Friday, January 16, 2009

ரவுண்ட் அப்(II-ஆம் டெர்ம் - கடைசிநாளன்று)

கடந்த ஒரு வாரமாக இரண்டாம் டெர்ம் முடிந்து விடுமுறையில் இருக்கிறாள் பப்பு!
அவள் வீட்டிலிருக்க, நான் அலுவலகம் செல்வது கொஞ்சம் கஷ்டம், கொஞ்சம் ஜாலி!
முதல் டெர்மிற்கும், இரண்டாம் டெர்மிற்கும் இடையில் நான் கண்ட வித்தியாசங்கள், மாற்றங்கள்..

1. சிலிண்டர் பாக்ஸ், பிங்க டவர், லாங் ராட், கலர் பாக்ஸ் I, II எனபன அவள் வீட்டில் சொல்லும் சில உபகரணங்கள். மாண்டிசோரி ரிலேடேட் என அறிகிறேன்!

2. மிக முக்கியமான ஒன்று, பப்பு பள்ளி சேரும் வரை தமிழ் தவிர வேறு எந்த மொழியையோ, மொழி குறித்த பிரக்ஞையோ அவளுக்கு இல்லை(யெஸ், நோ தவிர). ஆனால், இப்போது ஆங்கில வார்த்தைகள் அர்த்தத்துடன் தெரிகிறது..சில சமயங்களில், badly in need of english! ஆங்கிலத்தில் உரையாட அவ்வளவு விருப்பப்படுகிறாள், ஆனால் வார்த்தைகள் கைவர வில்லை இன்னும்!! சரியாகச் சொல்லவேண்டுமானால், கோபத்தைக் காட்ட ஆங்கிலத்தை நாடுகிறாள், #%#$%$%^%^&கோ!! ஏதாவது சொல்லிவிட்டு அது ”கோ”-வில் முடிந்தால், கோபத்தில் திட்டுகிறாளென்று அர்த்தம்!!

3. நிறைய ரைம்ஸ்..!! நான் எந்த ரைம்ஸூம் சொல்லிக்கொடுத்ததில்லை...இதுநாள் வரை! மாண்டிசோரி ரைம்ஸ் தவிர மற்ற ஆங்கில ரைம்ஸ் எல்லாம் அவளாக சிடி பார்த்துக் கற்றுக்கொண்டதுதான்! எனக்குத் தெரிந்த ரைம்ஸ், ஜானி ஜானியும், ட்விங்கிள் ஸ்டாரும், ரோ ரோ யுவர் போட்டும், இன்னும் சில் சொற்பங்களே. ஆனால், ரைம்ஸ் கற்று அதனால் பெரிதாக என்ன ஆகிறதென்றெ என் சோம்பலே காரணம். (instead, I may try some tongue twisters, an interesting & funny stuff always!! )

4. பள்ளி செல்லும் வாரதினங்களில் ஏழு மணி தாண்டிதான் எழுகிறாள். வாரயிறுதிகள், விடுமுறை தினங்களில், மிகச்சரியாக 6.30 அல்லது 6.50 க்கு எழுந்து எங்களையும் எழுப்பி விடுகிறாள்.(grrrrrrrrr) கிழமைகளின் பெயர்கள் தெரியுமே தவிர இன்று என்ன கிழமையென்று தெரியாதபோதும் பப்பு இப்படியிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.


5. செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறாள். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போது,
அவள் நட்டுவைத்த உருளைக்கிழங்கு செடிக்கு மட்டும் அதிக கவனிப்பு!! (நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாததால், முளை விட்ட உருளைக்கிழங்கை அவளே நட்டாள். அது ஒருஅடிக்கு மேலாக வளர்ந்துள்ளது.)

Wishing you a happy III term, baby!

35 comments:

நட்புடன் ஜமால் said...

\\செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறாள்\\

ஆரோக்கியம் ...

வித்யா said...

