Wednesday, October 08, 2008

ரவுண்ட் அப்

கடந்தவாரம் ஆம்பூருக்கு சென்றிருந்தோம். என் தம்பி விஐடி-யில் படித்து கொண்டிருந்ததால், தற்காலிகமாக வீட்டை காட்பாடியில் மாற்றியிருந்தோம்.இப்போது அவனது படிப்பு முடிந்துவிட்டதால், திரும்ப ஆம்பூருக்கு குடிவந்துவிட்டோம். பப்பு ஆம்பூருக்கு செல்வது இதுவே முதன்முறை. காட்பாடி ஆயா என்பது பப்பு என் பெரிம்மாவுக்கு வைத்திருக்கும் பெயர்.அவளது மொழியில் ஆம்பூர் இப்போது ”புது காட்பாடி”யாகிவிட்டிருக்கிறது. :-).

வீட்டினுள் நுழைந்தவுடன், மீன் தொட்டியை பார்த்த பப்பு உடனடியாக சொன்னாள்,

“இந்த மீன் தான் எங்க வீட்டுல இல்ல!!!

மை காட்!!

தூங்கும் சமயத்தில், “வீட்டுக்கு போலாம்,அம்மா!!”.

”இதானே பப்பு, வீடு. எங்க இருக்கோம், நாம? வீட்டுலதானே இருக்கோம்!!” - நான்.

இல்ல, நம்ம வீட்டுக்கு, பப்பி, ஆதில்லாம் இருப்பானே!!”

ம்ம்...how clear the message is!
எனது வீடு ( என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது) வேறு, பப்புவின் வீடு வேறு!!

நான் கவனித்ததில் இன்னொன்று, எந்த புதிய, அல்லது அவளைக் கவரக் கூடிய பொருளைப் பார்த்தாலும், “ஆயா, இது எனக்கா?” அல்லது “இது என்னுதா?” என்று கேட்பது.
ஆமாம், இது உன்னோடதுதான் என்று பதில் வரும்வரை அந்த கேள்வி ஓயாது!! :-)

சொத்துப் பிரிச்சிட்டோம்லபப்பு டாக்டராகவோ அல்லது ஏதாவது பெரிய ஆளாக வேண்டுமென்பதைவிட, ஒன்றே ஒன்று அவளுக்கு வர வேண்டுமென்று விரும்புவேன. அது, புத்தகங்கள் மேல் பிரியம். என்னிடம் நிறையக் கதைப்புத்தகங்கள் உண்டு. என் சிறுவயதிலிருந்து இன்றுவரை. அவையெல்லாமே பத்திரமாக பாதுகாக்கப் பட்டுவந்திருக்கின்றன. (கோகுலம்,பூந்தளிர்,
பாப்பா மஞ்சரி, அம்புலிமாமா, சம்பக் இவையெல்லாம் தெரிந்தவர்களுக்கு கொடுக்கப் பட்டுவிட்டன!!) யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று வீட்டில் சண்டைப்போட்டு, சிறுவயதுக் கதைப்புத்தகங்களை அட்டைபெட்டிகளில் பத்திரமாக பரணில் வைத்திருந்தேன். எடுத்து வைக்கும் போது எனது அடுத்த தலைமுறைக்கு வேண்டும் என்ற தொலைநோக்கு எல்லாம் கிடையாது. அவை என்னுடையவை. ஒருபோதும் அவற்றை இழக்க எனக்கு மனமில்லை. என்னைப் பொறுத்தவரை அவை எனது பழைய நண்பர்கள் மாதிரி .ஆனால், இன்று அவை பப்புவின்
உடமையாகிவிட்டன. அவற்றை அவளுக்கு கொடுத்தபோது, மகிழ்ச்சியே எனக்கு மேலோங்கியிருந்தது.அதில் பெரும்பகுதி, ரஷ்ய, உலக நாடோடிக் கதைகள். ராதுகா பதிப்பகம் அல்லது நியு செஞ்சுரி பதிப்பகம்! இப்போதும் அவற்றை வெளியிடுகிறார்களா எனத் தெரியவில்லை!! மேலும், ஒரு தலையணை சைஸ் தேவதைக் கதைகள் புத்தகம் என்னிடம் ஊண்டு.அதைப் படிக்க பப்பு இன்னும் வளர வேண்டும். (அதுவரை, அது எனக்கு!! :-)))) ஏழுநிறப் பூ என்றொரு புத்தகம்.
என் ஆல் டைம் பேவரிட். அதில் வரும் பெண்ணான ஷேன்யாவின் பெயரையே பப்புவுக்கு
சூட்ட விரும்பினேன்!!

