Thursday, October 23, 2008

0..1..2..முத்தான மூன்றை நெருங்குகையில்!!வரும் 28ஆம் தேதியிலிருந்து பப்பு மூன்றாம் வயதில் அடி எடுத்து வைக்கிறாள். நாட்கள் ஓடும் வேகத்தில், நினைவுகளை, நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க முடிவதில்லை.நேரம் இருக்கும்போதே, கடந்தகாலத்தை அசை போட எண்ணி பதிவைத் தொடங்குகிறேன் நான்!அடுத்த வாரம் இந்த நேரம் பப்பு,, நீ மூன்று வயதை எட்டியிருப்பாய்..

இந்த படத்தில் இருக்கும் பப்புவின் ஒவ்வொரு படமும் அவளது அந்தந்த அகவை நிறைவன்று எடுக்கப்பட்டது! கூட்டுப்புழுவிலிருந்து வண்ணத்துபூச்சியாக மாறுவதுப் போல், மொட்டிலிருந்து பூ மலர்வதுப் போல் என் பப்பு ஒவ்வொரு கட்டத்திலும்....

முதல் படம், பப்பு பிறந்த ஒரு சில கணங்களில் எடுக்கப் பட்டது. ஆனால் நான் பப்புவை பார்த்தது இரண்டாவது நாளில் தான்.மூன்று நாட்கள் வரை, தினமும் கொஞ்ச நேரம் எங்களிடம் காட்டிவிட்டு, இன்குபேட்டரில் வைத்து விடுவார்கள். என்னைத் தவிர எல்லாரும் அடிக்கடி போய் பார்த்து விட்டு வருவார்கள். இப்படி அமைதியாக தூங்கியது இந்த போட்டோவில் மட்டும்தான். ஒருவயது வரை தூங்கவும் இல்லை, தூங்கவிடவுமில்லை. :-). அந்தந்த கணங்களுக்கேயுரிய மகிழ்ச்சிகளை எங்களுக்குக் கொடுக்க தவறியதேயில்லை பப்பு!

இரண்டாவதாக இருக்கும் போட்டோ பப்புவின் ஒருவயது நிறைந்த போது எடுத்தது!
Just after the mottai! அந்த பிறந்தநாள் விழாவை பெரிதாக கொண்டாட வேண்டுமா என்று
நானும் பப்புவின் அப்பாவும் மிகவும் யோசித்தோம். அவளை சுற்றி நடப்பதை அவளால் புரிந்துக் கொள்ளமுடியாது, நிறைய புதிய முகங்கள்..எல்லாரும் அவளைக் தூக்க விரும்புவார்கள்..etc..etc!! மிகவும் தெரிந்த சுற்றத்தாருடன் மட்டும் அவளுக்கே அவளுக்கேயான ஸ்பெஷல் நேரமாக என்று!! ஆனால், பிறந்தநாளுக்கு முதல் நாளன்று ஜுரம் வந்து, பிறந்த நாளன்று காலையில் மருத்துவமனை செல்லும்படி ஆயிற்று.

மூன்றாவது படம், இரண்டாம் பிறந்தநாளன்று!! பப்பு, உனக்குத் தெரியுமா..உன் ஓவ்வொரு பிறந்த நாளன்றும் வானம் பூ மழை பொழிந்து உனை வாழ்த்தும்..வானவில் தோரணத்தோடு!
அன்றும் அப்படித்தான்! ஆனால் இந்த முறை ஜூரம் இல்லை...ஆனால் ஜலதோஷம் மட்டும்!!
உற்றத்தோடும், சுற்றத்தோடும் கழிந்தது உனது நாள்!

இதோ, இப்போது மூன்றாம் பிறந்தநாள்..அன்போடும், மனதில் ஏகப்பட்ட கனவுகளோடும் உனக்காக இன்னோரு ஸ்பெஷல் நாளை திட்டமிட்டிருக்கிறோம், நானும் உன் அப்பாவும்! இப்போது உனக்குத் தெரியும், பிறந்தநாள் எனது என்ன மற்றும் அதன் கொண்டாட்டங்கள்....பிறந்தநாள் நீ பிறந்ததானாலல்ல..ஆனால் எல்லாரும் உனக்கு 'ஹேப்பி பேத் டே தூ யூ" என்றும், "மெழுகோத்தி"யை ஊதவும்..மற்றும் கேக் கட் செய்வதுமென்று!!

இதோ, இப்போதும் உன் பிறந்தநாளையொட்டி உன் தோழி உரத்த தாளங்களோடு
வந்து விட்ட்டாள்..நகரெங்கும் தோரணம் கட்டியிருக்கிறது மழை! எங்களின் ஏற்பாடுகளை நீ
எஞ்சாய் செய்வாய் மற்றும் இந்த நாளின் நினைவுகள் என்றும் உன் மனதில் தங்கும் என்ற நம்பிக்கையுடன்...

மூன்று வயதான உன் அம்மா...
(அம்மாவாகி எனக்கும் மூன்று வயதுதானே!!)

26 comments:

ஆயில்யன் said...

//மூன்று வயதான உன் அம்மா...
(அம்மாவாகி எனக்கும் மூன்று வயதுதானே!!)/


அருமை!


பப்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))

ஆயில்யன் said...

ஒரு ஒரே ரிக்வெஸ்ட் பப்பு அம்மாவுக்கு!

பப்புவுக்கும் கொஞ்சம் சாதம் ஊட்டிக்கிட்டே, நீங்களும் சாப்பிடுங்க! எல்லாத்தையுமே நீங்களே சாப்பிடாம இருக்க கொஞ்சம் டிரைப்பண்ணுங்களேன்! பளீஸ்!

