Friday, October 24, 2008

அது ஒரு மழைக்காலம்

பல ஆண்டுகளுக்கு முன் ஆம்பூரில் ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்கு மழைக்காலங்கள் மிகவும் இஷ்டம்! மழை பெய்யும்போது ஜன்னல் கம்பிகளினூடாக மழையை ரசிப்பதும், மழைத் தூறலில் நனைவதும், மரங்களின் கிளைகளை அசைத்திழுத்து விட்டு வரும் சாரலில் நனைவதும் அவளின் மிக உன்னத மழைத் தருணங்கள்!
(படம் உதவி : கூகிள்)


காலையில் ஆரம்பிக்கும் மழை, இன்னைக்கு லீவுதான் என்றுத் தோன்றவைக்கும் மழை மிகச் சரியாய் ஒன்பது மணிக்கு நின்று போகும். மிகச் சோம்பலாய் அவள் சிறிய சிறிய மழைத் தேங்கல்களில் குதித்தும் ஓடியும் பள்ளிக்குச் செல்வாள் அவள்!திடீரென முளைத்த காளான்களும், மழைக்கு பூத்த லில்லி மலர்கள், மெதுவாய் நரும் நத்தைகளும் அவள் பள்ளிக்கு செல்லும் நேரத்தை தின்னும்!!

விடாது மழை பெய்தாலும் அடாது பள்ளிக்கு சென்றிருக்கிறாள்..அன்று பள்ளிக்கு விடுமுறை என்றறிய!! ஏனெனில் அவளது பெரிம்மாவும் அந்த பள்ளியில் ஆசிரியை! யார் போனாலும்
போகாவிட்டாலும் அவள் கிளம்பித்தானாக வேண்டும்! மொபைல் போன்களோ, மெயிலோ..இல்லாத இரண்டு போன்களுடன் இயங்கிய பள்ளி!! வீட்டுக்கு திரும்புவதில் அத்தனை மகிழ்ச்சி..படிக்கத்தான் அத்தனை கதைப்புத்தகங்களுண்டே அவளிடம்!! அதோடு சூடான பஜ்ஜிகளும், வெங்காய பக்கோடாக்களும் மாலைநேரங்களில் லெமன் டீயும்/இஞ்சி டீயும் மழையை வேடிக்கைப் பார்க்க பலகணியில் ஒரு சிறு இருக்கையும்!!

rainy days and mondays from Carpenters
நன்றி : esnips.com

Get this widget Track details eSnips Social DNA


பப்புவுக்கு இரண்டாவது நாளாக பள்ளி விடுமுறை, மழையின் நிமித்தம்!
நான் ஆபீஸ் செல்வதில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை!!

20 comments:

தமிழ் பிரியன் said...

மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ

அமுதா said...

/*மொபைல் போன்களோ, மெயிலோ..இல்லாத இரண்டு போன்களுடன் இயங்கிய பள்ளி!! */
எலக்ட்ரிக் பெல் இல்லாது, இரும்பு தள்வாடத்தில் மணி அடிக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது...

அழகான மழைக்கால நினைவுகள்...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) இப்போதெல்லாம் அடிக்கடி முல்லைப்பாப்பாவின் டைம்ஸ் கிடைக்கிறது எங்களுக்கு..

ஆயில்யன் said...

// மழை பெய்யும்போது ஜன்னல் கம்பிகளினூடாக மழையை ரசிப்பதும், மழைத் தூறலில் நனைவதும், மரங்களின் கிளைகளை அசைத்திழுத்து விட்டு வரும் சாரலில் நனைவதும் அவளின் மிக உன்னத மழைத் தருணங்கள்!//

எங்க ஸ்கூல்ல பின் பக்கம் வ்ராண்டாவில் வகுப்பு அதை ஒட்டி வரிசையாக மரங்கள்! மழைக்காலங்களில் மழையோடு உறவாடிய கணங்களும்,பிரம்படியோடு பின் வாங்கிய நேரங்களும் நினைவில் வந்து ஸ்ட்டாப்பு ஆகியிருச்சு :(

தாமிரா said...

ஹாய்.. வந்துட்டேனே.. ஆமா இது ஏதாவது தொடர்பதிவுக்காக எழுதப்பட்டதா? அப்படித்தான் உணரமுடிகிறது. இருப்பினும் .. கவிதை.!

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...
//:) இப்போதெல்லாம் அடிக்கடி முல்லைப்பாப்பாவின் டைம்ஸ் கிடைக்கிறது எங்களுக்கு..//

:)) ஆமாம்.

ஆயில்யன் said...

//அதோடு சூடான பஜ்ஜிகளும், வெங்காய பக்கோடாக்களும் மாலைநேரங்களில் லெமன் டீயும்/இஞ்சி டீயும் மழையை வேடிக்கைப் பார்க்க பலகணியில் ஒரு சிறு இருக்கையும்!!
//

நல்லா விதவிதமா சமைச்சுப்போட்டே பாவம் தங்கச்சி நாக்கை கெடுத்துட்டாங்க அம்மா :( (பாவம் தங்கச்சிக்கு இப்ப திங்க மட்டும்தான் நல்லா தெரியும் )

ஜீவன் said...