பப்பு இளைத்த மாதிரி தெரியறாங்க.
\\விடுமுறை தினங்களில், மிகச்சரியாக 6.30 அல்லது 6.50 க்கு எழுந்து எங்களையும் எழுப்பி விடுகிறாள்\\
என் பையனும் அப்படியே. வார நாட்களில் 8 வரை தூங்குவான். விடுமுறை தினங்களில் 6 மணிக்கே சுப்ரபாதம்:)

நட்புடன் ஜமால் said...

\\Wishing you a happy III term, baby!\\

வாழ்த்துக்கள் பப்பு ...

அபி அப்பா said...

:-))

முத்துலெஷ்மிய பார்த்த விஷயத்தை சொல்லவேயில்லையே!

அவங்க பதிவா போட்டு சொல்லியிருக்காங்க!

காது நலமா?

அமுதா said...

//Wishing you a happy III term,
baby!

அதே...

PoornimaSaran said...

//வாரயிறுதிகள், விடுமுறை தினங்களில், மிகச்சரியாக 6.30 அல்லது 6.50 க்கு எழுந்து எங்களையும் எழுப்பி விடுகிறாள்.(grrrrrrrrr)//

ரொம்ப சமத்து:)

PoornimaSaran said...

//#%#$%$%^%^&கோ!! ஏதாவது சொல்லிவிட்டு அது ”கோ”-வில் முடிந்தால், கோபத்தில் திட்டுகிறாளென்று அர்த்தம்!!
//

:))

அமிர்தவர்ஷினி அம்மா said...

Wishing you a happy III term, baby!

we too wish the same.

ஏன் சோகமா இருக்கா பப்பு போட்டோவில்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

இந்த வயதில் செடி வளர்ப்பில் ஆர்வம் காட்டுவது குறைவு. உங்கள் ஆர்வம் தொற்றியிருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

ஆயில்யன் said...

//வித்யா said...
பப்பு இளைத்த மாதிரி தெரியறாங்க.
///

பின்னே பப்பு சாப்பாட்டை அவுங்க மதர் சாப்பிட்டா அப்படித்தான்....!

:)))))

ஆயில்யன் said...

//அபி அப்பா said...
:-))

முத்துலெஷ்மிய பார்த்த விஷயத்தை சொல்லவேயில்லையே!

அவங்க பதிவா போட்டு சொல்லியிருக்காங்க!

காது நலமா?
//

அண்ணா!

முத்தக்கா இந்த பக்கம் அடிக்கடி இல்ல, டெய்லி வரவங்கன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா?????

ஆயில்யன் said...

//ஏன் சோகமா இருக்கா பப்பு போட்டோவில்.//

தவறு திருத்திக்கொள்ளுங்கள்!

புகைப்பட கலைஞர்,எங்கள் பப்பு டல்லான நேரத்தில் போட்டோ எடுத்து போட்டிருக்கிறார்!

பப்பு பேரவை
கத்தார்

கானா பிரபா said...

புகைப்பட கலைஞர்,எங்கள் பப்பு டல்லான நேரத்தில் போட்டோ எடுத்து போட்டிருப்பதைக் கண்டிக்கிறோம்

பப்பு பேரவை
சிட்னி

தமிழ் தோழி said...

//பள்ளி செல்லும் வாரதினங்களில் ஏழு மணி தாண்டிதான் எழுகிறாள். வாரயிறுதிகள், விடுமுறை தினங்களில், மிகச்சரியாக 6.30 அல்லது 6.50 க்கு எழுந்து எங்களையும் எழுப்பி விடுகிறாள்.///

எங்கள் வீட்டிலும் இதே கதை தான்.

தமிழ் தோழி said...

\\செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறாள்\\

very good pappu

தமிழ் தோழி said...

///Wishing you a happy III term, baby!///

இந்த அத்தயின் வாழ்த்துக்கள் பப்பு.

குடுகுடுப்பை said...