இப்படிக்கு!

பப்புவின் ப்ரெண்டு
ஆயில்யன்

ராமலக்ஷ்மி said...

பப்புவுக்கும் கூடவே மூன்றாண்டு நிறைவைக் கொண்டாட இருக்கும் பப்பு அம்மாவுக்கும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அட்வான் ஸ் ஹேப்பி பர்த்டே டூ பப்பு
அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே டூ சந்தனமுல்லை அம்மா.. :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வாழ்த்துக்கள் குட்ட்ட்டி....

Anonymous said...

ஆஹா, குழந்தைகளை பற்றி பேசுவது என்பதே மிக்க சந்தோஷமான விஷ்யம்ங்க சந்தனமுல்லை! பப்புவுக்கு என் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க!

அன்புடன்
அபிஅப்பா

Anonymous said...

ஆஹா, குழந்தைகளை பற்றி பேசுவது என்பதே மிக்க சந்தோஷமான விஷ்யம்ங்க சந்தனமுல்லை! பப்புவுக்கு என் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க!

அன்புடன்
அபிஅப்பா

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//மூன்று வயதான உன் அம்மா...
(அம்மாவாகி எனக்கும் மூன்று வயதுதானே!!)//

ஆஹா...

எத்தனை இனிமையான, அருமையா அம்மா:

பப்புவுக்கு நல்ல அம்மா...
உங்களுக்கு நல்ல பெண்...

எனக்கு பொறாமையா இருக்குங்கக்கா,
பொறாமை பட்டதுக்கு தப்பா நினைக்காதிங்க, மனசுல பட்டத சொல்லிட்டேன்....

தமிழ் பிரியன் said...

பப்புவுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

எங்க வீட்டு குட்டிப் பையனுக்கு இந்த மாத ஆரம்பத்தில் தான் இரண்டு முடிந்து மூன்று ஆரம்பமானது... :)) பிறந்தநாள் கொண்டாடுவதில்லை.

கானா பிரபா said...

மூன்று வயதாகும் பப்புவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்,

தங்கச்சி சந்தனமுல்லைக்கும் மூன்று வருஷமா அம்மாவாக இருப்பதற்கு போனஸ் வாழ்த்துக்கள்

பப்புவுக்கு கறுப்பு பொட்டு வச்சு போட்டோ எடுத்தால் எடுப்பா இருக்கும். அதை பிறந்த நாளைக்கு என் வேண்டுகோளா ஏற்கவும்.

நையாண்டி நைனா said...

Many Many Happy Returns Of The Day.

புதுகைத் தென்றல் said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பப்பு.

(3 வயது அம்மா. நல்ல வார்த்தைகள் முல்லை. பாராட்டுக்கள்)

AMIRDHAVARSHINI AMMA said...

ஆஹா அருமையான பதிவு
மழை தோழி வாழ்த்தும் பப்புவை
நாங்களும் வாழ்த்துகிறோம்.

மூன்று வயதான உன் அம்மா...
(அம்மாவாகி எனக்கும் மூன்று வயதுதானே!!)
NICE

AMIRDHAVARSHINI AMMA said...

I think me the first, ஆயில்ஸ்-க்கு முன்னாடி நான் சொல்லிடனும்.

தீஷு said...

அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பப்புவுக்கு!!!

குடுகுடுப்பை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்/

ரிதன்யா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பப்பு

நலம் வாழ வாழ்த்துக்கள்

அமுதா said...

மிக அருமையாக இருக்கின்றது.

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்யன்!!

//எல்லாத்தையுமே நீங்களே சாப்பிடாம இருக்க கொஞ்சம் டிரைப்பண்ணுங்களேன்! பளீஸ்!//

grrrr...ஆனா அது எவ்ளோ டேஸ்டா இருக்கும் தெரியுமா?! :-))

நன்றி ராமலஷ்மி!
நன்றி முத்துலெட்சுமி!

நன்றி சுடர்மணி! இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு? :-)

நன்றி அபிஅப்பா!

சந்தனமுல்லை said...

நன்றி தமிழ் பிரியன்!
அப்ரார்க்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க..கொஞ்சம் தானே லேட்! :-)

நன்றி கானாஸ்! அப்படியே செய்றேன்..:-)

நன்றி நையாண்டி நைனா!!

நன்றி புதுகை தென்றல்!!

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா!
அதான் நீங்க மழையை உங்க குட்டி பேர்லயே வச்சிருக்கீங்களே! ம்ம்..ஆயில்ஸ் தான் பர்ஸ்ட்டு! அடுத்த வாட்டி சொல்றேன்!

நன்றி தீஷூ!
நன்றி குடுகுடுப்பை!

சந்தனமுல்லை said...

நன்றி ரிதன்யா!
ரொம்ப நல்லா இருக்கு உங்க பெயர்!
உங்க பதிவுகளில் ரெண்டு வானவில் உங்களையும் சேர்த்து! :-)

சந்தனமுல்லை said...

நன்றி அமுதா!!

மங்களூர் சிவா said...

//
மூன்று வயதான உன் அம்மா...
(அம்மாவாகி எனக்கும் மூன்று வயதுதானே!!)
//

haa haa
:))))))

மங்களூர் சிவா said...

ஹேப்பி பேத் டே தூ யூ!
ஹேப்பி பேத் டே தூ யூ!!
ஹேப்பி பேத் டே தூ யூ டியர் பப்பு!!!

பிரேம்குமார் said...

பப்புவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)