இந்த மழை வந்தாலே இப்படித்தான்
சின்ன புள்ளையா இருந்தப்போ,
நடந்தது எல்லாம் நினைவுக்கு
வந்துடும்!
திடீரென முளைத்த காளான்களும், மழைக்கு பூத்த லில்லி மலர்கள், மெதுவாய் நரும் நத்தைகளும் அவள் பள்ளிக்கு செல்லும் நேரத்தை தின்னும்!!

மழை! மழை! மழை!

சந்தனமுல்லை said...

நன்றி தமிழ்பிரியன்..நீங்கதான் பர்ஸ்ட்டூ! :-0

நன்றி அமுதா!

நன்றி முத்துலெட்சுமி..அப்படியா..இனிமேல் கவனமாயிருக்கிறேன்! :-)

நன்றி ஆயில்ஸ்!
:-)) அதை பற்றி இன்னும் கொஞ்சம் சொலுங்களேன்!! மிக்க ஆவல்! ;-)

நன்றி தாமிரா! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. தொடர்ந்து இரண்டு தொடர் பதிவுகள் எழுதினேன் அவ்வளவுதான்!

நன்றி ராமலஷ்மி!


ஆயில்ஸ்..grrrrrrrrrrrrr!

நன்றி ஜீவன்!! ம்ம்..உண்மைதான்..மழைக்காலங்கள் கிளப்பி விடும் எவ்வளவோ நினைவுகள்!நாஸ்டால்ஜிக்!!

கானா பிரபா said...

நல்லாயிருக்கு ;)

AMIRDHAVARSHINI AMMA said...

வீட்டுக்கு திரும்புவதில் அத்தனை மகிழ்ச்சி..படிக்கத்தான் அத்தனை கதைப்புத்தகங்களுண்டே அவளிடம்!! அதோடு சூடான பஜ்ஜிகளும், வெங்காய பக்கோடாக்களும் மாலைநேரங்களில் லெமன் டீயும்/இஞ்சி டீயும் மழையை வேடிக்கைப் பார்க்க பலகணியில் ஒரு சிறு இருக்கையும்!!

ஆக மொத்தம் பாடபுத்தகம் படிக்கறது இல்லை.

கதைபுத்தகமும், தீனியும் தான்.

ரைட்டு

AMIRDHAVARSHINI AMMA said...

பப்புவுக்கு இரண்டாவது நாளாக பள்ளி விடுமுறை, மழையின் நிமித்தம்!
நான் ஆபீஸ் செல்வதில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை!!

ஆக இன்னிக்கு உங்க் வீட்டுல

சூடான பஜ்ஜிகளும், வெங்காய பக்கோடாக்களும் மாலைநேரங்களில் லெமன் டீயும்/இஞ்சி டீயும்

உண்டு

புதுகை.அப்துல்லா said...

ஆக இன்னிக்கு உங்க் வீட்டுல
சூடான பஜ்ஜிகளும், வெங்காய பக்கோடாக்களும் மாலைநேரங்களில் லெமன் டீயும்/இஞ்சி டீயும்
உண்டு
//

அண்ணன் சென்னையிலதான இருக்கான்..கூப்பிடுவோமே என்ற நினைப்பின்றி தானே திங்கும் சந்தனமுல்லையை என்ன சொல்லி வாழ்த்தலாம்???

புதுகை.அப்துல்லா said...

ஆக இன்னிக்கு உங்க் வீட்டுல
சூடான பஜ்ஜிகளும், வெங்காய பக்கோடாக்களும் மாலைநேரங்களில் லெமன் டீயும்/இஞ்சி டீயும்
உண்டு
//

அண்ணன் சென்னையிலதான இருக்கான்..கூப்பிடுவோமே என்ற நினைப்பின்றி தானே திங்கும் சந்தனமுல்லையை என்ன சொல்லி வாழ்த்தலாம்???

நிஜமா நல்லவன் said...

நல்லாயிருக்கு ;)

தாரணி பிரியா said...

நல்லாயிருக்குங்க :)

மங்களூர் சிவா said...

//
ஜீவன் said...

இந்த மழை வந்தாலே இப்படித்தான்
சின்ன புள்ளையா இருந்தப்போ,
நடந்தது எல்லாம் நினைவுக்கு
வந்துடும்!
//

ஆமா

ஆனா இங்க வருசத்துல 6 மாசம் மழை பெய்யுதா அதனால கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு!!

பிரேம்குமார் said...

எதிர் வீட்டுப் பெண் பலகணியில் நின்று மகிழ்ச்சியோடு சத்தம் போட்டு கத்திக் கொண்டிருந்தாள், "இன்றைக்கு விடுமுறையாம்... தொலைக்காட்சியிலேயே சொல்லிட்டாங்க" என்று....

நமக்கு ஏது நாளும் கிழமையும் என்று நொந்துக்கொண்டே அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டியதாயிற்று.

ம்ம்ம், உங்க பதிவு படித்தவுடன் மீண்டும் அதே பாதிப்பு....

பிரேம்குமார் said...

:)

Deepa (#07420021555503028936) said...

கவிதை மாதிரி இருக்கு முல்லை!

கதைப் புத்தகங்களையும் அம்மா செய்யும் பஜ்ஜிகளையும் நினைவு படுத்திட்டீங்க!
ஹீ...ம்!

//பப்புவுக்கு இரண்டாவது நாளாக பள்ளி விடுமுறை, மழையின் நிமித்தம்!
நான் ஆபீஸ் செல்வதில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை!!//

:-(