என்னுடைய ஃபேவரிட்டான, அந்தோன் சேகவின், பள்ளத்து முடுக்கில், அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறைகள் (The roots), குஷ்வந்த்சிங், ஆர்.கே.நாராயண் புத்தகங்களையும் எடுத்து வந்தேன். எல்லா விடுமுறைக் காலங்களில், அவை தவறாமல் படிக்கப் பட்டுவிடும். ஒருசில புத்தகங்களை திரும்ப திரும்ப படிப்பதில் ஒரு சுகம்!! ஏழு தலைமுறைகள், மனதை கனக்க வைக்கும் புத்தகம். கிண்ட்டாவும், கிஜ்ஜியும், கோழி ஜ்யார்ஜூம்...சிறுவயதிலிருந்து ஆப்பிரிக்கா மீது ஈர்ப்பு வர இப் புத்தகமும் ஒரு காரணமாக இருக்கலாம்!!

படிப்பதின் அலாதி சுகத்தை பப்புவுக்கு அறிமுகப் படுத்துவதே எனது நோக்கமாயிருந்தது. விளையாட்டுச் சாமாங்கள் வாங்கும்போதெல்லாம், கண்டிப்பாக புத்தகம் வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். பல கிழிந்துவிட்டன. ஆனால், இப்போது அவளுக்கு புத்தகத்தை மதிக்கத் தெரிந்திருக்கிறது. கொண்டாடத் தெரிந்திருக்கிறது. வரும் கால எப்படியோ..ஆனால் இப்போது "வா அம்மா, படிக்கலாம்!" என்று அந்தப் பழையப் புத்தகங்களை வாரியணைத்தப்படி என்னை இழுததப்போது என் கண்களில் பனி படர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை!!

33 comments:

rapp said...

சூப்பர். நான் சின்ன வயசுல வெறும் ரெண்டு சீரீசுக்குத்தான் பயங்கரமான விசிரியா இருந்தேன். ஒன்னு ஆர்ச்சீஸ், இன்னொன்னு ஆர்.கே.நாராயன். நான் இங்க வரும்போதும் அதையெல்லாம் கூடவே கொண்டுவந்தேன். படிக்கிற பழக்கத்தை நீங்க ஏற்படுத்தி கொடுத்துட்டா அதை விட நல்ல விஷயமே இல்ல. பப்பு சீக்கிரம் உங்களை இன்னும் நெறைய புக்ஸ் வாங்கிக் கொடுக்கச்சொல்லி தொந்தரவு கொடுக்க வாழ்த்துக்கள்:):):)

அமுதா said...

வாசிப்பின் சுகம் அறிந்துவிட்டால் நிச்சயம் அதில் இலயித்துவிடுவார்கள் என்று எண்ணுகிறேன். பப்புவுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தும் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

ஜீவன் said...

பப்பு டாக்டராகவோ அல்லது ஏதாவது பெரிய ஆளாக வேண்டுமென்பதைவிட, ஒன்றே ஒன்று அவளுக்கு வர வேண்டுமென்று விரும்புவேன. அது, புத்தகங்கள் மேல் பிரியம்.

அருமை.... புத்தகம் படிக்க நாம் கத்து கொடுத்தா போதும், மத்ததெல்லாம் புத்தகம் கத்து கொடுக்கும்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

போனமுறை ஊருக்குப்போனப்போ கொஞ்சம் பூந்தளிர் எல்லாம் செலக்ட் செய்து அட்டை கிழியுதுன்னு ..பத்து பத்து புத்தகமா பூந்தளிர் பைக்கோக்ளாஸிக்ஸ் எல்லாம் பைண்ட் பண்ணக்கொடுத்து வாங்கி வைத்தேன்..உங்களுக்க்கு பரவாயில்லை எங்க வீட்டுல தம்பியும் நானும் இருக்கோம் பாகப்பிரிவினை கஷ்டம் தான்..

