தங்கச்சி உன்னிய நினைச்சா எனக்கு நொம்ப பெருமையா இருக்கும்மா!//

ரொம்ப நன்றி அண்ணா!! இதுக்கே பெருமைப்பட்டா எப்படி? இன்னும் நிறைய இருக்கு!!

//மாசம் மாசம் ஒரு நாளைக்கு இந்த படம் பாக்குறது ஒரு பொழப்பா வைச்சிருக்கே நானு :)//

அதான், எல்லா வசனமும் மனப்பாடமா? ;-))

சந்தனமுல்லை said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா!
உங்க பதிவைப் பார்த்தா கலங்கின மாதிரி தெரியலையே!! :-)! ஆயில்ஸ் சொன்னதும் போட்டுட்டீங்க போலிருக்கே!

நன்றி அப்துல்லா!! ஆ..சேம் பிளட்!!
நானும் அப்படிதான்!! காலேஜ் படிக்கும்போது வந்த எல்லா மொக்கை படமும் பார்த்தோம்!

சந்தனமுல்லை said...

நன்றி ஜீவன்!!
நன்றி அமுதா!

நன்றி கானாஸ் அண்ணா! உங்க பதிவு சொல்லவே வேண்டாம்..சூப்பர்!!

புகழன் said...

இந்தத் தொடர் பதிவில் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்தது நன்றாக உள்ளது.

குசும்பன் said...

//சொல்ல மறந்த கதை! தங்கரின் படங்கள் எதையும் மிஸ் பண்ணக் கூடாதென எண்ணியிருக்கிறேன்//

சேரன் வீட்டோட மாப்பிள்ளையா போவாரே அந்த படமா? அவ்வ்வ்வ்வ்வ் நீங்க ரொம்ப நல்லவங்க!

குசும்பன் said...

//அந்த மூனு மணிநேரத்தில நீ எவ்வளவோ செய்யலாம்(ம்ம்..என்னத்தை செஞ்சி,அதை விடுங்க,,வேற கதை!!)//

ஒரு முறை அப்படி சொல்லும் பொழுது முறுக்கு செஞ்சு கொடுங்க, அடுத்த முறை அப்படி சொல்ல அவுங்களுக்கு பல் இருக்காது:))

குசும்பன் said...

//அஞ்சலி!!அஞ்சலிக்கு அப்புறமா நான் தியேட்டரில் போய் பார்த்தது ஜூராசிக் பார்க்!! //

அஞ்சலி பாப்பா மாதிரி படத்துக்கு போய் அதன் பிறகு ஷாலினி பாப்பா மாதிரி ஆன பிறகு போய் இருக்கீங்க!

குசும்பன் said...

//இதுக்கு குசும்பனோட பதில்தான் ரொம்பப் பொருத்தம். ரொம்ப சிரிச்சேன், அதைப் படிச்சிட்டு!//

அவ்வ்வ் இத அங்கயும் சொல்லி இருந்தா சந்தோசப்பட்டு இருப்பேனே!!!

தாமிரா said...

அய்யய்யோ.. வழிதப்பி வந்திட்டேனா.. இது முல்லையின் பதிவுதானா? இவ்ளோ பெரிசாகவா? நாளைக்கு வந்து படிச்சு பதில் போட்றேன்.

SK said...

:-)

என்னையும் இதையே எழுத சொல்லி ராப் அக்கா மாட்டி விட்டுட்டாங்க, நிறைய பதில் உங்ககிட்டே இருந்து பாத்து எழுதிடலாம் போல இருக்கு.

கேட்ட கேள்விக்கு நச் நச்னு பதில் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

அவ்வ்வ்வ் கணக்கு பாடத்திலே நான் கடைசி பெஞ்ச்

கொஞ்சம் ஜீரம் அடிக்கிற மாதிரி இருக்கு, கிடுகிடுகிடுகிடு....

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு சித்திரகூடத்தில் சினிமா அனுபவம்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) ரெண்டு பைசான்னாலும் செல்லும் போலயே...நல்லாவே இருக்கு..

தாமிரா said...

அருமையான ஸ்டைல்.. முல்லை..! நீங்கள் ஏன் பிற விஷயங்களிலும் கொஞ்சம் பெரிதாக எழுதக்கூடாது. பல வரிகளை குறிப்பிட்டுச்சொல்லும்படி மிக ரசித்தேன்.!

தமிழன்...(கறுப்பி...) said...

கலக்கல்...:)

தமிழன்...(கறுப்பி...) said...

நீங்க பெரிய பதிவெல்லாம் எழுதியிருக்கறிங்க...?! :)

தமிழன்...(கறுப்பி...) said...

ஆயில்யன் said...
//ஆனால் இதற்கு எல்லாம் சேர்த்து கல்லூரி காலத்தில் ஈடு கட்டிவிட்டேன்!! வாரத்துக் ரெண்டு சினிமா பார்த்து பார்த்து சினிமாவே பிடிக்காம போனது வேறு கதை!//

அதானே பார்த்தேன்! நானே இவ்ளோ நேரமும் கை காலெல்லாம் கிள்ளி பார்த்த்துக்கிட்டிருந்தேன்!
\\

ரிப்பீட்டு...:)