Wednesday, October 29, 2008

விலங்குகளின் டாக்டர் பவுடர்பில்!

இது சிறார்களுக்கான ரஷ்யக் கதை. பப்புவின் தற்போதைய பேவரிட். குழந்தைகளுக்கு சொல்வதற்கு, யாருக்கேனும் பயன்படலாமென்று பகிர்ந்துக்கொள்கிறேன்!!



டாக்டர் பௌடர்பில்,
உடல்நலமில்லையா, வயிற்றுவலியா..
அணுகிடுவீர் டாக்டர் பவுடர்பில்லை!!
எல்லா விலங்கினமும், பறவைகளும் ,
புழுக்களும் வண்டுகளும், ஓநாய்களும்
மாடுகளும்,ஆடுகளும் தேடி வருமே
அவரது கவனிப்புக்காக!!


தமிழ்படுத்தலாமென்று முயன்றது இது..அப்புறம் ஏன் ”படுத்தனும்”என்று கூகுளிட்ட போது கிடைத்தது கதை!!



கதை சொல்வதென்பது ஒரு கலை!! பப்புவுக்காக, ஒரு கதை சொல்லும் செஷனில் சேர்ந்திருக்கிறோம். வாரத்திற்கு ஒருமுறையென..மூன்று வாரங்களாகியிருக்கிறது.
ஜீவா ரகுநாத். ஒரு இண்டர்நேஷனல் ஸ்டோரி டெல்லர். இவரது புத்தகங்களை வாங்கியதன் மூலம் இவரைப் பற்றி அறிந்தேன்.நாம் ஒரு வாக்கியத்தில் சொல்வதை, நடித்துக் காட்டிவிடுகிறார். அவரது கதை சொல்ல ஆரம்பித்த வுடனே, முயல்கள் துள்ளி ஓடுகின்றன், தவளைகள் கத்துகின்றன், சைக்கிள் மணி ஒலிக்கின்றது, இளவரசன் குதிரையில் வருகிறான்..குழந்தைகள் குதூகலத்தில் துள்ளுகின்றனர். நமக்குமே ஆசை வருகிறது, அப்படி கதை சொல்ல!! :-)..




6 வயதினற்கு மேற்பட்டவருக்கு,
hansel & gretel-லில் நடத்துகிறார், இந்த நவம்பர் மாத வாரயிறுதிகளில்!!



ஜீவாவின் ஸ்பெஷாலிடி, அவர் சொல்லும் போது தம்மையும் மறந்து குழந்தைகள் அவரின் ஆக்‌ஷன்களை தம்மையறியாமல் செய்வதுதான்.

6 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

உண்மையில் கதை சொல்வது ஒரு கலைதான்.

நம் குழந்தைகளுக்கு கதை சொல்லிவிட்டு கடைசியில் ஒரு சில கேள்விகள் கேட்டு பதில் சொல்ல வைக்கலாம், அது குழந்தையின் கிரகிக்கும் திறனை அதிகப்படுத்தும்.

நான் அப்படி செய்வதுண்டு, ஆனால் கதை சொல்லமுடியாம பிரிந்து இருப்பது பெரிய கொடுமை...

தமிழ் பிரியன் said...

நல்ல தகவல்! இது போன்று பதிவர்களும் முயற்சி செய்து வெளியிடலாம்..:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

உண்மையில் கதை சொல்வது ஒரு கலைதான்.

ஆம். எனக்கு அந்தக் கவலையில்லை. நானே நல்லா கதைவிடுவேன். சின்னப்ப எனக்கு சொப்பு வெச்செல்லாம் விளையாடப் பிடிக்காது. எனக்கு நல்லா ஞாபகமிருக்கு, நான் கதை என்ற பெயரில் புருடா விட்டது. வெள்ள காக்கா, வெள்ள யானை, என்று ஏகப்பட்ட அயிட்டம். உண்மையில் நான் கதை சொல்லும் போது என் கற்பனைக்கேற்ற் மாற்றிக்கொள்வேன். அப்போது என் கற்பனையில் தோன்றிய காட்சிகள் இப்போதும் என் நினைவலைகளில்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல தகவல்! இது போன்று பதிவர்களும் முயற்சி செய்து வெளியிடலாம்..:)

ஆம். நல்ல தகவல்.

சந்தனமுல்லை said...

நன்றி சுடர்மணி! உண்மைதான்..கிரகிக்கும் திறனுடன், கற்பனையும் அதிகரிக்கிறது!

//நான் அப்படி செய்வதுண்டு, ஆனால் கதை சொல்லமுடியாம பிரிந்து இருப்பது பெரிய கொடுமை//

:((

நன்றி தமிழ்பிரியன்!

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா!! ஆகா..அமித்துக்கு நிறைய சுவாரசியமான கதைகள் கிடைக்கும்!! உங்க பின்னூட்டதில் கூட கவிதை!!