தாமிரா said...

கடைசி வரிகளில் மகிழ்ந்தேன். எனது ஆசையும் அதுதான். ஆனால் என்னிடம் சிறு வயதில் படித்த புத்தகங்கள் ஏதும் இல்லை, அவையனைத்துமே இரவல் அல்லது நூலகத்தில் படிக்கப்பட்டவையே. குறைந்த பட்சமாக நான் புத்தகங்கள் வாங்க ஆரம்பித்ததிலிருந்து (10 வருடங்களாக?) சேர்த்து வைத்துள்ளேன். பார்க்கலாம் பிள்ளையின் ஆர்வம் எப்படியிருக்கிறதென்று..

செந்தழல் ரவி said...

என்னிடம் இருக்கும் லயன் காமிக்ஸ் முத்து காமிஸ்சை பப்புவுக்கு போஸ்ட் செய்துவிடுகிறேன்...

நீங்கள் எடுத்துக்கொள்ளாமல் பப்புவிடம் தந்துவிடவும்...!!!

கானா பிரபா said...

நீங்கள் சொன்ன புத்தகங்களை பட்டியலிட்டதும் எனக்கும் பழைய ஞாபகம் வந்தது, மாஸ்கோ முன்னேற்ற பதிப்பகத்தின் வெளியீடுகள், யானை என்னும் கதை (யானை பள்ளிக்கு போன கதை) தடித்த புத்தகங்கள் எல்லாமே என் சேகரிப்பில் இருந்தவை.
இப்போது எங்கே செல்லரித்து இருக்கும்.

Little bud said...

புத்தகங்கள் படிக்கிற சுகமே தனி சுகம். என்னிடம் என் குழந்தைக்கு கொடுக்கிற மாதிரி புத்தகங்கள் இல்லை. சேர்க்க வேண்டும். மாண்டிசோரி புத்தக list கொடுத்திருந்தேன். பார்த்தீங்களா?

ILA said...

விருப்பங்களை திணிப்பது தப்புதான்னாலும், இது எல்லாம் நம்ம ஆசைதானே. வளர்ப்பதுலேயே விருப்பங்கள் வந்துருங்க.

தமிழ்நதி said...

சந்தனமுல்லை! புத்தகங்களைப் பற்றி, அதன் மீதான நேசம் பற்றி யார் எழுதினாலும் அவர்கள் மீது ஒரு பிடிப்பு வந்துவிடும். வாசிக்கிறோமோ இல்லையோ (நீண்ட இடைவேளையின் பின் இப்போது தீவிர வாசிப்பு) புத்தகங்கள் மீதான காதல் அலாதியானது. வீட்டில் ஆங்காங்கே புத்தகங்களைப் போட்டுவைத்தால் குழந்தைகள் தாங்களாகவே எடுத்து வாசிக்க ஆரம்பிப்பார்கள் என்று யாரோ சொன்ன நினைவு... உங்களைப் போலவே பப்புவும் வர வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

பப்பு நல்லாப் படிக்கட்டும். புத்தகங்களைவிட யார் துணை இருப்பார்கள்?
முத்துகயல் சொல்வது போல எங்க வீட்டில பொண்ணும் பையங்களும் தங்கள் குழந்தைகளுக்காக (பழைய காமிக்ஸ்_புத்தகங்கள் எடுப்பதில் மகாப் போட்டி:)
அவை இப்போது வாங்கும் விலையிலும் இல்லை..

ஆயில்யன் said...

//பழையப் புத்தகங்களை வாரியணைத்தப்படி என்னை இழுததப்போது என் கண்களில் பனி படர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை!!//


நல்லா இருக்கு:)

ஆயில்யன் said...