4. பள்ளி செல்லும் வாரதினங்களில் ஏழு மணி தாண்டிதான் எழுகிறாள். வாரயிறுதிகள், விடுமுறை தினங்களில், மிகச்சரியாக 6.30 அல்லது 6.50 க்கு எழுந்து எங்களையும் எழுப்பி விடுகிறாள்.(grrrrrrrrr) கிழமைகளின் பெயர்கள் தெரியுமே தவிர இன்று என்ன கிழமையென்று தெரியாதபோதும் பப்பு இப்படியிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.//

ஹரிணி இன்னைய வரைக்கும் இப்படிதான்.ஆனா சனி ,ஞாயிறு அன்று அப்பாவைத்தான் எழுப்புவா,உத்தரவை அவளாலுன் மீற முடிவதில்லை.

அனுஜன்யா said...

//ஏதாவது சொல்லிவிட்டு அது ”கோ”-வில் முடிந்தால், கோபத்தில் திட்டுகிறாளென்று அர்த்தம்!!//

ரசித்தேன். :)

அனுஜன்யா

மங்களூர் சிவா said...

/
செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போது,
அவள் நட்டுவைத்த உருளைக்கிழங்கு செடிக்கு மட்டும் அதிக கவனிப்பு!!
/

ஆஹா சமத்து!!

மங்களூர் சிவா said...

/
அபி அப்பா said...

:-))

முத்துலெஷ்மிய பார்த்த விஷயத்தை சொல்லவேயில்லையே!

அவங்க பதிவா போட்டு சொல்லியிருக்காங்க!
/
நானும் அந்த பதிவு இப்பதான் படிச்சேன்


/ காது நலமா?
/

ரிப்பீட்டேய்!!

நிஜமா நல்லவன் said...

/கானா பிரபா said...

புகைப்பட கலைஞர்,எங்கள் பப்பு டல்லான நேரத்தில் போட்டோ எடுத்து போட்டிருப்பதைக் கண்டிக்கிறோம்

பப்பு பேரவை
சிட்னி/

சிட்னிக்கு பதிலா சிங்கப்பூர்!

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

//வித்யா said...
பப்பு இளைத்த மாதிரி தெரியறாங்க.
///

பின்னே பப்பு சாப்பாட்டை அவுங்க மதர் சாப்பிட்டா அப்படித்தான்....!

:)))))/

ஹா..ஹா..ஹா..

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

//அபி அப்பா said...
:-))

முத்துலெஷ்மிய பார்த்த விஷயத்தை சொல்லவேயில்லையே!

அவங்க பதிவா போட்டு சொல்லியிருக்காங்க!

காது நலமா?
//

அண்ணா!

முத்தக்கா இந்த பக்கம் அடிக்கடி இல்ல, டெய்லி வரவங்கன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா?????/

ரிப்பீட்டேய்...!

தீஷு said...

\\Wishing you a happy III term, baby!\\

வாழ்த்துகள் பப்பு ...

நசரேயன் said...

வாழ்த்துக்கள் பப்புவுக்கும், நிகழ்வுகளை பதிவு செய்த உங்களுக்கும்

Divyapriya said...

first time here...pappu is really cute :))

cheena (சீனா) said...

பப்பு இளைத்துத்தான் காணப்படுகிறாள் - சோகம் இல்லை - கண்களில் சிரிப்பு தெரிகிறது. ம்ம்ம்ம்ம் - பப்புவின் தினசரி வேலைகள் / திறமைகள் கூடுகின்றன. மேன்மேலும் வளர நல்வாழ்த்துகள்

ரிதன்யா said...

//வாரயிறுதிகள், விடுமுறை தினங்களில், மிகச்சரியாக 6.30 அல்லது 6.50 க்கு எழுந்து எங்களையும் எழுப்பி விடுகிறாள்.(grrrrrrrrr)//
ஹா ஹா ஹா எல்லா வீட்லயும் இப்படித்தானா? இங்கனயும் அப்படித்தான்.