பப்பு உக்காந்திருக்கற மாதிரிதான் இப்ப என்னோட நிலைமை ஆனா என்ன எல்லாம் பிடிஎப் புக்கு +சாட் விண்டோ :)))))

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

போனமுறை ஊருக்குப்போனப்போ கொஞ்சம் பூந்தளிர் எல்லாம் செலக்ட் செய்து அட்டை கிழியுதுன்னு ..பத்து பத்து புத்தகமா பூந்தளிர் பைக்கோக்ளாஸிக்ஸ் எல்லாம் பைண்ட் பண்ணக்கொடுத்து வாங்கி வைத்தேன்..உங்களுக்க்கு பரவாயில்லை எங்க வீட்டுல தம்பியும் நானும் இருக்கோம் பாகப்பிரிவினை கஷ்டம் தான்.//


அக்கா சொல்றதை பார்த்ததும் எனக்கு சிறுவர் மலர் படக்கதைகள் புக் பைண்டு பண்ணி தந்து மே மாசத்தை நொம்ப சிக்கனமா வெளியூருக்கெல்லாம் கூட்டிட்டுபோகாம எஸ்ஸான எங்க அப்பா ஞாபகம் வந்துடுச்சு :(((

ஆயில்யன் said...

//அமுதா said...

வாசிப்பின் சுகம் அறிந்துவிட்டால் நிச்சயம் அதில் இலயித்துவிடுவார்கள் என்று எண்ணுகிறேன். பப்புவுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தும் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்

ஆயில்யன் said...

//கானா பிரபா said...

நீங்கள் சொன்ன புத்தகங்களை பட்டியலிட்டதும் எனக்கும் பழைய ஞாபகம் வந்தது, மாஸ்கோ முன்னேற்ற பதிப்பகத்தின் வெளியீடுகள், யானை என்னும் கதை (யானை பள்ளிக்கு போன கதை) தடித்த புத்தகங்கள் எல்லாமே என் சேகரிப்பில் இருந்தவை.
இப்போது எங்கே செல்லரித்து இருக்கும்.//


அட !

ஆயில்யன் said...

// ILA said...

விருப்பங்களை திணிப்பது தப்புதான்னாலும், இது எல்லாம் நம்ம ஆசைதானே. வளர்ப்பதுலேயே விருப்பங்கள் வந்துருங்க.

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

// தமிழ்நதி said...

சந்தனமுல்லை! புத்தகங்களைப் பற்றி, அதன் மீதான நேசம் பற்றி யார் எழுதினாலும் அவர்கள் மீது ஒரு பிடிப்பு வந்துவிடும். வாசிக்கிறோமோ இல்லையோ (நீண்ட இடைவேளையின் பின் இப்போது தீவிர வாசிப்பு) புத்தகங்கள் மீதான காதல் அலாதியானது. வீட்டில் ஆங்காங்கே புத்தகங்களைப் போட்டுவைத்தால் குழந்தைகள் தாங்களாகவே எடுத்து வாசிக்க ஆரம்பிப்பார்கள் என்று யாரோ சொன்ன நினைவு... உங்களைப் போலவே பப்புவும் வர வாழ்த்துக்கள்.//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

//வல்லிசிம்ஹன் said...

பப்பு நல்லாப் படிக்கட்டும். புத்தகங்களைவிட யார் துணை இருப்பார்கள்?
முத்துகயல் சொல்வது போல எங்க வீட்டில பொண்ணும் பையங்களும் தங்கள் குழந்தைகளுக்காக (பழைய காமிக்ஸ்_புத்தகங்கள் எடுப்பதில் மகாப் போட்டி:)
அவை இப்போது வாங்கும் விலையிலும் இல்லை..//


ரிப்பிட்ட்ட்ய்ய்ய்ய்ய்ய்ய்!

AMIRDHAVARSHINI AMMA said...

"வா அம்மா, படிக்கலாம்!"
ஐயோ

பப்புவை தூக்கி அப்படியே கொஞ்சலாம் போல இருக்கு.

அமிர்துவை விளையாட விட்டு நான் படிக்கலாம் என்று நினைத்தால் அந்த புத்தகம் கந்தலாவது நிச்சய்ம்.

நீங்கள் எப்படி இந்தப் பழக்கம் கொண்டு வந்தீர்கள். இவ்வளவு சிறுவயதிலேயே. எனக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்.

ஜி said...

//"வா அம்மா, படிக்கலாம்!" என்று அந்தப் பழையப் புத்தகங்களை வாரியணைத்தப்படி என்னை இழுததப்போது என் கண்களில் பனி படர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை!!
//

:)))

புதுகை.அப்துல்லா said...

குடுத்து வச்சவ பப்பு..... நீங்களும் தான் :)

சந்தனமுல்லை said...

நனறி ராப்! ஆர்ச்சீஸ் ரொம்பல்லாம் படிச்சதில்லை..ஆனா, ஆர் கே நாராயன் படிச்சிருக்கேன். மெல்லியதாய் இழையோடும் நகைச்சுவை..சான்ஸே இல்லை!ம்ம்..
இப்போ வரைக்கும் சாக்லேட்-தான் வாங்கிக் கொடுக்க சொல்றா..பாப்போம். :-)!!

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அமுதா!
ம்ம்..இன்னும் எவ்ளோ புத்தகங்கள் படிக்காம விட்டிருக்கோமோன்னு அவ்வப்போது தோணும்!!


நன்றி ஜீவன்!! உண்மைதான்..உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்!!

சந்தனமுல்லை said...

வாவ்..முத்துலெட்சுமி..சூப்பர். அந்த பூந்தளிரின் சுப்பாண்டி சீரிஸ் கதைகள், ஒரு குரங்கு கார்ட்டூன் கதை.....ம்ம்...எங்க கிளாசில, பாப்பா மஞ்சரி-க்கு பூந்தளிர்னு எக்ஸ்சேஜ்ச் பண்ணி படிப்போம், மூணாவதுல!!..இங்கயும் நிறைய புக்ஸ் பைண்டிங் செய்ய வேண்டிய நிலைல தான் இருக்கு!!

நன்றி தாமிரா, அப்போ நிறைய புக்ஸ் இருக்குமே!! என்ன புக்ஸ்-லாம் இருக்கு, ஒரு பட்டியல் கொடுத்தா நல்லாருக்கும்!

நன்றி ரவி!! கண்டிப்பாக பப்புவிடம் கொடுத்து விடுகிறேன், அவள் படிக்க ஆரம்பித்ததும்.

சந்தனமுல்லை said...

நன்றி கானாஸ்! ம்..கஷடம்தான் இல்ல, நமக்கு பிடிச்ச புக் செல்லரிச்சதுன்னா!! யானை புக் என்கிட்ட இருக்கு, ஆனா அதுல யானை பள்ளிக்கு போகாது, ஒரு குட்டிப் பொண்ணு வீட்டுக்கு வரும், அவகூட ஒரு நாள் இருக்க!!வேணுமா?

நன்றி little bud, அதனால என்ன, புதுசாவே வாங்கிக் கொடுங்க. ம்ம்..உங்க லிஸ்டை பதிவு போட்டு வச்சிகிட்டேன், மிஸ் பண்ணாம இருக்க, அதே சமயம் யாருக்கேனும் உதவலாம்ன்னு!! நீங்க அந்த புக்ஸ் பத்தி ரெவ்யூ மாதிரி எழுதினீங்கன்னா உபயோகப்படும்!!

சந்தனமுல்லை said...

நன்றி இளா! நானும் அப்படி திணிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதே சமயம், ஒரு சிறு தூண்டுதல் இருக்கனும் தோணும்!!

நன்றி தமிழ்நதி, அப்படிதான் பப்புவும் புத்தகங்களில் காட்டினாள், பொதுவாவே, படிக்கும் வழக்கம் எங்க வீட்டில் எல்லாருக்கும் இருக்கு.


நன்றி வல்லியம்மா, ம்ம்..எனக்கு அப்படி போட்டி யாரும் இல்லை.
உண்மைதான், புத்தகங்கள் என்னா விலை விக்குது? விகடனைவிட சுட்டி விகடன் விலை அதிகம்னு நினைக்கிறேன்!! :-)

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ், நல்லா படிங்க!! பப்புவுக்கு எக்ஸாம் கிடையாது,ஆனா உங்களுக்கு இருக்கே!!
உங்க ரிப்பீட்டுக்கு நன்றி!!