சின்ன அம்மிணி said...

//பள்ளி செல்லும் வாரதினங்களில் ஏழு மணி தாண்டிதான் எழுகிறாள். வாரயிறுதிகள், விடுமுறை தினங்களில், மிகச்சரியாக 6.30 அல்லது 6.50 க்கு எழுந்து எங்களையும் எழுப்பி விடுகிறாள்.(grrrrrrrrr)//

நான் இன்னும் அப்படித்தான். வேலைக்குப்போகும் நாளில் எழுந்திருக்கவே முடியாது. மற்ற நாட்களில் டாண் என்று ஆறு மணிக்கு முழிப்பு வந்துவிடும்.

கவிதா | Kavitha said...

Nicely Recorded..:) with your own (doubtful) questions and replies.

குழந்தைகளின்
சின்ன சின்ன அசைவுகளும்
நமக்கு
அதிசயம்..:)
ஆனந்தம்..:)
உறக்கம்...:)
உணவு....:)

அதை அழகாக (மனதில்) படம் பிடித்துள்ளீர்கள்..

இன்னும் எதிர்பார்க்கிறேன்.. :)

உங்கள் பப்புவின் பதிவுகள் இப்போது தான் படிக்கிறேன் அதனால் முதலில் எழுதியதை எல்லாம் விட்டிருப்பேன்.. :( இனிமேல் தொடர்ந்து அப்டேட் செய்ய முயற்சிசெய்கிறேன்.. :)

thevanmayam said...

பப்பு சிறப்பாக
வளர வாந்த்துகிறேன்..

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

தமிழன்-கறுப்பி... said...

சூப்பர் ரவுண்டப்...:)

தமிழன்-கறுப்பி... said...

படம் பத்தின பிரபாண்ணன் கமன்ட்டை ரிப்பீட்டிக்கறேன்.. :)

தமிழன்-கறுப்பி... said...

இங்கிலீசுல திட்டத்தெரியுமா பப்பு எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணணுமே...:)

rapp said...

//
2. மிக முக்கியமான ஒன்று, பப்பு பள்ளி சேரும் வரை தமிழ் தவிர வேறு எந்த மொழியையோ, மொழி குறித்த பிரக்ஞையோ அவளுக்கு இல்லை(யெஸ், நோ தவிர). ஆனால், இப்போது ஆங்கில வார்த்தைகள் அர்த்தத்துடன் தெரிகிறது..சில சமயங்களில், badly in need of english!//

ரொம்ப சரி, நானும் இதை கவனிச்சிருக்கேன். இன்னும் கொஞ்ச நாளிலே பாருங்க, நீங்க அவளுக்குப் புரியாம இருக்க ஆங்கிலத்துல பேசி வேலைய சாதிச்சிக்கிட்டிருந்த காலம் மலையேரிடும்:):):)

//பள்ளி செல்லும் வாரதினங்களில் ஏழு மணி தாண்டிதான் எழுகிறாள். வாரயிறுதிகள், விடுமுறை தினங்களில், மிகச்சரியாக 6.30 அல்லது 6.50 க்கு எழுந்து எங்களையும் எழுப்பி விடுகிறாள்.(grrrrrrrrr) கிழமைகளின் பெயர்கள் தெரியுமே தவிர இன்று என்ன கிழமையென்று தெரியாதபோதும் பப்பு இப்படியிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது//

கிட்டத்தட்ட இது நடக்காத வீடே இல்லைன்னு நெனைக்கிறேன். இதுல வேற எங்கக்கா பையன், காலையில் எழுந்ததும் , எங்கம்மா(அவங்கதான் அந்த ஸ்கூல் ஏ.ஹெச்.எம் ) கிட்ட போய் கேக்குற மொதோ கேள்வி, 'பாட்டி, இன்னைக்கு சாட்டர்டேவா' அப்டிங்கறதுதான்:):):)