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா,
அமித்து ரொம்ப குட்டிக் குழந்தை இல்லியா! பப்புவும் எவ்ளோ புக் கிழிச்சிருக்கா!! நல்ல கல்ர்புல்லான, பெரிய பெரிய படங்கள் போட்ட புத்தகங்கல், முக்கியமா கிழிக்கறமாதிரி இல்லாம காட்போர்ட் மாதிரி அட்டையில் இருக்கும் புத்தகங்களை வாங்கிக் கொடுங்க!! ஏன்னா, கிழிச்சதை வாயில போட்டுக்கற ஸ்டேஜ் இல்லியா!! :-)
அமித்து பெரிய படிப்பாளினி ஆக வாழ்த்துக்கள்!!

சந்தனமுல்லை said...

நன்றி ஜி!

நன்றி அப்துல்லா!!

கானா பிரபா said...

//நன்றி கானாஸ்! ம்..கஷடம்தான் இல்ல, நமக்கு பிடிச்ச புக் செல்லரிச்சதுன்னா!! யானை புக் என்கிட்ட இருக்கு, ஆனா அதுல யானை பள்ளிக்கு போகாது, ஒரு குட்டிப் பொண்ணு வீட்டுக்கு வரும், அவகூட ஒரு நாள் இருக்க!!வேணுமா? //

எங்கிட்ட இருந்த யானை கதையில் யானை பள்ளிக்கு போகும், பசியெடுத்ததும் சாக்பீஸை சாப்பிடும், அடச் சீ இதென்ன சாப்பாடு அப்படின்னு களேபரம் பண்ணி உண்டு இல்லைன்னு ஆக்கிடும், அப்படிப் போகும் அந்தக் கதை.

ராமலக்ஷ்மி said...

அமுதா கூறியிருப்பதை நானும் வழிமொழிகிறேன்.

எனது தமிழ் வளர்ந்ததும் கோகுலம், அம்புலிமாமா போன்ற சிறுவர் இதழ்களிலிருந்துதான். அதிலும் என் அப்பா கல்கியிலிருந்து முதன் முதலாக கோகுலம் வெளியான போது அதை முதலில் என் கையில் கொடுத்தது [பின்னே, அடுத்து படிக்க வீட்டில் நாலைந்து பேர் வரிசையா:)] இன்னும் பசுமையாக நினைவிலிருக்கிறது. உங்களைப் போலவே எனது என [பள்ளி கல்லூரி காலத்தில்] நான் பைண்ட் செய்து வைத்த பல தொடர்கள், காமிக்ஸ் எல்லாம் இன்னும் என் வசமே:))!

bharathi said...

வீடு முழுக்க பெரும் சொத்தாய் புத்தகங்களை சேர்த்து வைத்த பிறகு இப்போதெல்லாம் நேரமின்மையால் அவற்றை புரட்டிக் கூட பார்க்க முடியவில்லை. ஏதேச்சையாய் கண்களில் பட்ட இந்த பதிவு நெஞ்சை தொடுகிறது. சந்தன முல்லையின் பாப்பு மீதான ஆசையைப் போல எனக்கும் என் மகள் புத்தங்களை நேசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பார்ப்போம். இந்த பதிவு என்னை கொஞ்ச நேரத்துக்கு அமைதியாக்கியிருக்கிறது. நல்ல எழுத்து நடை. பாப்புவுக்கான எழுத்துக்கள் பாப்பு பற்றிய எழுத்துக்கள் சுவாரசியம் தான். வாழ்த்துக்கள்.

bharathi said...

வீடு முழுக்க பெரும் சொத்தாய் புத்தகங்களை சேர்த்து வைத்த பிறகு இப்போதெல்லாம் நேரமின்மையால் அவற்றை புரட்டிக் கூட பார்க்க முடியவில்லை. ஏதேச்சையாய் கண்களில் பட்ட இந்த பதிவு நெஞ்சை தொடுகிறது. சந்தன முல்லையின் பாப்பு மீதான ஆசையைப் போல எனக்கும் என் மகள் புத்தங்களை நேசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பார்ப்போம். இந்த பதிவு என்னை கொஞ்ச நேரத்துக்கு அமைதியாக்கியிருக்கிறது. நல்ல எழுத்து நடை. பாப்புவுக்கான எழுத்துக்கள் பாப்பு பற்றிய எழுத்துக்கள் சுவாரசியம் தான். வாழ்த்துக்கள்.